விழுப்புரம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வருபவர் செல்லம்மாள். தனது 18 வயது மகள் தரணியை விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். தரணிக்கும், விக்கிரவாண்டி அரு கேயுள்ள மதுரப் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது கணேஷ்ராஜ் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் நடைபெறும் திருவிழா மற்றும் திருமண விழா போன்றவைகளில் நடைபெறும் பாட்டுக் கச்சேரிகளில் கணேஷ்ராஜ் ட்ரம்ஸ் வாசித்து வருகிறார். கடந்த மூன்றாண்டு களாக இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பில்லை. இந்நிலையில், கணேஷ்ராஜ் வேறொரு பெண்ணுடன் நெருங்கிப் பழகிவருவதாக தரணிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களாக, நர்ஸ் படிப்புப் பயிற்சிக்காக தரணி சென்னைக்குச் சென்றுள்ளார். இந்நேரத்தில், வேலை தேடி கேரளாவுக்கு சென்றுள்ளார் கணேஷ்ராஜ். இதனால் இருவருக்கு மிடையே இடைவெளி ஏற்பட்டு பேச்சுவார்த்தை முறிந்துபோனது.
இந்நிலையில், சென்னையில் பயிற்சியை முடித்துவிட்டு தரணி சொந்த ஊருக்கு வந்திருக்கும் தகவல் அறிந்த கணேஷ்ராஜ், சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் தரணி வீட்டுக்கு சென்றுள் ளார். வீட்டுக்குப் பின்புறம் சென்று தரணியை சந்தித்துப் பேச முற்பட்டிருக்கிறார் கணேஷ்ராஜ். தரணி பேச மறுத்ததால், கோபமடைந்த கணேஷ் ராஜுக்கும் தரணிக்கு மிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கணேஷ்ராஜ், தான் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்து தரணியின் கழுத்தில் சரமாரி யாக வெட்டியுள் ளார். திடீர்த் தாக்கு தலால் நிலை குலைந்த தரணி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கணேஷ்ராஜை தீவிரமாகத் தேடி, திருக்கனூர் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். காவல் நிலை யம் அழைத்து வந்து அவரிடம் நடத்திய விசாரணையில், "தரணியும், நானும் தீவிர மாகக் காதலித்து வந்தோம். கடந்த ஆறு மாதமாக என்னுடன் பேசுவதை தரணி தவிர்த்தார். காதலை முற்றிலும் கைவிட முடிவு செய்தார். மூன்றாண்டு காதலை என்னால் கைவிட முடியவில்லை. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தரணியை கத்தியால் வெட்டிக் கொலை செய்தேன்'' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் கணேஷ்ராஜ்.
அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தினால் தரணி குடும்பத்தினர் மட்டுமல்லாது, ராதாபுரம் கிராம மக்களே பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.