Advertisment

தண்டவாளத்தில் தள்ளிய காதலன்! தமிழகத்தையே அதிர வைத்த காதல் படுகொலை!

yrr

க்டோபர் 13-ஆம் தேதி, சுமார் 1:15 மணி அளவில் பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு கொடூரமான பகலைச் சந்திக்கப்போகிறோம் என சற்றும் எதிர்பார்த்திருக்காது.

Advertisment

பரங்கிமலை பிளாட்பாரத்தில் நின்று இளம்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த இளைஞர், ரயிலில் ஏறுவதற்காக அந்தப் பெண் பிளாட்பாரம் அருகே வந்தபோது, சட்டென்று அந்தப் பெண்ணை பின்னாலிருந்து எட்டி உதைத்த தில் ரயில் முன்பு விழுந்தார். அடுத்த நொடியே அந்தப் பெண்ணின் மீது ரயில் ஏறி தலை துண்டாக, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஒரு கணம் ரயில் நிலையத்தில் அதைப் பார்த்தவர்கள் எல்லாம் உறைந்துபோய்விட்டார்கள்.

tra

பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் பலர் அலறி யடித்து ஓடினார்கள். அந்தப் பெண்ணை எட்டி உதைத்து கொலைசெய்த இளைஞன், சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்துவந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் துண்டான உடல் பாகங் களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

2016-ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை ராம்குமார் கொடூரமாக கொலைசெய்த நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. 2021-ல் தாம்பரம் ரயில் நிலையத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவேதா என்ற நர்சிங் கல்லூரி மாணவி ராமச்சந்திரன் என்ற வாலிபனால் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார். கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி சத்யப்பிரியா என்ற மாணவி காதலன் சதீஷ்குமாரால் ரயில் முன

க்டோபர் 13-ஆம் தேதி, சுமார் 1:15 மணி அளவில் பரங்கிமலை ரயில் நிலையம் ஒரு கொடூரமான பகலைச் சந்திக்கப்போகிறோம் என சற்றும் எதிர்பார்த்திருக்காது.

Advertisment

பரங்கிமலை பிளாட்பாரத்தில் நின்று இளம்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டுக் கொண்டிருந்த இளைஞர், ரயிலில் ஏறுவதற்காக அந்தப் பெண் பிளாட்பாரம் அருகே வந்தபோது, சட்டென்று அந்தப் பெண்ணை பின்னாலிருந்து எட்டி உதைத்த தில் ரயில் முன்பு விழுந்தார். அடுத்த நொடியே அந்தப் பெண்ணின் மீது ரயில் ஏறி தலை துண்டாக, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஒரு கணம் ரயில் நிலையத்தில் அதைப் பார்த்தவர்கள் எல்லாம் உறைந்துபோய்விட்டார்கள்.

tra

பிளாட்பாரத்தில் இருந்த பயணிகள் பலர் அலறி யடித்து ஓடினார்கள். அந்தப் பெண்ணை எட்டி உதைத்து கொலைசெய்த இளைஞன், சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தப்பி ஓடிவிட்டான். ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்துவந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் துண்டான உடல் பாகங் களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Advertisment

2016-ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை ராம்குமார் கொடூரமாக கொலைசெய்த நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. 2021-ல் தாம்பரம் ரயில் நிலையத்தில் குரோம்பேட்டையைச் சேர்ந்த சுவேதா என்ற நர்சிங் கல்லூரி மாணவி ராமச்சந்திரன் என்ற வாலிபனால் கொடூரமாகக் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார். கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி சத்யப்பிரியா என்ற மாணவி காதலன் சதீஷ்குமாரால் ரயில் முன்பு தள்ளி தலை துண்டிக்கப் பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், கொலையான அந்த இளம்பெண், சென்னை ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் மாணிக்கம்- ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யப்பிரியா என தெரியவந்தது. தாயார் ராமலட்சுமி, ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். சத்யப்பிரியா தி.நகர் ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவருவதாகவும், தினமும் பரங்கிமலையிலிருந்து தி.நகரிலுள்ள கல்லூரிக்கு மின்சார ரயிலில் சென்றுவருவது வழக்கமென்றும் தெரிகிறது.

சத்யப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிர்த் தெருவில் ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவரின் மகன் சதீஷ் வசித்துவந்துள்ளார். சதீஷ்-சத்யப்பிரியா இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

train

இவர்களின் காதல் விவகாரம், சத்யாவின் பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. சதீஷ் படிக்காமல், வேலை இல்லாமல் தன் அப்பா பணிஓய்வுப் பணத்தில் ஓர் பைக்கை வாங்கி சுற்றித்திரிவதால் இந்தக் காதலுக்கு சத்யா வீட்டில் எதிர்ப்புக் கிளம்பியது. மகளை கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த ஒரு வருடமாக சதீஷிடம் சரியாகப் பேசாமல் இருந்துள்ளார் சத்யா. இந்த நிலையில் சத்யப்பிரியாவிற்கு வேறு நபரை நிச்சயம் செய்துள்ளனர்.

சத்யா மீது கோபத்திலிருந்த சதீஷ் மூன்று மாதங்களுக்கு முன் அவரது கல்லூரிக்கே சென்று நுழைவாயிலில் வைத்து சத்யாவை அடித்துள்ளார். சத்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சதீஷை விசாரித்த போலீ சார், இருவரது பெற்றோரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், இது காதல் விவகாரம் என்பதாலும், சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளனர். அதன்பின்னரும் சதீஷ் தொடர்ந்து சத்யா விடம் பேசமுயன்றுள்ளார். இந்நிலையில் தான் பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காகத் தனது தோழிகளுடன் காத்திருந்த சத்யாவிடம் வலியச்சென்று சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய தால் சத்யா இனி தனக்குக் கிடைக்கமாட் டாள் என்ற மனநிலைக்கு வந்த சதீஷ், "செத்து ஒழி' என்று ஆவேசமாகக் கத்தியபடி... தாம்பரத்திலிருந்து வேகமாக வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை ஈவு இரக்கமில்லாமல் பிடித்துத் தள்ளி கொலை செய்ததாக உடனிருந்த தோழிகள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

தப்பி ஓடிய சதீஷைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து ரயில்வே போலீசார் தேடிவந்த நிலையில் துரைப் பாக்கத்தில் பதுங்கியிருந்த சதீஷ், நள்ளிரவு 2 மணி அளவில் கைதுசெய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தியாகராயநகர், செயின்ட் தாமஸ் மவுண்ட் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்த கொண்டுவரும்போது சத்யா விவகாரத்தால் கொந்தளித்துப் போயிருந்த பொதுமக்கள் சதீஷை தாக்கமுயன்றனர்.

இதற்கிடையில், சத்யாவின் பெற்றோருக்கு 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமலிருந்து தவமாய்ப் பெற்ற மகளான சத்யாவின் மரணத்தைத் தாங்கமுடி யாமல், அவரது தந்தை மாணிக்கம் மதுவில் விஷம்கலந்து குடித்துவிட்டார். இதனையடுத்து, உறவினர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார்.

tr

பிரேத பரிசோதனைக்குப் பின் இருவரின் உடல்களையும் அவரது வீட்டுக்குக் கொண்டு வந்தனர். தந்தை, மகள் இருவரின் உடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக சவ வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டபோது தெருவில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். முதலில் தந்தை மாணிக்கத்தின் உடல் தகனம் செய்யப்பட்டபின், மகள் சத்யப்பிரியாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், குடும்பத்தில் எஞ்சியவரான தாய் ராமலட்சுமிக்கு புற்றுநோய் என்பது பலரையும் நெஞ்சுருகச் செய்துள்ளது. பொறுப்பற்ற இளைஞன் ஒருவனின் காதலும் ஆணவமும் ஒரு குடும்பத்தின் அழிவுக்கே காரணமாகிவிட்டதாக பலரும் பேசிக்கொண்டதைக் கேட்கமுடிந்தது.

சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜாராமன்,

rr"கொலையாளி இரண்டு மூன்று முறை அந்தப் பெண்ணை தாக்கியதாகவும், வம்பு செய்ததாகவும் தெரிகிறது. அப்போதே அவன்மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது. பொது இடத்தில் இதுபோல ஒரு சம்பவம் நடக்கும்போது பொதுமக்களும் தட்டிக்கேட்க முன்வரவேண்டும்.

நுங்கம்பாக்கம் சுவாதி கொலையாக இருந்தாலும் சரி,… தாம்பரத்தில் நடந்த சுவேதா கொலையாக இருந்தாலும் சரி...…சத்யப்பிரியாவின் கொலையானாலும் மூன்றுமே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையத்தில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் பாதுகாப்புப் பணியிலுள்ள போலீசாரும் இதைக் கவனித்திருக்க வேண்டும். அருகில் இருந்த பொதுமக்கள் போலீஸுக்கு போன் செய்து புகாரளித்திருக்க வேண்டும்.

சம்பவம் நடந்த ரயில் நிலையத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்பது வருத்தமான விஷயம். நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கின்போது ரயில்வே துறை மூலம் எல்லா ரயில் நிலையங் களிலும் கேமரா பொருத்தப்படும் என்று கூறினார்கள். இத்தனை வருடங்களாகியும் அது நடக்கவில்லை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும். சினிமா மற்றும் மீடியா துறைகள் சமூக அக்கறையுடன் தவறாக வழிகாட்டும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும்''’என்றார்.

train

மனோதத்துவ நிபுணர் டாக்டர் நப்பின்னை, “"மருத்துவ ரீதியில் ஆன்ட்டி சோசியல் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என்று அழைப்போம். தனக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காவிட்டால் யாருக்குமே அது கிடைக்கக்கூடாது என்று அழிக் கும், மூர்க்க குணம் உள்ளவர்கள் இத்தகையவர்கள். சிறு வயதிலிருந்தே இந்த மூர்க்கக்குணம் உள்ளவனாக வளர்ந்திருப்பான் சதீஷ். இரண்டு, மூன்று முறை பிரச்சனை செய்தபோதே, சதீஷின் பெற்றோரை அழைத்து பக்குவமாக இந்த விஷயத்தை கையாண்டிருக்கவேண்டும்''’என்றார்.

தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள் ளான் சதீஷ். சிறையில் சதீஷ் பொழுதெல்லாம் புலம்பிக்கொண்டிருந்ததைக் கவனித் திருக்கிறார்கள் சிறைக்காவலர்கள். மன அழுத்தத்தில் சதீஷ் எதுவும் செய்து விடக்கூடாது என்பதற்காக, அவனது சிறையறைக்கு சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் போட்டுள்ள தாகத் தெரியவருகிறது.

nkn191022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe