சுமார் 80-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், சிறுமிகள் என ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து மிரட்டிவந்த இளம் பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோ மீது பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கர்நாடகா, கேரளா என தலைமறைவாகச் சுற்றிவந்த பாதிரியாரை தனிப்படை எஸ்.ஐ. சணல்குமார் தலைமையிலான டீம் நாகர்கோவிலில் வைத்து மார்ச் 20-ஆம் தேதி கைது செய்தனர்.
இதுகுறித்து சைபர் க்ரைம் தரப்பில் நாம் விசாரித்தபோது, "பாதிரியார் பணி செய்த சபையில் இருந்து அவரை நீக்கியதும், மலங்கரை கத்தோலிக்க சபையின் தலைமை இடமான கேரளா கோட்டயத்துக்கு சென்று பாதுகாப்பு கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து கர்நாடகா, கேரளா என சென்று பதுங்கி யிருந்துள்ளார்.
சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, பாதிரியார் மூன்று செல்போன்களில் 13 சிம் கார்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். அந்த சிம்கார்டுகள் எல்லாம் வெவ்வேறு பெயர்களில் வாங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சிம்கார்டுகள் வாங் கப்பட்டுள்ளன. அதேபோல் பாதிரியார் கள் கொண்ட ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பும் உருவாக்கப்பட்டு, அதில் பாதிரியாரால் சீரழிக்கப்பட்ட பெண்களின் வீடியோக் களையும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளனர். அந்த பாதிரியார்களுக் கும் பெண்களை பெனிட்டிக் சப்ளை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
பெனிட்டிக், கேரளாவில் தங்கியிருந்த போது உடன் இரண்டு பெண்கள் இருந்ததாகவும், அந்த பெண்கள் பாற சாலையில் உள்ள மலங்கரை கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் என்றும் இந்த பெண்கள்தான் பாதிரியா ரின் லீலைகளுக்கு உடந்தையாக இருந் திருக்கிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தை உறுதி செய்வதுபோல் அந்தப் பெண்களும் தற்போது தலைமறைவாகி இருக்கிறார்கள்.
பாதிரியாருக்கு பணிவிடை செய் வதற்கு இரண்டு பெண்கள் இருந்தனர். அந்தப் பெண்களும் தலைமறைவாகியிருக் கிறார்கள். இதுவும் போலீசாருக்கு சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்ததால் நீதி மன்றத்தில் சரணடைந்துவிடலாம் என பெனிட்டிக்குக்கு நெருக்கமான ஒரு அரசி யல் பிரமுகர் தந்த ஆலோசனையின் பேரில் நாகர்கோவில் வந்துள்ளார். அப்போதுதான் பெனிட்டிக் பிடிபட் டுள்ளார்'' என்கின்றனர். இதற்கிடையில் சைபர் க்ரைம் போலீசில் 3 பெண்கள் தொலைபேசி வாயிலாக புகார் கூறியுள்ள னர். அதில் ஒரு பெண் தன்னிடமிருந்து பல லட்சங்களை பாதிரியார் கறந்துவிட்டார் என்றிருக்கிறார்.
கேரளாவில், இந்த மலங்கரை கத்தோலிக்க சபைக்குச் செல்பவர்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏராள மானோர் இருக்கிறார்கள். இவர்களிடம் பிஷப் முதல் பாதிரி யார்கள் வரை நெருக்கமாக இருப்பார்கள். அந்த வகையில் தான் பத்தனம்திட்டையைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், பாதிரியார் பெனிட்டிக் ஆன்டோவுடன் நெருக்க மாக இருந்திருக்கிறார். இந்த ஐ.பி.எஸ். அதிகாரி குமரி மாவட்டத்தில் பெனிட்டிக் ஆன்டோ பணி செய்த சபைக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறார். அந்த அதிகாரியோடு வேறு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களுக் கும் இதில் தொடர்பிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஆரம்பத்தில் பாதிரியார் குறித்த லீலைகளை வெளியே கொண்டுவந்த மினிஅஜிதா, காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபோது கண்காணிப்பாளர், "அந்த பாதிரியார் நல்லவர். நான் அவரைப் பற்றி விசாரித்துவிட்டேன். அவர் மீது வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகிறார்கள்''’ என்றிருக்கிறார். "கண்காணிப்பாளர் இப்படிப் பேசுவதற்கு காரணம் கேரளாவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் அழுத்தமாகவே இருக்கலாம்' என்கின்றனர்.
மேலும் 2020-ல் கொரோனாவுக்கு முன் சென்னையில் மலங்கரை கத்தோலிக்க சபையைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் மகளின் திருமணம் நடந்திருக்கிறது. அந்த திருமணத்தில் கலந்து கொண்ட குமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த தாய், மகளுக்கு தனியார் விடுதியில் வைத்து ஆசி வழங்கும்போது சில்மிஷம் செய்திருக்கிறார். இதையடுத்து அந்த தாயும் மகளும் போலீசில் புகார் கொடுத்திருக்கின்றனர். அப்போது மற்ற பாதிரி யார்கள்தான் விஷயம் வெளிவராதபடிக்கு பேசி முடித்திருக் கிறார்கள். சர்ச்சுக்கு வந்த பெண்களிடம் மட்டுமல்ல... நெருங் கிய உறவுக்காரப் பெண்களிடமும் தன்னுடைய லீலையைக் காட்டியுள்ளார் பெனிட்டிக். சித்தி உறவு முறைகொண்ட பெண் ஒருவரிடம் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி அவருடைய கணவருக்கு கேரளாவில் எம்.எல்.ஏ. ஒருவர் மூலம் கார்ப்பரேசனில் வேலை வாங்கித் தருவதாக கூறி சித்தியையும் கள்ளக்காதலியாக்கி வீடியோ எடுத்திருக்கிறார்.
தற்போது அந்த சித்தியின் மகளுக்கு கல்வி நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி தங்கை உறவு முறை கொண்ட அந்தப் பெண்ணிடம் நெருங்கிய நிலையில் சிக்கிக்கொண்டிருக்கிறார் பாதிரியார்.