நிர்வாண மசாஜ், விபச்சாரம், சூதாட்டம், மிரட்டல் என காவல்துறை உயர் அதிகாரிகள் ஆசியுடன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டானாக வலம் வந்துகொண்டிருந்த நாகர்கோவில் விஜய்ஆனந்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருக்கிறது குமரி காவல்துறை.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குமரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் அதிகாரிகளுக்கு நிகரான மரியாதையை பெற்றுவந்த விஜய்ஆனந்தை சில தினங்களுக்கு முன் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பிலான விபச்சாரத் தடுப்புப் பிரிவு தனிப்படை எஸ்.ஐ. திலீபன் தலைமையிலான டீம், கேரளா மாநிலம் பாலக்காட்டில் வைத்து கைது செய்து சிறையிலடைத் திருப்பது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விஜய்ஆனந்த் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார், “"கன்னியாகுமரி அருகே இலந்தவிளையை சேர்ந்த விஜய்ஆனந்த், தன்னை வழக்கறிஞர் எனக் காட்டிக்கொண்டு காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து நடத்திவந்த நிலையில், விபச்சாரத் தொழிலிலும் ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில், விபச்சாரத் தொழிலை ஹைடெக் லெவலுக்கு கொண்டுசெல்லும் விதமாகத் தனக்கு நெருக்கமான காவல் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு, குமரி மாவட்டத்தில் மட்டுமே 50க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தை விரிவாக்கினார். இதற்காக ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும் உருவாக்கி, அதில் 300க்கும் மேற்பட்டவர்களை கஸ்டமர்களாக்கினார்.
மேலும், ஆயுர்வேத மசாஜ் என்ற பெய ரில் பெண்கள், ஆண்களுக்கும், ஆண்கள், பெண்களுக்கும் நிர்வாண நிலையில் மசாஜ் செய்வதுதான் அங்கு நடக் கிறது. இதற்காக ஆயுர் வேத மசாஜ் பயிற்சி பெற்றதாக போலிச் சான்றிதழ்களுடன் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்களை வைத்திருக்கிறார். இவர் தன்னுடைய விபச்சார பிசினஸுக்கு மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் விபச்சாரம் நடத்தும் கும்பல்களுக்கும் பெண்களை சப்ளை செய்திருக்கிறார்.
இதுபோக ராஜாக்கமங்கலம், கொய்யாவிளை பகுதியில் திருமண மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கும் ரகசியமாக மசாஜ் சென்டர் நடத் திய நிலையில், சல்லாப அரசு அதிகாரி ஒருவரிடம் அதிக பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பெரிதாக, கேரளாவைச் சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப் பட்டனர். அதேபோல் நாகர்கோவில் ராமன்புதூரில் பயிற்சி நிறுவனம் என்ற பெயரில் கல்லூரி மாணவர்களை உல்லாசத்தில் ஈடுபடுத்த, மாணவர்கள் கைதானார்கள்.
கன்னியாகுமரியில் மட்டும் 30 மசாஜ் சென்டர்களை வைத்து, சுற்றுலா பயணிகளிடம் விபச்சாரத்தை நடத்திவந்தார். அதேபோல் வீடுகள், விடுதிகளில் சூதாட்டத்தையும், விபச்சாரத்தையும் நடத்திவந்ததும் தெரியவந்துள்ளது.
இவரது தொழிலுக்கு காவல்துறை உயரதிகாரி கள் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். விஜய் ஆனந்திடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் களின் மூலம், சமீபத்தில் குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த சில காவல்துறை உயரதிகாரிகளின் தொடர்பும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்ஆனந்த் மீது 25க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததால், தனிப்படை அமைத்து கைது செய்திருக்கிறார் எஸ்.பி. ஸ்டாலின்''’என்றனர்.
இந்த விஜய்ஆனந்த் பற்றி ஏற்கெனவே 2020-ல், ‘"விபச்சார புரோக்கருக்கு சல்யூட் அடிக்கும் சல்லாப போலீஸ்!'’என்ற தலைப்பில் நக்கீரனில் செய்தி வெளியாகியிருக்கிறது. குமரி மாவட்டத்தில் இவருக்கு நெருக்கமாக இருக்கும் காவல் அதிகாரிகள் எந்த மாவட்டத்துக்கு மாற்றலாகிப் போகிறார்களோ, அந்த மாவட்டத்திலும் தன்னுடைய தொழிலைத் தொடங்கிவிடுவார்.
அந்தவகையில், கோவை, சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் இப்போதும் விஜய்ஆனந்தின் விபச்சாரத் தொழில் நடந்துகொண்டுதானிருக்கிறது. மேலும், சுசீந்திரம், கன்னியாகுமரி, நேசமணி நகர், கோட்டார், ராஜாக்கமங்கலம், ஆசாரிப்பள்ளம் போன்ற காவல் நிலையங்களில் விஜய்ஆனந்த் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையின்றி கிடக்கின்றன. இவர்மீது வழக்கு களைப் பதிவு செய்த பல எஸ். ஐ.க்களும், இன்ஸ் பெக்டர்களும் வெளி மாவட்டங் களுக்கு தூக்கி யடிக்கப்படு வதும் உண்டு. இதனால் நேர்மையான அதிகாரிகளும் கூட இவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கியபடி இருந்தனர். இப்படிப் பட்டவரைத்தான், மாற்றலாகி வந்த ஒரே மாதத்தில், விபச்சார வழக்கில் கைது செய்து அதிரடி காட்டியிருக்கிறார் எஸ்.பி. ஸ்டாலின்'' என்கிறார்கள்.
இதுகுறித்து எஸ்.பி. ஸ்டாலின் கூறும்போது, "விபச்சார வழக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும், குழந்தை களுக்கும் எதிராகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குமரி மாவட்டத்தில் இந்த மாதிரி சம்பவம் இனி நடக்காது என்ற நிலை உருவாக்கப் படும்''’என்றார்.
"பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது போன்று, விபச்சாரத்தைத் தடுக்கும் விதமாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்து வது அவசியம்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.