அட்டர் ப்ளாப் திரையுலகம்!

தள்ளிப்போகும் மெகா படங்கள்...

கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதால் மீண்டும் திரையுலகு முடங்கியுள்ளது. இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட மெகா படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

"பாகுபலி' இயக்குனர் ராஜ மௌலியின் அடுத்த பெரிய படமான 'ததத' மிகுந்த எதிர் பார்ப்பை உருவாக்கியுள்ள படம். ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, அஜய் தேவ்கன், ஆலியா பட் என பெரும் நட்சத்திரங்களுடன் "ஆல் ஓவர் இந்தியா' படமாக உருவாகிவரும் இது 2021 அக்டோபரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலால் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

Advertisment

c

ராக்கி பாயின் ராஜ்ஜியத்தை காண ரசிகர்கள் ஆவலாகக் காத்துள்ளனர். 2018-இல் வெளிவந்த KGF, இந்தியா முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. முதலில் படம் குறித்த பெரிய எதிர் பார்ப்பு இல்லாத தால் தமிழக திரையரங்குகளில் சுமாராக ஓடிய KGF தொலைக்காட்சியிலும் OTT-யிலும் பெரிய ஹிட்டானது. அதன் இரண்டாம் பாகமான KGF சேப்டர் 2-வை ஜூலையில் வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தார்கள். தற்போதைய சூழலில் அது சந்தேகமெனத் தெரிகிறது.

கடந்த பத்து ஆண்டுகளுக் கும் மேலாக ஆக்ஷன் பாதையி லேயே பயணித்த "பாகுபலி' பிரபாஸ் சற்று ஆசுவாசமாக நடித்துள்ள படம் "ராதே ஷ்யாம்'. "சாகோ' எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அடுத்த படத்தில் கண்டிப்பாக ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டுமென்ற உறுதியுடன் ஜூலையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. 70-களில் ஐரோப்பாவில் நடக்கும் அழகிய காதல் கதையான இப்படத்திற்கு இசை நம்ம ஊர் ஜஸ்டின் பிரபாகரன். இப்படமும் தள்ளிப்போகலாம். மெஹா ஹிட் கொரோனாவால், அட்டர் ப்ளாப்பாக திரையுலகம் அவஸ்தைப்படுகிறது.

Advertisment

-வீ.பீ.கே.

நாங்க தர்றோம், நீங்களும் தாங்க...

c

நட்சத்திர ஜோடியான விராட் கோலி-அனுஷ்கா சர்மா இருவரும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள இந்திய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல்பாட்டை தொடங்கி யுள்ளார்கள். "இதுவரை நாம் பார்த்திராத வகையில் நினைத்துப் பார்க்காத அளவு நம் மக்கள் பெருந்துயரை சந்திக்கின்றனர். அவர்களை மீட்கும் வகையில் அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை.

இதற்காக நிதி திரட்டு வோம்' என்று கூறி தங்கள் பங்காக இரண்டு கோடி ரூபாயை அளித்து, மக்களை யும் நிதி அளிக்கக் கோரி யுள்ளனர். ஒரு தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் சேகரிக்கப்படும் இந்த நிதி, ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ சேவை என பாதிக்கப்படும் மக்களுக்குப் போய்ச்சேருமென்று கூறியுள்ளது விருஷ்கா தம்பதி.

பத்து நிமிஷத்துல ஆக்சிஜன் வரும்...

c

கடந்த ஆண்டு கொரோனா காலம் தொடங்கியதிலிருந்தே தன்னுடைய சமூகப் பணிகளால் மக்கள் மனதில் ஹீரோவானார் வில்லன் நடிகர் சோனுசூட். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையிலும் தன்னுடைய "சூட் அறக்கட்டளை' மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உதவிகள் என மக்களுக்குப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய உறவினர் ஒருவர் மீரட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் தேவையென்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். இதற்கு உடனடியாக பதிலளித்த சோனு, அவரது விவரங்களை தருமாறு கேட்டு வாங்கி, "பத்து நிமிடங்களில் ஆக்சிஜன் சென்றடையும் பய்யா' என்று குறிப்பிட அவருக்கு சுரேஷ் ரெய்னாவும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.