Advertisment

மாநிலம் தேசம் சர்வதேசம்!

ff

லகின் மொத்த ஐபோன் உற்பத்தியில் பாதியளவு, சீனாவின் செங்ஸு நகரிலுள்ள ஃபாக்ஸ்கான் ஆலை யில்தான் உற்பத்தியாகின்றன. இங்கு கிட்டத்தட்ட 3 லட்சம் பணியாளர் கள் வேலைசெய்கின் றனர். சீனாவின் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் இருக்கிறது. ஃபாக்ஸ்கான் தொழி லாளர்கள் பலருக்கும் கொரோனா தாக்கியதை அடுத்து, அவர்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். விரைவில் நகருக்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் ஏற்படும் தனிமைக்குப் பயந்தும், தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுமோ என அஞ்சியும் இவர்கள் ஆலையிலிருந்து தப்பிச்செல்லும் வீடியோக்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன. இவர்களில் பலரின் வீடுகள் 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளன. ஆலை நிர்வாகத்திடமோ, அரசிடமோ சிக்கினால் ஆபத்து என்பதால் இவர்கள் கடந்து செல்லும் வழியிலுள்ள மக்களின் தயவை மட்டுமே நம்பி வெளியேறுகின்றனர். லாக்டவுன்- பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல!

Advertisment

ff

ந்தியா ம

ந்தியா முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரி பாடப்புத்தகங்களில் இருந்து பெண் களின் கன்னித்தன்மையை அறிவதற்காக பின்பற்றப்படும் சோதனைமுறையான இருவிரல் சோதனை முறையை நீக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாரா என்பதை அறிய இச்சோதனை நடைமுறையில் உள்ளது. இச்சோதனை நம்பகமானதில்லை. இதன்மூலம் துல்லியமாக உண்மையைக் கண்டறியமுடியாது என 2018-ஆம் ஆண்டு ஐ.நா. அறிவித்தது. அதற்கும் முன்பாகவே 2014-ஆம் ஆண்டில் இந்திய மத்திய சுகாதாரத் துறை, இந்த இருவிரல் பரிசோதனை சட்டவிரோதமானது என அறிவித்திருந்தது. இந்நிலையில்தான் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி அமர்வு, "இந்த முறை பெண்களின் கண்ணியத் துக்கு எதிரானது. இப்பரிசோதனையை நடத்தும் எவரும் குற்றவாளியாகக் கருதப் படுவார்கள்''’என அறிவித்ததுடன், மருத்துவப் பாடத்திட்டத்திலிருந்து இதனை நீக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சபாஷ் சரியான தீர்ப்பு!

Advertisment

யாராயிருந்தாலும் பயணத்தின்போது மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. அதுவே பொதுப்போக்குவரத்து வாகனத்தின் ஓட்டுநர் என்றால் நிச்சயம் பயன்படுத்தக் கூடாது. அதில் அவரது உயிரோடு, பயணிகளின் உயிரும் சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வியொன்றில், தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வாகன ஓட்டுநர்கள் 775 பேர், கடந்த பத்தாண்டுக் காலத் தில் வண்டியோட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தியதாகத் தெரிய வந்துள்ளது. காசிமயன் எனும் சமூக ஆர்வலர், எம்.டி.சி. நிர்வாகத்திடம் கேட்ட கேள்வியொன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இதற்கு போக்குவரத்துக் கழக நிர்வாகம், சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு வெறும் 12 ரூபாய் அபராதம் விதித்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்கள் உயிரின் விலை 12 ரூபாய்தானா?

நாடு சுதந்திரம் பெற்றாலும், அதிகாரிகளும் ஆளும் வர்க்கத்தினரும் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்ட மனநிலையில்தான் இருக்கின்றனர். கர்நாடகாவில் இந்து மதம் மற்றும் அறக்கட்டளைத் துறை, தோதா கணபதிக் குழுக் கோயில்களில் செருப்புக் கடையை மட்டும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கியது சர்ச்சையாகியுள்ளது. கணபதி கோவில், ஆஞ்சநேயா கோவில் உள்ளிட்ட கோவில்கள் அடங்கியுள்ள இவற்றில் ராட்டினம், பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளுக் கான ஏலம் விடப்பட்டது. இவையனைத் தையும் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கிவிட்டு செருப்பை பாதுகாக்கும் வேலையை மட்டும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்தத் துறை ஒதுக்கியுள்ளது. இந்த விஷயம் அம்பலத்துக்கு வந்த நிலையில் பல்வேறு கட்சியினரிடமிருந்தும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து இத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், கோவில்களில் பல்வேறு சேவைகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டுமென 2016-ல் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை மனதில்கொண்டு செய்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக சமாளிக்கின்றனர். நம்பிட்டோம் சார்!

ff

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தொங்கு பாலம் அறுந்து விபத்துக் குள்ளானதில் 142 பேர் பலியானது இந்தியா வையே அதிரச் செய்தது. பழுதடைந் திருந்த இந்தப் பாலம் சீரமைக்கப்பட்டதை யடுத்து, இதைக் காண உள்ளூர் மக்கள் ஏராளமாக வந்ததை யடுத்தும், பாலம் சரிவர சீரமைக்கப் படாததாலும் அறுந்த தாகக் கூறப்படுகிறது. இதில் பலியானவர்களை மீட்கும் பணியில் இறங்கிய ஹூசைன் மெகபூப் பதான், மற்றும் தௌபீக் இருவரும் 50-க்கும் மேற்பட்டோரை மீட்டு கரைசேர்த்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே முன்னாள் பா.ஜ.க. முதல்வரான சங்கர்சிங் வகேலா, மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் தாக்கூர் ஆகியோர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே முன்வந்து இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது பா.ஜ.க.வை எரிச்சலடைய வைத்திருக்கிறது. கபீல்கான் போல, பதான், தௌபீக்கை சிறையிலடைக்க மாட்டாங்களே!

- நாடோடி

nkn091122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe