"தமிழகத்தில் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தேவைக்கு அதிக மாக உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ரூ.444 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 1079 பேரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5200 பேரும் உபரி ஆசிரியர்களாக உள்ளதால், அரசுக்கு இந்த நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை நேர் செய்யப்படும் வரை, புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யக்கூடாது''’

-சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரைக்கிளை அளித்த தீர்ப்பின் பிரகாரம், ஆளுநரின் ஆணைப்படி, அரசு முதன்மைச் செயலாளர் 17-9-2019 அன்று பிறப்பித்த இந்த உத்தரவு, கல்வித்துறை அமைச்சரிலிருந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் வரை அனுப்பப்பட்டது.

teachers

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிராஜ் நம்மிடம், ""கல்வித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தையும் மதிக்கவில்லை; அரசு உத்தரவையும் பொருட்படுத்தவில்லை. தங்களின் ஆதாயத்துக்காக, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்கி, அரசுக்கு மேலும் நிதியிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டமே இதற்கு எடுத்துக்காட்டு'' என்றார்.

Advertisment

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்தால், காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நிரப்புவதற்கு, பணியிடம் ஒன்றுக்கு முறைகேடாக ரூ.25 லட்சம் வரை பெற்றுவந்தது நின்றுவிடும். அந்த வகையில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும், ஒவ்வொரு நியமனத்துக்கும் ரூ.2 ணீ லட்சம் வரை லஞ்சம் பெறுவது தடைப்பட்டு விடும். அதனால், ‘அரசாங்கத்துக்கு ரூ.444 கோடி இழப்பு ஏற்பட்டால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. அதே நேரத்தில், நமக்கு கிடைக்கவேண்டிய ஆதாயம் கிடைக்கவில்லை என்றால் என்னாவது?’ என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தார்கள், விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி நிர்வாகிகளும்.

teachers

ஆசிரியர் பணியிடத்துக்கு ரூ.25 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, கல்வித்துறை அதிகாரிக்கு ரூ.2 ணீ லட்சம் லஞ்சம் கொடுத்துவிட்டு, கண்துடைப்பாக ‘ஆசிரியர்கள் தேவை’ என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்து, கல்வித்துறையின் அனுமதி பெற்று, பணம் கொடுத்தவர்களை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்து வருகின்றனர்.

Advertisment

வழக்கறிஞர் ரவிராஜ் ஆதாரங் களுடன் இந்த முறைகேடு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் விருதுநகர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார், மூன்று மாதங்கள் கடந்தும் கல்வித்துறை தரப்பிலிருந்து ஒரு பதிலும் இல்லை.

நாம் விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினியை தொடர்புகொண்டோம்.

""முதுகலை ஆசிரியர் பணியிடங் களைப் பொறுத்தமட்டிலும் தமிழகத்தில் தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் இல்லை. மதுரை, ராமநாதபுரம், திருச்சி என எல்லா மாவட்டங்களிலும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவே செய்கிறார்கள். கல்வித்துறை உயர்நீதிமன்ற உத்தரவை மீறவில்லை. நான் வேண்டுமானால் வழக்கறிஞர் ரவிராஜ் அனுப்பிய நோட்டீஸுக்கு பதில் அனுப்பிவிடுகிறேன். போஸ்டிங் போடுவதற்காக அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிடமிருந்து நான் பணம் வாங்குவதில்லை. அது தவறான தகவல்'' என்று மறுத்தார்.

வழக்கறிஞர் ரவிராஜ் தரப்பி லோ, ""அரசு ஆணையில், நிதியுதவி பெறும் தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி களில் காலிப் பணி யிடங்களில் உபரியாகப் பணிபுரிந்துவரும் ஆசிரி யர்கள் மூலம் பணிநிரவல் செய்யப்பட வேண்டும். இந்தத் தனியார் பள்ளிகளில் எந்த ஒரு பணியிடத்திலும் பணி நியமனம் புதிதாகச் செய்தல் கூடாது.

எந்த ஒரு புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கும் ஏற்பு அளித்தல் கூடாது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உபரியாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை என்றோ, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்தில் புதிதாக நியமனம் செய்துகொள்ளலாம் என்றோ, உயர் நீதிமன்ற உத்தரவிலும் சரி, அரசு ஆணையிலும் சரி எங்கும் குறிப்பிடப் படவில்லை.

விருதுநகர் கல்வி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி ஊழல் நடக்கிறது என்று முத்துசெல்வம் என்பவர், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பினார். அதற்கு, "சட்டப்படி தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டோம்' என்று பதில் வந்தது. இந்நிலையில், முத்துசெல்வத்தை சரிக்கட்டும் முயற்சிகள் ஒருபுறம் நடக்கிறது'' என்றார்கள் வேதனை யுடன்.

அரசுக்கு பெரும் நிதியிழப்பினை ஏற்படுத்திவரும் உபரி ஆசிரியர்கள் விஷயத்தில் விதிமீறலோ, ஊழலோ நடந்திருந்தால், தமிழகக் கல்வித்துறை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்கி