ய்வறிஞர் நா.நளினி தேவி பெண்ணுரிமை யை மையப்படுத்தி எழுதிய "அக விடு தலையே பெண் விடுதலை'’என்னும் நூல் கருத் துலகில் ஆச்சரியத்தையும் அதிர் வலைகளையும் ஏற்படுத்திவரு கிறது. இந்த நூலின் வெளியீட்டு விழா பெண் பிரபலங்கள் புடை சூழ அண்மையில் சென்னை கவிக்கோ அரங்கில் நடந்தது.

வரவேற்புரையாற்ற வந்த துர்கா நாகநாதன் எடுத்த எடுப் பிலேயே "பெண்ணுரிமை இல் லாத வீடு; விலங்குகள் வாழும் காடு'’என அதிரடி கிளப்பினார். விழாவைத் தொகுத்து வழங்கிய முனைவர் மஞ்சுளாதேவியும் பெண்ணியக் கருத்துக்களை மின்னலாய்த் தெறிக்கவிட்டார்.

gg

Advertisment

நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற வழக்கறிஞர் அ.அருள் மொழி, ""பெண்களுக்கு எதிரான உடை அரசியல் இருக்கிறதே அது மிகவும் கொடுமையானது. ஆண்களின் உடை அவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் பெண்களின் உடை, அவர்களுடைய உடல் பாகங்கள் வெளியே தெரியும்படியே வடிவமைக்கப்படுகிறது. உடம்பு எல்லோர் கண்களுக்கும் தெரிகிறது என்ற நிலை இருந்தால் ஒரு பெண்ணால் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தமுடியுமா?'' எனக் கேள்வி எழுப்பியவர்,

""நளினி அம்மாவின் அக விடுதலைக் குரல் சிறப்பானது. பெண்கள் தங்கள் பாலியல் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும், அது தொடர்பான தயக்கங்களை அவர்கள் விட்டொழிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இதை இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கவேண்டும். இந்த நூலை, நேர்மையாக அறிவு நாணயத்தோடு படிக்கவேண்டும் என்று அணிந்துரையில் சொல்லியிருக்கும் ஆசிரியர் வீரமணி, அதற்கு முன் ஏற்கனவே மனதில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கிவிட்டுப் படிக்கவேண்டும் என்றும் இந்த நூலைப் படிக்கத் துணிவு வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட இந்த நூல் மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும்'' என்றார் அழுத்தமாக.

வாழ்த்துரை வழங்கிய ஆசிரியர் நக்கீரன்கோபால், ""பெண்களுக் கான திருவிழாவாக இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. பெண் பெருமைகளைப் பேசுகிற இந்த நேரத்திலும், நாங்கள் ஒரு பெண் மணியால் படாதபாடு பட்டதுதான் நினைவுக்கு வருகிறது. அதே பெண்மணி அநியாயமாக இறந்தபோது, அவர் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அவருக்காகக் குரல் கொடுத்ததும் நக்கீரன்தான். பெண்ணியக் குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு நளினி அம்மா தன் நூலில் வழிகளைச் சொல்கிறார். நித்தியானந்தா விவகாரமாக இருந்தாலும், பொள்ளாச்சி விவகாரமாக இருந்தாலும் நக்கீரன், பெண்களின் நீதிக்காகத்தான் தொடர்ந்து குரலை எழுப்பிவருகிறது. நளினி அம்மாவின் நோக்கமும் நக்கீரனின் நோக்கமும் ஒன்றுதான்'' என்றார் உற்சாகமாக.

Advertisment

ggg

நூலை வெளியிட்டுப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திரு மாவளவன் தன் உரையில்...

""இந்த மானுடம் சரி பாதி ஆண்களையும் சரி பாதி பெண்களையும் கொண்டது. பெண் விடுதலை என்பது ஆண்களோடு முரண்படுவதல்ல. அது ஆணிடமிருந்து விலகிச்செல் வதும் அல்ல. ஆணோடு பெண் ணும் பெண்ணோடு ஆணும் இணக்கமாக வாழ்வதுதான் மானுடத்தின் பயன். இங்கே ஆண், பெண் என்ற இரண்டு சொற்களை நாம் பாலின வேறுபாட்டிற்காகப் பயன்படுத்தி வருகிறோம். ஆண் என்ற சொல் ஆளுமை என்ற சொல்லில் இருந்து பிறந்தது. பெண்களிலும் ஆளுமை உடையவர்கள் இருப்ப தில்லையா?. பெண் என்ற சொல் பேணுமை என்பதிலிருந்து வந் தது. ஆண் அலுவலகத்தையும் குடும்பத்தையும் பேணுவதில் லையா? ஆணிலும் gggபெண் இருக்கிறாள். பெண்ணிலும் ஆண் இருக்கிறான். இதை நாம் உணர வேண்டும்'' எண்றவர்... ""என்னு டைய சின்ன வயதில் கிராமப் புறங்களில் வாழ்ந்த அனுபவங் களை எண்ணிப் பார்க்கிறேன். அடித்தள மக்களிடம், உழைக்கும் மக்களிடம் உறுப்புக் கவர்ச்சி கிடையாது. உடல் கவர்ச்சியைப் பற்றிக் கருதாது ஆண்களும் பெண்களும் மாங்கு மாங்கு என வேலை பார்ப்பார்கள். அருகில் இருப்பவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கள் அக்கா, தங்கை கள் குழந்தைக்குப் பால் கொடுப்பார்கள். அங்கே விரசத்துக்கு வேலையில்லை. ஒரே துறையில் குளிப்பார்கள். அங்கே அநாக ரிகத்துக்கு வேலையில்லை. நாற்று நடும் போதும் சேலையை தூக்கிச் செருகிக் கொண்டு வேலை பார்ப்பார்கள். அங்கே வேறு பார்வைக்கு இடமில்லை. இளம்வயது ஆணும் கோமணத்தை மட்டுமே கட்டிக் கொண்டு களத்தில் நிற்பான். அங்கே ஆபாசத்துக்கு வேலையில்லை. அங்கே ஆணும் பெண்ணும் சகஜமாகவே பழகு வார்கள். விகல்பம் வேறுபாடு என்பதெல் லாம் கிடையாது. கிராமத்தில் உழைக்கும் மக்களிடம் ரசிக்கத் தக்க வாழ்க்கை இருந் தது. கணவனும்-மனைவியும் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் உரிமை இருந்தது. சமன்மை இருந்தது. இதைத்தான் சனா தனம் அநாகரிகம் என்றது. பெரியாரியமோ இதை சமத்துவம் என்றது. பெண் விடுதலை என்றது. இந்துத்துவம் தாக்கம் செய்யாத வாழ்க்கை முறைதான் அது'' என்றார்.

விழாவில் அருட்திரு பிலிப் சுதாகரன், கு.கா.பாவலன், மு.ஞா.செ.இன்பா, ’பாவையர் மலர்’ வான்மதி, இயக்குநர் பிருந்தா சாரதி, முனைவர் இராம.குரு நாதன், முனைவர் ஆதிரா முல்லை, கவிஞர் மானா.பாஸ்கரன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

இந்த விழாவில் பெண் படைப்பாளிகளான கவிஞர் நர்மதா, பெண்ணியம் செல்வக்குமாரி, லதா சரவணன், லதா, ஜானு இந்து, மகாலட்சுமி ஆகியோருக்குப்’"பெண்ணியப் பேரொளி’விருதை' திருமாவளவன் வழங்கினார். பெண் விடுதலைக்கான குரலை உயர்த்திப்பிடித்தது இந்த விழா.

-தமிழ்நாடன்

படங்கள்: ஸ்டாலின்