துரை கள்ளழகர் சித்திரை திருவிழா, திருமலை நாயக்கர் மன்னர் காலம் தொட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மக்கள் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் கூடி தங்களது நேர்த்திக்கடனாக அழகர் கோயிலில் உள்ள கருப்பு சாமிக்கும், கள்ளழகருக்கும் கிடா வெட்டி பொங்கல் வைத்து படுகவர்ச்சியாக சொந்த பந்தங்களுடன் கூடி நேர்த்திக்கடனை செலுத்தி வரும் மக்களுக்கு...

இந்த வருடம் திடீரென கொரோனாவால் திருவிழா தடைபட்டதால், ’இது தெய்வ குற்றம் ஆகி விடுமோ?’ என்ற பயத்தில் உள்ளனர்.

dd

வருடா வருடம் நேர்த்திக் கடன் செலுத்தும் வீரா நம்மிடம் பேசியபோது, ""ஆண்டுக்கொருமுறை அழகர் மலைக்கு வந்து கருப்பு சாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து திரும்புகிறோம். எங்கள் பரம்பரையில் கடந்த 100 வருடங்களுக்கு மேல் நடக்கும் நிகழ்ச்சி இது. இந்த முறை எங்களது நேர்திக்கடன் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. இது எங்களுக்கு ஒரு தெய்வ குற்றமாகி எங்கள் குலத்திற்கே வறட்சி யும் பஞ்சமும் வந்து விடுமோ என்ற பயம் எங்களை ஆட் கொள்கிறது. சாமி எப்படியாவது இந்த விழா சிறப்பாக நடைபெறணும் என்று கருப்பனுக்கு மீண்டும் ஒரு வேண்டுதலை வைத்து, மேலும் ஒரு கிடா மற்றும் பசுவை நேர்த்திக்கடனாக கொடுக்க இருக்கிறோம். இதுபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்கள் தோறும் மக்கள் விழா நடக்க கோரி கருப்பனுக்கு மேலும் கிடா வெட்டுவது என நேர்த்திக்கடன் செய்துள்ளார்கள்''’என்கிறார்.

Advertisment

ddகள்ளழகர் வேடமிட்டு வருடந்தோறூம் ஆடிவரும் அரவிந்த், ""திருவிழா நடந்தால்தான் மக்கள் நலமாக வாழ முடியும் விவசாயம் செழிக்கும். இருள் விலகும். குலம் விளங்கும் என அழகர் வேடமிட்டு விரதம் இருந்து வருகிறோம். கொரோனா நோயெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும் சார். கள்ளழகரும், கருப்புசாமியும் துடியான சாமிங்க. மக்களை பார்க்க அந்த கள்ளழகரே மலையிலிருந்து இறங்கி வருகிறார். இதுபோல் உலகில் எங்கும் கிடையாது. கடவுளை பார்க்கத்தான் மக்கள் போவாங்க. அந்த கடவுளே மக்களை பார்க்கவருவது மதுரையில்தான். அதை நிறுத்துவது என்பது தெய்வத்திற்கு எதிரான போரை அரசு செய்கிறது. இது அரசுக்கு நல்லதல்ல. சில கட்டுப்பாடுகளுடன் விழா நடத்த ஏற்பாடு செய்யலாம். அரசு மனம் இரங்க வேண்டும்'' என்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அதிகாரி ஒருவர், ""தென்மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று கூடும் திருவிழா இது என்றாலும் கொரோனா என்னும் கொடிய நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைக்கும் கட்டுப்பட்டு பொது நலத்திற்காக தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆகம விதிகளுக்கு உட்பட்டு மே 3-ஆம் தேதி வரை தான் அரசு தடை உத்தரவு உள்ளது. மே 7ஆம் தேதிதான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஆகம விதிகளுக்கு உட்பட்டு அதிகாலை அரசின் கட்டுப் பாடுகளுடன் சிறிய அளவிலாவது அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என் பது பக்தர்கள் மற்றும் கோயில், மக்களின் விருப்பமாக உள் ளது. அதை நிறை வேற்றித் தரும்படி தாழ்மையுடன் அரசுக்கு கடி தம் எழுதி உள்ளோம்'' என்கிறார்.

ff

Advertisment

விழா நடத்தவேண் டும் என்ற முனைப்பில் இருக்கிறவர்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் களம் இறங்கியுள்ளன. அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள அந்த அமைப்புகள், ஏனோ, ’விழா ரத்து செய்யப் பட்டதற்கு காரணம் மதுரை எம்.பி. சு.வெங்க டேசன்தான் என்று சமூக வலைத்தளங்கள் பரப்பி வருகின்றனர்.

இதனால் கொதித்தெழுந்த எம்.பி. வெங்கடேசன், மதுரை காவல் ஆணையரிடம் உடனே புகார் செய்துவிட்டு வந்தார். அவரிடம் நாம் அது குறித்து கேட்டபோது, ""மிகவும் அசிங்கமான அரசியல் செய்கிறார்கள். மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது போல திருக்கல்யாணமும் ரத்து செய்ய படவேண்டும் என்று மதுரை எம்.பி. அறிவித்துள்ளார். ஓட்டு போட்ட மக்களே இது போதுமா? என்று வாட்ஸ் அப், முக நூலில் பரப்பி வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பின் காரணமாக சித்திரை திருவிழாவை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஆனால், நான் ரத்து செய்யவேண்டும் என்று அறிவித்ததாக உண்மைக்கு புறம்பாக பொய்யாக பதிவிடப்பட்டுள்ளது. எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இந்துத்துவா ஆதரவாளர்கள் வேண்டுமென்றே இவ்வாறு செய்கின்றனர். சட்டபடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆணையரிடன் புகார் அளித்துள்ளேன்'' என்கிறார்.

தெய்வகுற்றம் மக்களுக்கு மட்டுமல்ல, ஆளும் அரசனுக்கும் கெட்ட சகுனமாக அமையும் என்று பக்தர்கள் ஒருபக்கம் பீதியில் இருக்க, சித்திரை திருவிழாவை வைத்து இந்துத்துவா இயக்கங்கள் செய்யும் அரசிய லாலும் திக்கு முக்காடிக்கிடக்கிறது மதுரை.

-அண்ணல்