மாவலி பதில்கள்!

mm

சி.கார்த்திகேயன், சாத்தூர் 626 203

இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரங்கள் முற்றிலும் வித்தியாசமாகவே தெரிகிறதே?

சுவரில் சின்னத்தை வரைந்து வேட்பாளர் பெயரை எழுதுவதற்கு அனுமதி வேண்டும். சுவரொட்டி ஒட்டுவதற்கு அனுமதி வேண்டும். எத்தனை அச்சிட்டார்கள் என்ற கணக்கும் வேண்டும். ஊர்வலம் போக அனுமதி வேண்டும். பத்திரிகை -தொலைக்காட்சி விளம்பரங்கள் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். இத்தனை வேண்டும்கள் நெருக்கடி தருவதால், அரசியல் கட்சியினர் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டனர். வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும், இளைஞர்களை ஈர்க்கும் யூ-டியூப்களையும் நம்புகின்றனர். எல்லாவற்றுக்கும் அரசியல் கட்சிகளிடம் மாற்று வழி இருக்கிறது. ஓவியர்கள், அச்சகத்தார், பத்திரிகைத் துறையினர் எனப் பல குடும்பங்களுக்கான வருமானத்தை தரும் தொழில்களை செய்பவர்கள்தான் மாற்றுவழி தெரியாத நிலையில் உள்ளனர்.

பா.ஜெயப்பிரகாஷ்,

அரண்மனைப்புதூர் -தேனி மாவட்டம்

"தி.மு.க.'வின் 1,000, "அ.த

சி.கார்த்திகேயன், சாத்தூர் 626 203

இந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரச்சாரங்கள் முற்றிலும் வித்தியாசமாகவே தெரிகிறதே?

சுவரில் சின்னத்தை வரைந்து வேட்பாளர் பெயரை எழுதுவதற்கு அனுமதி வேண்டும். சுவரொட்டி ஒட்டுவதற்கு அனுமதி வேண்டும். எத்தனை அச்சிட்டார்கள் என்ற கணக்கும் வேண்டும். ஊர்வலம் போக அனுமதி வேண்டும். பத்திரிகை -தொலைக்காட்சி விளம்பரங்கள் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும். இத்தனை வேண்டும்கள் நெருக்கடி தருவதால், அரசியல் கட்சியினர் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டனர். வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களையும், இளைஞர்களை ஈர்க்கும் யூ-டியூப்களையும் நம்புகின்றனர். எல்லாவற்றுக்கும் அரசியல் கட்சிகளிடம் மாற்று வழி இருக்கிறது. ஓவியர்கள், அச்சகத்தார், பத்திரிகைத் துறையினர் எனப் பல குடும்பங்களுக்கான வருமானத்தை தரும் தொழில்களை செய்பவர்கள்தான் மாற்றுவழி தெரியாத நிலையில் உள்ளனர்.

பா.ஜெயப்பிரகாஷ்,

அரண்மனைப்புதூர் -தேனி மாவட்டம்

"தி.மு.க.'வின் 1,000, "அ.தி.மு.க.'வின் 1,500 -பஜ்லிஸ் ஒவைசியின் வீட்டுக்கு ஒரு "ஒட்டகம்' - "அ.ம.மு.க.'வின் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை... அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எப்படிங்க?

அள்ளி விடுகிறார்கள் அத்தனை பேரும். அதில், எந்தளவு அள்ளிக் கொடுப்பார்கள், அதனை யார் செய்வார்கள் என்று மக்கள் நம்புகிறார்களோ அந்தக் கட்சியின் வாக்குறுதிகள், வாக்குகளாக மாறும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறப்போவதில்லை. அப்படியிருக்க தேசிய கட்சியான பா.ஜ.க. 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி யிட்டிருக்க வேண்டும் என்கிறாரே சுப்ரமணியசாமி?

சில நேரங்களில் சிலர் உண்மையையும் பேசுவார்கள் என்று சொல்லியிருக்கிறாரே ப.சிதம்பரம்.

வாசுதேவன், பெங்களூரு

சமீபத்திய அருமையான நிகழ்வு?

sss

எழுத்தாளர்களிலேயே தன் அரசியல் அடையாளத்தை மறைக்காமல் கட்சிக் கரை வேட்டியுடன் இலக்கிய மேடைகளில் பங்கேற்பவரும் -சொந்தக் கட்சி உள்பட சமுதாயத்தின் அனைத்து அவலங்களையும் அம்பலப் படுத்துபவருமான திராவிட இயக்கப் படைப்பாளி இமையம் அவர்களின் ‘"செல்லாத பணம்'‘ நாவலுக்கு கிடைத்திருக்கும் "சாகித்ய அகாடமி' விருது.

mm

கே.ஆர்.உபேந்திரன், என்.கே.ரோடு -தஞ்சாவூர்

ம. நீ. ம., நாம் தமிழர், அ.ம.மு.க. -இவர்கள் யாருடைய ஓட்டுக்களை அதிகம் பிரிப்பார்கள்.?

இந்தக் கேள்வியை கமலஹாசன், சீமான், தினகரனிடம் கேட்டுப் பாருங்கள். "நாங்களா பிரிக்கிறோம், நாங்கள்தான் ஜெயிக்கிறோம்' என்று சொல்வார்கள். தேர்தல் களத்தில் நிற்பதற்கு வாக்குகளைவிட அதிகம் தேவை, அசாத்திய நம்பிக்கை.

____________

தேர்தல் களம்

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

தேர்தலில் இலவசங்கள் வழங்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு உரிமை இருக்கிறது?

ஓட்டுக்காக எதையாவது கொடுத்து மக்களைக் கவர்வது என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. காலத்திற்கேற்ப அது மாறிக்கொண்டும் இருக்கிறது. ஓட்டுப்போட வருபவர்களை மாட்டு வண்டியில், சைக்கிள் ரிக்ஷாவில் என ஒரு காலத்தில் அரசியல் கட்சியினர் அழைத்து வந்தார்கள். ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே வந்தால், மீண்டும் வீட்டுக்குச் செல்வதற்கு வாகன வசதி இருக்காது. அடுத்து ஒரு கூட்டத்தை அழைத்து வர, வாகனங்கள் போய்விடும். நீண்டநேரக் காத்திருப்புக்குப் பிறகுதான் வீட்டுக்குத் திரும்பமுடியும். அந்த நேரத்தில், சாப்பாடு -காபி எனத் தருவது கட்சிகளின் வழக்கமாக இருந்தது. தேர்தல் குறித்த விழிப்புணர்வு பரவியபோது, இப்படி வாக்காளர்களை அரசியல் கட்சியினர் அழைத்து வரக்கூடாது என்றும், மக்கள் தாமாகவே வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்தி, வாக்காளர்களின் சிரமம் குறைக்கப்பட்டது. வாக்குச்சாவடிக்கு வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலமாக இலவச வாகன சேவை என்பது தடுக்கப்பட்டது.

அதே நேரத்தில், வாக்குக்காக புடவை, பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை இலவசமாகக் கொடுப்பதையும், ஓட்டுக்கு நோட்டு எனக் கொடுப்பதையும் தேர்தல் ஆணையத் தால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே வீட்டுக்கு வீடு பொங்கல் சீர்வரிசை கொடுத்த அமைச்சர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அரசாங்கமே பொங்கல் பரிசுத் தொகுப்பு என அரசுப் பணத்தில் ஆளுங்கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் வேலையையும் செய்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக ஓட்டுக்கு இவ்வளவு என விலை வைத்து, கச்சிதமாக பணம் விநியோகிக்கப் படுவதையும் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆள்வோரின் காவல்துறையையே ஆணையம் நம்பவேண்டியிருப்பதாலும், ஆணையத்தின் ஆளுங்கட்சி சார்ந்த செயல்பாடுகளும் இதற்கு காரணமாகின்றன. 2014 எம்.பி. தேர்தலின் கடைசிக் கட்டத்தில் தமிழகம் முழுவதும் 144 தடையுத்தரவு போடப்பட்டது. அதாவது, 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கம். அதனால், ஆளுந்தரப்பினர் ஒற்றைஆளாக, இரட்டை ஆளாக சென்று பண விநியோகம் செய்ய அனுமதித்த சட்டம், அவர்களை எதிர்த்தரப்பினர் கூட்டமாகச் சென்று மடக்குவதற்கு அனுமதிக்கவில்லை.

nkn170321
இதையும் படியுங்கள்
Subscribe