ddதிருப்பத்தூர் மாவட்டத்தில் கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் என 6 ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 125 கவுன்சிலர் பதவிகளும், 208 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளும், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளும், 1779 ஊராட்சிக் கவுன்சிலர்கள் பதவிகளும் தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கு பெரும் போட்டியே நடந்தது.

ஆளுந்தரப்பில் பேசியவர்கள், "எம்.எல்.ஏ. சீட் கிடைக்காதவர்களின் அடுத்த குறி உள்ளாட்சியில் சேர்மன் பதவி மீதுதான் இருக்கும். முன்னாள் எம்.எல்.ஏ சூரியகுமாரை மாவட்ட சேர்மனாக்க, மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ. ஒரு லாபி நடத்துகிறார். நாட்றம்பள்ளி ஒ.செ.வான சூர்யகுமார், தனது வார்டை விட்டுவிட்டு, கந்திலி ஒன்றியத்தில் சீட் கேட்டார். ஆனால் திருப்பத்தூர் மாவட்ட கழக முன்னாள் பொருளாளர் அருணகிரியோ, "அந்தப் பதவி எனக்கு வேண்டும்' என்றார்.

அருணகிரிக்கு ஆதரவாக கந்திலி ஒ.செ.க்கள் நல்லதம்பி, எம்.எல்.ஏ. ராஜமாணிக்கம் உட்பட 3 ஒ.செ.க்கள் பரிந்துரை செய்துள்ளனர். இருந்தும் "அருணகிரிக்கு விருப்ப மனு தர முடியாது' என மா.செ. தேவராஜ் கை விரித்தார். உடனே அருணகிரி, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் போய் முறையிட... துரைமுருகன் சிபா ரிசையே மா.செ. மதிக்கவில்லை.

"நான் வேட்புமனு தாக்கல் செய்தே தீருவேன். நீங்கள் சின்னம் தர்றதா வேணாமா?ன்னு முடிவு செய்துட்டு சொல் லுங்க''ன்னு அருணகிரி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். உடனே, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான அமைச் சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், காந்தி முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. அங்கே, "எங்க அண்ணனையே கேள்வி கேட்கறியா?' என தேவராஜ் ஆட்கள் அருணகிரியை அடா வடியாகத் தாக்கினார்கள். இதனால் மருத்துமவனையில் அட்மிட் ஆன அருணகிரி, பயந்துபோய் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டார்''’ என்றார் கவலையாக.

Advertisment

இன்னொரு தி.மு.க. பிரமுகரோ, "அதேமாதிரி திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருப்பவர் வடிவேல். அவர் பகுதியில் உள்ள ஊராட்சிப் பதவிகள், ரிசர்வாக இருப்பதால், மாவட்ட கவுன்சிலருக்கு விருப்ப மனு செய்ய விரும்புவதாகச் சொன்னார். மா.செ. வோ, "உனக்கெல்லாம் அதுக்குள்ள சீட் வேணுமா?' என அவரைத் துரத்திவிட்டார். உடனே, அவர் இளைஞரணி செயலாளர் உதயநிதியைப் பார்த்து முறையிட... அவர் மா.செ.விடம் வடிவேலுவுக்காகப் பேசினார். இதனால் எரிச்சலான மா.செ. தேவராஜ், வடிவேலை அசிங்கமாகத் திட்டி "சீட் தர முடியாது' என்று சொல்ல... அவமானமடைந்த வடிவேல், தன்னிடமிருந்த படிவங்களைக் கிழித்து மா.செ.வின் டேபிள் மீது வீசிவிட்டுப் போய்விட்டார்.

tt

சூர்யகுமாரை மாவட்ட சேர்மனாக்கவே இப்படி நடந்துகொள்கிறார் தேவராஜ். அதே நேரத்தில் மாவட்ட மகளிரணி மா.செ. கவிதா தண்டபாணி, ஆலங்காயம் மேற்கு ஒ.செ. ஞானவேலன் மனைவி பிரியதர்ஷினி இருவரும் அதே சேர்மன் பதவிக்காக மேலிடத்தில் லாபி செய்யத் துவங்கியிருக்கிறார்கள்''’என்று, இவரும் மா.செ. மீதே குற்றச்சாட்டை வைத்தார்.

Advertisment

tt

திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவி, மலைவாழ் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சேர்மன் வேட்பாளருக்கு புங்கம்பட்டுநாடு விஜயா, நெல்லிவாசல்நாடு சேம்பறை ஆகியோர் மோதினர். கட்சியில் சீனியரான வைகுந்த் மனைவி பிருந்தாவதியை முன்னிறுத்துகின்றனர். கந்திலி ஒன்றியக்குழு தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.

மாதனூர் ஒன்றியத்துக்கு தலைவர் பதவி பொதுவாக வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவியை பிடித்துவிடவேண்டும் என மாதனூர் ஒ.செ. சுரேஷ்குமார், வார்டு மாறி கவுன்சிலருக்கு நின் றுள்ளார். தி.மு.க. வேட்பாளர் களுக்கு தலைக்கு ஒரு லட்சம் வழங்கி தேர்தல் வேலையில் தீவிரம் காட்டுகிறார் மா.செ. அதே நேரத்தில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வ நாதன், தனது மச்சான் சீனு வாசனை சேர்ம னாக்க வார்டு மாற்றி நிறுத்தி, அவரும் வேட்பாளர்களுக்கு ஒரு லட்சம் தரத் துவங்கி யுள்ளார். அ.தி.மு.க. தரப் பிலோ, மாவட்ட சேர்மன்tt பதவிக்குப் போட்டியிட யாரும் முன்வரவில்லை. திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு கற்பகம், நெல்லிவாசல்நாடு ரேணுகா ஈஸ்வரி இருவரும் களத்துக்கு ரெடியாக, ரேணுகாவை முன்னிறுத்தி ஒ.செ.வை செலவு செய்யச் சொல்லி யுள்ளாராம் மா.செ. வீரமணி.

கந்திலி ஒன்றியக்குழு தலைவராக்குவதாக முன் னாள் மாவட்ட சேர்மன் மருத்துவர் லீலாசுப்பிர மணிக்கு மா.செ. வீரமணி வாக்கு தந்துள்ளதால், தன் சார்பாக வேட்பாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் தந்துள்ளார் லீலா. ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் வேட்பாளராக பூங்குளம் மகேந்திரன் மனைவி ருக்குமணியும், வெள்ளக்குட்டை தீபா இருவரும் முட்டி மோதுகின்றனர். மகேந்திரன் வேட்பாளர்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என்கிறார், தீபா 1.5 லட்சம் தருவதாக கூறுகிறார். இந்த இருவருக்கிடையே வாணியம்பாடி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தனது மனைவி சௌமியாவை நிறுத்தியதோடு, அவரை சேர்மன் வேட்பாள ராக்கலாமா என ஆலோசிக்கிறாராம்.

மாதனூர் ஒன்றியத்தில் மேற்கு ஒ.செ. வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமியும், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் வெங்கடே சன் மருமகள் ஜெயந்தி கோபிநாத்தும் சேர்மன் சீட் பெற, மா.செ. வீரமணியை வலம்வருகின்றனர்.

ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் வேட் பாளராகியுள்ள கவிதா, விமலா, சவிதா இவர்களில் ஒருவரை சேர்மன் வேட்பாளராக்கிவிடலாம் என பேச்சுவார்த்தி நடத்திவருகிறார் மா.செ. வீரமணி. நாட்றம்பள்ளி ஒன்றியத்தில் தகரகுப்பம் சாம்ராஜ், கேசவன், சீனுவாசன் ஆகியோர் கரன்சியை வைத் துக்கொண்டு, சேர்மன் வேட்பாளராகிவிடலாம் என்ற கனவில் வீரமணியை முற்றுகையிடுகின்றனர்.