Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

dd

ர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் களுக்கு இணையாக உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்று நோய் என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். கருப்பைப் புற்றுநோய் கோலாட்சிக் கொண்டிருந்த நிலை மாறி, சமீப வருடங்களாக மார்பகப் புற்றுநோய் முன்வரிசைக்கு வர ஆரம்பித்திருக்கிறது. தவிரவும்,

Advertisment

dd

பலருக்கும் இளம் வயதிலேயே மார்பகப் புற்றுநோய் வர ஆரம்பித்திருப்பது கவலைக்குரிய விஷயம். இந்தியாவில் வருடத்துக்கு 90,000 பேர் மார்பகப் புற்றுநோயால் இறக்கிறார்கள். இத்தனை வருத்தமான செய்திக்கு இடையில் ஒரு ஆறுதலான செய்தி நம்மை வந்தடைந் திருக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகளில் ஒன்றான பால்போசிசிலிப்புக்கு இதுவரை மாதத்துக்கு

ர்க்கரை, இரத்த அழுத்தம், இதய நோய் களுக்கு இணையாக உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய். புற்று நோய் என்று பொதுவாகச் சொன்னாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இந்தியாவில் ஆண்டுதோறும் 1,78,000 பேர் மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்படுகிறார்கள். கருப்பைப் புற்றுநோய் கோலாட்சிக் கொண்டிருந்த நிலை மாறி, சமீப வருடங்களாக மார்பகப் புற்றுநோய் முன்வரிசைக்கு வர ஆரம்பித்திருக்கிறது. தவிரவும்,

Advertisment

dd

பலருக்கும் இளம் வயதிலேயே மார்பகப் புற்றுநோய் வர ஆரம்பித்திருப்பது கவலைக்குரிய விஷயம். இந்தியாவில் வருடத்துக்கு 90,000 பேர் மார்பகப் புற்றுநோயால் இறக்கிறார்கள். இத்தனை வருத்தமான செய்திக்கு இடையில் ஒரு ஆறுதலான செய்தி நம்மை வந்தடைந் திருக்கிறது. மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகளில் ஒன்றான பால்போசிசிலிப்புக்கு இதுவரை மாதத்துக்கு ரூ.80,000 வரை செலவழிக்க வேண்டியிருந்தது. ஜனவரி முதல் ஜெனரிக் வெர்ஷன் எனப்படும் விலை குறைவான மருந்து அறிமுகமாகிறது. இதை வாங்க மாதம் ரூ.4000 இருந்தால் போதுமாம். கேன்ஸருக்கு ஒரு ஆன்ஸர் கிடைக்கட்டும்!

dd

Advertisment

டந்த ஜனவரி 29-ஆம் தேதி சேலம் நகரில் முதன்முறையாக சர்வதேச பூனைக் கண்காட்சி நடைபெற்றது. ஹூரைரா கேட் பான்சியஸ் மற்றும் கேட் கிளப் ஆப் இந்தியா இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் கலந்துகொண் டன. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் கண்காட்சி யில் பூனைகள் கலந்துகொண்டன. பெர்சியன் லாங்ஹேர், சியாமிஸ், நைஜீரியன் உட்பட பல் வேறு வகை பூனைகள் பங்குபெற்ற இக்கண் காட்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பூனைகளுக்கு சான்றிதழும் பரிசுகளும் வழங் கப்பட்டன. கண்காட்சியை ஒருங்கிணைத்த முகமது ரப்பானி, மசூத் இருவரும், “பூனை வளர்க்க நினைக்கும் மக்களையும், பூனை வளர்ப்பவர்களையும் சந்திக்க வைக்கும் மேடை யாக இக்கண்காட்சி அமைந்திருந்தது என்றனர். கண்காட்சி யில் பூனை விற் பனையும் சுடச் சுட நடைபெற் றது. அரியவகை பூனைகள் 1 லட் சம் ரூபாய் வரையும் விலை போயிருக்கின்றன. யானை விலைல பூனைய வித்தி ருக்காங்க!

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு ராணுவ ஆட்சி அறிமுகமானதிலிருந்தே மியான்மரில் கஞ்சா பயிரிடுவது அதி கரித்துவருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் அங்கு கஞ்சா வளர்ப்பது உண்டென்றாலும், 2022-ல் இது 33 சதவிகிதம் அதிகரித்து 40,100 ஹெக்டேரில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளது. கஞ்சா மட்டுமல்லாமல், ஓபியமும் தற்போது இங்கே செழிக்கிறதாம். பொருளாதாரத் தடுமாற்றத்தால் மக்களில் பலரும் வேறுவழியின்றி பாப்பிச் செடி களை வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். ஓபியம் உற் பத்தியில் முதலிடம் வகிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அடுத்தபடியாக, மியான்மர் இரண்டாமிடத்தில் திகழ்கிறது. கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பிரதான போதைப் பொருள் விநியோகம் இங்கிருந்துதான் செல்கிறது. இதனால் கிட்டத்தட்ட 2 பில்லியன் டாலர் வரைக்கும் வருமானம் வருகிறது. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகிறது என்றா லும், ராணுவ பிரமுகர் களுக்கும் இதில் கமிஷன் வருவதால் இந்த ஒழிப்பு நடவடிக் கையெல்லாம் கண் துடைப்பு நட வடிக்கைதானாம். பயிர் வளர்ப்போம் பயன்பெறுவோம் கிறது இதுதானா!

சிறு தானியத் திருவிழாவுக் காக மாணவர்கள் வரைந்த ஓவியம் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் யூனியனின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. திருவேற்காடு நகராட்சி சிவன் கோவில் தெரு மைதானத்தில் சிறு தானியத் திருவிழா ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்றது. 80 அரங்குகள் இடம்பெற்ற இத்திருவிழாவில் சிறுதானியங்களாலான பல்வேறு உணவுகள் இடம்பெற்றிருந்தன. இத்திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்கள் 300 பேர் இணைந்து 120 சதுர அடியில் சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிரமாண்ட ஓவியம் ஒன்றை உருவாக்கியிருந் தனர். திருவள்ளூர் மாவட்ட வரைபடமும், உணவுப் பாதுகாப்பு இலச்சினையும் இடம் பெற்ற இந்த ஓவியத்துக்குத்தான் உலகின் மிகப் பெரும் ஓவியம் என்ற அங்கீகாரம் கிடைத்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக மருத் துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களையும் பங்கேற்பாளர்களையும் பாராட்டிப் பேசினார். விழா ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்திருந்த தோடு, விழாவுக்கும் தலைமை வகித்திருந்தார். விழாவில் சிறு தானியத்தாலான 365 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந் தன. சிறு தானியம் பெரிய பலன்!

-நாடோடி

nkn040223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe