திருப்பூர் மாவட்டம் அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், கருவலூர்... என அவினாசியின் முக்கியப் பகுதிகளில், 65-க்கும் மேற்பட்ட தாபா ஹோட்டல்கள் செயல்படுகின்றன.
ஹோட்டலின் முதல் கேபினில் குழந்தைகள் விளையாடுவார்கள். அடுத்த கேபினில் அவர்களின் அம்மாக்கள் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். மூன்றாவது கேபினில் அந்தப் பெண்களின் கணவர்கள் மது அருந்தி ரிலாக்ஸாக இருப்பார்கள். டாஸ்மாக்கை விட தாபாவில் ஒரு குவார்ட்டருக்கு ரூ.150 அதிகம். இரவு 12 மணிக்கு மேலும் குடிக்கலாம். "இந்த வசதிக்காக, தாபா ஹோட்டல்களில் இருந்து மாதாமாதம் 45 ஆயிரம், 50, 60 ஆயிரம் ரூபாய்... என அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கரனுக்கு கட்டிவிட வேண்டும்' என்கிறார் விடுதலை சிறுத்தை
திருப்பூர் மாவட்டம் அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருமாநல்லூர், கருவலூர்... என அவினாசியின் முக்கியப் பகுதிகளில், 65-க்கும் மேற்பட்ட தாபா ஹோட்டல்கள் செயல்படுகின்றன.
ஹோட்டலின் முதல் கேபினில் குழந்தைகள் விளையாடுவார்கள். அடுத்த கேபினில் அவர்களின் அம்மாக்கள் பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். மூன்றாவது கேபினில் அந்தப் பெண்களின் கணவர்கள் மது அருந்தி ரிலாக்ஸாக இருப்பார்கள். டாஸ்மாக்கை விட தாபாவில் ஒரு குவார்ட்டருக்கு ரூ.150 அதிகம். இரவு 12 மணிக்கு மேலும் குடிக்கலாம். "இந்த வசதிக்காக, தாபா ஹோட்டல்களில் இருந்து மாதாமாதம் 45 ஆயிரம், 50, 60 ஆயிரம் ரூபாய்... என அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கரனுக்கு கட்டிவிட வேண்டும்' என்கிறார் விடுதலை சிறுத்தைகளின் திருப்பூர் மாவட்ட தொகுதி செயலாளர் பழ.சண்முகம்.
""கடந்த வாரம் திருப்பூர் -ரேஸ்கோர்ஸ் இணையும் இடத்தில் உள்ள தாபா ரெஸ்டாரெண்டில் இரவு நெடுநேரம் மது அருந்திய பணக்கார இளைஞன் ஒருவன், சொகுசுக்காரை தாறுமாறாய் ஓட்டினான். இதில் அணைப்புதூர், பூண்டி ஆகிய இடங்களில் ஏழு டூவீலரை அடித்துத் தூக்கினான். ஒருவர் இறந்தேபோனார். காரை ஓட்டியவன் பெரிய இடம் என்பதால், கைது செய்த சில நிமிடங்களில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டான். உதவியவர், டி.எஸ்.பி பாஸ்கரன்.
தாபாக்கள் தவிர, திருப்பூர்-அவினாசியில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இரவும், பகலும் திறந்தே கிடக்கின்றன. அரசு விடுமுறை நாட்களில் ப்ளாக்கில் மது ஓட்டுவதற்கு பல லட்சங்களை கறக்கிறார் பாஸ்கரன். கட்டப் பஞ்சாயத்து, எஸ்.சி., எஸ்.டி பிரச்சினைகளில் தலையிட்டு சம்பாதிப்பது என பாஸ்கரன் காட்டில் 3 ஆண்டுகளாக பணமழைதான். அவரை மாறுதல் செய்வதற்கு நாங்கள் பெரிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டோம். ஆனால் அந்த அதிகாரிகளை சரி செய்து விடுகிறார் பாஸ்கரன்.
கொதித்து இருக்கும் தலித் மக்களிடம் அன்பு காட்டுவது போல நடிப்பதும், பின்பு மேல்மட்ட மனிதர்களுக்கு உதவுவதுமாக பாஸ்கரன் இருப்பதும், பாஸ்கரனைப் பற்றி புகார் தெரிவிப்பவர்கள் மனித ஆர் வலர்கள், சுற்றுப்புற ஆர்வலர் கள்... என யாராக இருந்தாலும், தலித் அரசியல் கட்சித் தலை வர்களை வைத்து மிரட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்.
தாபா ஹோட்டல்களில் மது பானம் தீர்ந்து விட்டால்... டாஸ்மாக் கடைகளில் இருந்து எந்த நேரமும், மதுவை எடுக்கும் திட்டத்தையும் அமல்படுத்துகிற பாஸ்கரனை கண்டித்து... விடுதலை சிறுத்தையினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.
அவினாசியில் கண்ணன், சுரேஷ், கண்ணப்பன் என மூன்று பேர் தென் மாவட்டத்தில் இருந்து இங்கே எடுபிடி வேலை செய்வதற்காக வந்தார்கள். கொலை கேஸில் சம்பந்தப்பட்ட இவர்கள் பாஸ்கரன் உதவியோடு 5, 6 தாபா ரெஸ்டாரெண்டுகளுக்கு ஓனராகி விட்டார்கள். இப்போது என்னையே எங்கள் பிரச்சினை பக்கம் தலையிட்டால் உயிர் தப்புவது கடினம் என மிரட்டுகிறார்கள். இது மாதிரி பல பேரையும், பல மிரட்டல்களையும் தாண்டித்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்'' என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அவினாசி டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் கேட்டோம்.
""அனைத்தும் பொய். அவினாசி ஈஸ்வரன் கோவிலில் தேவர் பேரவை கட்றாங்க. 2014-ல் மடம் ஒண்ணு இருந்தது. அதை சட்டபூர்வ காரணங்களால அகற்றிட்டாங்க.. அதுக்கப்புறம் ரெண்டு சமுதாயத்தினர் இடையே பிரச்சினை. இதற்கு இடையில் சம்பந்தமேயில்லாத பிற சமுதாயத்தினர் இந்த இரண்டு சமுதாயத்தினர் இடையே கலந்து பிரச்சினை செய்கிறார்கள். இதைத் தட்டிக் கேட்டேன். அதனால என்மேல இப்படி தாபா, டாஸ்மாக், கட்டப் பஞ்சாயத்து என கல்லா கட்டுகிறேன் என்று அந்த பிற சமுதாயத்தினர் கிளப்பிவிட்டு என் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்கள்கிட்ட கேளுங்க. என்னைப் பற்றி சொல்லுவது 100 சதவீதம் பொய்யின்னு தெரியும்'' என்கிறார் பதட்டமாய்.
.