Advertisment

லோக் ஆயுக்தாவா? ஜோக் ஆயுக்தாவா? -குளறுபடிகளும் குமுறல்களும்!

lokayuk

ந்தியாவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநில சட்டமன்றங்களிலும் இந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் மட்டுமே லோக் ஆயுக்தாவை அமல்படுத்தின.

Advertisment

lokayak

அனைத்து மாநிலங்களும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டது. இதன் விளைவாக கடந்த 09-ஆம் தேதி திங்கள் கிழமை, தமிழக சட்டமன்றத்தில் லோக்

ந்தியாவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநில சட்டமன்றங்களிலும் இந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் மட்டுமே லோக் ஆயுக்தாவை அமல்படுத்தின.

Advertisment

lokayak

அனைத்து மாநிலங்களும் ஜூலை 10-ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்டது. இதன் விளைவாக கடந்த 09-ஆம் தேதி திங்கள் கிழமை, தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்ட முன்வடிவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். ஆனால் மக்களின் கருத்தைக் கேட்காமல், இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என அறப்போர் இயக்கமும் சட்டப் பஞ்சாயத்து இயக்கமும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

ஏன் இந்த எதிர்ப்பு என்பது குறித்து நம்மிடம் பேசினார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன். “லோக் ஆயுக்தாவின் தேர்வுக்குழு என்பது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமாறு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பும்படி சொல்கிறார்கள். அதன் பின் அந்தத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர், தலைமைச் செயலாளரின் கீழ் வரக்கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பார். அதை அவர் மீண்டும் லோக் ஆயுக்தாவிற்கு அனுப்பி, முதல்கட்ட விசாரணையில் ஆதாரம் இருந்தால் விரிவான விசாரணை செய்வாராம்.

அதன் பின் சம்பந்தப்பட்ட ஊழல் அதிகாரி மீது வழக்கு தொடரலாமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யுமாம். ஆனால் அவர் தண்டனைக்கு உட்படுத்தப்படுவாரா என்பது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதே சமயம் பொய்யான ஊழல் புகார் கொடுப்பவர்களுக்கு 1 வருடம் சிறை, 1 லட்சம் அபராதம் என்கிறார்கள். அரசு டெண்டர் மற்றும் பணி நியமனம் குறித்து விசாரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதைவிட முக்கியம், ஊழல் புகாரில் சிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தால், அரசு அதை ஏற்க வேண்டும். ஆனால் நிர்வாக ரீதியிலான காரணத்தால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால் மீண்டும் லோக் ஆயுக்தாவிற்கே அந்தப் புகாரை திருப்பி அனுப்பிவிடுவார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமானது முதல்வர் மீது குற்றம் சாட்டப்பட்டால், லோக் ஆயுக்தா வரம்பிற்குள் வருவாரா என்பது குறித்தும் தெளிவாக சொல்லவில்லை. மொத்தத்தில் இது லோக் ஆயுக்தாவா இல்லை ஜோக் ஆயுக்தாவா எனத் தெரியவில்லை'' என்கிறார்.

இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என தேர்தல் அறிக்கையிலேயே வலியுறுத்திய தி.மு.க., வரவேற்றாலும், இதனால் அதிகாரிகள் நியமனம், காண்ட்ராக்டுகளில் ஊழல், உள்ளாட்சி அமைப்புகள், இவற்றையெல்லாம் லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது என்பதை எதிர்ப்பதுடன் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வலியுறுத்தி சட்டமன்றத்திலிருந்து ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். ஆனால் எடப்பாடி அரசோ கடமைக்கு சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.

-சி.ஜீவாபாரதி

stalin nkn13.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe