லோக்கல் போலீஸ் Vs ஐ.ஜி. டீம்! கொடநாடு வழக்கில் அடுத்த திருப்பம்!

kk

கொடநாட்டில் கொள்ளையடித்து விட்டு ஆவணங்கள், மற்றும் பொருட்களோடு வந்த கனகராஜை எதிர் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காத்திருந்தது என்பதை, முதல்முறையாக சாட்சியத்தோடு கோர்ட்டில் வெளிப் படுத்தியிருக்கிறார்கள், கொடநாடு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார்.

கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர்களான ரமேஷ் மற்றும் தனபால் ஆகியோர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்த்து வாதிடும்போதுதான் இந்த உண்மைகள் வெளியே வரும்.

kk

கடந்த வாரம், கிட்டத்தட்ட 11 நாட்கள் போலீ சார் ரமேசையும், தன பாலையும் கஸ்டடியில் வைத்து விசாரித்த பின், சிறைக்கு அனுப்பினர்.

அடுத்த நாளே எடப்பாடி தரப்பின் உதவியுடன் அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ராஜசேகரனின் உதவியாளர் பாலாஜி, ரமேசுக்கும், தனபாலுக்கும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞரான ஆனந்தும், ஷாஜகான

கொடநாட்டில் கொள்ளையடித்து விட்டு ஆவணங்கள், மற்றும் பொருட்களோடு வந்த கனகராஜை எதிர் பார்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காத்திருந்தது என்பதை, முதல்முறையாக சாட்சியத்தோடு கோர்ட்டில் வெளிப் படுத்தியிருக்கிறார்கள், கொடநாடு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார்.

கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனகராஜின் சகோதரர்களான ரமேஷ் மற்றும் தனபால் ஆகியோர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்த்து வாதிடும்போதுதான் இந்த உண்மைகள் வெளியே வரும்.

kk

கடந்த வாரம், கிட்டத்தட்ட 11 நாட்கள் போலீ சார் ரமேசையும், தன பாலையும் கஸ்டடியில் வைத்து விசாரித்த பின், சிறைக்கு அனுப்பினர்.

அடுத்த நாளே எடப்பாடி தரப்பின் உதவியுடன் அவருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ராஜசேகரனின் உதவியாளர் பாலாஜி, ரமேசுக்கும், தனபாலுக்கும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். அரசு வழக்கறிஞரான ஆனந்தும், ஷாஜகானும் இதுகுறித்து வாதிட முடியாது என வாய்தா வாங்கினார்கள்.

உடனே 10ஆம் தேதி அந்த ஜாமீன் மனு மறுபடியும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞரான ஷாஜகான் சென்னையில் மழை பெய்கிறது. வருவதற்கு விமானம் இல்லை எனவே இன்னொரு தேதி கொடுங்கள் என நீதிபதி யிடம் கேட்டார். ஆனால் அதை ரமேஷின் வழக் கறிஞரான பாலாஜி ஏற்கவில்லை. உடனே நீதிபதி "நீங்கள் வீடியோ கான் பரன்சில் வாதிடுங்கள், அரசு வழக்கறிஞரான ஆனந்த் மூலம் போலீசார் தர வேண்டிய டாக்குமெண்டுகளை தரட்டும்'' என்றார்.

வீடியோ கான்பரன்சில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகானிடம், ரமேஷின் வழக்கறிஞர் ஒரு நீண்ட வாதத்தை வைத்தார். ரமேசும், தனபாலும் கொடநாட்டில் கொள்ளையடிக்கவில்லை. அவர்கள் மீது ஜாமீனில் வரக்கூடிய குற்றங்கள்தான் வழக்காக போடப்பட்டுள்ளது. அவர்களை 11 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்திருக்கிறார்கள். அவர்களை இதற்கு மேல் எதற்காக சிறையில் வைக்க வேண்டும் என அவர் வைத்த வாதத்தை ஷாஜகான் எதிர்த்து வாதாடினார்.

kkkk

தனபால் ஒரு சாதாரண குற்றவாளியா? அவர் மீது இப்பொழுது ஜாமீனில் வரக் கூடிய அளவுக்கு சிறிய செக்ஷன்கள் போடப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் தொடர்ச்சியே. இந்த வழக்கில் சேலம் எஸ்.பி. அபினவ் தலைமையிலான போலீசார் ரமேஷையும், கனகராஜையும் கைது செய்வதில் முன்னிலையில் நின்றார்கள். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் இதுவரை யாரையும் கொடநாடு வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை.

குன்னூர் டி.எஸ்.பி. ரமேஷ், ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் நேரடியாக எடப்பாடி டீமிடம் இணக்கமாக இருக்கிறார்கள். சமீபத்தில் நீலகிரி டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் சுரேஷ், வேல்முருகன் ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சயானை விசாரித்தார்கள். அந்த விசாரணையில், "நீ எடப்பாடிக்கு எதிராக தி.மு.க.விடம் காசு வாங்கிக்கொண்டு பொய் சொல்கிறாய். உன் மீது வேறு வழக்கு எங்களால் போட முடியும்' என போலீஸ் காவலிலேயே மிரட்டியிருக்கிறார்கள்.

அதற்கு பதில் சொன்ன சயான், கொலை, கொள்ளை வழக்கை சந்தித்து விட்டேன். இதை விட பெரிய வழக்கு உங்களால் போட முடியாது என பதில் சொல்லியிருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் இந்த வழக்கில் சிக்கிய குற்றவாளிகளை கூடலூர் செக் போஸ்டில் போலீசார், எடப்பாடி தரப்பிடமிருந்து வந்த உத்தரவையடுத்து விடுவித்திருக்கிறார்கள். அதற்கு சஜீவனின் சகோதரர் சுனில் நேரடியாக வந்து உதவியிருக்கிறார்.

குற்றவாளிகளை கைது செய்தபிறகு போலீசார் அவர்களை விடுவித் திருக்கிறார்கள். ஆனால் ரமேஷையும், தனபாலையும் கைது செய்த போலீசார், சஜீவனை கூப்பிட்டுக் கூட விசாரிக்கவில்லை. அதேபோல் சஜீவனுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் மில்லரையும் விசாரிக்கவில்லை என போலீஸ் வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவும், ரமேஷிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசிகளும்தான் தங்களிடம் இருக்கும் அடுத்த கட்ட தரவுகள் என்கிறார்கள் போலீசார்.

______________

பா.ஜ.க.வில் கோஷ்டி இல்லை!

நான் பெரிதும் மதிக்கும் நக்கீரனின் நவ.06-09 தேதியிட்ட இதழில் என்னைப் பற்றி வந்த செய்தியை மறுக்க வேண்டியது எனது கடமையாகும். இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முன்னாள் பா.ஜ.க. தலைவ ரிடம் மிகுந்த அழுத்தம் கொடுத்தவன் நான். அது கட்சிக்கே தெரியும். திருமங்கலம் இடைத்தேர்தல் குறித்து என்னைப் பற்றி வந்துள்ள செய்தியும் தவறானதாகும். பா.ஜ.க.வில் எனது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து முழுமையாக செயல்படுகிறேன். கரை போட்ட வேஷ்டி கட்டுவது பிடிக்கும். கட்சியில் கோஷ்டி ஒருநாளும் பிடிக்காது. அப்படி எந்த ஒரு சூழலும் நிகழ்வும் கட்சியில் இல்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-கரு.நாகராஜன்

பொதுச்செயலாளர், தமிழ்நாடு பா.ஜ.க.

nkn131121
இதையும் படியுங்கள்
Subscribe