சாதாரணமாக வெளிநாடு ஒன்றில் லாட்டரி தொழிலதிபரிடம் வேலை செய்த மார்ட்டின், இன்று பல லட்சம் கோடிக்கு அதிபராக இருக்கிறார். அவரது சொந்த மாநிலமான தமிழகத்தில் அரசியலில் முத்திரை பதிக்க வேண்டுமென அவர் செய்யும் முயற்சிகள், இன்று அரசியலில் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அவரது மருமகனான ஆதவ் அர்ஜுன்ரெட்டி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வியூகம் அமைத்துக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர் கம்பெனியில் பணியாற்றியவர். மம்தாவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர் வளர்ந்தார். அங்கு மம்தா வெற்றி பெற்றதும் லாட்டரி அறிமுகப்படுத்தப்பட்டது. மம்தாவை யும், பிரஷாந்த் கிஷோரையும் இணைத்தது லாட் டரி மார்ட்டின்தான். ஒரு மாநிலத்தில் லாட்டரி அதிகாரப்பூர்வமாக வந்தால் அங்கு சுரண்டல் லாட்டரி எனப்படும் திருட்டு லாட்டரியும் வரும். அபீசியலான லாட்டரியை விட இந்த திருட்டு லாட்டரியில்தான் அதிக காசு வரும்.

mm

பா.ஜ.க.வுக்கு, மம்தாவுக்கு அதிக தேர்தல் நிதியளித்த மார்ட்டின், தி.மு.க.வுக்கும் தேர்தல் நிதி அளித்தார். அவரது சொந்த மாநிலமான தமிழகத்தில் எப்படியாவது லாட்டரியைக் கொண்டுவர வேண்டும் என்பதே அவரது திட் டம். அதற்காக தனது உறவினர்களை பல்வேறு கட்சிகளில் சேரவைத்து, தனது மருமகனை தி.மு.க.விடம் நெருங்கிப் பழகவிட்டார். தி.மு.க. அவரது லாட்டரி பிளானுக்கு ஒத்துக்கொள்ள வில்லை. அதனால் மருமகனை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்த்துவிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக பதவிபெற்ற ஆதவ் அர்ஜுன்ரெட்டி, விடு தலை சிறுத்தைகளை தி.மு.க. கூட்டணியிலிருந்து கழட்டிவிடும் அசைன்மெண்டை ஏற்றார். அதன்படி நடி கர் விஜய், எடப்பாடி ஆகியோரிடம் அவரது நண்பர் களான சுஜய்ரெட்டி, விஷ்ணுரெட்டி போன்றவர்கள் மூலம் பேசுகிறார்.

எடப்பாடியிடம் நேரடியாக மார்ட்டினே பேசினார். தி.மு.க. ஆட்சி மாறி, அ.தி.மு.க. ஆட்சி வந்தால் லாட் டரியைக் கொண்டுவருவோம். அ.தி.மு.க., விஜய், திருமாவளவன் கூட்டணி என அ.தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து சுனிலுக்கு பதிலாக பிரஷாந்த் கிஷோரை 300 கோடி செலவில் கொண்டு வர மார்ட்டின் உறுதியளித்தார். இந்த நடவடிக்கை களை எல்லாம் எடப்பாடியின் மகன் மிதுன் மூலம் ஒருங்கிணைப்பது என முடிவெடுக்கப் பட்டது. தி.மு.க. கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, உதயநிதிக்கு mmகடும் எதிர்ப்பு போன்றவை ஆதவ் அர்ஜுன்ரெட்டி மூலம் முன்வைக்கப்பட்டது. அவர் நடத்தும் அமைப்பான ‘"வாய்ஸ் ஆப் காமன்'’ மூலம் அம்பேத்கர் பற்றிய ஒரு புத்தகத்தை திருமா வெளியிட, விஜய் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சிக் கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறுகின்றன என்கிற பிம்பம் இவரால் உருவாக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அ.தி.மு.க.வுடன் விஜய் கூட்டணி சேர்ந்தால் தி.மு.க. கூட்டணி தோற்றுப்போகும் என்கிற பிரச்சாரமும் நடந்துவருகிறது. இந்த முயற்சி களுக்கு வில்லனாக களத்தில் குதித்தது பா.ஜ.க. எங்களுடன் கூட்டணி அமைக்காமல் பயணம் செய்தால் அ.தி.மு.க.விற்கு எடப்பாடி தலைவ ராக இருக்கமாட்டார் என பா.ஜ.க., சேலம் இளங்கோவன் வீட்டில் நடத்திய ரெய்டு மூலம் எச்சரித்தது. இதனால் பயந்துபோன எடப்பாடி, கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் தீர்மானிப் பது என பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பீர் களா எனும் கேள்விக்கு நழுவும் வகையில் பதில் சொன்னார். இவ்வளவு நாள் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என ஆணித்தரமாக பதில் சொல்லிவந்த எடப்பாடி, இப்பொழுது கூட் டணி குறித்து மழுப்புவது அவருக்கு கட்சியில் எழுந்துள்ள எதிர்ப்பைப் பயன்படுத்தி பா.ஜ.க. அவரை துவம்சம் செய்துவிடும் என்கிற பயம் ஏற்பட்டதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தமிழக பா.ஜ.க. தற்பொ ழுது செயலிழந்து கிடக்கிறது. உட்கட்சித் தேர்தல் நடத்து வதற்கு தேவையான உறுப்பினர் களைக்கூட சேர்க்க முடியாமல் பா.ஜ.க. தடுமாறுகிறது. நிலைமை இப்படியே போனால் பா.ஜ.க. தனித்து தேர்தல் களம் காணவேண்டி வரும். அப்படி ஒரு நிலை வந்தால் கட்சி அழிந்துவிடும் என பா.ஜ.க.வின் தேசியத் தலைமை கவலைப் படுகிறது. எனவே அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள் ளது. எனவே அ.தி.மு.க.வை ரெய்டு கள் மூலம் மிரட்டும் நடவடிக்கை களை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. இது எடப்பாடிக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அதனால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. இது மார்ட்டின் வகையறாக்களுக்கு அதிர்ச்சி யாக இருந்தாலும், தமிழகத்தில் லாட்டரியைக் கொண்டுவருவதில் பா.ஜ.க.வுக்கு எந்த எதிர்கருத்தும் இல்லை என்பது அவர்களுக்கு சாதகமாக உள்ளது. பா.ஜ.க.வின் இந்த நடவடிக் கைகளை எதிர்த்து மார்ட்டின் ஏதாவது செய்தால், மத்திய அரசு அவர் மீது பாயும்.

மார்ட்டினின் தி.மு.க. எதிர்ப்புக்காக சந்தர்ப் பம் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. ஒரு தொழிலதிபர், ஒரு அரசை நடை முறையில் மிரட்ட முடியாது. ஆனால் அந்த மிரட்டல் நட வடிக்கைகளை மறைமுகமாக செய்துவரும் மார்ட்டின், தமிழகத்தின் சாராயத் தொழிற் சாலை உட்பட பல தொழில்களை நடத்து கிறார். பல சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார். இவரது அரசியல் அசைவுகள் தி.மு.க.வுக்கு எதிராக இருக்கிறது. குறிப்பாக உதயநிதியை மிகக் கடுமையாக எதிர்க்கிறார். அதற்கு எப்படி முடிவு கட்டுவது என தி.மு.க. தலைமை யோசித் துக் கொண்டிருக்கிறது.

Advertisment