Advertisment

மாவலி பதில்கள்!

mm

ம.தமிழ்மணி, குப்பம் -ஆந்திரா

எம்.ஜி.ஆரை பல கட்சிகள் தங்கள் மேடைப் பேச்சில் பேசிப் புகழ்வதேன்?

mm

Make Upக்காகத் தான்

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.613 006

மேற்குவங்கத்தில் அமித்ஷா தரையில் உட்கார்ந்து சாப்பிட்டதை பெரிய சாகசம் போல ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியுள்ளனரே?

Advertisment

கட்சித் தொண்டர்கள் வீடுகளில், சமபந்தி விருந்துகளில், சத்துணவு தொடர்பான விழாக்களில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதும், தங்கள் கையாலேயே பரிமாறுவதும் வழக்கம், . அது ஒரு நிகழ்வு அவ்வளவே. குஜராத் அரசியல் வணிகர் களுக்கோ சக மனிதர்களுடன் சாப்பிடுவதே லாபம் தரும் பண்டமாக உள்ளது.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

""தொழில்நுட்பம் சார்ந்த சமூக ஊடகங்களும், பாரம்பரிய பத்திரிகைகளும் இணைந்து வருவாயை பகிர்ந்து கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்"".. என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள் கூறியுள்னாரே?

பாரம்பரிய பத்திரிகைகள்

ம.தமிழ்மணி, குப்பம் -ஆந்திரா

எம்.ஜி.ஆரை பல கட்சிகள் தங்கள் மேடைப் பேச்சில் பேசிப் புகழ்வதேன்?

mm

Make Upக்காகத் தான்

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.613 006

மேற்குவங்கத்தில் அமித்ஷா தரையில் உட்கார்ந்து சாப்பிட்டதை பெரிய சாகசம் போல ஊடகங்கள் வழியாக பிரபலப்படுத்தியுள்ளனரே?

Advertisment

கட்சித் தொண்டர்கள் வீடுகளில், சமபந்தி விருந்துகளில், சத்துணவு தொடர்பான விழாக்களில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் பலரும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதும், தங்கள் கையாலேயே பரிமாறுவதும் வழக்கம், . அது ஒரு நிகழ்வு அவ்வளவே. குஜராத் அரசியல் வணிகர் களுக்கோ சக மனிதர்களுடன் சாப்பிடுவதே லாபம் தரும் பண்டமாக உள்ளது.

Advertisment

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி

""தொழில்நுட்பம் சார்ந்த சமூக ஊடகங்களும், பாரம்பரிய பத்திரிகைகளும் இணைந்து வருவாயை பகிர்ந்து கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்"".. என துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அவர்கள் கூறியுள்னாரே?

பாரம்பரிய பத்திரிகைகள் உள்பட அனைத்து பத்திரிகைகளையும் சமூக வலைத்தளங்களில் அனுமதியின்றி பதிவேற்றி மிகப்பெரும் உழைப்புச் சுரண்டல் தொடர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வசதியைக் கொண்டு நடைபெறும் இந்த மோசடியைத் தடுத்து நிறுத்துவதுதான் அவசர அவசிய நடவடிக்கை. ஊடகங்கள் குறித்து நன்கறிந்த துணை குடியரசுத் தலைவர் அதற்கு ஆவண செய்வதே முதன்மையானது.

வாசுதேவன், .பெங்களூரு

முதல் இன்னிங்சில் கூடுதல் ரன்களை குவித்துவிட்டு, இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவிய இந்திய கிரிக்கெட் அணியின் மட்டமான ஆட்டம் பற்றி?

விளையாட்டில் மட்டம் -ஒசத்தி என்று ஏதுமில்லை. இதே ஆஸ்திரேலிய மண்ணில் சுனில் கவாஸ்கர் தலைமையில் இந்திய அணி ஆடியபோது, வெற்றி இலக்கு எளிது என நினைத்த ஆஸ்திரேலியாவை 83 ரன்களில் சுருட்டி இந்தியாவுக்கு வெற்றியைத் தந்தது கபில் தேவின் பந்துவீச்சு. களமும் வியூகமும் திறனும் இணைந்ததே விளையாட்டு. ஒன்று பழு தானாலும் முடிவுகள் மாறும்.

செ.பொன்னுச்சாமி, சிவகங்கை

தமிழக முதல்வர்களில் அவர்கள் வென்ற தொகுதிக்கு அதிக நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் யார்?

முதல்வர் தொகுதி என்றால் கூடுதல் கவனத்துடன் திட்டங்கள் செலுத்தப்படுவது வழக்கம்தான். விருதுப்பட்டி, விருதுநகரானது பெருந்தலைவர் காமராஜரால். 1980ல் மதுரையில் வென்ற எம்.ஜி.ஆர். இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தி பெருமை சேர்த்தார். 1991ல் முதல்வரான ஜெயலலிதா தனது பர்கூர் தொகுதியில் உள்கட்டமைப்பைப் பெருக்கி னார். 2011ல் ஸ்ரீரங்கம் தொகுதியில் பொறியியல்கல்லூரி உள்பட பல திட்டங்களைக் கொண்டு வந்தார். இப்போதைய முதல்வர் பழனிசாமி தனது எடப்பாடி தொகுதியையும் சேலம் மாவட்டத்தையும் கவனிப்பதற்காகவே தனி கண் வைத் திருக்கிறாரோ என்கிற அளவுக்கு கவனம் செலுத்துகிறார். கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் திருவாரூரை தனி மாவட்டமாக்கி, மருத்துவக் கல்லூரி அமைத்து, மத்திய பல்கலைக்கழகத்தையும் கொண்டு வந்தார். தமிழ்நாட்டின் முதல் கணினி (மின்னணு நிர்வாக) மாவட்டமாகவும் திருவாரூரை உருவாக்கினார். இத்தனை திட்டங்களையும் செயல்படுத்திய பிறகுதான் அவர் திருவாரூரில் இரண்டு முறை போட்டியிட்டு வென்றார்.

செந்தில்குமார். எம், சென்னை - 78.

""தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை பாஜக முடிவு செய்யும் என எல்.முருகன் சீண்டி பார்ப்பது பற்றி?""

எஜமானர்கள்தான் அடிமைகளை மிரட்டுவார்களா? எஜமானர் குடும்பத்தினரும் அவ்வப்போது மிரட்டுவது வழக்கம்தானே!

_____________

தேர்தல் களம்

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 1971-ல் தி.மு.க. கைப்பற்றிய 184 தொகுதி எண்ணிக்கை சாதனை ஐம்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளதே?

அறிஞர் அண்ணா 1967 தேர்தலின் போது தி.மு.க. தலைமையில் அமைத்த வெற்றிகரமான கூட்டணி என்பது, வலிமையான காங்கிரசை வீழ்த்தி, திராவிட ஆட்சிக்கு வழிவகுத்தது. அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் தலைமையிலான தி.மு.க. எதிர்கொண்ட 1971 சட்டமன்றத் தேர்தல்தான், தமிழகத்தில் திராவிட ஆட்சியை வலுவாக நிலைநிறுத்தியது. முந்தைய தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி அமைத்திருந்த ராஜாஜியின் சுதந்திரா கட்சி, 1971ல் பெருந்தலைவர் காமராஜருடனான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்ததால் அதனை மெகா கூட்டணி என்றனர். அந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கருத்துகள் வெளிப்பட்டன. தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள்-காவல்துறை அதிகாரிகள் பலர் காமராஜரை சந்தித்து அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர். ஆனால், 1967ல் 136 இடங்களை வென்ற தி.மு.க 1971ல் 184 இடங்களில் வெற்றி பெற்றது. கலைஞர் அரசின் திட்டங்களும், தேர்தல் வியூகமும், திராவிட இயக்கம் அன்றைய இளந்தலைமுறையினரிடம் வேரூன்றியிருந்ததுமே இதற்கு அடிப்படைக் காரணம். அதன்பின் 1977ல் எம்.ஜி.ஆர் தனிக்கட்சியாக போட்டியிட்டது தி.மு.கவின் வாக்குபலத்தைக் குறைத்தது. அ.தி.மு.கவும் மெஜாரிட்டி அளவுக்கான சீட்டுகளை பெற்றது. பின்னர் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் மாறி மாறி வாக்கு யுத்தத்தில் சமமாக ஈடுபட, 184 என்ற இலக்கு அரைநூற்றாண்டாக தகர்க்கப்பட முடியாததாக உள்ளது.

nkn261220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe