க்ஸிஜன் கிடைக்காமல் உத்தரபிரதேச மருத்துவமனையில் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் தமிழகத்திலும் தொடருமா? என்ற பீதியை உண்டாக்கி யிருக்கிறது மதுரை அரசு மருத்துவமனையில் மல்லிகா, ரவீந்திரன் உட்பட ஐந்துபேர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறி இறந்த சோக சம்பவம். என்ன காரணம்? என்று விசாரிக்க ஆரம்பித் தபோதுதான்...

சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமும் வெளிவரத் தொடங்கி யிருக்கிறது.

d"என்ன நடந்தது?' மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல் இறந்து போன நோயாளி மல்லிகாவின் மருமகன் கணேச னிடம் நாம் கேட்டபோது, பதைபதைப்போடு விவ ரிக்க ஆரம்பித்தார். ""சுமார் 6:30 மணிக்கு இருட்டத் தொடங்கியதுமே பயங்கர காற்று மழை. திடீர்னு கரண்ட் கட் ஆகிடுச்சு. "அய்யய்யோ… மாமியார் ஐ.சி.யூ. வெண்டிலேட்டர்ல இருக்காங்களே'னு பதறியடிச்சுக் கிட்டு ஓடினோம். எங்க கண்ணு முன்னாடியே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்குப் போராடினதைப் பார்த்து எங்களுக்கு அதிர்ச்சியாகிடுச்சு. செல்போன் டார்ச் லைட்டை வெச்சு என்னமோ பண்ணிக்கிட்டி ருந்தாங்க. பக்கத்து பெட்டுல இருந்த நோயாளி களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தூக்கி தூக்கி போட எல்லாரும் அலற ஆரம்பிச்சுட்டாங்க. என் கண்ணு முன்னாடியே மூணு பேர் துடிதுடிச்சு இறந் ததை பார்த்தேங்க. அதுல என் மாமியாரும் ஒருத்தர்.

இப்போல்லாம் சாதாரண கடைகளில்கூட நல்ல ஜெனரேட்டர்களை வெச்சிருக்காங்க. இவ்ளோ பெரிய ஹாஸ்பிட்டலில் ஜெனரேட்டர் வேலை செய்யல. ஜெனரேட்டர் வேலை செஞ்சிருந்தா இத்தனை உயிர்களும் அநியாயமா போயிருக்காது. தனியார் மருத்துவமனையில ட்ரீட்மெண்ட் பண்ண வசதியில்லாமத்தான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அரசு மருத்துவமனைகளை நம்பி வர்றோம். ஆனா, இவங்களோட அலட்சியத்தால இப்படி உசுரை எடுத்துட்டாங்களே''’என்று குமுறிவெடிக்கிறார்.

Advertisment

இதுகுறித்து, மருத்துவமனையின் டீன் வனிதாவிடம் கேட்டபோது, “""கரண்ட் கட் ஆனதும் ஜெனரேட்டரை சரிசெய்துவிட்டோம். அதனால், கரண்ட் கட் ஆனதால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை''’என்று சமாளித்தார்.

"ஜெனரேட்டரை பராமரிப்பது யார்? கரண்ட் கட் ஆனால், உயிர்காக்கும் கருவியான வெண்டி லேட்டரில் இருக்கும் நோயாளிகளுக்கு மரணம் தானா?' என்று நாம் விசாரித்தபோது... “""வெண்டி லேட்டர்களை டி.என்.எம்.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம்தான் வாங்கி தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கிறது. இதற்கான பராமரிப்புச்செலவுகளை வருடா வருடம் அரசு மருத்துவமனைகளிட மிருந்து கோடிக்கணக்கில் வசூலித்துக்கொள்கிறது. மின்சார தடை ஏற்பட்டாலும் அரைமணி நேரத்தி லிருந்து 1 மணிநேரம்வரை ஓடக்கூடிய அளவுக்கு வெண்டிலேட்டரில் பேக்-அப் இருக்கவேண்டும். அந்த பேக்-அப் ஒழுங்காக வேலை செய்கிறதா என்பதை கண்காணிக்கவேண்டிய பொறுப்பு டி.என்.எம்.எஸ்.சியால் நியமிக்கப்பட்ட பயோ மெடிக்கல் இன்ஜினியர்களுக்கு உள்ளது. ஆனால், அவர்களோ வருடத்துக்கு ஒருமுறை பார்த்துவிட்டு அதற்குப்பிறகு கண்டுகொள்வதே இல்லை. மருத்துவமனை நிர்வாகமும் வெண்டிலேட்டரில் பேக்-அப் இருக்கிறதா என்பதை கண்டறிவதில்லை.

dஜெனரேட்டர் வேலை செய்கிறதா என்பதை பொதுப்பணித்துறையின் எலெக்ட்ரிகல் டிபார்ட் மெண்ட் ஏ.இ.தான் கண்காணிக்கவேண்டும். ஆனால், காற்று மழை வருகிறது… மின்சாரத்தடை ஏற்படக்கூடும் என்பது தெரிந்தும்... ஜெனரேட்டர் வேலை செய்கிறதா என்பதை கண்காணிக்காமல் இருந்துவிட்டார் மதுரை ஏ.இ. ரவிச்சந்திரன்'' என்று குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.

Advertisment

இதுகுறித்து, அவரிடம் நாம் கேட்டபோது, ""ஜெயக்குமார்தான் இதற்கு சூப்பர்வைஸர், அவரிடம் கேளுங்கள்''’என்றார்.

நாம் ஜெயக்குமா ரிடம் கேட்டபோது, ""7 ஜெனரேட்டர்கள் உள் ளன. மழையின்போது ஷார்ட் சர்க்யூட் ஆனதால் ஒரு ஜெனரேட்டர் ரிப்பேர் ஆகிவிட்டது. சரிசெய்வதற்குள் இப் படியாகிவிட்டது''’ என்றார்.

இக்கொடூர சம் பவத்தை அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் கண்டித்ததோடு… சமூக சமத் துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், தமிழ்நாடு மருத் துவத்துறை பணியாளர் கூட்டமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து கண்டனம் தெரிவித்து ஊடகங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

d

இதுகுறித்து நம்மிடம் பேசும் ஒருங்கிணைப் பாளர் டாக்டர் ரவீந்திரநாத்தோ, “""மின்வெட்டை உடனடியாக சரிசெய்யாததும், ஜெனரேட்டர் பழுதடைந்து இயங்காமல் இருந்ததாலும், செயற்கை சுவாசக்கருவிகள் தரம் குறைந்ததாக இருந்ததும், மாற்று மின்சார வசதி செய்யப்படாமல் இருந்ததுமே உயிரிழப்புக்கு காரணம். அரசாங்கத் தின் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை அரசாங்கம் மறைக்கப் பார்க்கிறது. இதுகுறித்து, விசாரணைக்குழு அமைப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்கள் வழங்கப் படவேண்டும். முக்கிய பெரிய மருத்துவமனைகளில் சூரியசக்தி மின்சார வசதியை உருவாக்கவேண் டும்''’என்றார் கோரிக்கையாக. அலட்சியமே 5 உயிர்கள் பறிபோனதற்குக் காரணம்.

மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாக சிறந்து விளங்கும் தமிழகத்தில் இன்னொரு உத்தரபிரதேசக் கொடூரம் நடப்பதற்குள் சுகாதாரத்துறை விழித்துக்கொள்ள வேண்டும்.

-மனோசௌந்தர், அண்ணல்