லாக்கப் சித்ரவதை! அங்கம்மாளின் ரத்தச் சரித்திரம்! -22 ஆண்டுகளுக்கு முந்தைய கொடூரம்!

aa

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய மிருகவெறி தாக்குதலைத் தொடர்ந்து, தந்தையும் மகனும் உயிரை விட்ட நிலையில், "லாக்கப் மரணங்கள்' குறித்து, தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 22 வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த லாக்கப் சித்திரவதையை இப்போதுள்ள பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1998-ல் நடந்த அந்தக் கருப்புச் சம்பவம் குறித்து, 13 வருடங்களாக வழக்கை நடத்தி வந்த நிலையில், பாதிப்புக்கு ஆளான அங்கம்மாள் 2011-ல் நக்கீரனுக்காக மனம் திறந்தார். 2016-ல் அந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது.

aaகாவல்துறையினரின் கொடூர முகங்கள் அப்போதும் இப்போதும் மாறவில்லை என்பதற்கு, சாட்சியம் அளிக்கும் விதமாக, அங்கம்மாளுக்கு நேர்ந்த கொடுமை இருப்பதால், அந்தக் கட்டுரையை மீண்டும் பிரசுரிக்கிறோம்.

இதய பலவீனமுள்ளவர்கள் இக்கட்டுரையை தொடர்ந்து படிக்க முடியாது! மன வலிமை கொண்டவர்களும் கூட நொறுங்கித்தான் போவார்கள்! மறக்கவே முடியாத அந்த இருண்ட நாட்களை விவரிக்கிறார் அங்கம்மாள்!

""தலை கீழா எம் புருஷனைக் கட்டிப் போட்டு அவருகண்ணு முன்னாலயே நாலு பேரு என்னைக் கெடுத்தானுகளே..! தாங்க முடியாத அத்தனை சித்திர வதையும் பட்டுட்டு மானமே போச்சுடி... இனி நான் பிழைக்கமாட்டேன்னு என் மடிலயே உசிரை விட்டாரே..! அப்பாவைக் கொன்னுட்டானுவ.. அம்மாவைச் சீரழிச்சிட்டானுவன்னு பழி வாங்குற வெறிய மனசுக்குள்ள புதைச்சிட்டு பதிமூணு வருஷமா நான் பெத்த புள்ளைக படற பாடு இருக்கே..! இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது சாமீ..ய்..ய்..’’

-பெருங்குரலெடுத்துக் கதறிய அங்கம்மாள்!

""தெனமும் ராத்திரில தூக்கம் வராம நான் புலம்புறதக் கேட்டுட்டு, எந்தலமாட்டுல ஒக்காந்து ""இந்த ஊரே கேவலமா நம்மப் பாக்குது... அத்தன அசிங்கமும் பட்டுட்டோம். இனியும் எதுக்கும்மா நாம உசிரோட இருக்கணும்? ஒண்ணு நாம சாகணும்... இல்லன்னா அவனுகளக் கொல்லணும்''னு துடியாத் துடிப்பானுக. அடேய்... நீதி செத்துப் போச்சுன்னு சொல்லா தீங்கட

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய மிருகவெறி தாக்குதலைத் தொடர்ந்து, தந்தையும் மகனும் உயிரை விட்ட நிலையில், "லாக்கப் மரணங்கள்' குறித்து, தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 22 வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த லாக்கப் சித்திரவதையை இப்போதுள்ள பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1998-ல் நடந்த அந்தக் கருப்புச் சம்பவம் குறித்து, 13 வருடங்களாக வழக்கை நடத்தி வந்த நிலையில், பாதிப்புக்கு ஆளான அங்கம்மாள் 2011-ல் நக்கீரனுக்காக மனம் திறந்தார். 2016-ல் அந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது.

aaகாவல்துறையினரின் கொடூர முகங்கள் அப்போதும் இப்போதும் மாறவில்லை என்பதற்கு, சாட்சியம் அளிக்கும் விதமாக, அங்கம்மாளுக்கு நேர்ந்த கொடுமை இருப்பதால், அந்தக் கட்டுரையை மீண்டும் பிரசுரிக்கிறோம்.

இதய பலவீனமுள்ளவர்கள் இக்கட்டுரையை தொடர்ந்து படிக்க முடியாது! மன வலிமை கொண்டவர்களும் கூட நொறுங்கித்தான் போவார்கள்! மறக்கவே முடியாத அந்த இருண்ட நாட்களை விவரிக்கிறார் அங்கம்மாள்!

""தலை கீழா எம் புருஷனைக் கட்டிப் போட்டு அவருகண்ணு முன்னாலயே நாலு பேரு என்னைக் கெடுத்தானுகளே..! தாங்க முடியாத அத்தனை சித்திர வதையும் பட்டுட்டு மானமே போச்சுடி... இனி நான் பிழைக்கமாட்டேன்னு என் மடிலயே உசிரை விட்டாரே..! அப்பாவைக் கொன்னுட்டானுவ.. அம்மாவைச் சீரழிச்சிட்டானுவன்னு பழி வாங்குற வெறிய மனசுக்குள்ள புதைச்சிட்டு பதிமூணு வருஷமா நான் பெத்த புள்ளைக படற பாடு இருக்கே..! இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது சாமீ..ய்..ய்..’’

-பெருங்குரலெடுத்துக் கதறிய அங்கம்மாள்!

""தெனமும் ராத்திரில தூக்கம் வராம நான் புலம்புறதக் கேட்டுட்டு, எந்தலமாட்டுல ஒக்காந்து ""இந்த ஊரே கேவலமா நம்மப் பாக்குது... அத்தன அசிங்கமும் பட்டுட்டோம். இனியும் எதுக்கும்மா நாம உசிரோட இருக்கணும்? ஒண்ணு நாம சாகணும்... இல்லன்னா அவனுகளக் கொல்லணும்''னு துடியாத் துடிப்பானுக. அடேய்... நீதி செத்துப் போச்சுன்னு சொல்லா தீங்கடா. நல்ல தீர்ப்பு வரும். நாம ஜெயிப் போம். பண்ணுன குற்றத்துக்கு அவனுக தண்ட னை அனுபவிப்பானுக. ஒரு வேளை கேசுல நாம தோத்துப் போனாச் சொல்லு... அப்பச் சாவோம்னு எம் புள்ளகள மனசத்தேத்துவேன். அதுகளும் எம் பேச்சுக்கு அடங்கிக் கெடக்குதுக'' பெருக்கெடுத்த கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு, விரக்தியிலும் நம்பிக்கை துளிர்க்கப் பேசினார்.

aa

""கொலை பண்ணிருக்கானுக... கற்பழிச்சிருக்கானுக... இம்புட்டு அக்கிரமம் பண்ணுனவனுகளுக்கு மாசா மாசம் சம்பளம் கொடுத்திக்கிட்டிருக்கு கவர்மெண்ட். இத்தனை வருஷமாச்சு... இன்னும் அவனுகளுக்கு தண்டனை கிடைக்கலியே. என்ன சட்டமோ? என்ன நியாயமோ? தப்பு பண்ணுன அவனுக என்னமோ பொண்டாட்டி புள்ளகளோட நிம்மதியாத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கானுக. மனசெல்லாம் கொதிக்குது...''’-அங்கம்மாளின் முன்றாவது மகன் சுந்தரத்துக்கு அப்படி ஒரு ஆத்திரம்.

அங்கம்மாள் யார்? என்ன வழக்கு இது?

உசிலம்பட்டியை அடுத்துள்ள டி.கிருஷ்ணா புரம்தான் அங்கம்மாளின் கிராமம். கணவன் குருவையா மற்றும் மகன்கள் மூவருடன் சொந்த தோட்டத்தில் விவசாயம் பார்த்து அமைதியாகத் தான் போய்க் கொண்டிருந்தது இவர்களது வாழ்க்கை. அப்போது அங்கம்மாளுக்கு வயது 33 இருக்கும். காக்கிகள் உருவத்தில் ஆரம்பித்தது வினை.

27-7-1998... அது ஒரு கருப்பு நாள். காலை 7 மணி... ""ஒம் புருஷன் எங்கேடி...'' -ஜீப்பில் வந்த போலீசார் அதட்ட லுடன் விசாரிக்க...

""தெரியாதுங்க... அவுக அம்மா வீட்டுக்கு... பக்கத் துல இருக்குற கல்லுப் பட்டிக்கு போயிருப் பாருன்னு நெனக்கிறேன்...''

-இது அங்கம்மாள்.

""அப்ப நீ ஏறுடி ஜீப்புல...''

aa

உத்தரவு பறக்க.. சூது வாது தெரியாமல் சட்டென்று ஏறினாள் அங்கம்மாள். ஊரே வேடிக்கை பார்த்தது. அந்த இடத்தை விட்டு ஜீப் நகர்ந்ததுமே பின் சீட்டில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்த அங்கம்மாளை முதுகு பக்கமாக அணைத்து, சேலையை இழுத்து, மேலே கை வைக்க ஆரம்பித்தது சீருடையில் இருந்த ஒரு மிருகம். எவ்வளவு விலகினாலும் பிடியைத் தளர்த்தவே இல்லை அந்தக் காக்கி. முன்னால் அமர்ந்திருந்த டி.எஸ்.பி.யும் அங்கம்மாளின் முனகலைக் கண்டுகொள்ளவே இல்லை. மார்பெல்லாம் வலிக்க... உசிலம்பட்டி காவல் நிலையத்துக்கு அவளைக் கொண்டு போனார்கள்.

எங்கு தேடியும் குருவையா கிடைக்காத நிலையில், மாலை 5 மணிக்கு மதுரையை அடுத்துள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் பின்புறம் கைகளைக் கட்டி நிற்க வைக்கிறார்கள். அன்றிரவே கோடாங்கி நாயக்கன் பட்டியில் குருவையாவைப் பிடிக்கிறார்கள். உசிலம்பட்டி காவல் நிலையத்தில் மாறி மாறி விழுகிறது சாட்டை அடி. ""பூச்சி, பாலுக்கும் உனக்கும் பழக்கம் இருக்குல்ல... அவனுக களவாண்டு கொடுத்த நகைய யார்ட்ட கொடுத்த..? ஆளைக் காட்டு...'' திரும்பத் திரும்ப இதே கேள்வியைத்தான் கேட்டது போலீஸ். குருவையாவோ“""அய்யோ.. அவனுகளுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல...'' என ஒரே பதிலையே சொன்னார்.

யார் இந்த பூச்சி, பாலு? அங்கம்மாள், குருவையாவிடம் என்ன விசாரணை நடந்தது?

aa

பூச்சி, பாலு, அய்யனார் மூவரும் நகைகளைத் திருடி அடிக்கடி போலீஸிடம் சிக்கும் திருட்டுப் பேர்வழிகள். பெருமாளும் பஞ்சம்மாளும் குருவையாவின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் பெண் கொடுத்தது நகைத் திருடன் பாலுவின் தம்பிக்கு. இதை அறியாத குருவையாவும் அங்கம்மாளும் தம்மிடம் வேலை பார்ப்பவர் என்பதால், பெருமாளின் மகள் திருமணத்துக்குச் சென்று கை நனைக்கிறார்கள். அவ்வளவுதான்.. கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்தது போல், இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டுதான், விசாரணை என்ற பெயரில் குருவையாவின் குடும்பத்தையே சின்னா பின்னமாக்கியது போலீஸ். மறுநாள் 28-ஆம் தேதி... குருவையாவோடு, பெருமாளையும் பஞ்சம்மாளையும் அங்கம்மாளை வைத்திருந்த ஊமச்சிகுளம் காவல் நிலையத்துக்கு அள்ளிக் கொண்டு வந்தது போலீஸ். முதலில் அடி மேல் அடி; பிறகுதான் விசாரணை’ என்ற வழக்கமான போலீஸ் நடைமுறையில் மூவரையும் மூர்க்கத்தனமாக அடித்தார்கள் காக்கிகள். முதல் நாள் இரவு முழுவதும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூங்க விடாமல் தன்னை நிற்க வைத்த போலீஸ், கணவனை அடிப்பது கண்டு ஆவேசமானாள் அங்கம்மாள். ""ஏஞ் சாமீ.. இப்படி அடிக்கிறீங்க?'' என்று கேட்ட நொடியிலேயே அவளது வாய்க்குள் லத்தியைச் சொருகியது ஒரு காக்கி. தொடர்ந்து தோள்பட்டை, கை, கால், பின்புறம் என ஒரு இடம் விடாமல் லத்தியால் துவம்சம் செய்ததில் அங்கம்மாளின் இடது கை முறிந்துபோனது. வியர்வையும் ரத்தமும் சிந்திக் கிடக்க.. தாகத்தால் தவித்த நால்வரும் "கொஞ்சம் தண்ணி கொடுங்கய்யா...'’என்று கெஞ்சினார்கள். கீழே கிடந்த அங்கம்மாளின் முகத்துக்கு நேரே வந்து "என் மூத்திரத்தக் குடிடி...'’என்று ஒரு காக்கி தயாராக.. கைகளால் தன் வாயை இறுகப் பொத்திக் கொண்டாள்.

குருவையாவையும் பெருமாளையும் வெயிலில் முட்டி போட வைத்து அடித்ததில் கிறங்கி விழுந்தார்கள். அன்றிரவே குருவையாவையும் அங்கம்மாளையும் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கொண்டு போனார்கள்.

""அந்த டேஷன்ல வச்சு எஞ்சேல, பாவாடைன்னு ஒண்ணு விடாம உருவி அம்மணமாக்கிட்டானுவ. எம் புருஷன் ஒடம்புலயும் ஒட்டுத் துணி இல்ல. அப்பத்தான் பார்த்தேன். குண்டிச்சதை ஒரு கிலோ இருக்கும். ஆணிப் பலகைய வச்சு அடிச்சதுல பிஞ்சு தொங்குச்சு. அப்பவும் விடல. மொளகாப் பொடியப் பிழிஞ்சு அவரு கண்ணுல ஊத்துனானுக. ""நீ ஒத்துக்க... இல்லாட்டி எவனயாச்சும் கையக் காட்டு. இல்லைன்னா ஒரு நகைக் கடையச் சொல்லு. அங்கதான் கொடுத்தேன்னு... ஒம் பேரச் சொல்லி அங்க போயி நாங்க அள்ளிட்டு வந்திர்றோம்...''னு’அடிச்சிக்கிட்டே, பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்துனானுக.

எம் புருஷனோ "நான் கிராமத்துக்காரன்... அப்படில்லாம் பொய் சொல்ல மாட்டேன். அந்தப் பாவம் என் குடும்பத்த சும்மா விடாது'ன்னு அழுதாரு. உடனே அந்தப் போலீஸ் நாயிக எம் பக்கம் திரும்பி ஒரு மாதிரி பார்த்தானுக. ‘"கருப்புன்னாலும் பார்க்க நல்லா இருக்கால்ல...'ன்னு சொல்லிக்கிட்டே அம்மணமா இருந்த எம் பக்கம் வந்தானுக...''’ என்று அங்கம்மாள் பெருமூச்சு விட, ""போதும்... போதும்...''’என்றோம் நாம் கேட்க திராணியில்லாமல். அங்கம்மாளோ, ""கேக்குற ஒங்களுக்கே மனசு இம்புட்டு வலிச்சுச்சுன்னா. மனசாலும் ஒடம்பாலும் அப்ப இருந்து இப்ப வரைக்கும் நான் பட்டு வர்ற வலி இருக்கே... அத நீங்க கேட்டுத்தான் ஆகணும்.

மானம், கற்புன்னு பொத்தி வைக்கிற சமாச்சாரமா இது? எல் லாத்தயும் உதிர்க்க வச்சுட்டானுகளே. இந்த ஊரு ஒலகத்துக்கு நான் பட்டதெல்லாம் தெரியணும். போலீஸ்காரனுவ எப்பிடியாப்பட்ட ஆளுகன்னு அவன் பொண்டாட்டி புள்ளகளும் தெரிஞ்சுக்கணும்.. இதப் படிச்சிட்டாவது கெட்ட போலீசுக திருந்தணும்...'' என்று குமுறலைத் தொடர்ந்தார்.

""கை ஒடிஞ்சு கெடக்குற என்கிட்ட வந்து அந்த இடத்துல கைய விட்டான் ஒரு போலீசு. ""அய்யோ... அவளை ஒண்ணும் பண்ணிடாதீங்க சாமீ... நான் ஒரு தப்பும் பண்ணலன்னாலும் என் நிலத்த வித்து பணத்தத் தர்றேன். அவளை விட்ருங்க''ன்னு கெஞ்சினாரு. "ஏழைங்களுக்கு மானந்தாண்டா பெரிசு'ன்னு அவரு கூப்பாடு போட்டத, அந்தக் கல் நெஞ்சக்காரனுக காதுலயே வாங்கிக்கல. "நீ வீட்டுக்கு வெளில காவல் காத்தது தெரியும்டா. மூணு திருட்டுப் பயலுக கூட படுத்தவதாண்டா ஒம் பொண்டாட்டி. போலீஸ்காரன் நாலு பேரத் தாங்க மாட்டாளாக்கும்'னு இட்டுக்கட்டிப் பேசி சிரிச்சானுக. அப்ப ராமசாமிங்குற எஸ்.ஐ.தான் மொதல்ல வந்தான். இதுக்குன்னே வேட்டி கட்டிட்டு வந்திருந்தான். மத்த போலீசு என் காலைக் கைய அமுக்கிப் பிடிக்க... எம் புருஷன் கண்ணுக்கு எதுக்காவே சோலிய முடிச்சிட்டான் அந்தப் படு பாவி.

அப்புறம் ஒவ்வொருத்தனா மூணு பேரு. ரெண்டு பேரு மூஞ்சிய நல்லா அடையாளம் பார்த்துக்கிட்டேன். அப்புறம் அரைகுறை மயக்கத்துல இருந்தாலும் மத்த ரெண்டு பேரும் யார் யாருன்னு கஷ்டப்பட்டு கண்ண முழிச்சு பார்த்துக்கிட்டேன். அவனுக மார்பைக் கடிச்சானுக... பூட்சு காலால அந்த இடத்துலயே மிதிச்சானுக... சன்ன ரத்தமா கொட்டுச்சு. ""இவளுக்கு இது பத்தாதுடா. குஷ்டம் பிடிச்சவன விட்டு இவள நாசம் பண்ணனும்''னு ஆளாளுக்கு கத்துனானுக. அப்போது, அழக்கூட எனக்கு திராணியில்ல''’என்று தலையில் அடித்துக்கொண்டவரை, நம்மால் ஆசுவாசப்படுத்த முடியவில்லை.

நினைத்தே பார்க்க முடியாத, காக்கிகளின் கொடூரமான அத்துமீறலை, அப்போது எதிர் கொண்ட அங்கம்மாள், 22 ஆண்டுகள் கடந்தும், அழுதபடியேதான் இருக்கிறார்.

நீதிக்கான போராட்டம் தொடர்கிறது...

-ராம்கி

nkn040720
இதையும் படியுங்கள்
Subscribe