டம்மி தி.மு.க! -விருதுநகர் மாவட்ட வில்லங்கம்!

சிவகாசி ஊராட்சி ஒன்றிய 28-வது வார்டில் 5,000 ஓட்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுகிறார் தி.மு.க. வேட்பாளர் பிரேமா. இவருடைய கணவர் குமார் மளிகைக்கடை நடத்துகிறார். பிரேமா குடும்பத்துக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம்? கட்சியின் பெயரைக் கூட சொல்லமாட்டார் குமார். ‘"கருணாநிதி கட்சி'’ என்றுதான் பொதுஇடத்திலும் பேசுவார்.

lb

விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு (50,000 ஓட்டு) 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் தி.மு.க. வேட்பாளர் சுந்தரேஸ்வரி. இவர், விளாம் பட்டியிலுள்ள ஏ.வி.எம்.மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய கணவர் ரத்தினம், வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். ஒரு எம்.எல்.ஏ. பெற வேண்டிய வாக்குகளில் மூன்றில் ஒரு பங்கு வாக்குகளைக் கவரவேண்டிய சுந்தரேஸ்வரி, இன்று வரையிலும் விடுப்பு எடுக்காமல் பள்ளி சென்று வருகிறார். அவருடைய கணவர் ரத்தினமோ, செய்யும் தொழிலே தெய்வம் என வெங்காய வியாபாரத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்து வருகிறார்.

Advertisment

சிவகாசி ஒன்றியத்தில், அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு நர்மதாவும், 27-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மாலையம்மாளும் போட்டியிடுகின்றனர். இருவருக்குமே, கட்சியின் சின்னம் இரட்டை இலை என்பதால், நோட்டீஸி லும், போஸ்டரிலும் இணைந்தே காணப்படு கிறார்கள். வாக்கு சேக ரிப்பதிலும் ஒற்றுமை யுடன் வலம் வருகின்ற னர்.

தி.மு.க.விலோ, சிவகாசி ஒன்றியத்தி லுள்ள இரண்டு பதவி களுக்கும் ஒரே உதய சூரியன் சின்னம் என் றாலும், தனித்தனியாக பிரிந்துள்ளனர். அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காகவே களத்தில் இறக்கிவிடப்பட்ட டம்மி வேட்பாளர்கள் என்றே பேசப்படுகின்றனர்.

தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள், ஊரைச் சுற்றி மது பார்களும், சீட்டு கிளப்புகளும் நடத்தி வருகின்றனர். அவர்கனோ, ""நாங்கள் நடத்தி வரும் தொழிலுக்காக, அ.தி.மு.க. ஆட்சியாளர் களையும், குறிப்பாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியையும் அனுசரித்தே செல்லவேண்டும்'' என்கிறார்கள் உ.பி.க்கள்.

Advertisment

இதை விருதுநகர் தி.மு.க. தெற்கு மாவட் டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். கவனத் துக்குக் கொண்டு சென்றோம். ""அப்படியெல்லாம் கிடையாது. சிவகாசி ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், வனம் எப்படி சேர்மன் ஆகமுடியும்? சிவகாசி ஒன்றியத்துக்கு தி.மு.க. சேர்மன்தான் என்று வனம் அடித்துச் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் வனம் பார்த்துக்கொள்வார். நான் பிரச்சாரத்தில் பிசி யாக இருக்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார்.

அவர் குறிப்பிடுவது தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வன ராஜைத்தான். வனராஜ் மகன் விவேகன்ராஜ், சிவகாசி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருக் கிறார். குடும்பத்தினரை மட்டுமல்ல, தன்னுடைய மது பாரில் வேலை பார்ப்பவரைக் கூட, உள்ளாட்சித் தேர்தல் களத்தில் வேட்பாளர் ஆக்கியிருக்கிறாராம்.

ஆளுங்கட்சிக்காக அசுர பலத்துடன் அமைச்சரும் நிர்வாகிகளும் களமிறங்கி கலக்க, தி.மு.க. டம்மியாகியுள்ளது.

-ராம்கி

கூட்டணி ஒண்ணுதான்! ஆனா நீங்க வேற, நாங்க வேற! -கன்னியாகுமரி கலாட்டா!

lb

கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 6 மாவட்ட வார்டுகளுக்கும் 5 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் சீட் பங்கிடுவதற்கான பேச்சுவார்த்தையின்போதே தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் முட்டிக்கொண்டது. காங்கிரசுக் கும் காங்கிரசுக்குமே முட்டிக்கொண்டது, தி.மு.க.வுக்கும் தி.மு.க.வுக்குமே முட்டிக் கொண்டது. என்ன ஒரே குழப்பமா இருக்கா? தெளிவாகவே சொல்லிடு றோம்.

ll

"வாங்க உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வரு வோம்' என குமரி மேற்கு தி.மு.க. மா.செ. மனோ தங்கராஜ், மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ. விஜயதரணி, கம்யூ. மா.செ. செல்லச்சாமி ஆகியோர் ஒன்றுகூடினார்கள். மாவட்ட பஞ்சாயத்து 1-ஆவது வார்டுக்கு தனது ஆளான அம்பிளியை முன்னிறுத்தினார் விஜயதாரணி. அதெல்லாம் முடியாது லீமா ரோசுக் குத்தான் அந்த வார்டு' என மனோதங்கராஜும் செல்லச்சாமியும் சொல்ல, சட்டென எழுந்து போய்விட்டார் விஜயதரணி.

வெளியே போனதும் ராஜேஷ்குமாருக்கு போன்பண்ணி "லீமா ரோஸ் நின்னா, கண்டிப்பா நான் அம்பிளியை நிறுத்துவேன்' என ஆவேச மானார் விஜயதரணி. இதேபோல் 6-ஆவது வார்டை தனது ஆளான ஜோபிக்கு ராஜேஷ் குமார் கேட்க, "அதெல்லாம் முடியாது எங்க கட்சி லீலாவுக்கு'த்தான் என்றார் மனோதங்கராஜ். "அப்படின்னா நான் ஜோபியை நிறுத்துவேன்' என்றார் ராஜேஷ்குமார். இதேபோல்தான் திருவட்டார் ஒன்றிய 10-வது வார்டை ஒதுக்குவதில் மேற்கு மா.செ. மனோதங்கராஜுக் கும் கிழக்கு மா.செ.சுரேஷ் ராஜன் கோஷ்டிக்கும் இடையே முட்டிக் கொண்டது.

கடைசி வரைக்கும் பிரச்சினை தீராததால், அவரவர் சொன்னபடியே அவரவர் ஆட்களை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து, பிரச்சாரத் தையும் முடித்துவிட்டனர்.

-மணிகண்டன்

கடலூர்! ""ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்'' -கிராமத்தினர் உறுதி!

இம்மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்குட்பட்டது வாணதிராயபுரம் ஊராட்சி. மொத்தம் 9 வார்டுகளையும் 4936 வாக்காளர்களையும் கொண்ட இவ்வூராட்சியில் எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, "கட்சிக்காரரா இருந் தாலும் சரி, சாதிக்காரரா இருந்தாலும் சரி, ஓட்டுக்கு பணம் கொடுத்தா யாரும் வாங்கக்கூடாது. நம்ம கிராமத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேத்து றேன்னு வாக்குறுதி கொடுப்பவர்களுக்குத் தான் நம்ம ஓட்டு. இதுல நாம உறுதியா இருக்கணும்' என தீர்மானமே போட்டுள்ளனர்.

"நல்ல தீர்மானமாச்சே, இது உண்மையா?' என சமூக ஆர்வலர் சாமிநாதனிடம் கேட்டோம். “""ஆமாங்க உண்மைதான்... ஓட்டுப் போடுறதுக்கு கைநீட்டி பணம் வாங்கிட்டா, எங்க பிரச்சனைகளை தீர்க்கச் சொல்லி உரிமையோடு கேட்க முடியாது. அதனாலதான் இந்த முடிவு. இதேபோல் எல்லா ஊர்மக்களும் உறுதியாக இருந்தால் நல்லாயிருக்கும்'' என்றார்.

இந்த ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஆறுமுகம், பழனிவேல், வைத்தியநாதன், சர்க்கரய்யா என நால்வர் போட்டியிடுகின்றனர்.

-எஸ்.பி.சேகர்

ll

ஈரோடு! -ஊர் முழுவதும் கருப்புக் கொடி!

aa

மாவட்டத்தின் பவானிசாகர் ஒன்றியத் திற்குட்பட்ட புங்கார் ஊராட்சியின் 1—ஆவது வார்டில் அடங்கியது 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சுஜில்குட்டை கிராமம். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது வாழ்விடத்திற்கு பட்டா கேட்டு போராடி வருகிறார்கள் இவ்வூர் மக்கள். பட்டா வாங்கித் தர்றேன் என வாக்குறுதி கொடுத்து ஜெயிப்பவர்கள், பட்டை நாமம் போட்டுவிடுவதால், இந்தமுறை தேர்தலில் யாரும் போட்டியிடக் கூடாது என முடிவெடுத்து, வீடுகள்தோறும் கருப்புக் கொடியை ஏற்றிவிட்டனர்.

தகவல் கேள்விப்பட்டு, சமாதானம் பேசப் போனார் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஈஸ்வரன். ஆனால் மக்களோ, அவரை ஊருக்குள் விடாமல் திருப்பி அனுப்பியதோடு, அவரின் காரிலும் கருப்புக் கொடியைக் கட்டி அனுப்பிவிட்டனர்.

-ஜீவாதங்கவேல்

தஞ்சாவூர்! -அ.தி.மு.க.விற்கு எதிராக ஜமாத்தார்கள் அதிரடி!

ff

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள அய்யம்பேட்டை சக்கராப் பள்ளி ஊராட்சியில் இஸ்லாமிய வாக்குகளே பெரும்பான்மை என்பதால் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் ரஹ்மான் அலியின் மனைவி சமீராவும், தி.மு.க. சார்பில் நாசரின் மனைவி ஜெமீலா நஸ்ரினும் போட்டியிடுகின்றனர். மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடே கொந்தளிப் பான நிலையில் இருக்கும் இந்த நேரத்தில் சக்கராப்பள்ளி ஜமாத்தார்கள் ஒன்று கூடி, ‘"நாசகார குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. மீறி ஓட்டுப் போட்டால் ஜமாத்திலிருந்து விலக்கப்படுவார்கள்' என தீர்மானம் போட்டு வீதிவீதியாக மைக் செட் பிரச்சாரமும் செய்தனர்.

ஆளும் கட்சிக்கு எதிரான இந்த அதிரடி பிரச்சாரம் வாட்ஸ்—அப் மூலம் இஸ்லாமியர்களிடையே வைரலானது. இந்த சக்கராப்பள்ளிக்கு அருகில்தான் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த கிராமம் உள்ளது. இஸ்லாமியர் களின் இந்த அதிரடி முடிவை கேள்விப்பட்டு வெலவெலத் துப்போன துரைக்கண்ணு, ஜமாத்தார்களிடம் பேசிப் பார்த் தும் பிரயோஜனமில்லை. இதனால் ரஹ்மான் அலியை அழைத்த துரைக்கண்ணு, "எப்பா மத்த சாதிக்காரங்க ஓட்டை வாங்க வழியப் பாரு, ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய்னு பேசிப்பாரு' எனச் சொல்லிவிட்டாராம்.

-க.செல்வகுமார்

புதுக்கோட்டை: தி.மு.க.வுக்கு தாவிய அ.தி.மு.க. வேட்பாளர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பதற்றமான தொகுதி மணமேல்குடி ஒன்றியம். இங்குள்ள 14 வார்டுகளில், 14-ஆவது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நாராயணன் என்பவரும், சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த பரணிகார்த்திகேயன், அக்கட்சி சார்பிலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு வாபஸ்பெறும் நாளில் அ.தி.மு.க. வேட்பாளர், வாபஸ் மனுவை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க முயன்றார். அவரைத் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க. ஒ.செ. துரை மாணிக்கம், மனுவைப் பறித்து கிழித்து எறிந்த தால், அங்கே கைகலப்பா னது.

வேட்புமனுவை வாபஸ் பெறமுடியாத நிலையில், புதுக்கோட்டை தெற்கு மா.செ. ரகுபதி முன்னிலையில் தி.மு.க. வில் இணைந்ததோடு, “"ஓட்டுக் கேட்டுப் போனா தி.மு.க.வுக்கு தான் ஓட்டுப் போடு வோம்னு மக்கள் சொல்லிட்டாங்க. அதான், ஜெயிக்கிற கட்சிக்கு வந்துட் டேன்' என்று பேட்டியும் கொடுத்தார் நாராயணன்.

பரணி கார்த்திகேயனை தி.மு.க.வில் இணைத்தபோது, அவரின் தேர்தல்பணியை மெச்சிப் பேசினார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். "பாத்தியா எங்க பரணி அண்ணனோட தேர்தல் பணியை' என்று அவரது ஆதரவாளர் கள் காலரைத் தூக்கிவிடுகின்றனர். “"இன்னும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை எல்லாம் இருக்கு. பொறுங்க சகோ' என்கிறார்கள் மணமேல்குடி உ.பி.க்கள்.

-இரா.பகத்சிங்

திருவண்ணாமலை: விலைபோன தி.மு.க. வேட்பாளர்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிகளில் 47 ஊராட்சி மன்றத் தலைவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. முக்கிய பிரமுகர் கள் போட்டியிடும் வார்டு களில் அவர்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற் காக அந்த வார்டுகளில் தி.மு.க.வில் இருந்து டம்மியான வேட்பாளர் களை நிறுத்தியுள்ளது என்கிற குற்றச்சாட்டு திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. மீது எழுந்திருக்கிறது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 16-ஆவது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க. பிரமுகரான மாமண்டூரைச் சேர்ந்த ராஜு வேட்பு மனுதாக்கல் செய் திருந்தார். அவருக்கெதிராக போட்டியிட்ட மூன்று பேரில் தி.மு.க.வைச் சேர்ந்த துலுக்காணம் மனைவி செஞ்சியும் ஒருவர். திடீரென மூன்று பேரும் வாபஸ் பெற்றதால் ராஜு போட்டியின்றி கவுன்சிலராக தேர்வுபெற்றார். வந்தவாசி ஒன்றியத்தில் 19 வார்டுகள் உள்ளன. இதில், 10-ஆவது வார்டில் வந்தவாசி கிழக்கு ஒ.செ. லோகேஸ் வரனின் தாயார் ஜெயமணியும், 14-ஆவது வார்டில் அ.தி.மு.க.வின் வந்தவாசி மேற்கு ஒ.செ. அர்ஜுனன் மனைவி அற்புதமும் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தனர். தி.மு.க.வில், இந்த 10-ஆவது வார்டில் குப்பன் மனைவி துளசியும், 14-ஆவது வார்டில் நரசிம்மன் மனைவி நாராயணியும் போட்டியிட்டனர். இந்த இரண்டு வார்டுகளில் தி.மு.க. மற்றும் சுயேட்சைகள் திடீரென வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் இருவரும் போட்டியின்றி கவுன்சிலர்களாக தேர்வுபெற்றுள்ளனர்.

சுயேட்சைகள் வாபஸ் பெற்றனர் சரி. தி.மு.க. வேட்பாளர்கள் எப்படி வாபஸ் பெற்றார்களாம்? தி.மு.க.வின் விவசாய அணியிலுள்ள ஒரு முக்கிய பிரமுகரை அ.தி.மு.க.வினர் அணுகி கரன்ஸி டீலிங்கால் மனத் தைக் கரைத்தார்களென வந்தவாசி தி.மு.க.வினர் குமுறுகின்றனர்.

-து. ராஜா

முதல்வரின் நிழலின் புதிய கோஷ்டி!

திருச்சி அ.தி.மு.க. மா.செ.வாக முன்னாள் எம்.பி. குமார் பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும் அமைச்சர்கள் இருவருக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் குமாரை மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை அமைச்சர்கள் இரண்டு பேரும் செய்தார்கள். கடைசியில் முதல்வர் வரை தொடர்ச்சியாக சென்று புகார் செய்த இரண்டு தரப்பையும் சரி செய்து அனுப்பினார். தற்போது உட்கட்சி தொகுதிப் பங்கீடு முதல் பிரச்சாரம் வரை அனைவரும் இணைந்தே செயல்பட்டு வருகின்றனர்.

இதற்கு இடையில் திருச்சியில் முதல்வர் எடப்பாடி நிழல் என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், "நான் தான் அடுத்த மாவட்டச் செயலாளர், முதல்வர் சொல்லிட்டார்' என அ.தி.மு.க. பொறுப்பாளர் களோடு செல்லாமல், அவர் தன் ஆதரவாளர்களுடன் தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார்.

பழைய கோஷ்டிகள் ஒழிந்த நிலையில்... "முதல்வர் நிழல்' என்கிற பெயரில் புதிய கோஷ்டி உருவாகி வருகிறது.

-ஜெ.டி.ஆர்.

திருச்சி: உள்ளாட்சித் தேர்தலிலும் டோக்கன்?

தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜிக்கும், அ.தி.மு.க. அமைச்சரும் மா.செ.வுமான விஜயபாஸ் கருக்கும் இடையே ‘நீயா நானா’ யுத்தமே நடக்கிறது. கரூரில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “""இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றாலும், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. காரணம் நாங்கள்தான் ஆளுங்கட்சி. டோக்கன் பார்ட்டிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள். ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன், அரவக்குறிச்சியில் ரூ.2000 டோக்கன் கொடுத்தார்கள். நேற்று ஒரு பெண் ரூ.2000 டோக்கன் கொடுத்து பணம்கேட்டார். வேற ஒருத்தர் வருவார். அவர்கிட்ட போய் கேளுங்கன்னு அனுப்பிவிட்டேன்'' என்று சொல்லிச் சிரித்தார்.

-ஜீ.தாவீதுராஜா