Advertisment

மாவலி பதில்கள்!

ss

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் புத்தகம், கல்விக் கட்டணம் உட்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.. என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளதே..?

Advertisment

வரவேற்கத்தக்க உத்தரவுதான். இதை அரசு மருத்துவக் கல்லூரிகள் பின்பற்றிவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் முறையாகப் பின் பற்றுமா என்பது சந்தேகம் அல்லது வேறெதா வது டியூஷன் பீஸ் என இதர கட்ட ணங்கள் மூலம் ஈடுகட்ட முயலும். போதாக்குறைக்கு கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, தனியார் மருத்துவக் கல்லூரி கள் முப்பந்தைந்தாயிரம் முதல் 1 லட்சம் வரை கட்ட ணம் உயர்த்தி வசூலித்துக் கொள்ள ஆணையிட்டுள்ளது. ஒன்றில் விட்டதை இன் னொன்றில் பிடித்துக்கொள்வார்கள்.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தெலு

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

மருத்துவப் படிப்பில் 7.5% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் புத்தகம், கல்விக் கட்டணம் உட்பட எவ்வித கட்டணமும் வசூலிக்கக்கூடாது.. என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளதே..?

Advertisment

வரவேற்கத்தக்க உத்தரவுதான். இதை அரசு மருத்துவக் கல்லூரிகள் பின்பற்றிவிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் முறையாகப் பின் பற்றுமா என்பது சந்தேகம் அல்லது வேறெதா வது டியூஷன் பீஸ் என இதர கட்ட ணங்கள் மூலம் ஈடுகட்ட முயலும். போதாக்குறைக்கு கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு, தனியார் மருத்துவக் கல்லூரி கள் முப்பந்தைந்தாயிரம் முதல் 1 லட்சம் வரை கட்ட ணம் உயர்த்தி வசூலித்துக் கொள்ள ஆணையிட்டுள்ளது. ஒன்றில் விட்டதை இன் னொன்றில் பிடித்துக்கொள்வார்கள்.

Advertisment

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தெலுங்கானாவில் கவர்னர் மூலம் திருப்பி அனுப்பப்பட்ட நான்கு மசோதாக்கள் நிறைவேற்றப்பட் டிருப்பது குறித்து?

தெலுங்கானாவில் ஆளுநர் தமிழிசையால் சந்தேகம், விளக்கம் கோரப்பட்டு திருப்பியனுப் பட்ட பல்கலைக்கழகங்கள், மாநகராட்சி, உள்ளாட்சி தொடர்பான நான்கு மசோதாக்கள் எந்த திருத்தங்களும் செய்யப் படாமல் திரும்பவும் தெலுங்கானா சட்டசபை யில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு திரும்ப அனுப்பப்பட்டி ருக்கின்றன. இனி ஆளுநர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பார்க்கவேண்டும். பா.ஜ.க. ஆட்சிக்கு வராத மாநிலங்களில், ஆளுநர்களை வேகத் தடைகளாக நிறுத்தி அரசியல் பண்ணு கிறது ஒன்றிய அரசு. அதேசமயம், பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் மாநிலங் களில் ஆளுநர்கள் சமத்துப்பிள்ளை களாக இருப்பதையும் பார்க்கமுடிகிறது.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45

போதையில் இருந்து விடுபட்டால் அரசு வேலை என்கிறார்களே, நான்கு கோடி பேருக்கும் அரசு வேலை கொடுத்துவிடுமா?

தமிழகத்தில் நான்குகோடி பேர் மது போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரத்தை எங்கிருந்து எடுத்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். எந்த அளவுகோலை வைத்து ஒருத்தர் போதைக்கு அடிமையானார் என்பதை அரசு முடிவுசெய்யும்? திடீரென ஒரு நூறுபேர் போதையிலிருந்து விடுபட்டதாகச் சொல்லி வேலை கேட்டால், எப்படி அத்தனை பேருக்கும் வேலை கொடுக்கும்? ஏற்கெனவே அரசு வேலைகள் குதிரைக்கொம்பாகிவரும் நிலையில், அரசுப் பணிகள் காலியாகும்போது, அந்த இடங்கள் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு விடப்படும் நிலையில் இது கொஞ்சம் சிக்கலானதுதான்.

mm

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும் மண்குதிரைகள் என்கிறாரே ஜெயக்குமார்?

ஜெயக்குமாரை விடவும் அவர்கள் இரு வரையும் நம்பிவந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு இவர்கள் மண் குதிரையா,…இல்லையா? என்பது நன்றாகவே தெரியும். அற்ற குளத்து அறுநீர்ப் பறவைபோல், ஆதாயமில்லாத இடத்திலிருந்து எப்போது பறக்கவேண்டும் என்று தெரியாத கட்சி நிர்வாகிகள் கிடையாது. தொண்டர்கள் மட்டும்தான் வற்றிய குளத்திலும் கடைசிவரை கிடந்து கருவாடாய் உலர்ந்துகொண்டிருப் பார்கள்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

அரியானா வன்முறைச் சம்பவம் குறித்து...?

தற்போது வரும் தகவல்கள் கலவரம், இந்து அமைப்புகளால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டது என்பதை நிரூபிக்கிறது. அதுபோக கலவரத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரர்களுக்கு ரூ.57 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலவரத்தில் இறந்த மற்றவர்களுக்கு... முக்கியமாக இஸ்லாமியர் களுக்கு என்ன நிவாரணம் என்பது தெரிய வில்லை. கலவரத்தை விடவும் கலவரத்துக்குப் பின் இஸ்லாமியத் தரப்பினரைக் குறிவைத்து அரசு இயந்திரம் புல்டோசர் கொண்டு நடத்தியிருக்கும் வன்முறையாட்டம்தான் திகிலைக் கிளப்புகிறது.

சி.உஷா, பழனி

சர்வதேச அரசியல் என்பது என்ன?

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக ஆக்கத் துடிக்கிறது சீனா. தைவானோ தொடர்ந்து சுதந்திர நாடாகவே நீடிக்க விரும்புகிறது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது என்பது உலகமே அறிந்த செய்தி. இதனால் தைவான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் அமெரிக்கா, தைவானுக்கு 34 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்களை தருவதாக உறுதியளித்திருக்கிறது. தைவான் தன் பிடியில் நீடிப்பதற்காக, ஆயுதம் கொடுத்த கையோடு ஏதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அமெரிக்கா. ஒருபக்கம் சீனா…. மறுபக்கம் அமெரிக்கா. காலத்துக்கும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கிடந்து நசுங்கி அவஸ்தைப்படவேண்டியதுதான் தைவான். வல்லான் வகுத்ததே சட்டம் என்பதுதான் சர்வதேச அரசியல்.

nkn120823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe