Advertisment

ராங்கால்-உதயநிதியைத் துண முதல்வர் ஆக்குங்கள்! -தி.மு.க.வில் விறுவிறுப்புக் குரல்! செந்தில் பாலாஜியின் பதவியைப் பறிக்க வேண்டும்! -அதிரடி காட்டும் கவர்னர் விஜய்- திரிஷா ஜோடியாக அரசியல் என்டரி! நெருக்கடி வளையத்தில் வேலுமணி!

dd

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு தொடங்கியுள்ள இந்த நேரத்தில், அறிவாலயத் தரப்பில் ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பு பரவிக்கிட்டு இருக்குது.''”

Advertisment

"ஆமாம்பா, அமைச்சர் உதயநிதிக்கு ப்ரமோசன்’ வேணும்னு கேட்கறாங்களே?''

uday

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கணும் என்பது, தி.மு.க.விலேயே இருக்கும் ஒரு தரப்பினரின் ஆசை. அதேபோல் முதல்வரின் கிச்சன் கேபினெட்டைச் சேர்ந்த வர்களும், சில இளம் அமைச்சர்களும் முதல்வர் ஸ்டா-னிடம் இதையே வ-யுறுத்துகிறார்களாம். ஜனவரியில் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உதயநிதி, துணை முதல்வர் என்கிற தகுதியோடு பங்கேற்க வேண்டும் என்பது இவர்கள் அனைவரின் பெருவிருப்பம். ஆனால் முதல்வர் ஸ்டா-ன் மட்டும் இதில் தயக்கம் காட்டுகிறார். ஏனெனில், உதயநிதியை அமைச்சராக்கிய நேரத்திலேயே அவருக்கு கேபி னட்டில் நேரடியாக 10ஆவது இடம் கொடுக்கப்பட்டது. அதுவே, இங்கு சர்ச்சையானது. ஆனாலும் இதற்கான அழுத்தங்கள் முதல்வருக்குத் தொடருது. அதனால், சில வாரங்சுளில் அவர்களின் கனவு ப-க்கலாம் என்கிறது அறிவாலயத் தரப்பு.''”

"சீனியர் அமைச்சர் துரை முருகனின் துறைக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே?''”

rr

"நீர்ப்பாசனத்துறை அமைச்ச ரான துரைமுருகனின் வசம், கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையும் ஏற்கனவே தரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவருடைய துறையின் கீழ், மேலும் சில இயற்கை வளங் களை நிர்வகிக்கும் பொறுப்பையும் முதல்வர் ஸ்டா-ன் அண்மையில் ஒப்படைத்திருக்கிறார். அதேபோல் ஏற்கனவே அங்கு சுரங்கத்துறை கமிஷனராக இருந்த, அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த ஜெகநாதன் ஐ.ஏ.எஸ்.சை அங்கிருந்து நகர்த்திவிட்டு, அவருக்கு பதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பனீந்தர் ரெட்டி, நிர்மல்குமார் ஆகிய இரு வரையும் பொறுப்பு அதிகாரிகளாக ஸ்டா -ன் நியமித்திருக்கிறார். இப்படி அந்தத் துறைக்கு அதிக புத்துணர்ச்சி கொடுக்கப் பட்டிருக்கிறது.''”

"இந்த மாற்றத்திற்கான பின்னணி பற்றி பல்வேறு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்படி துறையின் எல்லையை அதிகப்படுத்தி இருப்பது, அமைச்சர் துரைமுருகனின் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்காக இல்லையாம். அந்தத் துறையின் வருமானம் சரிவர அரசு கஜானா வுக்கு வந்து சேரவேண்டும் என்பதற்காகவும், துறைக்கு கனிமவளம் மூலம் கிடைக்கும் வரு மானத்தை அதிகரிப் பதற்காகவும்தான் இப்படியொரு மாற்றம் கொண்டுவரப்பட்டி ருக்குன்னு கோட்டைத் தரப்பு சொல்லுது. அண்மைக்கால சர்ச் சைகளால், டாஸ்மாக் கடைகளைக் குறைத்து, அதன் எல்லைகளைப் பலவகையிலும் சுருக்க முடிவெடுத்திருக் கிறாராம் ஸ்டா-ன். அ

"ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு தொடங்கியுள்ள இந்த நேரத்தில், அறிவாலயத் தரப்பில் ஒரு பரபரப்பான எதிர்பார்ப்பு பரவிக்கிட்டு இருக்குது.''”

Advertisment

"ஆமாம்பா, அமைச்சர் உதயநிதிக்கு ப்ரமோசன்’ வேணும்னு கேட்கறாங்களே?''

uday

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக ஆக்கணும் என்பது, தி.மு.க.விலேயே இருக்கும் ஒரு தரப்பினரின் ஆசை. அதேபோல் முதல்வரின் கிச்சன் கேபினெட்டைச் சேர்ந்த வர்களும், சில இளம் அமைச்சர்களும் முதல்வர் ஸ்டா-னிடம் இதையே வ-யுறுத்துகிறார்களாம். ஜனவரியில் தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், உதயநிதி, துணை முதல்வர் என்கிற தகுதியோடு பங்கேற்க வேண்டும் என்பது இவர்கள் அனைவரின் பெருவிருப்பம். ஆனால் முதல்வர் ஸ்டா-ன் மட்டும் இதில் தயக்கம் காட்டுகிறார். ஏனெனில், உதயநிதியை அமைச்சராக்கிய நேரத்திலேயே அவருக்கு கேபி னட்டில் நேரடியாக 10ஆவது இடம் கொடுக்கப்பட்டது. அதுவே, இங்கு சர்ச்சையானது. ஆனாலும் இதற்கான அழுத்தங்கள் முதல்வருக்குத் தொடருது. அதனால், சில வாரங்சுளில் அவர்களின் கனவு ப-க்கலாம் என்கிறது அறிவாலயத் தரப்பு.''”

"சீனியர் அமைச்சர் துரை முருகனின் துறைக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே?''”

rr

"நீர்ப்பாசனத்துறை அமைச்ச ரான துரைமுருகனின் வசம், கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையும் ஏற்கனவே தரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவருடைய துறையின் கீழ், மேலும் சில இயற்கை வளங் களை நிர்வகிக்கும் பொறுப்பையும் முதல்வர் ஸ்டா-ன் அண்மையில் ஒப்படைத்திருக்கிறார். அதேபோல் ஏற்கனவே அங்கு சுரங்கத்துறை கமிஷனராக இருந்த, அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்த ஜெகநாதன் ஐ.ஏ.எஸ்.சை அங்கிருந்து நகர்த்திவிட்டு, அவருக்கு பதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பனீந்தர் ரெட்டி, நிர்மல்குமார் ஆகிய இரு வரையும் பொறுப்பு அதிகாரிகளாக ஸ்டா -ன் நியமித்திருக்கிறார். இப்படி அந்தத் துறைக்கு அதிக புத்துணர்ச்சி கொடுக்கப் பட்டிருக்கிறது.''”

"இந்த மாற்றத்திற்கான பின்னணி பற்றி பல்வேறு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்படி துறையின் எல்லையை அதிகப்படுத்தி இருப்பது, அமைச்சர் துரைமுருகனின் செல்வாக்கை அதிகப்படுத்துவதற்காக இல்லையாம். அந்தத் துறையின் வருமானம் சரிவர அரசு கஜானா வுக்கு வந்து சேரவேண்டும் என்பதற்காகவும், துறைக்கு கனிமவளம் மூலம் கிடைக்கும் வரு மானத்தை அதிகரிப் பதற்காகவும்தான் இப்படியொரு மாற்றம் கொண்டுவரப்பட்டி ருக்குன்னு கோட்டைத் தரப்பு சொல்லுது. அண்மைக்கால சர்ச் சைகளால், டாஸ்மாக் கடைகளைக் குறைத்து, அதன் எல்லைகளைப் பலவகையிலும் சுருக்க முடிவெடுத்திருக் கிறாராம் ஸ்டா-ன். அதனால் டாஸ்மாக் வருமானத்தை ஈடுகட்ட அவர், கனிமவளத் துறையையே அதிக அளவுக்கு நம்புகிறாராம். இதன் வருமானம் சிதறாமல் இருப்பதற்காகத்தான், இரண்டு அதிகாரிகளையும் அவர் நியமித்திருக்கிறாராம். இதை கவனித்த சக அமைச்சர்கள், இது துரைமுருகனுக்கு வைக்கப்பட்ட செக் என்று பேசிக்கொள் கிறார்கள்.''”

"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி முற்றுகிறதே?''”

Advertisment

rr

"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார்களை அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் ஏற்கனவே கவர்னரிடம் கொடுத்திருந்த நிலையில், அவர் மீது டெல்-க்குச் சென்ற புகார்களின் அடிப் படையில், அமைச்சரைக் குறிவைத்து, அவர் தம்பி அசோக், மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களி லும், வருமான வரித்துறை, தனது அதிரடி ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது. ரெய்டின் போது அமைச்சர் தரப்பு நடந்துகொண்ட முறையும் டெல்-வரை நெறிகட்டி இருக்கிறது. இதுதவிர, கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், செந்தில் பாலாஜி தரப்பு, வேலை வாங்கித் தருவதாக பலரிடமும் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தலாம் என்று அமலாக்கத் துறைக்கு உச்சநீதி மன்றம் அண்மை யில் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறது. இப்படி எல்லாத் திசைகளில் இருந் தும், அமைச்சர் செந்தில் பாலாஜி யைக் குறிவைத்து அம்புகள் நீள் கின்றன.''”

"செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி யைப் பறிக்கணும்னு தமிழக அரசுக்கு கவர்னர் பரிந் துரை செய்ததாகவும் தகவல் வருதே?''”

"அமைச்சர் செந்தில் பாலாஜியைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டுகள் குறித்தும், அவர் மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறித்தும், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, கவர்னர் ரவி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி இருக்கிறாராம். அந்தக் கடிதத்தில், பல்வேறு சர்ச்சைகளிலும் சட்டச் சிக்க-லும் சிக்கியிருக்கும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியைப் பறித்து, கேபினெட்டில் இருந்து அவரை நீக்கவேண்டும் என்று குறிப்பிட்டி ருப்பதாகவும் பரபரப்பான தகவல் அடிபடு கிறது. கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றாலும் பரிந்துரை செய்யும் உரிமை இருக்கிறதாம்.''

"தேவையில்லாத கவர்னரின் இந்த தலையீட்டை முதல்வரின் பதில், வாயடைக்கச் செய்துவிட்டதாம்.''

"முதல்வர் என்ன பதில் கொடுத்தாராம்...''

"மத்திய உள்துறை அமைச்சர் மேல எத்தனை எஃப்.ஐ.ஆர். இருந்தது ஞாபகம் இருக்கா... என்ற தொனியில் பதில் கொடுக்க... கவர்னர் கப்...சிப்.''

"அ.தி.மு.க. மாஜி மந்திரி வேலுமணி தரப்பிலும் அதிர்ச்சி தெரியுதே?''”

"முந்தைய எடப்பாடி ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலை மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்காக விடப்பட்ட டெண்டர் சமாச்சாரங்களில், ஏகப்பட்ட ஊழல் நடந்ததாகவும், அதனால் அதற்குக் காரணமான, அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சொன்ன ’அறப்போர் இயக்கம்,’ தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுத்திருந்தது, கிடப்பில் போடப்பட்டிருந்த இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதே இயக்கம் உயர்நீதிமன்றத்திடம் முறை யிட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கர் புர்வாலா தலைமையிலான முதலாம் அமர்வு, ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையின் அடிப் படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசுதான் என்றும், இதன்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு தடையில்லை என்றும் இப்போது பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. இதுதான் வேலுமணியை நெருக்கடி வளையத்தில் நிறுத்தியிருக்கிறது.''”

"தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது?''”

rr

"உயர்நீதிமன்றமே நடவடிக்கை எடுக்கத் தடையில்லை என்று பச்சைக்கொடி காட்டிவிட்டதால், மாஜி வேலுமணி மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளைத் தொடங்கலாம் என தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதல்வர் ஸ்டா-ன் உத்தரவிட்டி ருக்கிறாராம். இதனால் லஞ்ச ஒழிப்புத் துறை, இது குறித்த கோப்புகளை விறுவிறுப்பாக ஆராய்ந்துகொண்டு இருக்கிறது. வேலுமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது, இந்த ஊழல்கள் நடந்த சமயத்தில் சென்னை மாநகராட்சியின் கமிஷனராக இருந்தவர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவருக்கும் இந்த ஊழல் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறதாம். தற்போது இந்த கார்த்திகேயன், உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கிறார். தி.மு.க. மே-டத்தில் நெருக்கத் தையும் வளர்த்துகொண்டிருக்கிறார். அதனால், இந்த வழக்கிற்கு முட்டுக்கட்டை போட, அவர் தரப்பு ஆராய்ந்து வருவதாகச் சொல்கிறார்கள்.''”

"உயர்கல்வித் துறையில் மகிழ்ச்சியான மாற்றங்கள் நடந்திருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் பதவியில் ஐ.ஏ.எஸ். அல்லாத, பிற துறைகளின் சீனியர் அதிகாரிகளே இருந்து வந்தனர். இந்த நிலையில், தி.மு.க. 2021-ல் ஆட்சிக்கு வந்ததும், பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் rrபதவி ஒழிக்கப்பட்டு கமிஷனர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டது. அந்த வகையில், துறையின் முதல் பவர்ஃபுல் கமிஷனராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தார் முதல்வரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன். கமிஷன ராக நியமிக்கப்பட்ட நந்தகுமார், பள்ளிக்கல்வித் துறையை எந்த அளவுக்கு சீரழிக்க வேண்டுமோ அத்தனையும் செய்து விட்டார் என்ற குற்றச் சாட்டில் சிக்கியிருக்கிறார். இந்த நிலையில்... தற்போது, இந்த கமிஷனர் பதவியை ரத்து செய்துவிட்டு, மீண்டும் இயக்குநர் பதவியை உருவாக்கியிருக்கிறது தி.மு.க. அரசு. மேலும், பள்ளிக்கல்வித் துறையின் புதிய இயக்குநராக, தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளியை நியமித் திருக்கிறார் துறையின் முதன்மைச் செயலாளர் காக்கர்லா உஷா. நந்தகுமார் மாற்றப் பட்டதையும், கமிஷனர் பதவி நீக்கப்பட்டதையும் மகிழ்வோடு வரவேற்று வருகிறார்கள் கல்வித்துறையினர்.''”

"பத்திரப்பதிவுத் துறையில் அதிரடியான அறிவிப்பெல்லாம் வந்திருக்கு போலயே?''

"ஆமாம் தலைவரே. நடப்பாண்டில், 25,000 கோடி வருவாய் இலக்கை நிர்ணயம் செய்து, அந்த இலக்கை எட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சொல்-யிருக்கார். பத்திரப் பதிவுத்துறையை நவீனப்படுத்துவதற்காக ஸ்டார் 3.0 என்ற மென்பொருள் திட்டத்தை கொண்டுவரப் போறாங்களாம். இத்திட்டத் தால நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இத்துறையிலுள்ள குறைபாடு கள் நீக்கப்படும்னு அமைச்சர் மூர்த்தி சொல்-யிருக்கார். பத்திரப்பதிவில் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தைத் தடுத்து, உரிமையாளர்களே நேரடியா பதிவு செய்யணும்னும், பொது மக்களுக்கு சிரமமில்லாமல் விரைவில் பதிவு செய்யணும்னும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி யிருக்கார். அதேபோல் போ- பத்திரப் பதிவுகளைக் கண்டறிந்து தடுப்பதற்காக அதிகாரிகளை நியமிக்கப்போறாராம். இதையெல்லாம் கண்காணிக்க, பத்திரப் பதிவுத்துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வுகள் அடிக்கடி நடத்தப்படும்னும் சொல்-யிருக்கார்.''

"நடிகர் விஜய் அரசிய-ல் களமிறங்கும் தீவிரத்தில் இருக்கிறாரே?''”

rr

"ஆமாங்க தலைவரே. அதற்கான ஆயத்தப் பணிகளை நடிகர் விஜய் விறுவிறுப்பாக நடத்திவருகிறார். மக்களிடம் நல்ல மதிப்பை முத-ல் உருவாக்கிக்கொள்ள நினைக்கும் அவர், ப்ளஸ் டூவில் மாவட்டம்தோறும் முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்களை அழைத்து, பரிசளித்து உற்சாகப்படுத்த இருக்கிறாராம். ரசிகர் மன்றத்தின் சார்பில் சில நலத்திட்ட உதவிகளையும் கையில் எடுக்க இருக் கிறாராம். அதேபோல் தேர்தலை சந்திப்பதற்கு வசதியாக அவர், தமிழகம் முழுக்க பல இடங்களிலும் பூத் கமிட்டிகளை அமைத்து வரும் விஜய், பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் வெகுநேரம் பேசி, அவர்களை உற் சாகப்படுத்தினாராம். விஜய்யின் இந்த அரசியல் மூவ் குறித்து அவர் அப்பா வான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரே அடிக்கடி ரன்னிங் கமெண்ட்ரி அடித்து வருகிறாராம்.''”

"இது தொடர்பாக நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்க விரும்புகிறேன். தற்போது அரசியல் செலவுகளை சமாளிக்கத் தான் நடிகர் விஜய் தன் சம்பளத்தை 200 ’சி’வரை உயர்த்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். அவர், எம்.ஜி.ஆரும், ஜெ.வும் போல வெற்றிகரமான ஜோடியாக அரசிய-ல் நடிகை த்ரிஷாவுடன் வலம் வரும் திட்டத் திலும் இருக் கிறாராம். விஜய்யின் விருப்பத்தை ஏற்று நடிகை த்ரிஷாவும் அரசிலுக்கு வரச் சம்மதம் தெரிவித்துவிட்டாராம். அத னால்தான் த்ரிஷாவுக்கு விஜய், சென்னை செனடாப் சாலையில் பங்களா ஒன்றை வாங்கி, கிஃப்ட்டாகத் தந்திருக்கிறார் என்றும், விஜய்க்கு நெருக்கமான நட்புத் தரப்பே அடித்துச் சொல்கிறது.''”

_____________

இறுதிச் சுற்று!

வி.ஏ.ஓ. கொலை: மூன்று போலீசார் இடமாற்றம்!

முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மணல் கொள்ளையர்களுடன் தொடர்புடைய ஏட்டு சரவணன், தனிப்பிரிவு போலீசார் மகா-ங்கம், உதவி காவல் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் 8-ந் தேதி வியாழக்கிழமை, நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஏற்கனவே உதவி ஆய்வாளர் சுரேஷ் முறப்பநாடு மணல் கொள்ளை விவகாரத்தில் சாயர்புரத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலையில் முதல் குற்றவாளியான ராமசுப்புவுடன் கொலை செய்வதற்கு முன்பு தொலைபேசியில் உரையாடியதன் ஆதாரங்களைக் கொண்டு நீலகிரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்.

-நாகேந்திரன்

annamalai

மிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் 8-6-2023 அன்று ரகசிய பூஜை நடத்தியிருக்கிறார். சென்னையில் உள்ள பா.ஜ.க. கட்சி தலைமையகமான கமலாலயத்தில் அண்ணா மலைக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் தனித்தனி அறைகள் இருக்கிறது. தனது அறையை நவீனப்படுத்த விரும்பினார் அண்ணாமலை. அதனை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தனது அறையை கா- செய்துவிட்டு அமைச் சர் முருகனின் அறையை ஆக்ரமித்துக்கொண்டார். புதுப்பிக்கப்பட்ட அறைக்கு அவர் இடம் மாறியதில் இருந்தே நிறைய சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். மனஉளைச்ச-ல் இருந்த அண்ணாமலை, ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்க, "நீங்கள் பயன்படுத்தும் அறையில் ஒரு பரிகார பூஜை நடத்துங்கள். ஓஹோன்னு இருக்கும் உங்கள் அரசியல்' என்று யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி வியாழன் விடியற்காலை 4 மணியி-ருந்து 6 மணிவரை இந்த பரிகார பூஜை கமலாலயத்தில் ரகசியமாக நடந்துள்ளது. இதில் அண்ணா மலையும் கேசவவிநாயகமும் கலந்துகொண்டனர். கட்சிக்காரர்கள் யாரையும் அழைக்காமல் பூஜையை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

-இளையர்

nkn100623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe