Advertisment

மாவலி பதில்கள்!

mm

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

2020 ல் யாருடைய இறப்பு உங்கள் மனதை மிகவும் பாதித்தது?

புத்தாண்டை நம்பிக்கையுடன் வர வேற்று-மனதில் பல திட்டங்கள் வகுத்திருந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உலகம் முழுவதும் உயிரை இழந்த ஒவ்வொருவரின் இறப்பும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

Advertisment

அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் கலைஞர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்கிறாரே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்?

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞர் மரணமடைந்தார். அப்போதிலிருந்து இப்போதுவரை அ.தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக டெண்டர் கமிஷன்களிலேயே கவனமாக இருந்ததால், விசாரணை கமிஷன் அமைக்கவில்லை போலும். அமைச்சர்களை மிஞ்சி உளறுகிறார்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்.

செந்தில்குமார் எம்., சென்னை-78

தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்வதையெல்லாம் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்

பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி

2020 ல் யாருடைய இறப்பு உங்கள் மனதை மிகவும் பாதித்தது?

புத்தாண்டை நம்பிக்கையுடன் வர வேற்று-மனதில் பல திட்டங்கள் வகுத்திருந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உலகம் முழுவதும் உயிரை இழந்த ஒவ்வொருவரின் இறப்பும்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

Advertisment

அ.தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் கலைஞர் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்கிறாரே அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர்?

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ந் தேதி கலைஞர் மரணமடைந்தார். அப்போதிலிருந்து இப்போதுவரை அ.தி.மு.க. ஆட்சிதான் நடக்கிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக டெண்டர் கமிஷன்களிலேயே கவனமாக இருந்ததால், விசாரணை கமிஷன் அமைக்கவில்லை போலும். அமைச்சர்களை மிஞ்சி உளறுகிறார்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள்.

செந்தில்குமார் எம்., சென்னை-78

தமிழக பா.ஜ.க. தலைவர்கள் சொல்வதையெல்லாம் அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொள்ள முடியாது என ஜெயக் குமார் சொல்வது ஆச்சரியமாக உள்ளதே?

Advertisment

தமிழக அமைச்சர்களின் எஜமானர்கள் டெல்லி பா.ஜ.க. தலைவர் கள்தான் என்பதை சூசக மாக சொல்கிறார்போல.

வெங்கடேசன், அழகேசன்நகர் -செங்கல்பட்டு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை மட்டும் சிலர் எதிர்ப்பது ஏன்? அவர்களும் நம் நாட்டு பிரஜைகள்தானே?

நிரந்தரக் கடைகளின் வியாபாரத்தை சில நேரங்களில் திருவிழா நேரத்துக் கடைகள் காலி செய்துவிடுகின்றன.

mm

பி.மணி, குப்பம் -ஆந்திரா

தற்பொழுதெல்லாம் அரசியலில் பேசப்படும் நகைச்சுவை, சினிமா நகைச்சுவையை மிஞ்சிவிடும்போல இருக்கிறதே?

தமிழ் சினிமாவில் கலைவாணர் என்.எஸ்.கே., சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தானம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாக நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள். அரசியலில் தற்போது அத்தனை பேரும் மொத்தமாக வந்து விட்டார்களோ என நினைக்கத் தோன்றுகிறது.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

தன்னை முன்னிறுத்தி அரசியல் பேரம் நடக்கிறது என்பதை அறிந்து, ரஜினிகாந்த் பலிகடா ஆகாமல் தப்பிவிட்டார் சரியா?

அவர் தப்பி யது மட்டுமல்ல, தன்னை சிக்க வைக்க நினைத்த வர்களை பலிகடா ஆக்கிவிட்டார்.

வாசுதேவன், பெங்களூரு

2021 ஆரம்பம் எப்படி?

மக்கள் வரிப்பணத்தில் பொங்கல் பரிசு தருவதை தேர்தல் அரசியலாக்கப் பார்க்கிறது அ.தி.மு.க! மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தலைக் குறி வைக்கிறது தி.மு.க.! ஆரம்பம் ஜோர்தான். அடுத்தடுத்து என்ன என்பது 2021-ன் நடுவில் தெரியும்.

__________

தேர்தல் களம்

சி.கார்த்திகேயன் சாத்தூர்

ஒரு கட்சியின் வாக்கு சதவீதத்தை அடிப் படையாக வைத்து தேர்தல் சின்னம் ஒதுக்குவது சரிதானா?

தேர்தல் ஆணையம் ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளும், 2 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தில் 6 சதவிகிதம் வாக்குகளுடன், 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கவேண்டும். அல்லது வாக்குபலம் குறைந் திருந்தாலும் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை 234-ல் 8 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். வெற்றி பெற முடியாமல் போனாலும் 8% வாக்குகளைப் பெற்றிருந்தால் அது மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெறும் நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். அது போலவே தேசிய கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அல்லது மொத்தம் உள்ள 545 எம்.பி.தொகுதிகளில் 2 சதவீத இடங்களை (11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங் களில் இருந்து வெற்றி பெற வேண்டும். அல்லது ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங் களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும். தேசிய கட்சி அல்லது மாநிலக் கட்சியாக பதிவு பெற்றோருக்கு வழங்கப்படும் சின்னம், மேற்கண்ட விதிமுறைகளின் கீழ் நீடிக்கும். மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்தில் உள்ள சின்னங்களைப் பெறலாம். நிபந்தனைகளுக்கேற்ப அந்தக் கட்சிகளும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தங்கள் வாக்குபலத்தை உயர்த்தி, தொகுதிகளில் வென்றால் அவையும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளாகி தனி சின்னத்தை பெற முடியும். ஜனநாயகத்தின் தன்மை இது.

nkn090121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe