பி.மணி, வெள்ளக்கோவில்

வாக்கு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் தொடர்ந்து சந்தேக அலைகள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறதே?

அவை கரையைத் தொடாத அலைகளா, கரை தாண்டி பேரழிவை உண்டாக்கிய சுனாமி அலைகளா என்பதை மே 2 காட்டிவிடும்.

மணி, குப்பம் -ஆந்திரா

Advertisment

"உயிர் கொடுப்பான் தோழன்' என்கிற கூற்று உண்மையா?

"உயிர் காப்பான் தோழன்' என்பது பழந்தமிழ்க் கூற்று. ஆனாலும், நட்புக்காக செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தன் உயிர் கொடுத்த தோழனான கர்ணனை "மகாபாரதம்' காட்டுகிறது. வடக்கிருந்து உயிர்நீத்த கோப்பெருஞ்சோழனுடன் பிசிராந்தையும் உயிர்விட்டதை இலக்கியம் சுட்டிக்காட்டுகிறது. "இதிகாசம்- புராணம்' ஆகியவற்றில் உயிர் கொடுத்த தோழனைக் காட்டியிருக் கிறார்கள். வரலாற்றில், கம்யூனிசத் தத்துவத்தை முன்னெடுப்பதற்கு கார்ல் மார்க்ஸூடன் தோள் கொடுத்து துணைநின்ற நண்பராக விளங்கியவர் ஃப்ரெடரிக் ஏங்கெல்ஸ்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் செயல்?

மராட்டிய மாநிலத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி யான தனது அம்மாவுடன் ரயில்வே நடைமேடையில் நடந்து வந்த குழந்தை, தண்டவாளத்தில் தவறி விழ, எதிரே மின்சார ரயில் வேகமாக வர, கண்ணிமைக்கும் நேரத்தில், தண்ட வாளத்தில் குதித்து, சிறுவனைக் காப்பாற்றி நடைமேடை மீது ஏற்றிவிட்டு, தானும் அதில் தாவி ஏறிய ரயில்வே பணி யாளர் மயூர் ஷெல் கேவின் தன்னலமற்ற செயல்பாடு மெய் சிலிர்க்க வைத்தது. நாமே அவரைப் போற்றியது. அவரது தியாகமிக்க வீரச் செயலைப் பாராட்டி வழங்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையில், 25ஆயிரம் ரூபாயை அந்த குழந்தைக்கு வழங்கியிருக்கும் ஷெல்கேவின் ஈர இதயம், அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்டுவிட்டது.

m

ம.ரம்யாராகவ், திருப்பூர் மாவட்டம்

ஒரு திரைப்படம் பெரிய வெற்றி பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பது அந்தப் படத்தின் பாடாலா, இசையா, கதையா, நகைச்சுவையா, தெளிந்த நீரோடையை போன்ற திரைக்கதை அமைப்பா, அதிக பொருட்செலவில் படம் எடுக்கும் தயாரிப்பாளரா, இவை அனைத்துக்கும் மேலாக படத்தை எடுக்கும் இயக்குனரா அல்லது மகுடம் சூட்டும் ரசிகர்களா?

வெற்றியா, தோல்வியா என்பதைப் பார்க்காமல் ஒரு படத்தை காலம் கடந்தும் ரசிகர்களின் நினைவில் நிலை நிறுத்துவது பாடல்களும் இசையும்தான். திரையரங்கில் மிகச்சில நாட்களே ஓடிய படங்களின் பாடல்களும்கூட தலைமுறை தலைமுறையாக ரசிக்கப் படுகின்றன. கதை புதிதாக இருந்து -திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டதால் வெற்றிபெறாமல் போன படங்கள் உண்டு. எம்.ஜி. ஆரின் "பெரிய இடத்துப் பெண்' -கமல் நடித்த "சகலகலா வல்லவன்' இரண்டிலும் அடிப்படையான கதைக்கரு ஒன்றே என்றாலும், திரைக்கதையின் விறுவிறுப்பால் வெவ்வேறு காலத்தில் வெளியான இரண்டு படங்களுமே ஓடியிருக்கின்றன. சிவாஜியின் "உத்தம புத்திரனை'யும் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னனை'யும் நகைச்சுவை முலாம் பூசி உருவாக்கப்பட்ட வெற்றிப் படம்தான் வடிவேலு டபுள் ரோலில் நடித்த "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி'. அதிக பொருட் செலவில் எடுக்கப்பட்ட ரஜினியின் "எந்திரன்' படமும் வெற்றிபெற்றி ருக்கிறது. ஒரு ஓட்டு வீடு -நடுவில் ஒரு கோடு என குறைந்த பட் ஜெட்டில் எடுக்கப்பட்ட சம்சாரம் அது மின்சாரமும் சக்கை போடு போட்டிருக்கிறது. செலவழித்தும் தோல்வி கண்ட படங்களால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்ட தயாரிப்பாளர்களும் உண்டு. தொடர் வெற்றிகளைத் தந்த இயக்குநர்கள் சறுக்கியதும் உண்டு. "திரைப்படத்தின் வணிகரீதியான வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்வது அத்தனை எளிதல்ல' என்கின்றனர் திரைத்துறையினர்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

"பிச்சை எடுங்கள், திருடுங்கள் அல்லது வேறு ஏதேனும் செய்து உயிரை காப்பாற்றுங்கள்' எனக் கூறும் நீதிமன்றத்தால் "பி.எம்.கேர் நிதி என்ன ஆனது?' என்பன போன்ற நியாயமான கேள்வியைக் கேட்க முடியாமல் போனது ஏன்?

இந்தளவுக்கு கேட்டும் ஆக்ஸிஜன் இல்லாத உடல்போல அசைவற்றுக் கிடக்கும் மோடி அரசு, "பி.எம்.கேர் நிதி' என்ற பெயரில் கொரோனாவைக் காரணம் காட்டி வசூலித்த பணத்தைப் பற்றி மூச்சுவிடுமா என்ற சந்தேகத்தில் கேட்காமலே விட்டிருக்கலாமோ என்னவோ!

ஆற்காடு விநாயகம் ராணிப்பேட்டை

விவேக்கின் மறைவு?

நகைச்சுவையில் தனி பாணியைக் கையாண்டு, சிந்தனை யுடன் சிரிக்க வைத்தவர். திரை வாழ்வைக் கடந்து, பல வழி களிலும் விழிப்புணர்வு ஏற் படுத்தும் நற்செயல்களை மேற் கொண்டவர். அதே எண்ணத் துடன் தடுப்பூசியைப் பலரும் அறிய தொலைக்காட்சி முன் னிலையில் போட்டுக்கொண்ட மறுநாளே இதயத்துடிப்பு நின்று போய் மரணத்தை தழுவியது பேரதிர்ச்சி. ஒரு பிரபலத்தின் மரணம், தடுப்பூசி மீதான பயத் தையும் பீதியையும் உருவாக்கி விட்டது அதைவிட பேரதிர்ச்சி.