Advertisment

உலகத் தமிழர்களை இணைத்த மலேசிய 11ஆவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

mm

1966ஆம் ஆண்டு, தனிநாயகம் அடிகளார், உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். இரண்டாவது மாநாட்டை, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது சென்னையில் நடத்தினார். இந்த மாநாடு, பெருந்திரளான மக்கள் வெள்ளத்திற்கு இடையே சிறப்பாக நடைபெற்றது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், ஐந்தா வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நடத்தினார். ஏழாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, ஜெயலலிதா நடத்தினார். கோவையில் தமிழ் செம்மொழி மாநாட்டை கலைஞர் நடத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும், இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Advertisment

mm

1987, 2015ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோவில் பத்தாவது மாநாடு நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 11ஆவது மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21 - 23ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கு முன்பு கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாட்டினை, மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியே ஏற்பாடு செய்து நடத்தியது. அதன் தலைவர் துன் சாமி வேலு, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து நடத்தி னார். கடந்த 2015அம் ஆண்டு மாநாட்டுக்கு துன் சாமிவேலு தலைவராகவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டேவிட் துணைத்தலைவராகவும் செயல்பட்டு அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Advertisment

இந்த முறை மலேசிய அரசின் சார்பில் அமைச்சர் சிவகுமார், மாநாட்டுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப் படுவதாகப் பிரச்சினைகள் எழுந்தன. எனவே அந்த கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரும், தேசியத் துணைத்தலைவருமான முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், இணைத்தலைவராக அறிவிக்கப்பட் டார். மாநாட்டை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த ஓம்ஸ் அற வாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராசன், பேராசிரியர் முனைவர் ம

1966ஆம் ஆண்டு, தனிநாயகம் அடிகளார், உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முதலாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தினார். இரண்டாவது மாநாட்டை, பேரறிஞர் அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது சென்னையில் நடத்தினார். இந்த மாநாடு, பெருந்திரளான மக்கள் வெள்ளத்திற்கு இடையே சிறப்பாக நடைபெற்றது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில், ஐந்தா வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் நடத்தினார். ஏழாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை, ஜெயலலிதா நடத்தினார். கோவையில் தமிழ் செம்மொழி மாநாட்டை கலைஞர் நடத்தினார். தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து உலகத் தமிழ் மாநாடுகளிலும், இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Advertisment

mm

1987, 2015ஆம் ஆண்டுகளில், மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 2019ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோவில் பத்தாவது மாநாடு நடைபெற்றது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 11ஆவது மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் ஜூலை 21 - 23ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதற்கு முன்பு கோலாலம்பூரில் நடைபெற்ற மாநாட்டினை, மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியே ஏற்பாடு செய்து நடத்தியது. அதன் தலைவர் துன் சாமி வேலு, சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து நடத்தி னார். கடந்த 2015அம் ஆண்டு மாநாட்டுக்கு துன் சாமிவேலு தலைவராகவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த டேவிட் துணைத்தலைவராகவும் செயல்பட்டு அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

Advertisment

இந்த முறை மலேசிய அரசின் சார்பில் அமைச்சர் சிவகுமார், மாநாட்டுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி ஒதுக்கப் படுவதாகப் பிரச்சினைகள் எழுந்தன. எனவே அந்த கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினரும், தேசியத் துணைத்தலைவருமான முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், இணைத்தலைவராக அறிவிக்கப்பட் டார். மாநாட்டை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த ஓம்ஸ் அற வாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராசன், பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் ஆகியோரும் இணைத்தலைவர் பொறுப்பு வகித்தனர்.

m

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டான் ஸ்ரீ மாரிமுத்து, மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவர் முனைவர் கோவி.சிவபாலன், மாநாட்டுச் செயலர்கள் கிருஷ்ணன் மணியம், கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந் தனர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (ஒய்ற்ங்ழ் ய்ஹற்ண்ர்ய்ஹப் ஆள்ள்ர்ஸ்ரீண்ஹற்ண்ர்ய் ர்ச் பஹம்ண்ப் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட்), அதன் இந்தியக் கிளை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, மலேசியாவின் ஓம்ஸ் அற வாரியம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாநாட்டுக்கு, மலேசிய அரசு ஆதரவு வழங்கியது.

மலேசிய முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ மாரிமுத்து தலைமையில், ஷார்ஜாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த மாநாடு, வானூர்திப் பயணச்சீட்டு பிரச்சினைகள் காரணமாக, கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டு சிறப்பாக நடந்தேறியது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உட்பட, தமிழ்நாட்டின் 13 பல்கலைக்கழகங்கள் இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடிதங்கள் வழங்கினர். மாநாட்டில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர். டான் ஸ்ரீ மாரிமுத்து, சென்னைக்கு வந்து தமிழக முதல்வரைச் சந்தித்து அழைப்பு விடுத்தார். தமிழக அரசின் சார்பில் 4 அமைச்சர் கள் பங்கேற்பார்கள் என உறுதியளிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லை. அமைச்சர் உதயநிதி மட்டும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். இதற்கு முந்தைய அத்தனை மாநாடு களுக்கும் ஆதரவளித்த தமிழக அரசு, இம்முறை நடைபெற்ற இரண்டு மாநாடுகளுக்கும் ஆதரவைத் தரவில்லை. அதற்கு சில அதிகாரிகள் தடையாக இருந்தனர் என்றும், முதல் அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த போதிலும், அந்த அதிகாரிகளின் ஆதிக்கத்தால் தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டதாகவும் மாநாட்டில் ஆதங்கத்துடன் பேசிக்கொண்டனர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு பயணச்சீட்டு விசா கொடுத்தும் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. அவரும் தடுக்கப் பட்டதாகச் சொல்லப்படுகின்றது.

ஜூலை 18ஆம் நாள் தொடங்கி, உலகில் தமிழர்கள் வாழுகின்ற நாடுகளில் இருந்து, பேராளர்கள் கோலாலம்பூருக்கு வருகை புரியத் தொடங்கினர். மாநாட்டில் மொத்தம் 1,200 பேராளர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து கல்லூரி விரிவுரையாளர்கள், அரசியல், ஆன்மிகச் சொற்பொழி வாளர்கள், சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், ஊட கத்தினர் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து, 700-க் கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தந்தனர். அனை வரும், பியர்ல் இன்டர் நேசனல் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

mm

ஜூலை 21, வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு, மாநாட்டு நிகழ்வுகள் வேந்தர் துங்கு அரங்கில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, மலேசிய நாட்டுப் பண், தமிழ்த்தாய் வாழ்த் துப் பாடல்களுடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. "இணைய காலகட்டத்தில் தமிழ்' என் பதுதான் இந்த மாநாட் டின் கருப்பொருளாகும். மலேசிய அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுக் கழகத் துறை இணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி சிறப்புரை யாற்றினார். மாநாட்டு அரங்கின் முகப்பில், சீன தமிழ் பெண் கவிஞர் ஒருவர், அனைவரையும் சரளமான தமிழில் வரவேற்று உற்சாகமாகப் பேசியதும், இசையமைப்பாளர் சிம்மம் குமார் இசையமைத்த "தமிழே! தமிழே!!' மாநாட்டுப் பாடலும் அனைவரையும் கவர்ந்தது.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த சொற் பொழிவாளர்கள் முதல் நாள் மாநாட்டில் உரை யாற்றினர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், சி.பி.ஐ. கட்சி சார்பில் சி.மகேந்திரன், சி.பி.எம். கட்சி சார்பில் மதுக்கூர் இராமலிங்கம், பாலபாரதி, நக்கீரன் கோபால், ம.ம.க. சார்பில் ஜவாஹிருல்லா, பழ.கருப்பையா, சுப.வீரபாண்டியன், ம.தி.மு.க. சார்பில் மு.செந்திலதிபன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், அ.தி.மு.க. சார்பில் வைகைச்செல்வன், பா.ஜ.க. சார்பில் ஸ்ரீகாந்த், நெல்லை ஜெயந்தா, மை.பா. நாராயணன், ஆகியோர் உரையாற்றினர்.

தொல்.திருமாவளவன் பேசும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்து குரலெழுப்ப, அந்த நபரை மற்றவர்கள் சத்தம் போட்டு அமரச் செய்தனர். இதனால் அரங்கில் சலசலப்பு ஏற்பட் டது.

mmmm

மலேசியத் தமிழறிஞர்கள் முரசு.நெடுமாறன், மலர்க்குழுத் தலைவர் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 51 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. சித்த மருத்துவம் தொடர்பாக 70 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. முதன்மை அரங்கம் தவிர, பத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மாநாட்டு நிகழ்வுகள் அனைத் தும் மலேசியத் தொலைக்காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பாகின. தமிழ்நாட்டிலிருந்து, சன் தொலைக்காட்சி, நியூஸ் 7 தொலைக்காட்சிகள், மாநாட்டு நிகழ்வுகளைப் பதிவு செய்தனர்.

1987ஆம் ஆண்டு மாநாட் டை, அன்றைய பிரதமர் மகாதிர் முகமது தொடங்கி வைத்தார். 2015ஆம் ஆண்டு மாநாட்டை, அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக் தொடங்கி வைத்தார்.

11ஆம் உலகத் தமிழ் மாநாட்டு மலரில், பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துச் செய்தி வழங்கியிருந்தார். இரண்டாம் நாள் சனிக்கிழமை mmமாலை 4 மணிக்கு மாநாட்டு அரங்கிற்கு வருகை தந்தார். மாநாட்டுத் தலைவர் மனிதவள அமைச்சர் சிவகுமார், பிரதமருக்கு மாலை அணிவித்து வரவேற்று சிறப்பு செய்தார். அதன்பின்னர் பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம், அதிகாரப்பூர்வமாக மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம், மாநாட்டை சிறப்பாக ஒருங்கிணைத்த ஏற் பாட்டுக்குழுவின் முயற்சியைப் பாராட்டினார். அவர் உரையாற்றியபோது, "மலாய், சீனர், இந்தியர் என மூன்று இனத்தாரும் ஒற்றுமையாக வாழ்கின்ற நாடு மலேசியா. நமக்குள் பிரிவினைகள் இல்லை. நாம் மலேசியர். ஒற்றுமையாக உழைப்போம், நாட்டை உயர்த்துவோம். மலேசிய நாட்டை வளப்படுத்துவதற் காகத் தங்களை ஒப்படைத்துக் கொண்டு உழைத்த இந்திய சமுதாயத்திற்கு என் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நல்வழி காட்டும் தமிழ் இலக்கியங்களை மலாய் மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும்.

mm

மேலும், ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, தமிழ் வழிக்கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை மாற்றி, இனி 10 மாணவர்கள் இருந்தாலும் தமிழ் வழிக்கல்வி தொடரலாம் என அன்வார் இப்ராஹிம் அறி வித்ததை, மலேசியப் பேராளர்கள் பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு, அரசு நடவடிக்கை கள் மேற்கொள்ளும் என்றும் குறிப்பிட்டார். மாநாட்டில் அமைச்சர் சிவகுமார் பேசும்போது, "மலாய் மொழி, நாட்டின் அலுவல் மொழியாக இருந்தாலும், ஆங்கிலம், மாண்டரின் மற்றும் தமிழ் மொழிக்கு அரசாங்கம் வழங்கியிருக்கின்ற அங்கீகாரத் திற்கு, மலேசியத் தமிழர்கள் கடமைப்பட்டு உள்ளனர்'' என்று குறிப்பிட்டார். அவரும், முன்னாள் அமைச்சர் டத்தோ சரவண னும், தமிழ்ப் பள்ளிகளில் 14 மாணவர்கள் இருந் தாலும், அந்த வகுப்புக்கு அரசு ஏற்பு கிடையாது என்பதை மாற்றியமைக்க வேண்டும், போதுமான தமிழ் ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் முன்பு கோரிக்கை எழுப்பி இருந்தனர். அந்தக் கோரிக்கைகளை, மாநாட்டில் பேசும்போதே பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஏற்றுக் கொண்டது, இந்த மாநாட்டுக் குக் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

மாநாட்டில் கலந்துகொண்ட மலாயா பேராளர்களுக்கும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்குமான செலவுகளுக்கு மலேசிய அரசு உதவி செய்தது. அயல்நாடு களிலிருந்து வந்த பேராளர்களுக்கான செலவுகளையும், சிறப்பு விருந்தினர்களுக்கான செலவுகளையும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்தியக் கிளை பொறுப் பெடுத்துக்கொண்டது. அதேபோல், மாநாட்டில் உணவுக்கான செலவையும், மாநாட்டு அரங்கத்துக்கான ஒரு நாள் வாடகையையும் இந்தியக் கிளை ஏற்றுக்கொண்டது.

அடுத்து நடைபெறவுள்ள 12ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை, புதுச்சேரி அல்லது சிங்கப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமென ஆய்வு செய்வதற்கும், செயல்படுத்துவதற்கும் இத்தகைய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு பெரும் பங்காற்றுகிறது.

-அருணகிரி, கோலாலம்பூர்

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

nkn290723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe