அ.தி.மு.க.வின் அன்புப் பிடியில் தி.மு.க. நிர்வாகிகள்!-உற்சாகம் குறையும் உடன்பிறப்புகள்!

stalin

தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வரிந்து கட்டி நிற்கின்றன. அதேநேரத்தில்... அ.தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும், தி.மு.க. புள்ளிகளோடு, பின்னிப் பிணைந்து நின்று நட்பு பாராட்டி வருகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் சலுகைகளுக்காக சம்மந்தப்பட்ட சில தி.மு.க. புள்ளிகள், அவர்களின் ’"அன்பு' டீமுக்குள்’ ஐக்கியமாகி, தன்னிலை மறந்து, தாங்கள் ஆடவேண்டிய அரசியல் ஆட்டத்தை ஆட மறந்து வருகின்றனர். அதனால் இப்போது இருக்கும் பிக்பாஸான எடப்பாடி, "தங்கள் வேலை எளிதாகிறதே' என்கிற உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்.

தி.மு.க. புள்ளிகளை ஆளும்கட்சிப் புள்ளிகள், தங்களின் அன்பு டீமுக்குள் ஐக்கியமாக்கி வரும் காட்சிகளைத் தமிழகம் முழுக்கவே பரவலாகப் பார்க்கமுடிகிறது.

உதாரணத்திற்கு வட மாவட்டங்களை எடுத்துக் கொள்வோம். இங்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரை மேடைகளில் கேவலமாக சித்தரித்துத் திட்டித் தீர்த்துவருகிறார் அமைச்சரவையில் செல்வாக்கு உள்ள அந்த மந்திரி. இவருக்கு ஸ்டாலின் அல்லது

தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் வரிந்து கட்டி நிற்கின்றன. அதேநேரத்தில்... அ.தி.மு.க. அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் அனைவரும், தி.மு.க. புள்ளிகளோடு, பின்னிப் பிணைந்து நின்று நட்பு பாராட்டி வருகின்றனர். அவர்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் சலுகைகளுக்காக சம்மந்தப்பட்ட சில தி.மு.க. புள்ளிகள், அவர்களின் ’"அன்பு' டீமுக்குள்’ ஐக்கியமாகி, தன்னிலை மறந்து, தாங்கள் ஆடவேண்டிய அரசியல் ஆட்டத்தை ஆட மறந்து வருகின்றனர். அதனால் இப்போது இருக்கும் பிக்பாஸான எடப்பாடி, "தங்கள் வேலை எளிதாகிறதே' என்கிற உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கிறார்.

தி.மு.க. புள்ளிகளை ஆளும்கட்சிப் புள்ளிகள், தங்களின் அன்பு டீமுக்குள் ஐக்கியமாக்கி வரும் காட்சிகளைத் தமிழகம் முழுக்கவே பரவலாகப் பார்க்கமுடிகிறது.

உதாரணத்திற்கு வட மாவட்டங்களை எடுத்துக் கொள்வோம். இங்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உட்பட அவரது குடும்பத்தினரை மேடைகளில் கேவலமாக சித்தரித்துத் திட்டித் தீர்த்துவருகிறார் அமைச்சரவையில் செல்வாக்கு உள்ள அந்த மந்திரி. இவருக்கு ஸ்டாலின் அல்லது ஆர்.எஸ்.பாரதி போன்ற முன்னோடிகள் மட்டுமே பதிலடி கொடுத்துவருகிறார்கள். அவர்களோடு வரிந்துகட்ட வேண்டிய மாவட்ட தி.மு.க, புள்ளிகளோ, மௌனிகளாக மாறி, தாக்குதலை வேடிக்கைப் பார்த்து வருகிறார்கள். ஏனெனில் அந்த அமைச்சரின் தயவில் பல்வேறு சலுகைகளை இவர்கள் பெற்றுவருவதுதான் அதற்குக் காரணம். பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்கள் நடக்கும்போது கூட அமைச்சரைக் கண்டித்து இவர்கள் ஒரு வார்த்தை கூட பேசுவது இல்லை. காரணம் அமைச்சர் நம்மீது வருத்தப்பட்டு விடுவாரோ என்று பயப்படுகிறார்கள். இது போன்ற விஷயங்கள் தி.மு.க.வின் கீழ்மட்ட உடன்பிறப்புக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

stalin

தி.மு.க. முன்னோடிகள் பலர் ஆளுங்கட்சி தயவில் காண்ட்ராக்ட் மற்றும் திட்டப் பணிகளில் கமிஷன் பெற்று, அதில் சில லட்சங்களை தன் கட்சி உடன்பிறப்புகளுக்கும் செலவு செய்கின்றனர். அதோடு "வாட்ஸ் அப், "பேஸ்புக்' மூலம் கட்சிப் பணிகளைத் திறம்பட செய்வதாக அவர்கள் மூலம் தங்கள் கட்சி தலைமைக்குத் தகவலை அனுப்பிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மேலே சபாஷ் கிடைத்துவிடுகிறது. சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. பொறுப்பாளர் ஒருவரும் இதுபோன்ற விஷயத்தில் திறமையாக செயல்படுகின்றாராம்.

இதேபோல், ஒரு அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் வந்து காத்திருந்தும், சம்மந்தப்பட்ட தொகுதியின் பெண் மக்கள் பிரதிநிதி வந்து சேரவில்லையாம். அதிகாரிகள் விழாவைத் தொடங்கலாம் என்று சொன்னபோது அந்த அமைச்சரோ, எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதி வரட்டும். அவர் வராமல் விழாவைத் துவக்கினால் அவர் என்னிடம் கோபித்துக் கொள்வார் என்று கூறி, 15 நிமிடம் காத்திருந்து விழாவை நடத்தியுள்ளார். இதுபோன்ற பல மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் பற்றிய புகார்கள், ஸ்டாலின் வரை ஆதாரங்களுடன் செல்ல, அவர்களை அழைத்து அவர் கடுமையாக எச்சரித்து அனுப்பியதாகவும் கூறுகிறார்கள்.

இதேபோல், கடலையொட்டிய மாவட்டம் ஒன்றில் நடந்த ஒரு கூத்தும் நம் கவனத்துக்கு வந்தது. அங்கிருக்கும் மாவட்ட அமைச்சருக்கும் ஆளுங்கட்சி மா.செ. ஒருவருக்கும் ஏழாம் பொருத்தமாம். இந்த நிலையில், அந்த அமைச்சர் பாசனத்திற்கு நீரைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர், செல்லவில்லை. காரணம், அந்த மா.செ.வால் கவனிப்புக்கு ஆளானவர்கள், மா.செ. கோபித்துகொள்வார் என்பதாலேயே அமைச்சரின் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார்களாம்.

ஒரு பக்கம் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில், ஆட்சி நமதே என்ற நம்பிக்கையோடு ஊர் ஊராகச் சென்று, "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்'’என்று பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் இன்னொரு புறம் ‘"விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்'’ என்ற தலைப்பில் மாவட்டம் தோறும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். இப்படி ஆட்சி மாற்றத்துக்காக இவர் கள் வியர்வை சிந்திவரும் நிலையில், தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.வினரின் வலையில் சிக்கி வருவது, தி.மு.க,.வின் கனவையும் நோக்கத்தையும் கானல் நீராய் ஆக்கிவிடுமோ என்ற பயத்தை தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் சம்மந்தப் பட்ட தி.மு.க. நிர்வாகிகளோ ""கட்சியின் முன்னணித் தலைவர்களின் பிரச்சாரத்துக்காகவும், கூட்டச் செலவு களுக்காகவும் நாங்கள் செலவிட வேண்டி இருக்கிறது. இதற்கெல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாகவே தொடர்வதால் எங்களுக்கு வழி இல்லை. அதனால், முறையான டெண்டர்கள் மூலம் இந்த ஆட்சியில் சலுகைகளைப் பெறவேண்டி இருக்கிறது.“ ஆட்சி மாற்றம் நிச்சயம் என அ.தி.மு.க.வினரே நம்புவதால் எங்கள் தலைவரின் இலக்கைத் தடுக்க முடியாது''’என்கிறார்கள்.

ஊழலில் திளைக்கும் ஆளும்கட்சிப் புள்ளிகளுடன், தி.மு.க. புள்ளிகள், கூட்டணி அமைத்து, பலன் பெறுவது சரிதானா? என்கிற கேள்வி பலரிடமும் எழுத்தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட அ.தி.மு.க,.வின் "அன்பு'’ டீம் தி.மு.க. புள்ளிகளுக்கு ஸ்டாலின் எப்படி கடிவாளம் போடப் போகிறார்? இவர்களை எல்லாம் சமாளித்து தி.மு.க.வை எப்படி வெற்றித் திசையில் "ஐபேக்' டீம் நகர்த்தப்போகிறது என்பது போன்ற கேள்விகள் இப்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை எட்டிப்பிடித்த தி.மு.க., வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும் என்று பலமாக நம்பிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆனால் அதையெல்லாம் அ.தி.மு.க.வின் அன்பு டீமில் இருக்கும் தி.மு.க. புள்ளிகளே தரைமட்டமாக ஆக்கிவிடுவார்களோ.. என்ற பதட்டம் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் உருவாகி யிருக்கிறது. அறிவாலயம் என்ன செய்யப் போகிறது?

nkn270121
இதையும் படியுங்கள்
Subscribe