இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, 15 நாட்கள் நீதி மன்றக் காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையைச் சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், “"பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையிலிருந்து தற்கா லிக நீக்கம் செய்தவுடன் அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து கோட்டயத்திலிருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்று பல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர்கள் நேரில் சென்று விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனக்குத் தெரிந்தளவில் இளம் வயதிலேயே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவர்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிகமாக நீக்கினால் போதாது. திருத்தொண்டர் பட்டத்தை திரும்பப் பெற்று நிரந்தரமாக நீக்கவேண்டும்''’ எ
இந்த நிலையில் நாகர்கோவில் ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, 15 நாட்கள் நீதி மன்றக் காவலில் நாகர்கோவில் சப்-ஜெயிலில் பாதிரியார் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மலங்கரை கத்தோலிக்க சபையைச் சேர்ந்த மூத்த பாதிரியார் ஒருவர், “"பெனிட்டிக் ஆன்டோவை மலங்கரை கத்தோலிக்க சபையிலிருந்து தற்கா லிக நீக்கம் செய்தவுடன் அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து கோட்டயத்திலிருக்கும் மலங்கரை கத்தோலிக்க தலைமை சபைக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட இளம் பாதிரியார்கள் சென்றிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பெனிட்டிக் ஆன்டோவுடன் சேர்ந்து திருத்தொண்டர் பட்டம் பெற்று பல்வேறு சபையில் பணியில் இருப்பவர்கள். இந்த விசயத்தில் இவர்களுக்கும் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அவர்கள் நேரில் சென்று விளக்கம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனக்குத் தெரிந்தளவில் இளம் வயதிலேயே பாலியல் புகாரில் சிக்கிய முதல் பாதிரியார் இவர்தான். இவரால் ஒட்டு மொத்த மலங்கரை கத்தோலிக்க சபைக்கும் அவமானம் ஏற்பட்டுள்ளது. பெனிட்டிக் ஆன்டோவை தற்காலிகமாக நீக்கினால் போதாது. திருத்தொண்டர் பட்டத்தை திரும்பப் பெற்று நிரந்தரமாக நீக்கவேண்டும்''’ என்றார்.
இந்த நிலையில் சைபர் க்ரைம் போலீசாரால் கைப்பற்றப்பட்டிருக்கும் பாதிரியாருடைய 3 செல்போன்களில் பாதிரியார்களைக் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குருப்பில் 30 பாதிரியார்களும் 13 பெண்களும் இடம்பெற்றுள்ளனர். அந்த குரூப்பில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைத் தவிர வேறு எதுவும் பகிரப்படவில்லை. அதில் பள்ளி, கல்லூரி மாணவிகளின், குடும்பப் பெண்களின் வீடியோக்களும் படங்களும்தான் உள்ளன.
அந்தப் படங்கள் மற்றும் வீடியோக் களில் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ முகத்தை மறைக்காமல் நிர்வாண நிலையில் பெண்களுடன் சேர்ந்து போஸ் கொடுத் திருக்கிறார். மூன்று ஆண்கள் முகத்தை துணியால் மறைத்து நிர்வாண நிலையில் பெண்களுடன் இருக்கிறார்கள் இவர்களும் பாதிரியார்களாக இருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த பிரபல பெண் மருத்துவர் ஒருவர் பாதிரியாரின் தொடர்பில் இருந்துள்ளார். அவர் பாதிரியார் பணிபுரிந்த சபைகளுக்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த பெண் மருத்துவர் இன்னொரு கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர். இந்த மருத்துவர் எதிர்பாராமல் கருவுற்ற பெண்களுக்கு கருவைக் கலைக்க உடந்தையாக இருந்திருப்பாரோ என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்துவருகிறது.
இந்தநிலையில் பாதிரியார் பணிபுரிந்து சிக்கிய பிலாங்காலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலம் சபையின் முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் பாதிரியார் குறித்து நாம் கேட்டபோது, “"பாதிரியார் இங்கு பணிக்குச் சேர்ந்த சில நாட்களிலே அவருடைய நடவடிக்கை பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆலயத்துக்குள் அவர் காட்டிய பரிவும், பணிவும் அன்பும் அவர் மீதான சந்தேகத்தைப் போக்கியது.
பாதிரியார் தனக்கென ஒரு பெண் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருந்தார். எந்த நேரமும் அவரைச் சுற்றி இரண்டு பெண்களாவது இருப்பார்கள். ஏ1 தேன், முந்திரிப்பருப்பு, ஒயின், பேரிச்சம்பழம், தினமும் காலை, மாலை, இரவு என 3 நேரம் பசும்பால் என அவர் உணவு விஷயத்தில் தனி அக்கறை காட்டினார். அவருக்கு தினமும் வீட்டிலிருந்து வாய் ருசிக்க சாப்பாடு கொண்டு சென்று கொடுப்பதிலே பெண் களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாள் 3 பெண்கள் வீதம் 3 நேரம் சாப்பாடு கொடுக்க அட்டவணை போட்டு சாப்பிட்டார்.
தன்னுடைய வசியப் பேச்சால் பெண்களை மயக்கியதோடு, பாதிரியார்களின் புனித அங்கியையும் பல பெண்களுக்கு போட்டு ரசித்திருக்கிறார். திருமணத்துக்கு முன் ஆசி வாங்க வரும் இளம்பெண்களை தனியாக வரவழைத்து திருமண பந்தம் பற்றி இறைவனின் அறிவுரை வழங்குவதாகக் கூறி பலமணி நேரம் பேசுவார். குடும்பத்தில் கணவன் சரியில்லை,… மனைவி சரியில்லை,… பிள்ளைகள் சரியில்லையினு பாதிரியாரிடம் புகார் சொல்லுவார்கள். அப்படி புகார் சொல்லவரும் பெண்களை தனியாக அழைத்துப் பேசுவதில் ஆர்வம் அதிகம்.
இப்ப சபைக்குள்ள எந்த பெண்ணை யெல்லாம் பாதிரியார் கைவச்சார்னு ஒவ்வொரு குடும்பமும் குழம்பிப்போயி ருக்கிறார்கள். இங்கிருந்து திருமணம் செய்துபோன பெண்களின் குடும்பத்திலும் பாதிரியாரால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது''’என் றார்.
இதற்கிடையில் பாதிரியார் தனக்கு நெருக்கமான ஒரு பெண் ணுக்கு மாப்பிள்ளை பார்த்து அவரே கட்டி வைத்தார். பாதிரியார் விவகாரம் வெளியானபின், துபாயிலிருக்கும் அந்தப் பையன் "அந்தப் பெண் இனி எனக்கு வேண்டாம்' என்று குடும்பத்தினருடன் பேசி யிருப்பதாக தகவல்கள் வர ஆரம்பித்திருக்கிறது.
புதிய திருப்பமாக, பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ விவகாரத்தில், புதிதாக இரு பெண்கள் சைபர் க்ரைமில் போன் மூலம் புகாரளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதிரியாரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும்போது இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ?
__________
இறுதிச் சுற்று
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், இது தொடர்பான சட்ட மசோதாவை பேரவையில் மீண்டும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். வியாழக்கிழமை (23-3-23) கூடிய சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ரம்மி சூதாட்டத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை கனத்த இதயத்துடன் சுட்டிக்காட்டிவிட்டு, "மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான இந்த தடை சட்டம் அறிவால் உருவாக்கப்பட்டதல்ல; இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம் இது'' என்று உணர்ச்சிப்பூர்வமாக விவரித்தார். இந்த சட்ட மசோதாவின் மீது அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் கருத்தினை பதிவு செய்தார்கள். ஒருமனதாக மசோதா நிறைவேறியது. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, உடனடியாக ஆளுநர் ரவிக்கு தி.மு.க. அரசு அனுப்பி வைக்கும். இந்தமுறை மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட முடியாது.
-இளையர்