தனி மாவட்டமாக்கு! சங்கரன்கோவில் போராட்டம்!

ss

டி.டி.வியின் வலதுகையான இசக்கிசுப்பையா அ.தி.மு.க.வில் இணைகிற தென்காசி நிகழ்ச்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்கப் படுமென திடீரென்று அறிவித்தார். அறிவித்த மறுகணமே, சங்கரன் கோவில் தொகுதியை தென்காசியுடன் இணைக்கக் கூடாது. நெல்லையிலேயே நீடிக்க வேண்டும் என்று விவகாரம் கிளம்பி அரசுக்குத் தலைவலியான தோடு, "சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக்கு' என்று திருகுவலியும் சேர்ந்துகொண்டது.

sss

தென்காசி, கடையநல்லூ

தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் தொகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய வளமான பகுதியிலிருப்பதால் விவ சாயம் பசுமையோடிருக்கும். ஆனால் அதனையொட்டி கீழ்ப்பகுதியிலுள்ள சங்கரன்கோவில் தொகுதியின் 42 கி.மீ. பரப்பளவும் வறட்சியான வானம் பார்த்த பூமி. இதனால் முறையாக எங்களுக்குக் கிடைக்கவேண்டிய விவசாய வறட்சி நிவாரணம் கிடைக்காமலே போய்விடும். அதனால் சங்கரன்கோவிலை தென்காசியுடன் இணைக்கக்கூடாது. நெல்லையிலேயே நீடிக்கவேண்டுமென சந்தானம் தலைமையிலான திருவேங்கடம், தாலுகா, குருவிக்குளம் பிர்க்கா விவசாயிகள் கொடியுயர்த்தினார்கள்.

கருத்துக் கேட்புக்காக வந்த வரு வாய்த் துறை ஆணையர் சத்யகோபால் குழுவின் முன்னிலையில், சங்கரன்கோவில் தொகுதியிலுள்ள மூன்று யூனியன் களில் அடங்கியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள், தங்களின் நலன், உரிமை பொருட்டு பல இடங்களில் பேருந்து மாறி தென்காசியை வந்தடைவதற்குள் பொழுதடைந்துவிடும் என்று செவல்குளம் கிராமத்தின் மாரியப்பன் மக்களின் சிரமங்களை பதிவுசெய்தார்.

இத்தனையையும் தாண்டி தொகுதி யின் மண்ணின் மைந்தரும், எம்.பி.யுமான வைகோ, “தொகுதியின் ஒட்டுமொத்த மக்களின் விருப்பப்படி சங்கரன்கோவில், நெல்லையுடனேயே நீடிக்கவேண்டும்’’என்ற அறிக்கையை ஆணையரிடம் கொடுத்தவர் முறையாக அரசு வரை கொண்டு சென்றார்.

விவகாரங்கள் இப்படிப் பயணித்துக்கொண்டிருக்கிற நிலையில், சங்கரன்கோவிலின், சிறு குறு தொழில்கள், வியாபார, ஏற்றுமதி நிறுவனங்கள் பொதுமக்கள், வியாபாரிகள் என பலரையும் உள்ளடக்கிய, சங்கரன்கோவில் மாவட்ட கோரிக்கை இயக்கம் என்ற அமைப்பு, சங்கரன்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்குத் தெரியப்படுத்தியதுடன் செப். 17-ஆம் தேதி தொகுதி முழு கடையடைப்பு நடத்திவிட்டது.

""சங்கரன்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று 1996-ன்போது அப்போதைய முதல்வர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் இசைவு தெரிவித்தார். எங்களின் இந்தக் கோரிக்கை ஏதோ புதிதாக முளைத்த கோரிக்கையல்ல. பழையதுதான். அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்''’என்கிறார் இந்த ஒருங் கிணைப்புக் குழுவின் செயலாளரான டி.எஸ்.ஏ.சுப்பிரமணியம்.

-பரமசிவன்

படங்கள்: ப.இராம்குமார்

nkn011019
இதையும் படியுங்கள்
Subscribe