நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தமிழகம் கொலைக் களமாக மாறிவருவது குறித்து?
போரோ… உள்நாட்டுக் கலவரமோ நடந்து கணக்குவழக்கின்றி உயிர்கள் பலியாகுமிடம்தான் கொலைக் களம். அந்தமாதிரியான எந்தச் சூழலும் தமிழகத்தில் இல்லை. நீதிமன்ற வளாகம், பள்ளிக் கூடத்தில் வன்முறை நடந்து உயிர்கள் ஆபத்துக்குள் ளானதை வைத்து, எதிர்க்கட்சிகள் இத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொள்ளலாம். அது தமிழக அரசு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வழிவகுக்குமென நம்புவோம்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
திருப்பதி தேவஸ் தானத்தில் பணியாற்றும் வேற்றுமத ஊழியர் களை நீக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாமே?
பெருமாளே துலுக்கநாச்சியார் எனும் அயல் மதத்தைச் சேர்ந்த பக்தைக்கு அடைக்கலம் தந்து அரவணைத்த கதை இருக்கிறது. பெருமாள் கோவிலில் வேற்றுமத ஊழியர்களை நீக்க அரசுக்குப் பரிந்துரைப்பது, எதிர்காலத்தில் திருப்பதி பக்கமே மாற்று மதத் தவர்கள் தலைவைத்துப் படுக்கக் கூடாது போன்ற பைத்தியக்காரத் தனத்துக்கு இட்டுச்செல்லும்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
விமானம் பறக்கும் தத்துவத் தைக் கண்டுபிடித்தது ரைட் சகோ தரர்கள் அல்ல... பரத்வாஜ முனிவர் என்று கூறியிருக்கிறாரே உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல்..?
ஈரான், சமீபத்தில் பர்தா அணி வதற்கு எதிராகப் பேசும் பெண் களை மனநல முகாமில் அடைத்து சிகிச்சையளிக்க உத்தரவிட்டுள் ளது. ஆனால், பிரதமர், முதல்வர், ஆளுநர் என அனைவரும் இதேபோன்ற மதரீதியான மூடத்தனங்களைப் பேசும் நாடு, ஈரான் எந்தத் திசையில் செல்கிறதோ அந்தத் திசையை நோக்கித்தான் செல்லும். இரண்டுக்கும் இடை யில் எத்தனை கிலோ மீட்டர் வித்தியாசம் என்பதுதான் கேள்விக்குறி. நாளடைவில் இந்தியா வேகமெடுத்து ஈரானை முந்தும் போது, சதிப் பழக்கவழக்கம், கணவனை இழந்தவர்கள் வெள்ளுடை உடுத்தவேண்டுமென வலியுறுத்துவது, பெண்கள் படிக்கக்கூடாது என்பது போன்ற பைத்தியக்காரத்தனங்களையும் பேச ஆரம்பிப்பார்கள்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
அதானி இன்னும் ஏன் கைதுசெய்யப் படாமல் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக் கிறார் என்று கேட்கிறாரே ராகுல்காந்தி?
அவரேதான் அதானியின் பாதுகாவலராக மோடி செயல்படுகிறார் என்றும் சொல்லிவிட்டாரே. பிறகென்ன!
ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் மூலம் வெற்றிகண்ட முதல்வர் அவர் களுக்கு அளித்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டாரே?
ஒருவேளை இந்தத் தேர்தலில் அந்த அரசு ஊழியர்கள், ஓய்வூதியர் களின் வாக்குகளை எல்லாம் தி.மு.க. காற்றில் பறக்கவிடத் திட்டமிட்டிருக்கிறதோ என்னவோ!
பா. ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் போன்ற பொருட்கள்தான் பணவீக்கம் அதிகரிக்க காரணமென்றிருக்கிறாரே நிதிச்செயலர் துஹின் காந்தா?
என்ன தைரியம்? மோடியின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வாங்கித் தர இந்தக் காய்கறிகள் முயல் கின்றன. இந்திய தேசத்தை பணவீக்கமுள்ள நாடாக காட்டத் திட்டமிடுகின்றன. இந்தியாவின் பெயரைக் கெடுக்கமுயலும் இந்தக் காய்கறிகளை இந்தியர்கள் சாப்பிடுவதை நிறுத்தவேண்டும் என்று எந்த பா.ஜ.க. எம்.பி.யாவது அறிக்கை விடாமலிருந்தால் சரி.
வண்ணைகணேசன், கொளத்தூர்
அயோத்தியில் 500 ஆண்டுகள் கூடாரத்தில் வசித்து, கோவிலுக்குள் அமர்ந்துள்ள குழந்தை ராமரை தரிசிக்க ராகுல் செல்லவில்லை என்று அமித்ஷா குறைகூறுகிறாரே?
பிரதமர் மோடியும்தான் இரண்டு ஆண்டுகளாக மணிப்பூர் நிவாரண முகாம் களிலும் அண்டை மாநிலத்திலும் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை இதுவரை பார்க்கப் போகவில்லை. ராகுல் கடவுளைப் பற்றித்தான் அக்கறைப்படவில்லை. மோடி, மக்களைக் குறித்தே அக்கறைப்படவில்லையே!
செ. பிரார்த்தனா, கடலூர்
வேதனை தரும் புள்ளிவிவரம் ஒன்றைச் சொல்லுங்களேன்?
உலக அளவில், ஒவ்வொரு மனிதனும் சராசரியாக ஆண்டுக்கு 300 கிலோகிராம் குப்பைகளை உருவாக்குகிறான். உலக மக்கள்தொகை தோராயமாக 818 கோடி. இரண்டையும் பெருக்கி ஓராண்டில் எவ்வளவு குப்பை உரு வாகிறது என பார்த்துக்கொள் ளுங்கள். மண்ணில் புதையும் ஒரேயொரு பேட்டரி, 400 லிட்டர் நீரையும் 20 சதுர மீட்டர் மண்ணையும் பாழடிக்கிறது. உலகமே பேட்டரி கார், இரு சக்கர வாகனம் என மாறிக்கொண் டிருக்கிறது. இவையனைத்தையும் இணைத்து இந்த உலகத்தை மனிதன் எத்தனை வேகமாகப் பாழடித்துவருகிறான் என்பதை கற்பனை செய்துகொள்ளுங்கள்.