கோவை சாமானியப் பெண் மேயர்!

டந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் தி.மு.க. சார்பில் தேர்வான பெண் கவுன் சிலர்களில், மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் எம். எல்.ஏ.வுமான கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, புறநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதா மற்றும் மகளிரணியைச் சேர்ந்த மீனாலோகு, தெய்வயானை ஆகியோர் மேயருக்கான கனவில் இருந்தனர்.

"கோவையிலுள்ள கோஷ்டிகளைத் தாண்டி வெற்றிக்கனியைப் பறித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுத்து மேயர் தேர்வில் சிக்கலை எதிர்கொண்டார். எக்ஸ் எம்.எல்.ஏ. கார்த்திக் குடும்பத்தில் முன்பே எம்.எல்.ஏ. பதவி வகித் திருப்பதும் மருதமலை சேனாதிபதியின் உறவினர்கள் வேலுமணியுடன் நெருக்கமாக இருப்பதையும், மீனாலோகுவின் கணவர் லோகு வசிக்கும் ஏரியாவில் நற்பெயர் இல்லாததையும் குறிப்பெழுதி தலைமைக்கு அனுப்பியுள்ளது மாநில உளவுத்துறை. இதையடுத்து பெறப்பட்ட பட்டியலிலிருந்து கல்பனா வின் பெயர் டிக் அடிக்கப் பட்டுள்ளது. கல்பனாவின் மாமனாரான பழனிச்சாமி மிசா காலத்தில் சிறைக்குச் சென்றதும், அமைச்சர் நேருவிற்கு நெருக்கமானவர் என்பதும், இத்தனை ஆண்டு காலத்தில் எந்தவொரு பதவி சுகத்தையும் அனுபவித்திராத குடும்பம் என்பதும் கல்பனா வுக்கு சாதகமாக, அவர் தேர் வானதாகக் கூறுகிறார்கள்.

கவுன்சிலர் ஆனதும் கல்பனாவும், அவருடைய கணவர் ஆனந்தகுமாரும் பஸ்ஸைப் பிடித்து சென் னைக்குச் சென்று ஸ்டாலி னிடம் ஆசி பெற்றபோது, "ஊருக்கு போங்க, நல்ல செய்தி வரும்'' என்று சொல்லி அனுப்பினாராம் ஸ்டாலின்.

Advertisment

-நாகேந்திரன்

ff

Advertisment

சிவகாசி?

மேயர் தேர்வில் புகைச்சல்!

சிவகாசியில் காங்கிரஸ் மேயர் என்ற எதிர்பார்ப்பை முளையிலேயே கிள்ளியெறிந்த தி.மு.க., நாடார் சமு தாயத்தவரை மேயராக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கேற்ப, சிவகாசி மாநகராட்சியின் மேயராக சங்கீதா வையும், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரியாவை துணை மேயராகவும் அமர வைத்துள் ளது. கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, எங்கிருந்தோ வந்தவர்களை மேயராக்கியிருக்கிறார்கள் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. மேலும், நாடார் சமுதாயத்தில் பாரம்பரியமுள்ள பெருஞ்செல்வந்தர்களை மட்டுமே ஏற்கக்கூடிய சிவகாசியில், மேயர் சங்கீதா வின் கணவர் இன்பத்துக்கு, சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா போன்றவர்களோடான தொடர்பு உருவாக்கும் பிம்பத்தால், சிவகாசி ரவுடி ராஜ்ஜியமாகுமோ என்ற பீதி வெளிப்படுகிறது.

இதுகுறித்து மேயர் சங்கீதாவிடம் கேட்க முயன்றபோது, அவரது கணவர் இன்பம் லைனில் வந்தார். “"இப்ப எனக்கு எதிரா ரவுடிங்கிற ஆயுதத் தை கையில எடுக்கிறாங்க. யாரையும் வாழ வைத்துத் தான் எங்களுக்குப் பழக்கம். மக்களுக்கு நல்லது செய்யத் தான் வந்திருக்கோம்'' என்றார். மேயர் சங்கீதா, “சிவகாசி மக்களின் குடிநீர்ப் பிரச்சனையை நிரந்தர மாகத் தீர்த்துவைப்பேன். 24 மணி நேரமும் மக்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டி ருக்கிறேன்''’என்று நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

-ராம்கி