edappadi

.இ.அ.தி.மு.க. என்பது நீண்ட நெடிய பாரம்பரியமும், முப்பது வருடங்கள் தமிழகத்தில் ஆளும் கட்சியாக கோலோச்சிய கட்சியாகவும் இருந்தது... இப்பொழுது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிப் போனது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்த-ல் பல தொகுதிகளில் அ.தி.மு.க. நான்காவது இடத்துக்கும் மூன்றாவது இடத்துக்குமாகப் போயுள்ளது. இது அ.தி.மு.க.வுக்குள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பி.எஸ்., தே.மு.தி.க. என ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய கூட்டணி அமைந்திருந்தால் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி வென்றிருக்கும் என்கிற பேச்சு கட்சிக்குள் பலமாக எழுந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்த-ல் அ.தி.மு.க. ஜெயிக்க வேண்டும் என்றால் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. பெற்ற வாக்குகள் வெறும் 41393. அங்கே டெபாசிட் இழந்துள்ளது. அதுபோல நெல்லை தொகுதியிலும் டெபாசிட்டை இழந்துள்ளது. தென் மாவட்டங்கள் முழுக்க அ.தி.மு.க.வுக்கு கணிசமாக வாக்குகள் குறைந்துள்ளது. சில தொகுதிகளில் டெபாசிட்டும் பறிபோயுள்ளது.

Advertisment

இதற்கு முக்கியக் காரணம், டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ்., நயினார் நாகேந்திரன் ஆகிய அ.தி.மு.க.வின் முக்குலத்தோர் இன அடையாளமாக கருதப்பட்டவர்கள், அ.தி.மு.க.வுக்கு எதிராகப் போட்டியிட்டார்கள். அதனால் தென் மாவட்டங்களில் ஆறு சதவிகிதத்துக்கு மேல் ஓட்டுகள் விழவில்லை. உதாரணமாக, மதுரை மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் கோட்டை. எம்.ஜி.ஆரே அங்கு போட்டியிட்டார். அந்த அளவுக்கு அ.தி.மு.க.வின் நம்பகமான பகுதியாக இருந்த மதுரையில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குச் சென்றுள்ளது. சௌராஷ்டிரா இன மக்களின் வாக்குகள், அ.தி.மு.க.வின் உள்ளடி வேலைகள், முக்குலத்தோர் அல்லாத மக்கள் பெருவாரியாக தி.மு.க.வுக்கு அளித்த வாக்குகள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக அ.தி.மு.க.வுக்கு விழவில்லை என்பதே உண்மை என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எனவே, அ.தி.மு.க.வுக்குள் முக்குலத்தோரை மறுபடியும் எப்படி அழைத்து வருவது என்கிற விவாதங்கள் வேகம் எடுத்துள்ளன. முக்குலத்தோரின் பிரதிநிதிகளான ஓ.பி.எஸ்.சையும், டி.டி.வி. தினகரனையும் மீண்டும் அ.தி.மு.க.வுக்குள் கொண்டுவர வேண்டும் என குரல்கள் எழ ஆரம்பித்துள்ளது. இவர்கள் வேண்டாம் என எதிர்ப்புக் குரல்களும் கேட்கின்றது. அதே நேரத்தில் ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்ற திறமையற்ற அ.தி.மு.க. தலைவர்களை நீக்க வேண்டும் என்கிறார்கள்.

நெல்லை தொகுதியை அ.தி.மு.க., இசக்கி சுப்பையா என்கிற முக்குலத்தோர் இன முன்னாள் அமைச்சரிடம் ஒப்படைத்தது. அவர் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விலைபோய் விட்டார். தேனி மற்றும் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்.சிடம் விலைபோய் விட்டார். சசிகலாவுக்கு நெருக்கமான தளவாய்சுந்தரம் குமரி பாராளுமன்றத் தொகுதியையும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியையும் பார்த்துக்கொண்டார். வேட்பாளர்களையும் அவர்தான் தேர்ந்தெடுத்தார். ஆனால் செலவுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. எடப்பாடி செலவுக்குக் கொடுத்த பணத்தையும் அமுக்கிக் கொண்டார். அதனால் குமரி தொகுதியில் அ.தி.மு.க. என்கிற கட்சியே இல்லை என்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே, இவர்களை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை எடப்பாடியிடம் பெரிதாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் எப்படியாவது அ.தி.மு.க.வுக்குள் நுழைந்துவிட வேண்டும் என சசிகலா முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ""அ.தி.மு.க. தோல்வியடைவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்போம்'' என ஒரு அறிக்கையை சசிகலா வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக எடப்பாடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இளவரசியின் உறவினர் முன்னாள் பி.ஆர்.ஓ. கண்ணதாசனை அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா. கண்ணதாசன் எடப்பாடியுடன் மூன்றுகட்டமாகப் பேசியிருக்கிறார்.

அதில் “சசிகலா மறுபடியும் கட்சிக்குள் வர வேண்டும். அவருக்கு பொதுச் செயலாளர் பதவி தர வேண்டும்’’ என்பதாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு எடப்பாடி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். ""சசிகலா மட்டும் வருவார்.. தினகரன் வர மாட்டார்.. ஓ.பி.எஸ்.சும் வர மாட்டார். தினகரன் ஓ.பி.எஸ்.சை கழட்டிவிட்டு விட்டு சசிகலா மட்டும்தான் வருவார். அவருக்கு என்ன பதவி கொடுத்தால் கௌரவமாக இருக்கும் என நீங்களே தீர்மானியுங்கள்''’என இரண்டாவது கட்ட சமரசத் திட்டத்தையும் சொல்-யிருக்கிறார் கண்ணதாசன். அதற்கும் எடப்பாடி பதில் அளிக்கவில்லை.

மத்தியில் பா.ஜ.க. வலுவாக ஆட்சிக்கு வரும். அதன் ஆதரவோடு அமைச்சர் வேலுமணி துணையோடு அ.தி.மு.க.வைக் கைப்பற்றலாம் என்பதுதான் சசிகலாவின் ஒரிஜினல் திட்டம். அந்தத் திட்டத்திற்கு பா.ஜ.க.மா.த., பா.ஜ.க.வின் தலைமையிடம் ஓகே வாங்கியிருந்தார். அதற்காக கோவையில் பா.ஜ.க.மா.த. வெற்றிபெற வேலுமணி கடுமையாக உழைத்திருந்தார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் வெறும் 2,36,490 வாக்குகள் மட்டுமே பெற பா.ஜ.க.மா.த. நாலு லட்சம் வாக்குகளைப் பெற்றார். அதில் முக்கால்வாசி வாக்குகள் அ.தி.மு.க. வாக்குகள். கோவையில் பா.ஜ.க.மா.த.வின் பூத் ஏஜெண்டுகளாக அ.தி.மு.க.வினர் அமர்ந்திருந்தனர். அத்துடன் பல இடங்களில் ‘பா.ஜ.க.மா.த.வுக்கு வாக்களியுங்கள்’ என வெளிப்படையாகவே அ.தி.மு.க.வினர் வாக்குகளை பா.ஜ.க. பக்கமாக வேலுமணி திருப்பி விட்டார்.

கோவையில் வெற்றி பெறும் பா.ஜ.க.மா.த. மத்திய மந்திரியானால் அவரது ஆதரவு, சசிகலாவின் ஆதரவு, அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள வேலுமணியின் ஆதரவாளர்களான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் சேர்ந்து அ.தி.மு.க.வைக் கைப்பற்றி எடப்பாடியை கட்சியி-ருந்து நீக்குவது என வேலுமணி காய் நகர்த்தி வந்தார். இதற்கு கரூர் விஜயபாஸ்கரும், தங்கமணியும், வீரமணியும் ஆதரவு தெரிவித்திருந்தார்கள்.

ஆனால், கோவையில் 5,68,000 வாக்குகளை வாங்கி தி.மு.க. வெற்றி பெற்றது. மத்தியில் பா.ஜ.க. பெரும்பான்மையான கட்சியாக வரவில்லை. அடுத்த ஆறு மாதத்துக்கு ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் பா.ஜ.க. போராடிக் கொண்டிருப்பதால் வேலுமணி, சசிகலா பிளானான அ.தி.மு.க. உடைப்பு, எடப்பாடி நீக்கம் வெற்றி பெறவில்லை. தேர்தல் முடிவுகள் வந்ததும் தோல்விக்குக் காரணம் எடப்பாடி என குரல் எழுப்ப இரண்டாம் கட்டத் தலைவர்களை தயார் செய்து வைத்திருந்தார் வேலுமணி. அதற்கு ஆதரவாக குரல் எழுப்ப சமூக வலைதளங்களிலும் பேச்சாளர்கள் பேசத் தயாராக இருந்தார்கள். மத்தியில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு அனைத்தையும் மாற்றி விட்டது.

இப்பொழுது அ.தி.மு.க. வலுவாக இரண்டாவது இடத்தைப் பெற்றுவிட்டது என்கிற தெம்புடன் வேலுமணி அன்ட் கோ பா.ஜ.க.வுக்கு எப்படியெல்லாம் உதவி செய்தது என கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் முடிவுகள் வந்ததும் சென்னைக்கு வரவிருந்த எடப்பாடி சேலம் வீட்டிலேயே இருந்துகொண்டு ஆர்.பி.உதயகுமார், தளவாய் சுந்தரம் என அ.தி.மு.க. பலவீனமான இடங்களில் உள்ள தலைவர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறார். கோவையில் கடைசி மூன்று நாட்கள் வேலுமணி எப்படி அ.தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார் என கோவை நிர்வாகிகளிடம் அறிக்கை கேட்டிருக்கிறார் எடப்பாடி. வேலுமணியின் பொறுப்பி-ருந்த கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் ஆகிய நான்கு தொகுதிகளிலும் அ.தி.மு.க. மோசமாகத் தோற்றது. கோவையில் மூன்றாவது இடத்துக்கு அ.தி.மு.க. எப்படி சென்றது என எடப்பாடியிடம் விரிவாக அறிக்கை கொடுத்திருக்கிறார்கள் கோவை மாவட்ட அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அதேபோல் வட மாவட்டங்களான சென்னை மற்றும் தருமபுரி உட்பட பல இடங்களில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்குச் சென்றது. தமிழகத்தில் சில இடங்களில் நான்காவது இடத்துக்குச் சென்றது.

இதைப் பற்றியெல்லாம் விரிவாக அலசி ஆராயும் எடப்பாடி, வேலுமணி அன்ட் கோவுக்கு பா.ஜ.க. எப்படி ஆதரவு அளிக்கப் போகிறது என்பதையும் கணக்கிட்டு வருகிறார். மொத்தத்தில் அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை என எடப்பாடி கூறிக்கொண்டாலும் கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை. அ.தி.மு.க.வினரே ஓட்டுப்போட வாக்குச் சாவடிகளுக்குச் செல்லவில்லை. அவர்களை வேட்பாளர்கள் மதிக்கவில்லை என்கிற தகவல் எடப்பாடியைச் சென்றடைந்துள்ளது. இது மட்டுமே ஐந்து சதவிகித வாக்குகளைக் குறைத்துள்ளது.

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காதது சிறுபான்மை வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற்றுத்தரும் என எடப்பாடி நம்பினார். ஆனால் சிறுபான்மையினர் யாரும் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை. மாறாக அ.தி.மு.க.வினரின் வாக்குகளை பா.ஜ.க.வுக்கு வேலுமணி அன்ட் கோ கடத்திச் சென்றதும் நடந்திருக்கிறது.

முக்குலத்தோர் வாக்குகள் குறைந்தது, சிறுபான்மையினர் வாக்குகள் வராதது, பா.ஜ.க.வுக்கு ஆதரவான உள்ளடி வேலைகள், உட்கட்சிக் குழப்பம் இவற்றையெல்லாம் தாண்டி அ.தி.மு.க. வாக்குகளைப் பெற்றுள்ளது. பா.ஜ.க. மத்தியில் அசுர பலத்துடன் வெற்றி பெறாதது எடப்பாடியின் தலைமையை தற்கா-கமாகக் காப்பாற்றியுள்ளது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி எடப்பாடி மீண்டும் எழுச்சி பெறுவதற்கான காய்களை நகர்த்திவருகிறார்.

அ.தி.மு.க. ஒரு பெரிய பிளவில் இருந்து தற்கா-கமாக தப்பித்திருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.