தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
மத்திய அரசின் நிதித் திட்டங்களை மாநில அரசு திறந்து வைக்கும்போது, மத்திய அரசில் ஆட்சியில் உள்ள கட்சிகள் கலந்துகொள்வதில் என்ன தவறு?
தாராளமாக கலந்து கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு ஏதோ மாநிலங்கள் மீது கருணை காட்டி பிச்சை போடுவது போலவும், மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் டயலாக் விடக்கூடாது. ஏனென்றால், மத்திய அரசு என்பதே மாநில அரசுகளின் வரிவருவாயில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்தான்.
எம். நிர்மலா இராமதாஸ், வானூர்
"அ.தி.மு.க. பலவீனமானால் சனாதன சக்திகள் வலிமையடையும்'’என்ற திருமாவளவனின் கருத்து பற்றி?
எம்.ஜி.ஆர். இருந்தவரை, தி.மு.க.வை எதிர்கொள்வதற்காக அ.தி.மு.க.தான் அண்ணாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கட்சி எனக் காட்டும் வகையில் நடக்க முயற்சித்தார். ஜெயலலிதா தலைமை வந்த பிறகு, அது மினி பா.
தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45
மத்திய அரசின் நிதித் திட்டங்களை மாநில அரசு திறந்து வைக்கும்போது, மத்திய அரசில் ஆட்சியில் உள்ள கட்சிகள் கலந்துகொள்வதில் என்ன தவறு?
தாராளமாக கலந்து கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு ஏதோ மாநிலங்கள் மீது கருணை காட்டி பிச்சை போடுவது போலவும், மத்திய அரசின் திட்டங்களில் மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாகவும் டயலாக் விடக்கூடாது. ஏனென்றால், மத்திய அரசு என்பதே மாநில அரசுகளின் வரிவருவாயில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்தான்.
எம். நிர்மலா இராமதாஸ், வானூர்
"அ.தி.மு.க. பலவீனமானால் சனாதன சக்திகள் வலிமையடையும்'’என்ற திருமாவளவனின் கருத்து பற்றி?
எம்.ஜி.ஆர். இருந்தவரை, தி.மு.க.வை எதிர்கொள்வதற்காக அ.தி.மு.க.தான் அண்ணாவின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கட்சி எனக் காட்டும் வகையில் நடக்க முயற்சித்தார். ஜெயலலிதா தலைமை வந்த பிறகு, அது மினி பா.ஜ.க போல ஆகிவிட்டது. ராமர் கோயில் விவகாரம், கரசேவை, குஜராத் கலவரம் பற்றிய கருத்து எல்லாவற்றிலும் பா.ஜக. நிலைப்பாடுதான் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. அண்ணா என்பது கட்சி பெயரில் ஒரு லேபிள் என்ற அளவில் மாறிவிட்டது. ஓ.பி.எஸ், இ.பி.எஸ் காலத்தில் மொத்தமாக கட்சியை அடமானம் வைத்து விட்டார்கள். ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்கள் அடிப்படையில் மதநல்லிணக்க உணர்வும், இது திராவிட மண் என்ற எண்ணமும் கொண்ட தமிழர்கள். அரசியலில் ஓட்டுக்கான சாதிக் கணக்கு இருக்குமே தவிர, சாதி வெறி அரசியல் நடத்த முடியாது என்பது அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் தெரியும். அதற்கு நேர் எதிராக சாதிவெறி- மதவெறி எனத் தமிழ்நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தும் சக்திகள்தான் சனாதனத்தை தூக்கிப் பிடிக்கும் இயக்கங்கள். அ.தி.மு.க. பலவீனமாவது அத்தகைய ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பது மற்ற கட்சிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஒத்தையா-இரட்டையா எனப் போட்டி போட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. தலைமைக்குத் தெரிந்தும் தெரியாதது போல சனாதன சக்திகளிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறது.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
"மற்றவர்கள் நலனுக்காக விஷத்தை தன்கழுத்தில் வைத்துள்ள சிவபெருமான் போல் தன்மீது பொய் குற்றச்சாட்டு கூறப்பட்டதால் 19 ஆண்டுகளாக மோடி வேதனையை அனுபவித்து வந்துள்ளார்' என்று அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளது பற்றி?
சிவபெருமானையே புண்படுத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரும் மோடியும் சேர்ந்து நடத்திய குஜராத் மாநில ஆட்சியின் அவல சாட்சிகள் இன்றும் இருக்கிறார்கள்.
இரா.அருண்குமார் -வாணரப்பேட்டை, புதுச்சேரி
"கல்வியை மீண்டும் பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்'’என்ற ப.சிதம்பரத்தின் கருத்து பற்றி?
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, எமர்ஜென்சியை நடைமுறைப்படுத்திய காலத்தில்தான் மாநிலப் பட்டியலில் இருந்த பல உரிமைகள் பொதுப்பட்டியலுக்கு சென்றன. எனவே மீண்டும் அதை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதில் மற்றவர் களைவிட காங்கிரசுக்கு பெரும் பொறுப்பு இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாகி யிருக்கும் ப.சிதம்பரம் அதனை முன்னெடுக்கட்டும்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு 77
மஹாராஷ்டிராவில் சிவசேனா, தமிழகத்தில் அ.தி.மு.க. இந்த இரண்டு கட்சிகளின். இப்போதைய நிலைக்கு யார் காரணம்?
பதிலைத் தெரிந்துகொண்டே கேள்வி கேட்பது ஒரு கலை. மகாராஷ்ட்ராவில் சிவசேனா சிதிலமடைய எந்தக் கட்சி காரணமோ, அதே கட்சிதான் அ.தி.மு.க.வின் இன்றைய நிலைக்கும் காரணம்.
வாசுதேவன், பெங்களூரு
ஒரு காலத்தில் பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதியது, பிறகு கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு எழுதியது. ஒப்பிடுக.!
மாற்றம் ஒன்றே மாறாதது. அந்தக் காலத்தில் இருந்த தொழில்நுட்பம் இந்தக் காலத்தில் பெருமளவு மாறியிருக்கும். சாக்பீஸ், பென்சில், பேனா இவற்றைக் கடந்து, செல்போனில் டைப் செய்யும் முறை வந்தது. இப்போது அதையும் கடந்து வாய்ஸ் டெக்ஸ்ட் வந்துவிட்டது. பேசினால் போதும். எழுத்தாக மாறிவிடும். எதைக் கொண்டு எழுதுகிறோம் என்பது முக்கியமல்ல. என்ன எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம்.
சிவப்பு காசிவிஸ்வநாதன், எட்டையாபுரத்தார்
ஜெயலலிதா, சசிகலா காலடிகளில் தவழ்ந்தே துரோகம் செய்து முதலமைச்சர்களான ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.களின் கால்களில் விழும் புதிய எழுச்சி மீண்டும் அ.தி.மு.க.வில் தொடங்கி யுள்ளதே! என்னவாகும்?
பழக்கதோஷம் அத்தனை எளிதாக மாறாது.
நடேஷ் கன்னா, கல்லிடைக் குறிச்சி
அமலாக்கத்துறை பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை எடுக்காதா?
எடுக்கும்... ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு.