தேவியநந்தல் சரஸ்வதி கொலை, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவரும் கொலை செய்தவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந்த பரபரப்புக்கு ஒரு காரணமாகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது தேவியநந்தல் கிராமம். இந்த கிராமத் தைச் சேர்ந்த வீரமணி-ஜெயகாந்தி தம்பதிகளுக்கு மூன்று பெண்பிள்ளைகள். ஒரு ஆண் குழந்தை. மூத்த மகள் சரஸ்வதிக்கு 18 வயது. கடந்த 2-ஆம் தேதி அவர்கள் வீட்டுக்கு அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரது தந்தை வீரமணி திருநாவலூர் காவல்நிலையத் தில் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாரளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love_12.jpg)
உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த ரங்கன் என்கிற ரங்கசாமி, இவரது தம்பி கிருஷ்ணசாமி, இவர்களது நண்பன் ரவீந்திரன் ஆகிய மூவரையும், போலீசார் கைதுசெய்து நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்து மூவரையும் கைதுசெய்த காவல்துறை, ""கடந்த இரண்டு ஆண்டுகளாக இளை ஞன் ரங்கசாமி நர்சிங் பயிற்சி பயின்றுள்ள வீரமணி மகள் சரஸ்வதியைப் பின்தொடர்ந்து காதல் மொழி பேசியுள்ளார். இருவருக்கும் இடையில் சிறிது காலம் அறிமுகம் இருந்துவந்த தாகத் தெரிகிறது. சமீபகாலமாக சரஸ்வதியின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதையறிந்த ரங்கசாமி சரஸ்வதியை பலமுறை தொடர்புகொண்டு, "காதலித்த என்னையே திருமணம் செய்துகொள்ள வேண்டும்' என்று வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் சரஸ்வதி அதற்கு மறுப்புத் தெரிவித் துள்ளார். சம்பவத்தன்று இரவு சரஸ்வதியை செல்போன் மூலம் தொடர்புகொண்ட ரங்கசாமி ""நீ உனது பெற்றோர் பார்த்து முடிவுசெய்த மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள். நான் உனக்குத் தொந்தரவு தரமாட் டேன். கடைசியாக ஒரு முறை உன்னை நேரில் சந்தித்துப் பேசவேண்டும். நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அனைத்தை யும் உன் கண்முன்னாலேயே அழித்து விடுகிறேன்'' என்று கேட்டுக்கொண்டுள் ளார். ரங்கசாமியின் பேச்சை நம்பிய சரஸ்வதி அன்றிரவு ரங்கசாமி குறிப்பிட்ட இடத்துக்கு அவரைச் சந்திக்கச் சென்றுள்ளார். அங்கே ரங்கசாமி, அவரது தம்பி கிருஷ்ணசாமி, அவர்களது நண்பன் ரவீந்திரன் மூவரும் சரஸ்வதியின் வருகைக்காகக் காத்திருந்தனர். சரஸ்வதியை நேரில் சந்தித்த ரங்கசாமி, ""இப்படியே கிளம்பி என்னுடன் வா. நாம் எங்காவது ஓடிசென்று திருமணம் செய்துகொண்டு வாழலாம். நீ இல்லாமல் என்னால் வாழமுடியாது'' என்று கட்டாயப்படுத்தியுள்ளார். (இரவு பதினோரு மணி முதல் 3 மணி வரை சரஸ்வதியை திருமணம் செய்துகொள்ளுமாறு டார்ச்சர் செய்திருக்கிறார் ரங்கசாமி) அதற்கு சரஸ்வதி, ""நான் எனது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்வதற்கு முடிவு செய்துவிட்டேன். என்னை இனிமேல் தொந்தரவு செய்யவேண்டாம். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்னை விட்டுவிடு'' என்று கெஞ்சிக் கேட்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love1_4.jpg)
சரஸ்வதியின் இந்த பதிலைக் கேட்டு கோபமடைந்த ரங்கசாமி, ""எனக்குக் கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது'' என்று கூறியபடி சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொலை செய்துள்ளார். சரஸ்வதி இறந்ததை உறுதிசெய்த பிறகு மூவரும் ஊரைவிட்டு எஸ்கேப்பாகி உள்ளனர்''’என்றார்.
இவர்கள்தான் கொலையாளிகள் என்பதை போலீஸ் எப்படி அடை யாளம் கண்டுபிடித்தது என்பது குறித்து கேட்ட போது, ""இவர்கள் மூவரில் ரங்கசாமி மட்டும் கொலை செய்த பிறகு ஊரைவிட்டு ஆந்திரா பக்கம் சென்றுவிட்டார். ஊரில் தீவிரமாக விசாரணை செய்தபோது போலீசாரின் சந்தேகம், சரஸ்வதியின் தந்தை வீரமணி மீது முதலில் எழுந்துள்ளது. காரணம், தனது மகள் சாதி விட்டு சாதி காதல் திருமணம் செய்து விடுவாளோ என்று மகளை வீரமணியேகூட கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். "என் மகளை நான் கொலை செய்திருந்தால் போலீசில் ஏன் புகார் கொடுக்கப்போகிறேன்' என்று வீரமணி வாதாடியுள்ளார்.
அதன் பிறகுதான் ரங்கசாமி என்ற இளைஞ னுக்கு சரஸ்வதியோடு காதல் என்ற தகவல் கிடைத் துள்ளது. ரங்கசாமியும் ஊரில் இல்லையென்பதால் அவனது செல்போனை ஆய்வுசெய்து அவர் ஆந்திராவின் எல்லைப் பகுதியில் தலைமறைவாக உள்ளதைக் கண்டறிந்த போலீசார், அங்குசென்று ரங்கசாமியை அழைத்து வந்துள்ளனர்.
இந்தக் கொலை குறித்து சரஸ்வதியின் தந்தை வீரமணியிடம் கேட்டபோது, “""ரங்கசாமி, எங்கள் மகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்ததும் சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்பி னோம். அதன்பிறகும் அவன் செல்போன் மூலம் கடந்த மூன்று மாதங்களாக சரஸ்வதியை மிரட்டி வந்துள்ளான். இதை எங்களிடம் அவள் கூறவில்லை. மிரட்டல் குறித்து கூறியிருந்தால் அப்போதே காவல்துறையில் புகாரளித்து தீர்வு கண்டிருக்கலாம். சரஸ்வதியைக் கொலைசெய்த ரங்கசாமியும் அவன் கூட்டாளிகளும், கொலை செய்த பிறகு அவளது உடலைக் கொண்டுவந்து எங்கள் வீட்டிற்கு அருகிலேயே போட்டுவிட்டு, அவர் காதில் அணிந்திருந்த கம்மலை கழட்டிக் கொண்டுசென்றிருந்தனர். கம்மலுக்காக யாரோ கொலை செய்ததுபோல் திசைதிருப்பப் பார்த்துள்ளனர். நீதிமன்றம் இவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்''’என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/love2_0.jpg)
சரஸ்வதி கொலை சம்பந்தமாக சமூகநீதிப் பேரவை சார்பில் திண்டிவனம் வழக்கறிஞர் பாலாஜி தலைமையில் வழக்கறிஞர்கள் சிவராமன், செந்தில்குமார், பழனிவேல், கலிய மூர்த்தி, ராஜ்குமார், சந்திரசேகர் போன்றவர்கள் அந்த ஊருக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியதோடு பாதிக்கப்பட்ட சரஸ்வதியின் தந்தை வீரமணி, தாய் ஜெயகாந்தி மற்றும் பொதுமக்களையும் சந்தித்து விசாரணை செய்தனர். ஊடகங்களிடம் அவர்கள் பேசும்போது, “""காதல் என்ற போர்வையில் இத்தகைய கொடூரங்கள் நடக்காமல் தடுக்கவேண்டும். காதலுக்கும் இனக் கவர்ச்சிக்குமான வித்தியாசத்தை உணர்த்தவேண்டும். பதின்பருவத்தில் நம் பிள்ளைகளின் நடவடிக்கையின்மேல் கவனமுடன் இருக்கவேண்டும்'' என்கிறார்கள்.
சரஸ்வதி ஊரான தேவியநந்தல் கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் அதிகளவில் வசிக்கிறார்கள். மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக வசிக்கிறார்கள். பெரும்பான்மையினர் காணப்படும் கிராமத்தில், சிறுபான்மை யினருக்கு நேரும் இடைஞ்சல்கள் என்றுமே தீராத கதைதான்.
இந்தப் படுகொலை சாதி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல கோணங்களில் விவாதமானது. அரக்கோணம் இரட்டை படுகொலைக்கு குரல் கொடுத்த தலைவர்கள் எங்கே போனார்கள் எனக் கேள்வி எழுந்தது. பெண்ணின் அப்பா வீரமணி தி.மு.க. என்பதால் லோக்கல் நிர்வாகிகள் மூலம் ரிப்போர்ட் வாங்கி உறுதிசெய்த பிறகு மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு, ஆதரவுக் கரம் நீட்டினார்.
காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது, திருமணம் செய்ய மறுத்தால் கொலை, கத்திக்குத்து, எனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பது போன்று இளைஞர்களின் மனப்போக்கு மாறிவருவது சரியானதல்ல. காதலையும் பதின்பருவத்தையும் குறித்த தெளிவான பார்வை பள்ளியிலும் குடும்பத்திலும் கற்றுத்தரப்படுவதே இதற்குச் சரியான தீர்வு. அதேபோல மனம் விரும்பித் திருமணம் செய்துகொண்ட இருவரைத் தேடிப்பிடித்து இருவரில் ஒருவரையோ, இருவரையுமோ கொல்லும் ஆணவக் கொலை நோய்க்கான சிகிச்சையையும் இந்தச் சமூகத்துக்கு அளிக்கவேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/love-t.jpg)