மண்ணைக் கவ்விய உள்ளாட்சி நிர்வாகம்! -சேலம் மாநகராட்சி திவால்?

sss

"முதல்வரின் மாவட்டத்தில் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது' என குமுறுகிறார்கள். சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம் பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும், முதன்மை அலுவலகமும் இயங்கி வருகிறது. துப்புரவுப் பணியாளர்கள் முதல் முதன்மை ஊழியரான ஆணையர்வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

ஊழியர்கள் சம்பளம், வாகன எரிபொருள், அலுவலக பராமரிப்பு, மின்கட்டணம் என மாதம் 21 கோடி ரூபாய் வரை அடிப்படை செலவினங்களுக்காக நிதி தேவைப்படுகிறது.

ss

ஆனால், இன்றைய நிலவரப்படி ஊழியர் களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்கவே சம்பள கணக்கில் போதிய நிதி இல்லை என கைகளை அகல விரித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம். மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழக அரசைக் காட்டிலும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடன் சுமையால் தடுமாறிக்கொண்டி ருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகத்தின் வரவு- செலவு விவகாரங்களைக் கவனிக்கும் ஊழியர்கள்.

அப்படி என்னதான் நிதி நெருக்கடி பிரச்னை? என்று நிர்வாகத்தில் சிலரிடம் கேட்டோம்.

""சார்... கடந்த 2001 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது, உள்ளாட்சி அமைப்பில் இருந்த மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு பொதுக்குடிநீர்க் குழாய்களை பதிக்க வற்புறுத்தி, குழாய்களை பதித்தனர். இதனால் வீடுகளுக்கு பல புதிய குடிநீர்க்குழாய் இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் கணிசமாக குறைந்தது. மாநகராட்சி அங்காடிகள், சந்தைக்கூடங்களை ஏலம் எடுப்பதில் ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டதால் குறிப்பிட்ட தொ

"முதல்வரின் மாவட்டத்தில் தொழிலாளர்களின் ரத்தம் உறிஞ்சப்படுகிறது' என குமுறுகிறார்கள். சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம் பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும், முதன்மை அலுவலகமும் இயங்கி வருகிறது. துப்புரவுப் பணியாளர்கள் முதல் முதன்மை ஊழியரான ஆணையர்வரை ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

ஊழியர்கள் சம்பளம், வாகன எரிபொருள், அலுவலக பராமரிப்பு, மின்கட்டணம் என மாதம் 21 கோடி ரூபாய் வரை அடிப்படை செலவினங்களுக்காக நிதி தேவைப்படுகிறது.

ss

ஆனால், இன்றைய நிலவரப்படி ஊழியர் களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்கவே சம்பள கணக்கில் போதிய நிதி இல்லை என கைகளை அகல விரித்துள்ளது சேலம் மாநகராட்சி நிர்வாகம். மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் தத்தளித்து வரும் தமிழக அரசைக் காட்டிலும், சேலம் மாநகராட்சி நிர்வாகம் கடன் சுமையால் தடுமாறிக்கொண்டி ருப்பதாகச் சொல்கிறார்கள் நிர்வாகத்தின் வரவு- செலவு விவகாரங்களைக் கவனிக்கும் ஊழியர்கள்.

அப்படி என்னதான் நிதி நெருக்கடி பிரச்னை? என்று நிர்வாகத்தில் சிலரிடம் கேட்டோம்.

""சார்... கடந்த 2001 முதல் 2016 வரை அ.தி.மு.க. ஆட்சியின்போது, உள்ளாட்சி அமைப்பில் இருந்த மேயர் முதல் கவுன்சிலர்கள் வரை எல்லோரும் தங்கள் இஷ்டத்திற்கு பொதுக்குடிநீர்க் குழாய்களை பதிக்க வற்புறுத்தி, குழாய்களை பதித்தனர். இதனால் வீடுகளுக்கு பல புதிய குடிநீர்க்குழாய் இணைப்பு மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் கணிசமாக குறைந்தது. மாநகராட்சி அங்காடிகள், சந்தைக்கூடங்களை ஏலம் எடுப்பதில் ஆளுங்கட்சியினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் எந்த ஒரு கடையும் ஏலம் போகவில்லை. அதனாலும் வருவாய் குறைந்தது.

எல்லாவற்றுக்கும் மேல், வரி வருவாய்தான் முதன்மை வருவாய் மூலமாக இருந்து வந்த நிலையில், வரிக்குறைப்பு பற்றி உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டதால், வரி வசூலிப்பிலும் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டு மூன்று முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்துவிடுவதால், அவருடன் வரும் அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சிக்காரர்களின் உணவு உபசரிப்பு, போக்குவரத்துச் செலவினங்கள்வரை எல்லாமே எங்கள் தலையில்தான் கட்டி விடுகின்றனர். இதற் கெல்லாம் எந்த கணக்குவழக்குகளும் கிடையாது.

இது மட்டுமின்றி, அம்மா உணவகங்களால் மாநகராட்சிக்கு நிகர நட்டம் ஏற்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்காக சேலம் மாநகராட்சி பெற்ற கடன்களுக்காக மாதந்தோறும் வட்டி மட்டுமே 3.50 கோடி ரூபாய் செலுத்தி வருகிறோம். அதனால் தான், ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் கொடுக்க முடியவில்லை. செப். 28-ஆம் தேதி ஆகியும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப் படாததற்கும் அதுதான் காரணம்'' என புலம்பித் தள்ளினர் ஊழியர்கள்.

இது ஒருபுறம் இருக்க, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, ஊழியர்களிடம் அவர்களின் சம்பளத் தொகையில் இருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப். தொகையும் இன் னும் அவர்களின் பி.எப். கணக்கில் செலுத்தப்படா மல் உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வகையில் மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பி.எப். தொகை பிடித்தம் செய்யப்பட்டு கணக்கில் செலுத்தப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலரும், பா.ஜ.க. முன்னாள் கிளைத்தலைவருமான தாதை சிவராமன், ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களின் படி, அம்மா உணவகம், கொசு ஒழிப்புப் பிரிவு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பிரிவுகளில் பணி யாற்றிவரும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் பட்ட 3.36 கோடி ரூபாய் பி.எப். தொகை, இதுவரை பி.எப். கணக்கில் செலுத்தாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. சூரமங்கலம் மண்டல ஊழியர்கள் நீங்கலாக மட்டுமே இவ்வளவு தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சூரமங்கலம் மண்டலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை யும் சேர்த்தால் 5 கோடி ரூபாய்க்கு மேல் பி.எப். தொகையை ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்காமல் ஏமாற்றிவருவது தெரிய வந்துள்ளது.

''சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஊழியர் களிடம் பிடித்தம் செய்த 5 கோடி ரூபாய் பி.எப். தொகையை, பல ஆண்டுகளாக ஊழியர்களின் பி.எப். கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்திருக் கிறது. அந்தத் தொகை என்ன ஆனது? அதிகாரிகள் சுருட்டிவிட்டார்களா? என்ற விவரங் களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இது மட்டுமின்றி, 2014 முதல் 2018 வரை துப்புரவு பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்த சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், கொசு ஒழிப்புப் பணிகளை ஒப்பந்தம் எடுத்திருந்த ஐலேக் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனமும் ஊழியர்களிடம் பிடித்த செய்த பி.எப். தொகையை முறையாக அவர்களின் கணக்கில் செலுத்தாமல் ஸ்வாகா செய் திருக்கின்றன.

எனது புகார்களின்பேரில் இந்த மூன்று நிறுவனங்கள் மீதும் இ.பி.எப். அலுவலகத்தில் விசாரணை நடந்துவருகிறது. மாநகராட்சியின் அலட்சியத்தால் பணியின்போது இறந்த தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் பி.எப். பணத்தை எடுக்க முடியாமலும், பென்ஷன் பலன்களைப் பெறமுடியாமலும் அல்லல்படுகின்ற னர். இப்படி செயல் திறனற்ற மாநகராட்சிக்குதான் "சிறந்த மாநகராட்சி' என்று தமிழக அரசு விருது கொடுத்துள்ளது; வெட்கக்கேடு'' என்று கொதித்தார் தாதை சிவராமன்.

நம்முடைய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன.

அதாவது, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவரும் தொழிலகங்களில் ஊழியர்களின் சம்பளத் தொகையில் இருந்து பி.எப். (தொழிலாளர் வருங்கால வைப்புநிதி) கணக்கில் மாதந்தோறும் 12 சதவீதம்வரை பிடித்தம் செய்யப்படும். அத்தொகைக்கு நிகராக வேலை அளிப்பவரும் (இங்கே சேலம் மாகராட்சி நிர்வாகம்) 12 சதவீதம் அந்த ஊழியரின் கணக்கில் செலுத்தவேண்டும். வேலை அளிப்பவர் செலுத்தும் 12 சதவீத தொகையில் 8.33 சதவீதம், ஊழியர்களின் பென்ஷன் கணக்கில் தனியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு செலுத்தப்படும் பி.எப். தொகைக்கு தற்போது 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி நிர்வாகம் பி.எப். தொகை செலுத்தாமல் உள்ளதை சுட்டிக்காட்டி, பலமுறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் கண்டும்காணாமலும் இருந்துள்ளது. இதனால் வெறுத்துப்போன சேலம் மண்டல பி.எப். அலுவலக அதிகாரிகள், நேரடியாக மாநகராட்சி அலுவலகத்தில் சென்று அங்குள்ள கணக்குவழக்கு ஆவணங்களை ஆய்வுக்காக கேட்டபோது அவர்களை உள்ளே விடாமல் மாநகராட்சி ஊழியர்கள் தகராறிலும் ஈடுபட்டுள்ள சம்பவமும் நடந்துள்ளது.

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷிடம் விளக்கம் பெற முயன்றோம். அவர் நம் செல்போன் அழைப்பை எடுப்பதை தவிர்த்தார். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாநகராட்சி நிர்வாகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பி.எப். தொகையை உரியவர்களின் கணக்கில் செலுத்தமுடியாமல் தடுமாறி வருகிறோம். இப்போது பலவகையிலும் செலவினங் களைக் குறைத்தும், வரி வசூலை தீவிரப்படுத்தியதாலும்தான் தாமதம் ஆனாலும் ஊழியர்களுக்கு சம்பளமாவது கொடுக்க முடிகிறது'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இதையடுத்து நாம் சேலம் மண்டல இ.பி.எப். அலுவலக அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.

""ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையை, பிரதி மாதம் 15-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊழியரின் பி.எப். கணக்கில் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மோசடி செய்ததாக புகார் அளிக்க முடியும். சேலம் மாநகராட்சி நிர்வாகம் பி.எப். தொகை செலுத்தாமல் இருப் பது குறித்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும் கண்டுகொள்ளவில்லை.

கடைசியாக செப். 24-ஆம் தேதி மாநகராட்சி உதவி ஆணையர் ரமேஷ்பாபு என்பவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரோ, மாநகராட்சி செலுத்த வேண்டிய பி.எப். தொகையை தள்ளுபடி செய்யும்படி கடிதம் அளித்தார். பி.எப். தொகை என்பது ஊழியர்களின் பணம். அதை எந்தக் காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யமுடியாது. அவர்கள் அடிப்படை புரிதல்கூட இல்லாமல் நடந்துகொள்கின்றனர். விசாரணை முடிவில், மாநகராட்சியின் வங்கிக் கணக்கு, பி.எப். அலுவலக கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் சட்டத்தில் இடமிருக் கிறது. இப்படி பி.எப். பணத்தைச் செலுத்தாமல் இருப்பதும் மோசடிக் குற்றமே'' என்றார்.

பி.எப். நிதி என்பது ஊழியர்களின் செங்குருதி என்பதை சேலம் மாநகராட்சி உணர வேண்டும். குருதியையே உணவாகக் கொள்வோரால் மட்டுமே பி.எப். தொகையிலும் மோசடி செய்யமுடியும்.

-இளையராஜா

nkn111019
இதையும் படியுங்கள்
Subscribe