பார்த்தசாரதி அலைஸ் சைதன்யானந்த சரஸ்வதி என்ற சாமியாரை பாலியல் குற்றங்களுக்காக கைதுசெய்திருக் கிறது டெல்லி காவல்துறை. சிருங் கேரி சாரதா மடத்தின் கல்வி நிறு வனத்தில் 12 ஆண்டுகளாகப் பணியாற்றி, தற்போது ஸ்ரீசாரதா இந்திய மேலாண்மை ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்த பார்த்தசாரதியை, 17 பெண்கள் கூட்டாக அளித்த பாலியல் புகாருக்காக கைதுசெய்திருக்கிறது டெல்லி போலீஸ்.

Advertisment

கொஞ்சம் புத்திசாலித்தனமும் விவரமும் உள்ளவர்கள் மடங்களைக் கட்டி அமர்ந்திருக்கும் போலிச் சாமியார்களைத் தவிர்த்துவிடலாம். ஆனால் அதே போலிச்சாமியார்கள் கல்வி நிறுவனத்தில் இயக்குந ராக வந்தால், அவர்களிட மிருந்து படிக்கும் மாணவி களை எப்படிக் காப் பாற்றுவது?

Advertisment

டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் சிருங்கேரி சாரதா மடத்தின் இந்திய மேலாண் மை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குந ராகவும், கல்லூரியின் பல துறை களுக்குத் தலைவராகவும் இருந்தது சைதன்யானந்தாவுக்கு வசதியாகப் போய்விட்டது. செய்வது பொறுக்கித் தனம், அதிலும் சில வரைமுறைகளைப் பின்பற்றி யிருக்கிறான் சைதன்யானந்தா. உயர்ஜாதியைச் சேர்ந்த பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவில் கல்லூரியில் சேரும் பெண்களையே முக்கியமாகக் குறிவைத்திருக்கிறான்.

வகுப்பறைக்குச் சென்று பெண்களை நோட்டமிடுவது, அவர்களில் யாராவது பிடித்துவிட்டால், யோகா செய்யும் போஸில் தனது வாட்ஸ்அப்புக்கு புகைப்படம் அனுப்பச்சொல்வது, இரவு நேரங்களில் அந்தப் பெண்களிடம் உரையாட ஆரம்பித்து, உரையாடலில் மெல்ல மெல்ல ஆபாசமாகப் பேச ஆரம் பிப்பது, வெளிநாட்டில் வேலை வாங்கித் தருகிறேன், ஏர்ஹோஸ் டஸ் வேலை வாங்கித்தருகிறேன் என வலைவிரிப்பதென செயல்பட்டு பலரைச் சீரழித்திருக்கிறான். இதற்குத் துணையாக கல்லூரியைச் சேர்ந்த பெண் வார்டன்களையும் பயன்படுத்தியிருக்கிறான்.

Advertisment

இணங்க மறுக்கும் மாணவிகளுக்குத் தொல்லை தருவது, பெயிலாக்கிவிடுவதாக மிரட்டுவது, ஏதாவது காரணம் சொல்லி தனது அறைக்கு அழைத்து தவறான இடங்களில் கைவைப்பது என பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டிருக்கிறான்.

இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் இவனால் பாதிக்கப் பட்ட 17 பெண்கள் இவன்மீது உரிய ஆதா ரங்களுடனும், இவன் அனுப்பிய வாட்ஸ் ஆப் டெக்ஸ்ட் உள் ளிட்ட தகவல்களுட னும் புகாரளித் திருக்கின்றனர். அதன்பிறகும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமூக வலைத்தளங்களில் சாமியாரின் அத்துமீறல்கள் குறித்து வைரலாகி, விஷயம் கட்டுமீறிப் போனநிலையில்தான் டெல்லி போலீஸ் அவனைத் தேடத் தொடங்கியது. போலீஸுக்கு டிமிக்கி கொடுத்த தப்பிக்கொண்டிருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி ஆக்ரா ஹோட்டலொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டான்.

கைப்பற்றப்பட்டுள்ள அவனது போனில், பெண்களுடன் சைதன்யானந்தா நடத்திய பல உரையாடல்கள் சிக்கியுள்ளன. அதில், பெண்களை தனது உணர்வுகளைத் தூண்டச்சொல்லி பதிவிட்ட உரையாடல்கள் இருப்பதாகவும், பல உரையாடல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர் போலீசார். கைதுசெய்தபிறகும் அதுகுறித்த வருத்தமோ, குற்ற உணர்வோ அவனிடம் இல்லை. விசாரணையில் தொடர்ந்து பொய் சொல்லிவருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். சைதன்யானந்தா கைதுக்குப் பிறகு பல பெண்களும் அவன்மீது புகாரளிக்கத் தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 32 பெண்கள் வரை அவர்மீது புகாரளித்துள்ளதாகத் தெரிகிறது.

samiyar1

அத்தகைய போன் உரையாடல்கள் ஒன்றில், "துபாய் அரசருக்கு ஒரு பெண் தேவை. உனக்குத் தெரிந்த பெண்கள் இருக்கிறார்களா?' என்று ஒரு மாணவிக்கு அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. பெண்களிடம் அத்துமீறுவது மட்டுமின்றி, பெண்களை சப்ளை செய்யும் புரோக்கராகவும் செயல்பட்டானா என்ற ரீதியிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டுவருகிறது.

சைதன்யானந்தா மீது 2006, 2008, 2016-லேயே புகார்கள் வந்திருக்கின்றன. சைதன்யா மட ட்ரஸ்ட் கணக்குக்கு வரவேண்டிய பணத்தில் ஒரு பகுதியை வேறொரு ட்ரஸ்ட்டுக்கு மாற்றி மோசடி செய்திருக்கிறான். அப்போதே மடம் சுதாரித்திருந்தால், இவனை உள்ளே தள்ளியிருக்கலாம். 2016-ல் ஒரு மாணவி இவன் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். அப்போது தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ததுடன், அந்த பெண்ணின் தந்தையிடமே கல்வி நிறுவன ஆட்களை அனுப்பி, மாணவியின் கல்வி வீணாகிவிடாதா, பிள்ளையை அனுப்பிவைக்கலாமே என்று திரும்பவும் அந்த மாணவியை அடைய முயற்சிமேற்கொண்டிருக்கிறார். அந்த தந்தை அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் தப்பித்திருக்கிறார் அந்த மாணவி.

விவகாரம் தெருவுக்கு வந்தபின் தற்போது, சாரதா மட கல்வி நிறுவனத்தில் அவரது அலுவலகத்தை, சொகுசு ஹோட்டலின் அறையைப் போன்று அலங்காரமாக வைத்திருந்ததாக மடத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன், மடமும் விவகாரம் கைமீறிப் போன நிலையில், அவரது செயல்பாட்டுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென கைவிரித்து விலகிக்கொண் டுள்ளது.

குற்றத்திற்கு உடந்தை யாக இருந்ததாகவும், புகார் தாரர்களை அச்சுறுத்தியதாக வும், ஆதாரங்களை அழித்த தாகவும் கூறி, ஸ்வேதா சர்மா (இணை முதல்வர்), பாவனா கபில் (நிர்வாக இயக்குநர்) மற்றும் காஜல் (மூத்த ஆசிரி யர்) ஆகிய மூன்று பெண்கள் கைதுசெய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டி ருப்பதாக போலீசார் தெரி விக்கின்றனர். இப்படியிருக்க, அதெப்படி கல்வி நிறுவனம் எந்தத் தொடர்பும் இல்லை யென முற்றாக விலகிக் கொள்ள முடியும்?

சட்டமும் நீதியும் சைதன்யானந்தாக்களுக்கு தக்க பாடம் கற்பித்தால்தான், எதிர்காலத்தில் இத்தகை யவர்கள் உருவாவதைத் தடுக்கமுடியும்!