திருச்சி மாவட்டம் லால்குடி பக்கத்திலுள்ள விரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாஸ் லூர்து சுவாமி, சேசு சபையில் சேர்ந்து தன் வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். மாதா கோயில்களில் திருப்பலி செய்வதை விட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் நாட்டிலுள்ள சேசு சபையினர்களுடன் பணியாற்றி ”விடுதலை மெய்யியலை” உள்வாங்கிக் கொண்டார். ஜார்க்கண்டிலுள்ள தொல்குடியினரின் நலனுக்காக இறுதி நாள் வரை போராடிய மாவீரர் அவர். பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளை வழங்கி அந்த தன்னலமற்ற தொண்டரை கௌரவிக்காத அரசு, அவரை 1967-ம் வருடத்திய சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்து மும்பையிலுள்ள தலோஜா மத்திய சிறையில் அடைத்து வைத்தது.
அவர் மீது என்ன குற்றம்? பூனா நகரத்தி லுள்ள பீமா கோரேகான் என்ற நினைவுச் சின்னத் திற்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும். அது மாவீரன் சிவாஜியின் மராத்தா படையை தோற்கடித்த பட்டியலினத்தைச் சேர்ந்த மஹர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்களின் பராக்கிரமத்தை போற்றும் வைபவம். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் அங்கு கலவரம் நடத்தப்பட்டு அதில் பல உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதையொட்டி வழக்குகள் பதியப்பட்டு புலனாய்வில் இருந்து வருகிறது. இருப்பினும், அச்சம்பவத்தைப் பயன்படுத்தி அதற்கொரு அகில இந்திய வடிவத்தை கொடுத்ததோடு, பிரதம மந்திரியையே கொலை செய்வதற்கும் தேசத்துரோகம் செய்ய எண்ணும் சிலரது சதி அதில் இருப்பதாகக் கூறி நாடெங்கிலும் பல அறிவுஜீவிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப் பட்டதனால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.
இதில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி எங்கு வந்தார்? ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தொல்குடி யினர் மத்தியில் சேவையாற்றி வந்த அவர், அதன் தலைநகர் ராஞ்சியின் ஒருபுறத்தில் எளிதான வாழ்க்கை நடத்தி வந்தார். நாட்டிலுள்ள பல மாநிலங்களில் தொல்குடியினர்கள் அதிக அளவிற்கு வசிக்கும் பகுதிகளில் அவர்களது கலாச்சாரத்திற் கும், பண்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காத வகையில் அப்பகுதி மக்களுக்கு சுயாட்சி வழங்கப் பட்டு
திருச்சி மாவட்டம் லால்குடி பக்கத்திலுள்ள விரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டானிஸ்லாஸ் லூர்து சுவாமி, சேசு சபையில் சேர்ந்து தன் வாழ்க்கையை சமூக சேவைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். மாதா கோயில்களில் திருப்பலி செய்வதை விட்டு பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் நாட்டிலுள்ள சேசு சபையினர்களுடன் பணியாற்றி ”விடுதலை மெய்யியலை” உள்வாங்கிக் கொண்டார். ஜார்க்கண்டிலுள்ள தொல்குடியினரின் நலனுக்காக இறுதி நாள் வரை போராடிய மாவீரர் அவர். பாரத ரத்னா, பத்மஸ்ரீ போன்ற தேசிய விருதுகளை வழங்கி அந்த தன்னலமற்ற தொண்டரை கௌரவிக்காத அரசு, அவரை 1967-ம் வருடத்திய சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்து மும்பையிலுள்ள தலோஜா மத்திய சிறையில் அடைத்து வைத்தது.
அவர் மீது என்ன குற்றம்? பூனா நகரத்தி லுள்ள பீமா கோரேகான் என்ற நினைவுச் சின்னத் திற்கு ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படும். அது மாவீரன் சிவாஜியின் மராத்தா படையை தோற்கடித்த பட்டியலினத்தைச் சேர்ந்த மஹர் சமூகத்தைச் சேர்ந்த வீரர்களின் பராக்கிரமத்தை போற்றும் வைபவம். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நிகழ்ச்சியை நடத்த விடாமல் அங்கு கலவரம் நடத்தப்பட்டு அதில் பல உயிர்ச்சேதம் ஏற்பட்டது. அதையொட்டி வழக்குகள் பதியப்பட்டு புலனாய்வில் இருந்து வருகிறது. இருப்பினும், அச்சம்பவத்தைப் பயன்படுத்தி அதற்கொரு அகில இந்திய வடிவத்தை கொடுத்ததோடு, பிரதம மந்திரியையே கொலை செய்வதற்கும் தேசத்துரோகம் செய்ய எண்ணும் சிலரது சதி அதில் இருப்பதாகக் கூறி நாடெங்கிலும் பல அறிவுஜீவிகள் கைது செய்யப்பட்டனர். வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப் பட்டதனால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பிணை வழங்கப்படவில்லை.
இதில் அருட்தந்தை ஸ்டான் சுவாமி எங்கு வந்தார்? ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தொல்குடி யினர் மத்தியில் சேவையாற்றி வந்த அவர், அதன் தலைநகர் ராஞ்சியின் ஒருபுறத்தில் எளிதான வாழ்க்கை நடத்தி வந்தார். நாட்டிலுள்ள பல மாநிலங்களில் தொல்குடியினர்கள் அதிக அளவிற்கு வசிக்கும் பகுதிகளில் அவர்களது கலாச்சாரத்திற் கும், பண்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காத வகையில் அப்பகுதி மக்களுக்கு சுயாட்சி வழங்கப் பட்டுள்ளது. இதற்காக அரசமைப்பு சட்டம் திருத்தப்பட்டு அதிலுள்ள ஆறாவது அட்டவணை யில் தொல்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் ஸ்டான் சுவாமி அப்பகுதி மக்களிடம் சேவையாற்ற சென்றபோது, அங்கிருந்த சுயாட்சி சபைகளில் தொல்குடி மக்களுக்கான பிரதிநிதிகள் எவருமே இல்லை என்பதைக் காண நேர்ந்தது. அவர்களுக்கு உரிய பங்கை வழங்குவதற்கு அவர் இறுதி வரை போராடினார். அது போதாதா? ஒன்றிய அரசின் கோபத்தைப் பெறுவதற்கு?
இதுவரை ஸ்டான் சுவாமி பீமா கோரேகான் பக்கம் சென்றது கூட கிடையாது. ஆனால் தேசத் துரோக வழக்கு போடுவதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறீர்களா? அவருடைய கணினியில் சில ரகசிய ஆவணங்கள் இருந்ததை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள். அந்த ஆவணங்களில் ஒன்றிய அரசைக் கவிழ்ப்பதற்கு மாபெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்பட் டது. ஆனால் கணினியிலிருந்த மென்பொருளின் ஆதாரத்தன்மையை ஆராய்ந்த சர்வதேச புலனாய்வு நிறுவனமொன்று அந்த ஆவணங்கள் கணினியில் இடைச் செருகலாக சொருகப்பட்டுள் ளது என்ற சான்றிதழ் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. பாவம் எதுவும் அறியாத ஸ்டான் சுவாமி மும்பை சிறையில் அடைக்கப்பட்டு இன்னும் புலன்விசாரணை தொடர்கிறது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஒருவரை யொருவர் சந்தித்துக் கொள்ளாத வகையில் வெவ்வேறு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் கைது செய்யப்பட்ட நவலாகா என்பவரை அங்கிருந்த குற்றவியல் நடுவர் மன்றத்தின் அனுமதியின்றி மும்பைக்கு அழைத்துச் செல்ல முயன்ற தேசிய புலனாய்வு அதிகாரிகளின் முயற்சிக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளீதர் தடைவிதித்தார். அவரது உத்தர விற்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், நீதிபதி முரளீதரை பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு ஊர் மாற்றம் செய்து அதற்கான உத்தரவை நடு இரவில் பிறப்பித்தனர்.
ஸ்டான் சுவாமி தனக்கு 84 வயது என்றும், பல்வேறு நோய்களால் கஷ்டப்பட்டு வருவதாக வும் வயதின் காரண மாக தனக்கு இயங்கும் சக்தி குறைந்து வருவ தாகவும், ஒருவர் உதவியின்றி தினசரி வாழ்வை நடத்த முடியாதென்றும் கூறி தன்னைப் பிணையில் விடும்படி உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டினார். ஆனால் குடியரசுத் தொலைக் காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமிக்கும், பாலிவுட் கங்கணா ரணாவத்துக்கும் நீதிமன்ற நேரங்கள் கடந்த பின்னும் பிணை வழங்கிய உச்சநீதிமன்றம், ஸ்டான் சுவாமியிடம் பம்பாய் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி கூறிவிட்டது.
ஒரு லோட்டாவிலிருந்து குடிநீர் கூட அருந்த முடியாத ஸ்டான் சுவாமி தலோஜா சிறை அதிகாரி களிடம் தனக்கு நீரை உறிஞ்சிக் குடிப்பதற்கு ஸ்ட்ரா வழங்கும்படி கேட்டதை அவர்கள் மறுத்து விடவே, உயர்நீதிமன்றத்தில் மனு போட்டார். உயர்நீதிமன்றமோ உடனடியாக அந்த கோரிக்கை யை பைசல் செய்யாமல் வழக்கிற்கு வாய்தா போட்டது கொடுமையிலும் கொடுமை. உறிஞ்சும் குழாய்க்கு உத்திரவிடாத நீதிமன்றம், பிணை மனுவையும் விசாரிக்காமல் விசாரணையை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது. இதற்கிடையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதைக் கருதி அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென்று கோரியதில், ஸ்டான் சுவாமியை அரசு மருத்துவமனையில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ஸ்டான் சுவாமி தன்னை ராஞ்சிக்கு அனுப்பும்படியும், இல்லாவிட் டால் தனக்கு நம்பிக்கையுள்ள மருத்துவ மனையில் சேர்க்கும்படியும் கோரினார். இறுதியாக அவர் மும்பையிலிருந்த தூய நம்பிக்கை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பிணை மனு மீது விசாரணை தொடர்ந்தது. அந்த மனுவில் தன்னை நீதிமன்றம் பிணையில் விடவில்லையென்றால் தனக்கு ஒரே விடுதலை மரணம்தான் என்று கூறியிருந்தார். அதற்கெல்லாம் செவிசாய்க்காத உயர்நீதிமன்ற விசாரணையின்போதே அவர் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது. அருட்தந்தைக்கு "இறுதி ஜாமீன்' கொடுத்த நீதிமன்றங்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
தொல்குடி மக்களை ஒடுக்குவதற்கு துணை ராணுவப் படையை எப்படியெல்லாம் இந்திய அரசு பயன்படுத்தியது என்பதை தெரிந்து கொள்வதற்கு தில்லி பல்கலைக்கழக பேராசிரியை நந்தினி சுந்தர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கின் தீர்ப்பை படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அருட்தந்தை ஸ்டான் சுவாமி இறந்த அதே தேதியில் 10 வருடங்களுக்கு முன்னால் உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பு வழங்கி 10 வருடமானாலும் இதுவரை அரசு அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று நந்தினி சுந்தர் "ஹிந்து' பத்திரிகையில் ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.
கோடாரிக் காம்பு” என்று ஒரு சொலவடை உண்டு. அதற்கு அர்த்தம் கோடாரி இரும்பில் இருந்தாலும், அதன் கைப்பிடி மரத்தினாலானது. மரத்தின் ஒரு பகுதியை எடுத்து பல மரங்களை வெட்டித் தள்ளுவதைப் போலத்தான் ஒருவர் தமது சமூகத்திற்கே துரோகம் இழைப்பதை கோடாரிக் காம்பு என்று சொல்வார்கள். தொல்குடி மக்களை எந்தவிதத்திலும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து நசுக்க முடியவில்லை. தொல்குடி மக்களை திரட்டி பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்துப் போராடிய வீரன்தான் பிர்ஸா முண்டா. அந்த தொல்குடி மக்களின் தலைவன் பெயரை ஜார்க்கண்ட் தலைநகரம் ராஞ்சியிலுள்ள விமான நிலையத்திற்கு சூட்டியுள்ளார்கள்.
தொல்குடியினரை சுதந்திர இந்தியாவின் ஒன்றிய அரசு கூட நசுக்க முடியவில்லை. இன்றைக் கும் மிகப் பெரிய அளவில் துணை ராணுவப்படை அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நிறுத்தப்பட் டுள்ளது. ஜல் (நீர்), ஜங்கிள் (வனம்), ஜமீன் (நிலம்) இவற்றை அந்நியர்கள் பிடுங்கி விடாமல் இருப் பதை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை நசுக்குவதற்கு முடியாத ஒன்றிய அரசு புதிய திட்டமொன்றை சத்தீஸ்கர் மாநிலத்தில் அறிமுகப்படுத்தியது. தொல்குடி மக்களில் ஒரு சிலரை ஆசை காட்டி தேர்ந்தெடுத்து அவர்களுக்கு துப்பாக்கி பயிற்சியளித்து அவர்களையே தொல்குடி மக்களைத் தாக்குவதற்கு சிறப்புக் காவல் அதிகாரிகளாக நியமித்தனர். அவர்களது மொழியில் அப்படைக்குப் பெயர் "சல்வா ஜுடும்'.
இப்படிப்பட்ட முயற்சிகளை அரசு கையில் எடுப்பதற்கு அரசமைப்பு சட்டம் அனுமதிக்காது என்றும், தனியார் ராணுவப் படை தயாரிப்பதற்கு அரசுக்கு அதிகாரமில்லை என்றும் பேராசிரியர் நந்தினி சுந்தர் வழக்கு தொடுத்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 5.7.2011 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. ஒரு நாடு தனது மக்களுக்கு எதிராகவே போராட முடியாதென்றும், தொல்குடி மக்களின் ஆதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பதிலாக சட்டம், ஒழுங்கு என்ற பெயரில் அவர்களை நசுக்குவதற்கு அனுமதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டது.
இதேபோன்ற தொல்குடி மக்களின் உரிமை களுக்கான விழிப்புணர்வுக்குத்தான் அருட்தந்தை ஸ்டான் சுவாமி தன்னுடைய இன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார். அவரது உயிரைப் பறித்ததன் மூலம் ஒன்றிய அரசு அம்மக்களின் உற்ற தோழர் ஒருவரை களத்திலிருந்து அப்புறப்படுத்தி யுள்ளது. ஆனால் பிர்ஸா முண்டாவின் வாரிசுகள் தொடர்ந்து உயிர்த்தெழுந்து வருவார்கள் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ளும்.
தீவிரவாதத்தை ஒடுக்குவோம் என்ற பெயரில் தடா சட்டம்(1985), பொடா சட்டம் (2005) எல்லாம் இயற்றினார்கள். நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது கூட துப்பாக்கி வைத்திருந்ததாக பொய் வழக்கு போட்டு பொடா சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தார்கள். பொடா கைதிகளுக்கு பிணை மனு தாக்கல் செய்தபோது அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு பிணையில் செல்ல அனுமதி இல்லை என்று அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது. அதையெல்லாம் உடைத்தெறிந்து குற்றச்சாட்டிற்கு முகாந்திரமில்லையென்றால் பிணையில் செல்லலாம் என்று தீர்ப்புகளை நாம் பெற்றோம். அதே காலத்தில் அந்த கறுப்புச் சட்டங்களையெல்லாம் போராடி திரும்பப் பெறச் செய்தோம்.
ஆனால் தடா, பொடா சட்டங்களைத் திரும்பப் பெற்றாலும் அதைவிடக் கொடுமையான சட்டத் திருத்தங்களை 2008-ல் கொண்டுவந்து, 1967-ம் வருடத்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை இன்னும் பயங்கரமான கறுப்புச் சட்டமாக மாற்றினார்கள். அதன்படி வழக்கை விசாரிப்பதற்கு ஒன்றிய அரசுக்கு அனுமதியும், புலன் விசாரணைக்கு காலக்கெடுவை நீட்டுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரமும், ஒருவர் குற்ற மற்றவர் என்று முடிவு செய்தா லொழிய பிணையில் விடுவிக்க முடியாது என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.
இன்றைக்கு பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் மூன்று வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள். ஸ்டான் சுவாமி 8-10-2020-ல் கைது செய்யப் பட்டு ஒன்பது மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது என்று வாதிடப் பட்டாலும், அவற்றை பரிசீலிப்பதற்கு நீதிமன்றங் களுக்கு நேரம் போதவில்லை. அரசு சட்டங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறதா என்பதை கண்காணிக்கவே நீதிமன்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அரசுத் துறைகளின் அத்துமீறல் களுக்கு காவலனே நீதிமன்ற அமைப்புகள். அவையும் தங்கள் கடமையை மறந்துவிட்டால் சிறையை விட்டு இவ்வுலகம் வராமல் அவ்வுலகத் திற்கே செல்லத்தான் நேரிடும். அருட்தந்தை ஸ்டான் சுவாமிக்கு நிரந்தர ஜாமீன் வழங்கிய நீதிமன்றங்களுக்கு எமது நன்றி உரித்தாகுக!