மண்ணைக் காக்க திரண்ட மதுரை!

ss

ங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேலாக திரண்ட மக்களால் தமுக்கம் மைதானம் ஸ்தம்பித்துப்போனது... மதுரையே திணறிப்போனது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தி லுள்ள அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை எதிர்த்து, கடந்த நவம்பர் மாதம் முதல் மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இது குறித்து நக்கீரன் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டுவரு கிறது. கடந்த வருடம் அக்டோபர் இதழில் முதன்முதலில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு என்று செய்தி வெளி யிட்டிருந்தோம்.

ss

அதன் தொடர்ச்சியாக பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், மேலூர் வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் துணையோடு டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புக் கூட்டமைப்பு, அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி தெற்குத் தெரு, வல்லாளப்பட்டி, கிடாரிப்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, சின்ன கற்பூரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த பொதுமக் கள் தொடர்ச்சியாக போராடிவந்தனர். டங்ஸ்டனுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி "நான் முதல்வராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டேன்' என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வைகோ, சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என அனைத்து

அதனைத் தொடர்ந்து வைகோ, சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள் என அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் போராடும் மக்களுக்கு ஆதரவு கொடுத்த நிலையில், ஒன்றிய அரசு இதுவரை இதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒன்றிய அரசு வேதாந்தாவிற்கு ஆதரவாக இருக்கிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கியது. மேலூர் பகுதி முழுவதும் கடையடைப்பு, தொடர் போராட்டம், ஒன்றிய அரசு அலுவலகங்களை நோக்கி பேரணி என தங்கள் ஒற்றுமையை வெளிக்காட்டினர்.

இதையடுத்து கடந்த ஜனவரி 7-ஆம் தேதி சுற்றிலுமுள்ள 30 கிராம மக்கள் 10,000 பேருக்கும் அதிகமானோர் ஒன்றுசேர்ந்து ஒன்றிய அரசின் தபால் தந்தி அலுவலகங்களை முற்றுகையிடத் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பியவாறு மதுரை தமுக்கம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும்; டங்ஸ்டன் சுரங்க அனுமதியை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை நடத்தியதால் மதுரையிலும் பதற்றம் உருவானது. மதுரையின் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 4 மாவட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் இந்தப் போராட்டம் முடிந்ததும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

பேரணியில் கலந்துகொண்ட மேலூர் நரசிங்கப்பட்டி விவசாயி சத்தியமூர்த்தி நம்மிடம், “"தம்பி நாங்க தலைமுறை தலைமுறையா விவசாயம் செய்துவருகிறோம். அதைத் தவிர வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஒன்றரை லெட்சம் பேர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களின் பூமி இது. அரிட்டாபட்டியை இயற்கை சூழ்ந்த பல்லுயிர்த்தலமாக அறிவித்திருக்கிறார்கள். இவங்க சுரங்கம்னு சொல்லி வெட்டியெடுக்கப்போகும் 5000 ஏக்கரிலும் விவசாயம்தான் நடக்குது. அதைச் சுற்றி எங்கள் குலதெய்வங்களான கருவம்பாறையான், இளம நாச்சியம்மன், ருத்திர காளினு தெய்வங் களோட கோவில்கள் இருக்குது. மலையைச் சுற்றியிருக்கும் 80-க்கும் மேற்பட்ட இயற்கை நீரூற்றுகள், 365 நாட்களும் வற்றாத நீரைச் சுரக்கக் கூடியவை. எங்களைக் காக்கும் தெய்வமாக விளங் கும் நிலத்தை வேற எதற்காகவும் விட்டுத்தரமாட் டோம். மண்ணை அழித்துவிட்டு எதை காப்பாற்றப் போறாங்க. இதுபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு சாபக்கேடுதான். எங்கள் மண்ணைக் காக்கும் மலையனாக முதல்வரை நம்பியிருக்கோம்''’என்றார்.

ss

விவசாயி தவமணி நம்மிடம், "10 ஆயிரம் வருடங்களாக வரலாற்றின் நீண்ட பாதையில் தன்னைப் பாதுகாத்துவரும் மதுரையின் தொன்மையை அழித்துவிட்டு என்னத்த கிழிக்கப்போறாய்ங்க என்று தெரியவில்லை. எதையும் சந்திக்க ரெடியா இருக்கோம். இந்தப் போராட்டம் பாரதப் பிரதமரின் காதுகளை போய்ச் சேரும் வரை ஓயாது. ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முழுமை யாக ரத்து செய்துss அரசாணை வெளியிட வேண்டும். சட்டமன் றக் கூட்டம் மட்டும் போதாது. மதுரை மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட தமிழ்ப் பண்பாட்டு மேலாண்மை மண்டல மாக அறிவிக்கவேண் டும். ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யாததற்கு எதிர்ப் புத் தெரிவித்து ஜனவரி 25-ல் மதுரை மாவட்ட கிராமங்கள், வீடுகள்தோறும் கருப் புக் கொடி கட்டி போராட்டங்கள் நடை பெறும். ஒன்றிய அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட்டங்கள் தீவிரப்படுத்தப் படும்''’என்றார்.

அரிட்டாபட்டியை சேர்ந்த ஒய்யம்மா, "இந்த மதுரை மண்ணு லேசுப்பட்டதில்லை. எங்க மண்ணிலிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்கவிடமாட்டோம். எங்களைத் துப்பாக்கி வைத்து சுட்டுக்கொன்றாலும் பரவாயில்லை. இந்த போராட்டத்திற்கு வரும்போது என் குலதெய்வமான மலையானை இளமநாச்சியம் மன் 80 ஊற்றையும் காக்கும் மலட்டு அழகியையும் பார்த்து மோடிக்கு நல்ல புத்தியைக் கொடு ஆத்தானு வேண்டிக்கிட்டு தான் வந்துருக்கேன். அவ விடமாட்டா. இவய்ங்கலால ஒரு பிடி மண்ணை எடுக்க முடியாது''’என்றார் ஆவேசமாக.

மேலூரைச் சேர்ந்த செல்வியோ, "எங்க மலையான்சாமி இங்கு தஞ்சம் பிழைக்கவரும் யாரா இருந்தாலும், நம்பி வந்தா வாழவைக்கும். ஆனா எங்க மண்ணை அழித்து ஆட நினைத் தால் அவங்களையே அழித்துவிடும்... இது சத்தி யம். 7000 ஆயிரம் அடி தோண்டி என்னத்தை எடுக்கப்போறாய்ங்க. என்னமோ டங்ஸ்டன் இருக்காம். அது என்னமோ தங்கத்தைவிட விலை அதிகம்ங்கிறாய்ங்க. இதைச் சாப்பிட்டு உயிர்வாழ முடியுமா? உயிர் வாழ உணவுதான முக் கியம். இந்த அடிப்படைகூட பிரதமருக்குத் தெரியாதா? உலகத்திற்கு உணவு கொடுக்கும் மண்ணை அழிக்கலாமா?''’என்றார் ஆவேசமாக.

டங்ஸ்டன் போராட்டம் தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “"டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட ஒரு பிடிமண்ணைக் கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என ஒரு மாதத்திற்கு முன்பே ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்குத் தெரிவித்திருந்தேன். இன்று ஆயிரக்கணக்கான மக்களின் முழக்கமாக அது மாறியுள்ளது. மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே வந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மோடி அரசு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மேலூர் -மதுரை மக்களாகிய எங்கள் போராட்டம் தொடரும்''’என்றார்.

போராட்டத்துக்கு முதலில் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், மக்கள் போராட் டத்தைக் கைவிடமாட்டார்கள் எனத் தெரிந்த தால் முடிவை மாற்றிக்கொண்டது. அதேபோல போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்ததாகவும் சர்ச்சையெழுந்துள்ளது.

ss

nkn110125
இதையும் படியுங்கள்
Subscribe