ஒரு இதழியலாளர் அவரது பணிகள் காரணமாக அரசியல்வாதிகளுக்கு நெருக்க மானவராக மாற அனைத்து வகையிலும் வாய்ப்பிருக்கிறது. அந்த நெருக்கம் செய்திகளுக் காக மட்டுமே பயன்பட வேண் டும் என வாழ்ந்த இதழியலாளர் ஒருவர், கடந்த வாரம் மறைந் தார். அவர் பெயர் சாம் ராஜப்பா.
அவர் தனது இறுதி மூச்சுவரை வேலை செய்தது, கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையான "ஸ்டேட்ஸ்மென்' நாளேட்டில். அது தவிர "இண்டியா டுடே', "ஆந்திரப் பிரதேஷ் டைம்ஸ்' என தமிழகத்துக்கு வெளியே இருந்து வந்த பத்திரிகை களிலும் பணியாற்றியவர். ஆனால் அவரைப் பற்றி தெரி யாத மூத்த அரசியல்வாதி களோ, பத்திரிகையாளர்களோ இல்லையென்றால்... எப்படிப் பட்ட வெற்றிகரமான பத்திரிகையாளராக அவர் இருந்திருப்பார் என அவரைப் பற்றி புகழ்கிறார்கள மூத்த பத்திரிகையாளர்கள்.
"எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வட ஆற்காடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி அடங்கும் வட மாவட்டங்களில் நக்சலைட் இயக்கம் வலுவாக இருந்தது. அதை அடக்க வால்டர் தேவாரம் என்கிற காவல்துறை அதிகாரி தலைமையில் அனுப்பப்பட்ட போலீஸார், ஏகப்பட்ட மனித உரிமை மீறல்களைச் செய்தனர். அன்றைய பத்திரிகைகள் எல்லாம் அரசின் செயல்களை ஆதரித்த நிலையில்... சாம் ராஜப்பா மட்டும் அங்கு நடந்த அநீதி களை சுட்டிக்காட்டினார்.
1975-ஆம் ஆண்டு எமர் ஜென்சியின் போது கேரளாவைச் சேர்ந்த ராஜன் என்கிற பொறி யியல் மாணவர் நக்சலைட் முத்திரை குத்தி கொல்லப்பட் டார். ராஜன் மரணத்தில் இருந்த மர்மங்களை வெளிக் கொண்டு வர, அவர் அடைக்கப்பட்ட சிறைக்கு கைதியாகச் சென்று, சாம் ராஜப்பா எழுதிய கட்டு ரைகள் கேரள அரசியலையே கலக்கியது.
நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் அட்டகாசம் செய்த தேவாரம், வீரப்பனை ஒழிக் கிறேன் என காடுகளில் மனித வேட்டையாடினார். அதை நக்கீரன் வெளிக்கொணர்ந்தது. அரசுகள் நக்கீரன் மீதும் அடக்குமுறைகளை ஏவின.
சாம் ராஜப்பா, நக்கீரன் பக்கம் நின்றார். நக்கீரனின் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் ஹிந்து ராம், வாசந்தி, மாலன், கல்கி கிருஷ்ணமூர்த்தி, பகவான் சிங் ஆகியோர் அடங்கிய குழுவில் சாமும் பங்கெடுத்தார்.
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து, கர்நாடக அதிரடிப்படை, தேவாரம் தலைமையிலான தமிழக போலீசுடன் சேர்ந்து நடத்திய அடக்குமுறைகளைப் பற்றி தோலுரித்துக் காட்டும் வாதங்களை வைத்தார்...' என அவரை நினைவுகூர்கிறார்கள் தமிழக பத்திரிகையாளர்கள்.
கடலூரில் செயல்படும் கெமிக்கல் தொழிற்சாலைகள், கூடங்குளம் அணுஉலை, ஜல்லிக்கட்டு போராட்டம் என தமிழகத்தில் நடந்த அனைத் திலும் முத்திரை பதித்த சாம், ராஜீவ்காந்தியின் காலத்தில் வெளிவந்த போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தவர்.
அவரை யாரும் சார் என அழைப்பதை விரும்பாமல்... "சாம்' என அழைப்பதையே விரும்பிய ராஜப்பா, 82 வயதில் கனடாவில் மரணமடைந்த ôலும்... இதழியல் துறையில் ஒரு கலங்கரை விளக்கமாகவே என்றும் நிறைவார்.