கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்யம் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனம் மூடிஸ் கணித்துள்ளதே?

மோடி ஆட்சியின் பொருளாதார வியூகங்களை இதற்கு முன் பல முறை தூக்கி நிறுத்தியிருக்கிறது மூடீஸ் நிறுவனம். சீனாவை மிஞ்சும் பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளது எனச் சொல்லி மக்களை நம்பவைத்த மோடி அரசின் உண்மையான நிர்வாகத் திறனை அம்பலப்படுத்தியுள்ளது மூடிஸ்.

இந்து குமரப்பன், விழுப்புரம்

Advertisment

தி.மு.க.வில் மது ஆலை நடத்துபவர்கள் யாரும் டாஸ்மாக்குக்கு சப்ளை செய்ய வேண்டாம் என ஸ்டாலின் ஒரு வார்த்தை சொன்னால் போதும், பிரச்சினை முடிந்துவிடும். அப்படிச் செய்யாமல் போராட்டம் நடத்துவது என்பது கூட்டுக் களவாணித்தனம் என்கிறாரே பா.ஜ.க.வை சேர்ந்த சேகர்?

அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். மாட்டுக்கறிக்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டே உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநில பா.ஜ.க. தலைவர்களும் வெளிநாடுகளுக்கு மாட் டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங் களை நடத்தும் கூட்டுக் களவாணித் தனத்தை அறிந்த கட்சியின் பிரமுகராயிற்றே!

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

அன்னையர் தினத்துக்கு மாவலியின் வாழ்த்து என்ன?

இன்றைய அன்னையர்களை நாம் வாழ்த்துவதைவிட அவர்களின் பிள்ளை களான நாம் வாழ்த்து பெறுவது சிறப் பானது. அதே நேரத்தில், இந்த கொரோ னா ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் கர்ப்பமுற்று நாளைய அன்னையர்களுக்கும், குறிப்பாக இந்தியாவில் 2 கோடி புது உயிர்களைத் தரப்போகும் அன்னையர் களுக்கும் பாதுகாப்பான வாழ்த்துகள்.

]

mm

.மணி, குப்பம், ஆந்திரா

சென்னையில் அதிகளவில் கொரானா பாதிப்பு இருப்பதற்கு காரணம் மக்கள் நெருக்கமாக வாழ்வதுதான் என்கிறாரே எடப்பாடி?

முதலமைச்சர், நெருக்கடியை காரணம் காட்டுகிறார். சுகாதாரத்துறை அமைச்சர், அதிகளவில் பரிசோதனைகள் நடத்தப்பட்டது காரணம் என்கிறார். சென்னையின் நெருக்கடியைக் குறைக்க முதல்வரிடம் திட்டம் இல்லை. மற்ற இடங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப் பட்டதா என்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் சரியான புள்ளிவிவரங்களைத் தரவில்லை. கடைசியில், நோய்த்தொற்றுக்கு காரணம் கொரோனா வைரஸ்தான் என்ற அரிய கண்டுபிடிப்புடன் பிரச்சனையை முடித்துவிடுவார்கள்.

நித்திலா, தேவதானப்பட்டி

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர் நடத்தும் பேக்கரியின் விளம்பரத்தில், எங்கள் தயாரிப்பு தரமானது- பாதுகாப்பானது என்றதுடன், முஸ்லிம்கள் யாரும் பணியில் இல்லை என்று வெளியிட்டு நடவடிக்கைக்குள்ளாகி யிருக்கிறாரே?

அன்பை போதிக்கின்ற மதம் சமணம். ஈ-எறும்பின் உயிருக்கும் துன்புறுத்தல் தரக்கூடாது என்றவர் மகாவீரர். அந்த சமணம், ஜைனம் என்றழைக்கப்பட்டு, ஜெயின் ஆகிவிட்டது. இப்போது அங்கு ஒருசிலருக்கு மதத்தைவிட வியாபாரம் முன்னிலை பெற்றுள்ளதால் வெறுப்புணர்வு உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது.

____________

தமிழி

பா.சங்கரசுப்பிரமணியன், பாளை, நெல்லை

இதன்பிறகாவது தமிழர்கள் இயற்கையைப் போற்றி வாழ்வார்களா?

மனிதகுலமே இயற்கையோடு இணைந்துதான் வாழ்கிறது. வாழ்ந்தாக வேண்டும். மனிதர்கள் தலைகுனிந்து நடந்தாலும் வானம் அவர்கள் தலைக்கு மேல் இருந்து கொண்டுதான் இருக்கும். மனிதர்கள் கண்களை மூடிக்கொண்டாலும் பூமியில்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆறு, கடல், மரம், மழை என இயற்கையை விட்டுவிட்டு மனிதர்களால் வாழமுடியாது. ஆனால், பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் இயற்கை மீது கண்களையோ கவனத்தையோ மனிதர்கள் திருப்புவ தில்லை. இந்தக் கொரோனா காலம் அவர்களை வீட்டில் முடக்கி, இயற்கையின் ஆற்றலை உணர வைத்திருக்கிறது. இத்தனை காலம் அவர்கள் அனுபவித்து வந்த ரயில், பேருந்து, திரையரங்கம் அனைத்தும் மூடப்பட்டன. வழிபாட்டுத் தலங்களான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளும் பூட்டப்பட்டன. ஆனால், பறவையின் சிறகசைப்பையோ, சூரியக் கதிர்களின் வெப்பத்தையோ, மேகங்களின் தூறல்களையோ எவரும் நிறுத்த முடியவில்லை. ஆறுகளில் ஆலைக் கழிவுகள் கலக்காததால் பெருமளவு சுத்தமாக மாறின. காற்றில் மாசு அளவு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஏற்பட்டிருந்தாலும், மனிதகுலத்தின் நடமாட்டம் இல்லாமல் இயற்கை முழுமை பெறாது. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலை ஆறுபோல அமைத்துக் கொண்டார்கள். ஆறு மலையில் உருவாகும். அந்த மலைப் பகுதியை குறிஞ்சி என்றார்கள். அது அருவியாகக் குதித்தோடுகின்ற இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருக்கும். அந்தக் காட்டுப் பகுதியை முல்லை என்றார்கள். ஆறு அகலமாக ஓடுகிற பகுதி சமவெளியாகும். அங்கேதான் பயிர் விளைச்சல் அதிகமாக இருக்கும். அந்த வயல் பகுதியை மருதம் என்றார்கள். ஆறு தன் பணியை முடித்துவிட்டு, கடலில் போய் கலக்கும். அந்தக் கடல் பகுதியை நெய்தல் என்றார்கள். மனித வாழ்க்கையும் இயற்கையான ஆறு போலத்தான். பிறக் கின்றபோது சிறிதாக இருக்கிறது, தவழந்து வளரும்போது மகிழ்ச்சியில் குதித்து விளையாடுகிறது. பொறுப்புகள் சேரும்போது, தன் ஆற்றலை விரிவாக்கி தன்னைச் சார்ந்த வர்களின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் காரணமாகிறது. தனது வாழ்க்கையின் நோக்கம் நிறைவேறிய பிறகு, எளிமையாக அமைதியாக தன் பயணத்தை மரணம் எனும் கடலில் கலக்கிறது. தமிழர்கள் வகுத்துள்ள நிலப்பகுதிகளே மனித வாழ்க்கைக்கான வழிகாட்டிதான். அதை நினை வில்கொண்டாலே, இயற்கை மீதான ஈடுபாடு பெருகும்.