Advertisment

மாயமாகும் இளம்பெண்கள்! சொல்லத் தயங்கும் பெற்றோர்! -குமரி அவலம்!

kumari

டந்த வாரத்தில் ஒருநாள் செய்தி ஒன்றிற்காக, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தோம். நமது அருகே அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் நம்மைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டபின், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார். “""நான் ஒரு போலீஸ்காரன். எங்க ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேஷனுக்காக மார்த்தாண்டம் போய்க்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்குறதால, உங்ககிட்ட ஒரு மேட்டரச் சொல்றேன், நீங்க விசாரிச்சா எல்லா விவரமும் தெரியும்''’என்றபடி சில விவரங்களைக் கூறினார். அதற்குள் மார்த்தாண்டமும் வந்துவிட்டது.

Advertisment

அவர் சொன்னது அத்தனையும் கேட்டவுடன் பகீர் என்றது நமக்கு. அந்த போலீஸ் நண்பர் சொன்னதை மனசுக்குள் அசைபோட்டபடி, நமது பணியை முடித்துவிட்டு நாகர்கோவில் திரும்பினோம். நமது போலீஸ் சோர்ஸ்கள் மூலமும் தன்னார்வத் தொண்டு நிறுவன பெண்மணி ஒருவர் மூலமும் கிடைத்த, கவலையளிக்கும் ப

டந்த வாரத்தில் ஒருநாள் செய்தி ஒன்றிற்காக, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தோம். நமது அருகே அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்த நடுத்தர வயதுடைய ஒருவர் நம்மைப் பற்றி விசாரித்து தெரிந்துகொண்டபின், மெல்லிய குரலில் பேசத் தொடங்கினார். “""நான் ஒரு போலீஸ்காரன். எங்க ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேஷனுக்காக மார்த்தாண்டம் போய்க்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்குறதால, உங்ககிட்ட ஒரு மேட்டரச் சொல்றேன், நீங்க விசாரிச்சா எல்லா விவரமும் தெரியும்''’என்றபடி சில விவரங்களைக் கூறினார். அதற்குள் மார்த்தாண்டமும் வந்துவிட்டது.

Advertisment

அவர் சொன்னது அத்தனையும் கேட்டவுடன் பகீர் என்றது நமக்கு. அந்த போலீஸ் நண்பர் சொன்னதை மனசுக்குள் அசைபோட்டபடி, நமது பணியை முடித்துவிட்டு நாகர்கோவில் திரும்பினோம். நமது போலீஸ் சோர்ஸ்கள் மூலமும் தன்னார்வத் தொண்டு நிறுவன பெண்மணி ஒருவர் மூலமும் கிடைத்த, கவலையளிக்கும் பகீர் தகவல்கள் இதோ:

Advertisment

kumari""இந்தக் காலத்துல பொம்பளப் புள்ளைகளைப் பெத்து வளர்த்து, படிக்க வச்சு, ஒருத்தன் கையில புடிச்சுக் கொடுக்குற வரைக்கும் பெத்தவர்கள் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதாயிருக்கு.

அசிங்கமும் ஆபாசமும் கைக்கு அடக்கமா இருக்கும் செல்போனில் அடங்கிப் போச்சு. டச் போன்களின் டெக்னாலஜி பலபேரின் வாழ்க்கையை மோசமா டச் பண்ணிருது. சமீபகாலமா கன்னியாகுமரி மாவட்டத்துல கல்லூரிக்குப் போகும் பெண்களும், வேலைக்குப் போகும் பெண்களும் அதிகளவில் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்துல இருக்குற எல்லா போலீஸ் ஸ்டேஷன்களிலும் சேர்த்து, ஒரு நாளைக்கு குறைந்தது பத்து புகார்களாவது, பெண்கள் காணாமப் போனது பற்றித்தான் பதிவாகுது. எதுவா இருந்தா எனக்கென்னன்னு போலீசும், அடிக்கடி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனா ஆபத்துன்னு பெத்தவர்களும் இருந்துவிடுவதால் அந்தப் பெண்களின் கதி என்ன என்பது யாருக்குமே தெரிவதில்லை''’என்றவாறு சில பெண்கள் மிஸ்ஸிங் தகவல்களைச் சொல்லத் தொடங்கினார் தன்னார்வ தொண்டு நிறுவன பெண்மணி.

""அருமனையைச் சேர்ந்த மினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற பொண்ணுக்கு 17 வயசு இருக்கும். யாரிடமும் அதிகம் பேசாத, நன்றாகப் படிக்கக்கூடிய பொண்ணு. +2-வில் நல்ல மார்க் எடுத்ததால நாகர்கோவிலில் இருக்கும் ஒரு காலேஜில் பி.காம் சீட்டும் கிடைச்சுது. இந்த நிலையில ரெண்டு மாசத்துக்கு முந்தி ஒரு நாள் சாயங்காலம், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் போயிட்டு வர்றேன்னு அவளோட அம்மாட்ட சொல்லிட்டுப் போனவதான்... வீடு திரும்பல. பெத்தவர்களும் சொந்தக்காரங்களும் எங்கெல்லாமோ தேடியும் கிடைக்காததால, போலீஸ்ல புகார் கொடுத்துட்டு, அழுது தவிச்சுக்கிட்டிருந்தாங்க.

பதினஞ்சு நாளைக்கு முன்னால திடீர்னு ஒருநாள் ராத்திரி, காரில் வந்த இரண்டு பேர், மினியை அவளது வீட்டு வாசலில் இறக்கிவிட்டுட்டு பறந்துவிட்டார்கள். உடல் மெலிந்து போதை மயக்கத்தில் இருந்த மினியைப் பார்த்ததும் கதறித்துடித்துவிட்டனர் பெற்றோர். என்ன நடந்துச்சு, மினியை யார் கடத்தியது எனத் தெரியாமலேயே அந்த ஊரைவிட்டே கிளம்பிவிட்டது அந்தக் குடும்பம்.

kumari

இதற்கடுத்த சம்பவம். "பளுகல் ஏரியாவைச் சேர்ந்த 20 வயசுப் பொண்ணு. பார்க்க ரொம்ப லட்சணமா இருக்கும். அவ மூணுமாசத்துக்கு முன்னால திடீர்னு காணாமப் போயிட்டா. ஒரு வாரத்துக்கு முன்னால வீட்டுக்கு வந்தவ, "வாட்ஸ்-அப்பில் வந்த ஒரு மெஸேஜைப் பார்த்துட்டு, டி.வி. சீரியலில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்குப்போய் சீரழிஞ்சுட்டேன். என்னை மன்னிச்சு ஏத்துக்கங்க'ன்னு கதறி அழுதவளை, பெத்தவங்களால என்ன பண்ணமுடியும். மனசை கல்லாக்கிட்டு ஏத்துக்கத்தானே முடியும்''’என்றார் வேதனை கலந்த குரலில்.

இந்தக் கொடுமைகள் ஒருபக்கம்னா, இன்னும் சில கொடுமைகளை சகிக்கவே முடியாது’’என்றவாறு பேச ஆரம்பித்தார் நமது போலீஸ் சோர்ஸ். ""குமாரகோவில் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கும் நாயர் பொண்ணும் முஸ்லிம் மாணவனும் திடீர்னு மாயமாகிவிட்டார்கள். மூணுநாள் கழிச்சு தக்கலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அந்தப் பையன், "பொண்ணை நான் கடத்தல, எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை'ன்னு சொல்லிட்டும் போயிட்டான். அந்தப் பொண்ணோட கதி என்னன்னு தெரியல.

இதேபோல் நாகர்கோவில் டவுன் கல்லூரியில் படிக்கும் இரண்டு மாணவிகள் காணாமல் போய் 20 நாட்கள் கழித்து திரும்பி வந்தார்கள். என்ன நடந்துச்சுன்னு யாருக்குமே தெரியல. மாவட்டத்தில் இருக்கும் 38 ஸ்டேஷன்களிலும் 100-க்கும் மேற்பட்ட லேடீஸ் மிஸ்ஸிங் கம்ப்ளெய்ண்ட் இருக்கு''’’ என்றார் கவலையுடன்.

"காணாமல் போகும் சிலபெண்கள் முழுக்க முழுக்க தவறான பாதையிலும், ஒருசிலர் தீவிரவாதப் பிடியிலும் ஐக்கியமாகிவிடுகிறார்கள். எல்லாம் கலாச்சார சீர்கேடு'’என்கிறார் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர்.

போலீசை குற்றம்சாட்டுகிறார் சமூகஆர்வலரான ஹேமர்லால்.

மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்தை சந்தித்துக் கேட்டபோது, ""பெண்கள், குழந்தைகள் மிஸ்ஸிங் கம்ப்ளெய்ண்டை சீரியஸாக கவனிக்கச் சொல்லியிருக்கிறேன்''’என்றார்.

போலீஸ் சீரியஸாக செயல்பட்டால், பல இளம்பெண்களின் குடும்பத்தில் கவலை ஒழியும்.

-மணிகண்டன்

nkn06.7.2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe