ல்லா ஊரிலும் கொரோனா விதிமுறைகளைச் சமாளித்து வியா பாரம் பண்ணவேண்டியிருந்தா… இங்கே கலெக்டரையும் கமிஷனரையும் வேற கூடுதலா சமாளிக்க வேண்டியிருக்கிறதென ஒரு அங்கலாய்ப்பு மதுரை வியாபாரிகள் நடுவில் கேட்கிறது.

கடந்த ஏப்ரல் 24-ஆம்தேதி மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசிர்வாதம் மற்றும் மாநகராட்சி கமிஷனர் இரு வரும் சேர்ந்து திடீரென அனைத்து வியாபாரிகள் மற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் பார்கோடுடன் கூடிய புதிய பாஸ் வாங்கவேண்டும் என்று உத்தரவு போட அடுத்த நாள் 3000-த்திற்கு மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் குவிந்துவிட்டனர்.

madurai

அதிர்ச்சியான மாவட்ட ஆட்சியர் உடனே பழைய நடைமுறையே தொடரும் என்று அறி வித்து அனைவரையும் கலைந்து போகச்செய்தார்.

Advertisment

ஒரு இடத்தை கலெக்டர் ஆய்வுசெய்தால் அடுத்த நாளே கமிஷனர் அதே இடத்தில் ஆய்வு செய்வது புதிய நடைமுறை யானது. ஊரடங்கில் பிச்சைக்காரர்கள் ரோட் டில் திரிவதால் உயர் நீதிமன்றம் அவர்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து பராமரிக்க உத்தரவு போட்டது. கலெக்டர் அதுகுறித்து செயலில் இறங்குவதற்கு முன்பே, காரியத்தில் இறங்கினார் கமிஷனர். சில தன்னார்வ அமைப்பு களோடு இணைந்து கமிஷனர் லில்லி கிரேஸ் தலைமையில் டீம் அமைத்து பிச்சைக்காரர்களை பிடித்து வந்து மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பூங்கா முருகன் கோவிலின் சஷ்டி மண்டபத்தில் வைத்து பராமரிக்க முடிவுசெய்யப்பட்டது.

இது புனிதமான இடம் இங்கு ஆண்களை யும் பெண்களையும் சேர்த்து அடைத்துவைப்பது கூடாது. மேலும் அவர்களுக்கு முட்டை பிரியாணி சாப்பாடு போடக்கூடாது. சும்மா ரோட்டில் போன வர்களையெல்லாம் கூட்டிவந்து வைத்திருப்பது கண்டிக்கதக்கது என்று இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கலெக்டர் அங்கு சென்று ஆய்வுசெய்து 180 பேர்களின் வீட்டு முகவரி களை கண்டுபிடித்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைத்தார்.

அடுத்து மதுரை பரவை காய்கறி மார்கெட் பகுதியை கமிஷனர் சோதனையிட்டு ஊரடங்கில் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளைமீறிய கடைகளை எச்ச ரித்து வந்த நிலை யில், 13-ஆம்தேதி இரவு கலெக்டர் ஆய்வுசெய்து 48 கடைகளை சமூக இடைவெளியை ஒழுங்காகப் பின்பற்றவில்லை என்று தடைசெய்து இழுத்து மூடினார்.

Advertisment

இதுகுறித்துப் பேசும் வழக்கறிஞர் குமார் “கமிஷ னரும் கலெக்டரும் நேர்மை யாக இருந்தாலும் ஈகோ வோடு இருப்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது. இது வியாபாரிகளுக்கு பாஸ் வழங்குவது தொடர்பாக நடந்த குளறுபடியில் வெட்டவெளிச்சமானது. கமிஷனரைப் பொறுத்த வரை அவர் மாவட்ட பொறுப்பைவிட மாநில ஏ.டி.ஜி.பி.யாக ஆனதிலிருந்துதான் இந்தக் குழப்பம் இருவரும் மாறி மாறி ஆய்வுக்குப் போவது, அதை செய்திகளில் இடம்பெற அக்கறை காட்டுவது என்று தொடர்கிறது“ என்றார்.

mdu

பரவை மார்க்கெட்டில் கடைவைத்திருக்கும் ஒருவர் பேர் வேண்டாமென தயக்கத்துடன் பேசினார். ""கடையை திறக்க மார்கெட் தலைவர் ஜெயராஜ் கைகாட்டும் நபருக்கே அனுமதி கிடைக் கிறது. ஜெயராஷ் கமிஷனரின் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதோடு, அவரின் ஆதரவு உள்ள தால் இஷ்டப்படி நடந்து கொள்கிறார்'' என்று குறைபட்டுக் கொண்டார்.

வியாபாரியான செல்லபாண்டியோ, ""முதலில் கடைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது. சங்கத் தலைவரால்தான் இந்த மார்க்கெட்டே செயல்படுகிறது. அதைப் பிடிக்காதவர்கள் இட்டுக்கட்டுகிறார்கள். கலெக்டர் ஆய்வுக்கு வந்திருந்த அன்று எந்தவித கட்டுப் பாடும் இல்லாமல் வெளியே காய்கறிகளைக் குவித்துவைத்து சமூக இடைவெளியை கடைப் பிடிக்காததால்தான் கடைகளை மூடச்செய்தார்'' என்றார்.

காவல்துறை வட்டாரத் தில் விசாரித்தபோது, ""கமிஷ னர்- கலெக்டர் விவகாரம் பற்றியெல்லாம் நாங்க கருத்துச் சொல்ல விரும்ப வில்லை'' என்றனர். போலீ சின் தேவைகளை கமிஷனர் நிறைவேற்றுவதாக அவர்கள் சொன்னாலும், காவல்துறை யில் ஊரடங்குப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலரும், “எங்களுக்கு முறையான ஷிஃப்ட் டூட்டி இல்லை. ரெஸ்ட் கொடுப்பதும் இல்லை. டெஸ்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இல்லை. 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்களையும் ரோட்டில் நிறுத்துகிறார்கள். ஊரடங்குப் பணியின்போது, மாஸ்க் இல்லாமல் வரும் டூவீலர் ஆட்களை நிறுத்தி விசாரித்தால், கமிஷனரின் பெயரைச் சொல்கிறார்கள். ஒரே கம்யூனிட்டி என்கிறார்கள். செக்கிங் செய்தால், கமிஷனருக்கு தகவல் சொல்கிறார்கள். அதன்பிறகு, ஓப்பன் மைக்கிலேயே திட்டு வாங்குகிறோம்'' என்று பொருமுகிறார்கள். மதுரை தீக்கதிர் அலுவலக சிக்னல் அருகே ஒரு லேடி கான்ஸ்டபிளால் நிறுத்தப்பட்டவர் இத்தகைய அனுபவத்தை எதிர்கொண்டார்.

மதுரையிலுள்ள முக்கிய ஹோட்டல்கள் அனைத்தும், ஒவ்வொரு நாளும் போலீஸ்காரர் களுக்கு 50 பார்சல் சாப்பாடு கொடுக்கச் சொல்லி உத்தரவு. ""உணவை கலெக்ட் செய்வதற்கென்றே ஒரு வேன் வருகிறது. கொரோனா சமயத்தில் நமக்காக வேலைசெய்கிறார்கள் என்பதால் கொடுக்கிறோம். தவிரவும் போலீஸை பகைத்துக்கொண்டு கடை போட முடியுமா'' என்கிறார்கள் உணவக உரிமையாளர்கள்.

மதுரையில் இரண்டு அமைச்சர்கள் இருக்கி றார்கள். கலெக்டர் ஒருவர் அணி. கமிஷனர் இன் னொருவர் அணி. உளவுப்பிரிவும் சரியான ரிப்போர்ட் அனுப்புவதில்லை. ஊரடங்கு காலத்தில் மாநிலம் முழுவதும் க்ரைம் ரேட் குறைந்துள்ள நிலையில், மதுரையில் கொலைகூட சர்வசாதார ணமாக நடக்கிறது என வேதனைப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

-அண்ணல்