ஜி.இராமச்சந்திரன், லக்காபுரம், ஈரோடு

பூமிக்கு பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகளுக்காக, இறைவனால்- கனமழை, வெள்ளம், கொசு, கொரோனா வைரஸ் போன்ற ஆயுதங்கள், மனிதனை அழிக்கப் பயன்படுத்தப்படுகிறதா?

இறைவனை விட பெரிய மனிதர்கள் உண்டென்று நம்புகிறீர்களா? அவர்களின் தவறுகளை இறைவனால் கட்டுப்படுத்த முடியாது என நம்பிக்கை இழக்கிறீர்களா? ஒரு சில பெரிய மனிதர்கள் செய்யும் தவறுகளுக்காக பல கோடி அப்பாவிகளை அழிக்கும் கொடூர மனம் கொண்டவர் இறைவன் என முடிவு செய்து விட்டீர்களா? சுழலும் பூமியின் காலத்திற்கேற்ற மாற்றங்களால் பேரபாயங்கள் உருவாகும். ஒரு சில பேரபாயங்களுக்குப் பிறகு, பூமி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும். இது எவர் தலையிலும் எழுதப்படாத இயற்கையின் விதி.

த.சிவாஜி மூக்கையா, சென்னை-44

Advertisment

ரயில்வேயில் வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லும் மோசடிப் பேர்வழிகளிடம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொது மக்களை தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளதே?

இந்தியா கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறை வேலை வாய்ப்புகளைக் குறைத்து, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்கும் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆனாலும், அரசுத் துறை சார்ந்த வேலைகளுக்கான மதிப்பும் அதன் மீதான எதிர்பார்ப்பும் குறையவில்லை. அரைச் சம்பளம் வாங்கினாலும் அரசாங்க சம்பளமாக வாங்கினால், வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும் என நினைப்பவர்கள் அதிகம். அவர்களின் எதிர்பார்ப்பை தங்களுக்கான லாபமாக மாற்ற நினைக்கும் புரோக்கர் கூட்டம் பண வேட்டையாடுவது தொடர்கிறது. இது ஒன்றிய அரசின் ரயில்வேயில் மட்டுமல்ல. மாநில அரசுத் துறைகளிலும் தொடர்கிறது. முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்களின் மோசடி மெல்ல வெளிப்படுகிறது. இந்நாள் ஆட்சியாளர்களாவது இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்களா எனப் பார்க்க வேண்டும்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

Advertisment

தமிழக அரசு, தி.மு.க. அரசு. இதில் தற்போதைய ஆட்சியை எப்படி அழைக்க வேண்டும்?

வெற்றி பெற்றவுடன் கலைஞர் நினைவிடத்தில் அதனைக் காணிக்கையாக்கிவிட்டு, ஊடகத்தினரை சந்தித்த மு.க.ஸ்டாலின், "எங்களுக்கு வாக்களித்தவர்கள் சரியாகத்தான் வாக்களித்திருக்கிறோம் என மகிழ்ச்சியடை யும் வகையிலும், வாக்களிக்காதவர்கள்கூட இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என நினைக்கின்ற வகையிலும் ஆட்சி நடைபெறும்' என்றார். வாக்களித்தோர் -வாக்களிக்காதோர் மட்டுமின்றி வாக்குரிமை இல்லாத தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் சேர்த்தே திட்டங்களை அறிவிக்கிறார். எனவே இது தமிழ் மக்களுக்கான அரசு என்ற பெயரை, 5 ஆண்டுகளும் காப்பாற்றுகிற அளவில் ஆட்சி அமைய வேண்டும்.

mm

மு.செ.புகாரி, சித்தார்கோட்டை

கோபிக்காமல் பதில் சொல்லுங்கள். அமெரிக்காவின் மர்லின்மன்றோ -ஜாக்குலின் கவர்ச்சிக் கதைகள் பற்றி?

இந்தக் கேள்விக்காகக் கோபப்பட வேண்டியவர் களான மர்லின்மன்றோ, ஜாக்குலின், அவரது கணவர் ஜான் கென்னடி, கென்னடியின் சகோதரர் ராபர்ட் கென்னடி உள்ளிட்ட யாருமே இப்போது உயிருடன் இல்லை. அவர்களைக் கொண்டு நெய்யப்படும் கதைகளின் உண்மைத்தன்மையும் முழுமையாக இல்லை. ஆனாலும், யார் மீது, யாருக்கு காதல் என்கிற ஆர்வமும், அதனடிப்படை யிலான கற்பனைகளும் இன்றுவரை ஓயவில்லை. ரசிகர் களின் இதயம் கவர்ந்த மர்லின் மன்றோவின் மரணம் பற்றிய சந்கேங்களுக்கு அமெரிக்காவின் ஆறுமுகசாமி கமிஷன்களாலும் தீர்வு சொல்ல முடியாது. அது பல நாவல்களாக, திரைப்படங்களாக வெளிப்பட்டுள் ளன. ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான ரகசியங்களும் அவ்வப்போது வெளிப்படுகின்றன. ஜனாதிபதியின் மனைவியான ஜாக்குலின், மர்லின் மன்றோவிடம் என்ன பேசினார்? மன்றோவின் மீது காதல் வயப்பட்டிருந்தது இருவரில் எந்த கென்னடி? என்பது குறித்தும் கதைகள் உண்டு. ஜான் கென்னடி கொல்லப்பட்ட பிறகு, ராபர்ட் கென்னடி ஆதரவில் இருந்த ஜாக்குலின், ராபர்ட்டும் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பிறகு, உயிருக்குப் பயந்தும் -குழந்தைகள் நலனுக்காகவும் மறுமணம் செய்து கொண்டு, மிச்ச காலத்தை வாழ்ந்தது பற்றிய பதிவுகளும் ஏராளம். அடுத்தவர்களின் கதையை அறிந்துகொள்வதில் எப்போதுமே ஆர்வம் குறையாது. அதுவும் பிரபலங்கள் பற்றியதென்றால் எந்த வயதாக இருந்தாலும் மனசு இறக்கை கட்டிப் பறக்கும்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

விவசாய சட்டம் வாபஸ் பா.ஜ.க.வுக்கு சாதகமா? பாதகமா?

உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் களத்தில் பாதகமாகிவிடக்கூடாது என்பதை மனதில் வைத்து, விவசாயிகளுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு. உறுதிமிக்க விவசாயிகளின் போராட்டத்தின் வெற்றி.

அ.யாழினி பர்வதம், சென்னை-78

தன்னை "தல' என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் சொன்னது பற்றி?

ஏன் உங்க கழுத்து, என் கழுத்து உள்பட எல்லாருடைய கழுத்தும் விஜய் பக்கம் திரும்புது?