த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்

தியாக வாழ்க்கை, தவ வாழ்க்கை ஒப்பிடுங்கள்.

கூட்டு சேர்ந்து ஊழல் பண்ணி -சொத்து சேர்த்த பிறகு, தான் மட்டும் சிறைக்குச் செல்வது தியாக வாழ்க்கை. ஊழலில் சேர்த்த எஸ்டேட் பங்களாக்களில் சொகுசாக வாழ்ந்து மறைவது தவ வாழ்க்கை.

bb

Advertisment

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவேன் என்கிறாரே புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி?

எல்லா ஆளுநர்களும் பொறுப்பேற்கும்போது சொல்லக்கூடிய வார்த்தைகள்தான். எத்தனை ஆளுநர்கள் அப்படியே அதனைக் கடைப்பிடிப்பார் கள் என்பது அவர்களின் செயல்பாடுகளைப் பொறுத்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுநராக இருந்தவர் பீஷ்மநாராயண் சிங். முதல்வர் மீதான ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநரின் அனுமதி அவசியம். டான்சி நில ஊழல் புகாரை விசாரிக்க ஆளுநர் பீஷ்மநாரா யண் சிங் அனுமதி யளிக்கவில்லை. அவருக்குப் பிறகு, ஆளுநராக நியமிக்கப்பட்டார் சென்னா ரெட்டி. அவர் அந்த ஊழலை விசாரிக்க அனுமதித்தார். அதனால், அவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தினார் முதல்வர் ஜெயலலிதா. ஆளுநரின் கான்வாயை மடக்கி தாக்குதல் நடத்தினர் அ.தி.மு.க.வினர். கலைஞர் முதல்வராக இருந்தபோது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சுர்ஜித்சிங் பர்னாலா. "விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தி.மு.க. அரசு செயல்படுவதால் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று குற்றம்சாட்டி, ஆட்சியைக் கலைக்க வேண்டும்' என ஜெயலலிதா உள்ளிட்டோர் கடும் முயற்சி செய்தனர். அதற்கேற்ப செயல்பட்ட குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட் ராமன், ஆளுநரை டெல்லிக்கு அழைத்து விவரம் கேட்டார். "தமிழ்நாடு அமைதியாகத்தான் இருக்கிறது' என்றார் ஆளுநர் பர்னாலா. ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்றால் ஆளுநரின் கையெழுத்து தேவை. ஆனால், பர்னாலா கடைசிவரை கையெ ழுத்திடவில்லை. ஆளுநரின் கையெழுத்து இல்லாமலேயே ஆட்சியைக் கலைக்கும் சட்டப்பிரிவின் கீழ், தி.மு.க ஆட்சியைக் கலைத்தார் குடியரசுத் தலைவர். சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுவது ஒருபுறம், சட்டம் எப்படி செயல்படுகிறது என்பது இன்னொரு புறம். இரண் டுக்குமான எடுத்துக்காட்டுகள் தமிழ்நாட்டில் உள்ளது.

Advertisment

ரா.கோவிந்தன், வாடிப்பட்டி

துணிக்கடை, நகைக் கடைகளில் ஆடித் தள்ளுபடி போல பிரியாணி -புரோட்டா கடைகளில் புரட்டாசி தள்ளுபடி தருவார்களா?

ஒரு வியாபாரம் போல இன்னொரு வியாபாரம் இருப்பதில்லை. வியாபாரத்திற்கேற்ற ஆஃபர்கள் ஒவ்வொரு வியாபாரத்திலும் உண்டு. வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, ரெகுலர் கஸ்டமர்களுக்கும் இது தெரியும்.

எஸ்.கதிரேசன், பேராணம்பட்டு

பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பானிபூரியை இலவசமாக வழங்கிய வியாபாரி அஞ்ச்சல் குப்தா?

மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பவர் அஞ்ச்சல் குப்தா. பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். மனைவி பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார் என்று தகவல் வந்ததும், மிகுந்த மகிழ்ச்சியுடன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பானிபூரி வழங்க ஆரம்பித்தார். அந்த செய்தி பரவியதை யடுத்து... பலரும் வந்து, வரிசையில் நின்று பானிபூரி வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டவர்களில் சிலர், "பெண் குழந்தை பிறந்தால் வளர்த்து, ஆளாக்கி, கட்டிக் கொடுக்க நிறைய செலவாகுமே, இப்படி இலவசமாக பானிபூரி வழங்கினால் எப்படி?'' என கேட்டிருக்கிறார்கள். அஞ்ச்சல் குப்தாவோ, ‘"நீங்க கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து, இடைவெளி விட்டு நின்று பானிபூரி வாங்கிக் கொள் ளுங்கள்''‘ என்று சொல்லியிருக்கிறார். அவருடைய ஆர்வத்தையும் அக்கறையையும் பார்த்த பலர், "மகளுக்கான பரிசு' என பானிபூரிக்கு காசு கொடுத்து சென்றிருக்கிறார்கள்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்க வருவது பற்றி?

அடிவயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வடிவேலுவை பெரிய திரையில் பார்த்து 10 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. நடுவில் சில படங்களில் வந்து போனாலும், பழைய வடிவேலுவைப் பார்க்க முடியவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்த வடிவேலுக்கு, அந்தத் தேர்தல் முடிவு களுக்கு ஏற்பட்ட நெருக்கடி கள், ஒரு கலைஞனின் வாழ்வில் அரசியல் ஆடும் ஆட்டத்தைக் காட்டியது. சினிமாவில் அதிகளவில் பார்க்க முடியாத இந்த 10 ஆண்டுகளில், டி.வியிலும், யூ-டியூப்பிலும், சமூக வலைத்தளங்களிலும், மீம்ஸ்களிலும் எல்லா வற்றுக்கும் ஸ்ரீர்ய்ற்ங்ய்ற்-ஆக மாற்றி, எல்லாரையும் கலகலகப் பாக்கியவர் வடிவேலு. இன்று வரை, அவர் காமெடி சூப்பர் ஸ்டார்தான். ஓர் ஆட்சி மாற்றம் அவரை திரையிலிருந்து ஒதுக்கியது. இன்னொரு ஆட்சி மாற்றம் அவரை மீண்டும் திரைக்கு கொண்டு வருகிறது. கலைஞனின் வாழ்க்கை நகைச் சுவையானது அல்ல என்பதற்கு வடிவேலு சிறந்த எடுத்துக்காட்டு.