நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
"அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சால் என் தூக்கம் போச்சு' என ஸ்டாலின் கூறி இருப்பது குறித்து?
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி யிருக்கிறார். வெல்லும் சொல்லைத் தவிர்த்துவிட்டு, கொல்லும் சொல்லை மட்டும் வெட்டி -ஒட்டி -திரித்து வெளியிடும் சமூகவலைத்தளங்கள், சில ஊடகங்களின் செயலை அடிப் படையாக வைத்துதான், "அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சால் என் தூக்கம் போச்சு' என அவர் சொல்லியிருக்கிறார். பொதுக்குழுவில் தன்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே ஊடகங்கள் எந்த அளவுக்கு தி.மு.க. மீது விமர்சனங்களை வைக்கின்றன என்பதையும் முதல்வர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அமைச்சர்களும் நிர்வாகிகளும் தவறாகப் பேசக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதைவிட, சரியாகப் பேசினாலும் தவறான கோணத்தில் சித்தரிக் கும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள்தான் முதல் வரின் தூக்கத்தைக் கெடுப்பதற்கு காரணமாக இருக் கின்றன. அவர் முதல்வராவதற்கு முன்
நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி
"அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சால் என் தூக்கம் போச்சு' என ஸ்டாலின் கூறி இருப்பது குறித்து?
ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும் என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி யிருக்கிறார். வெல்லும் சொல்லைத் தவிர்த்துவிட்டு, கொல்லும் சொல்லை மட்டும் வெட்டி -ஒட்டி -திரித்து வெளியிடும் சமூகவலைத்தளங்கள், சில ஊடகங்களின் செயலை அடிப் படையாக வைத்துதான், "அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பேச்சால் என் தூக்கம் போச்சு' என அவர் சொல்லியிருக்கிறார். பொதுக்குழுவில் தன்னுடைய பேச்சின் தொடக்கத்திலேயே ஊடகங்கள் எந்த அளவுக்கு தி.மு.க. மீது விமர்சனங்களை வைக்கின்றன என்பதையும் முதல்வர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அமைச்சர்களும் நிர்வாகிகளும் தவறாகப் பேசக்கூடாது என்பதில் அவர் கவனமாக இருக்கிறார். அதைவிட, சரியாகப் பேசினாலும் தவறான கோணத்தில் சித்தரிக் கும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள்தான் முதல் வரின் தூக்கத்தைக் கெடுப்பதற்கு காரணமாக இருக் கின்றன. அவர் முதல்வராவதற்கு முன் சுடலை என்றும், கூப்புதான் என்றும், துண்டுச் சீட்டு என்றும், எடப்பாடி ஆட்சியைக்கூட அகற்றத் தெரியாதவர் என்றும், ஜாதகம் சரியில்லை -கட்டம் சரியில்லை என்றும் சொன்னவர்கள் யார் என்று அவருக்குத் தெரியும். அவையெல்லாம் வைரலாகப் பரவியபோதும், அதைப் பொருட்படுத்தாமல் வெற்றிபெற்று முதல்வராகியிருக்கிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பேச்சைக் குறைத்து, செயலில் முழுக்கவனம் செலுத்தும் முதல்வரைப் போல அமைச்சர்களும் நிர்வாகிகளும் செயல்பட்டால், முதல்வர் ஒவ்வொரு இரவிலும் நிம்மதியாகத் தூங்கலாம்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
திருக்குறளில் உள்ள ஆன்மீகம் பற்றி எவரும் பேசுவது இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம் கொள்கிறாரே?
பேசலாமே? பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் சனாதன தர்மத்தை மேடை தோறும் பெருமையாகச் சொல்கிறார் கவர்னர் ஆர்.என்.ரவி. அதுதான் இந்தியாவின் ஆன்மீகம் என்றும் அவர் நம்பிக்கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு நேர் எதிராக "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற மானுடத் தத்துவத்தை முன்வைத்தது திருக்குறள். மனிதனுக்கு நடக்கக்கூடியதெல்லாம் கடவுள் எழுதிய விதி என்பது ஆர்.என்.ரவி வகையறாக்கள் நம்புகிற ஆன்மீகம். வள்ளுவரோ, "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்று "உழைப்பே உன் விதியைத் தீர்மானிக்கும்' என மனிதனை ஊக்கப்படுத்துகிறார். "பிச்சையெடுத்து உயிர் வாழவேண்டிய நிலை ஒருவனுக்கு ஏற்படுமானால் அப்படிப்பட்ட உலகத்தைப் படைத்தவன் கெட்டு அழிவானாக' என்று சாபமும் விடுகிறார் வள்ளுவர். இதுபோன்ற ஆன்மீகத்தை உரக்கப் பேசலாமே கவர்னர் ஆர்.என்.ரவி.
வாசுதேவன், பெங்களூரு
முலாயம்சிங் யாதவின் மறைவு?
மதவெறி இந்தியாவை கட்டமைக்க பா.ஜ.க. படுதீவிரமாக முயற்சிக்கின்ற நிலையில், இந்திய அரசியல் இழந்துள்ள மதச்சார்பற்ற அரசியலின் முகம்தான் முலாயம்சிங் யாதவ். பிராமணர்களும் உயர் சாதிக்காரர்களும் மட்டுமே உத்தரபிரதேசத்தில் முதல்வராக முடியும் என்றிருந்த அரசியல் நிலையினை மாற்றி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து முதல்வரானவர் முலாயம்சிங் யாதவ். பா.ஜ.க.வின் மதவெறி அரசியலுக்கு கடிவாளம் போடும் அரசியல் சூழலை உருவாக்கியதில் முலாயம்சிங்கிற்கு முக்கிய பங்கு உண்டு. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் தேசிய முன்னணியில் முலாயம்சிங்கும் ஓர் அங்கம். அதே நேரத்தில், அவர் வி.பி.சிங்கிற்கு எதிராகவும் அரசியல் காய்களை நகர்த்தியிருக்கிறார். வி.பி.சிங்கிற்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார். மாயாவதி கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்திருக்கிறார். மாயாவதிக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையும் மேற்கொண்டார். பா.ஜ.க.வை எதிர்த்தார். ஆனால், வாஜ்பாயையும் மோடியையும் பாராட்டியிருக்கிறார். சோனியாவை வெளிநாட்டுக்காரர் என்றார். அவர் தலைமையிலான காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். உத்தரபிரதேச அரசியல் சூழலுக்கேற்ப முலாயம்சிங்கின் முடிவுகள் இருந்தன. அவர் தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில், அவரது மகன் அகிலேஷ் கட்சியின் தலைவராகி முதல்வராகவும் பொறுப்பேற்றார். தான் தொடங்கிய கட்சிக்கு எதிராக, தானே இன்னொரு அமைப்பைத் தொடங்கவேண்டிய சூழலுக்கும் முலாயம்சிங் ஆட்பட்டிருக்கிறார். இந்திய அரசியலின் தன்மையை வெளிப்படுத்தும் அரசியல் தலைவராக விளங்கியவர் முலாயம்சிங் யாதவ்.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு
"பொன்னியின் செல்வன்' தமிழ்த் திரை உலக வரலாற்று வசூலை மிஞ்சிவிட்டது குறித்து?
சில மாதங்களுக்கு முன்புதான் "விக்ரம்' படம் வசூலில் வரலாற்று சாதனை படைத்தது என்றார்கள். இப்போது வரலாற்றுப் புனைவுப் படமான "பொன்னியின் செல்வன்' அதை மிஞ்சிவிட்டது என்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் இன்னொரு படம் வரலாம். வசூல் என்பது கல்லாப்பெட்டி சமாச்சாரம். அதை வரலாறாக இருப்பது லாபம் பார்ப்பவர்களுக்கு மட்டும்தான்... டிக்கெட் எடுத்து படம் பார்ப்பவர்களுக்கு அல்ல.
ம.தமிழரசிமணி, வெள்ளக்கோவில்
கலைஞருக்கு மனசாட்சியாக இருந்த முரசொலி மாறனைப் போல தற்போது முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சியாக திகழ்பவர் யார்?
சிறுவயதிலிருந்து தன் தாய்மாமா கலைஞரின் நிழலில் வளர்ந்தவர் முரசொலி மாறன். அதனால் கலைஞரை உணர்ந்தவர். அவரது மனசாட்சியாக இருந்தவர். கலைஞரின் ரத்தம் மு.க.ஸ்டாலின். அதனால்... அவர்தான் அவருக்கு மனசாட்சி.