"ஹலோ தலைவரே, தலைமைச்செயலகம் கடந்த நாலஞ்சு நாளா சஸ்பென்ஸ் கலந்த பரபரப்பில் மூழ்கியிருந்ததே.''”
"ஆமாம்பா, இந்த 2022 புதிய ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கூடுதே. கவர்னர் தொடர்பான சஸ்பென்ஸா?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் மரபுப்படி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் 5-ந் தேதி தொடங்குது. பொதுவாக ஆளுநர் உரை என்பது ஆளும் கட்சியின் நிதித்துறை தயாரித்துக் கொடுக்கிற அரசின் அறிக்கை. அதை கவர்னராக இருப்பவர் அப்படியே வாசிப்பதுதான் வழக்கம். தற்போதைய நிதி நிலைமை, அரசின் கொள்கை சார்ந்த திட்டங்கள், புதிய அறிவிப்பு கள், நடப்பாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் ஆகியவற்றுக்கு முன்னோட்டம் மாதிரி இருக்கும். அந்த வகையில் இப்போதைய கவர்னர் உரையில் ஒன்றிய அரசு, நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழக அரசை வஞ்சிக்கிறது என்பது போன்ற வாசகங்களும் அதில் இடம்பெற்றிருக்கு தாம்.''”
"ம்...''”
"ஒன்றிய அரசின் பிரதிநிதியா, பா.ஜ.க.வின் கொள்கைகளை பிரதிபலிக்கக்கூடியவரா இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி இதை வாசிப்பாராங்கிற கேள்வி எழுந்திருக்கு. இந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரை, பழையபடி கோட்டை யில் உள்ள சட்டப் பேரவையிலேயே நடத்தும் முடிவையும் தி.மு.க. அரசு எடுத்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தது. ஒமிக்ரான் பரவலால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டி ருக்கும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் போதுமான இடைவெளியுடன் உட்கார வேண்டிய அவசியம் கருதி, மீண்டும் கலைவாணர் அரங்கிலேயே பேரவைக் கூட்டத்தை நடத்த முடிவு செய்திருக்காங்க. அதற்கான அறிவிப்பை ராஜ்பவன் வெளியிட்டிருக்கு.''”
"உதயநிதி ஸ்டா

"உதயநிதி ஸ்டாலினைக் குறிவைத்து ஒரு யுத்தத்தை பா.ஜ.க. தரப்பு தொடங்கியிருக்கே?''”
"தி.மு.கவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கணும்கிறதுதான் பா.ஜ.க. அசைன் மெண்ட். அதனடிப்படையில், உதயநிதிக்கு எதிராக, எதையாவது செய்யுங்கள்னு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன் சகாக்களை உசுப்பிவிட்டு வருகிறார். சில வருடங் களுக்கு முன் வெளிநாட் டில் இருந்து உதயநிதி இறக்குமதி செய்த சொகுசுக் கார் விவகாரத்தில் ஏதாவது பிடி கிடைக்குமான்னு பா.ஜ.க. டீம் துருவியது. இது குறித்து சி.பி.ஐ. தரப்பில் இருந்து சில தகவல்களை அவர்கள் சேகரித்து வைத்திருக்கிறார்களாம். இந்த விவகாரமெல்லாம் ஏற்கனவே கிளப்பப்பட்டு, சட்டரீதியா சந்திச்சதுதான்னு தி.மு.க தரப்பு தெம்பா இருக்குது.''”
"தி.மு.க.வின் லோக்கல் பிரமுகர்களால் தலைமைக்கு நெருக்கடி இருக்கத்தானே செய்யுது?''”
"அது உண்மைதாங்க தலைவரே... ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, எல்லாவற்றையும் தெளிவா மேனேஜ் செய்து வருவதோடு, மக்களிட மும் தன் செல்வாக்கைச் சகல வழிகளிலும் பெருக்கிக் கிட்டு இருக்குது. பா.ஜ.க. நினைக்கிற அளவுக்கு கேப் எதுவும் கிடைக்கலை. அதனால்தான் தி.மு.க.வில் இருக்கும் வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர் கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள்னு எல்லோரையும் அது குறி வைக்குது. தி.மு.க. லோக்கல் பிரமுகர்கள் பண்ணுற அலப்பறைகளை கரெக்ட்டா ரிப்போர்ட் எடுக்குது பா.ஜ.க. தரப்பு. இதை வைத்து, சட்டப்பேர வைக் கூட்டத்தில் பிரச்சினையாக்க நினைக்கிதாம்.''
"ஒரு பூங்கொத்து விவகாரமும் சுழன்றுக்கிட்டு இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.சும், உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகாவும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துக்கிட்டாங்க. அந்த விழாவில், குத்துவிளக்கை கிருத்திகா ஏற்றி வைக்க, அருகில் பூங்கொத்துடன் ராதாகிருஷ்ணன் நின்றுகொண்டிருக்கும் புகைப் படத்தை சிலர் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, "கிருத்திகாவிற்கு கொடுக்கப்பட்ட பொக்கேவை ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சுமக்கிறார்'னு மீம்ஸ்களை கிரியேட் பண்ணி பரபரப்பா உலவ விட்டாங்க. ஆனால், "சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன், தனக்கு வழங்கப்பட்ட பூங்கொத் தைத்தான் கையிலே வச்சிருந்தார். இதுகூடத் தெரியாம சோஷியல் மீடியாக்கள் வதந்தி, ஒமைக்ரானை கிளப்புதே'ன்னு ஐ.ஏ.எஸ். வட்டாரம் எரிச்சலடையுது.''’
"ஒரு ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் ஒரு ஆட்சியை மாற்றுவதற்கும் சோஷியல் மீடியா கை கொடுக்கும்னு நம்புற காலமாச்சே இது.''”
"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்னு சோஷியல் மீடியாக்களில் கசியுது. அந்தப் பொறுப்பில் இருந்த இந்தியா சிமெண்ட் சீனிவாசனின் மகள் ரூபா மெய்யப்பன் ராஜினாமா பண்ணிவிட்டார். அதனால், அவர் இருந்த பதவியில் உதயநிதி ஸ்டாலின் உட்காரு வதற்கான முயற்சிகள் நடப்பதா செய்திகள் வந்துச்சு. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, உதயநிதி அந்தப் பதவிக்கு வரமாட்டார். அந்த அசோசியேசன் துணைத்தலைவராக இருக்கும் அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணிதான், அசோசியேசன் தலைவர் பதவியில் உட்கார காய் நகர்த்திக்கிட்டு இருக் கார்னு சொல்லுது கிரிக்கெட் வட்டாரம்.''”
"சரிப்பா... கடந்த முறை நாம் பேசும்போது தி.மு.க. அதிகார மையத்துக்கு நெருக்கமான ஒரு கட்டுமானத் தொழில் நிறுவனத்தை வருமானவரித் துறை குறி வைக்குதுன்னு செய்தி பகிர்ந்துக்கிட்டோமே... அந்த நிறுவனம் பத்தி போட்டுக் கொடுத்தது இன்னொரு நிறு வனம்னு சொல்லப் படுதே...''
"ஆமாங்க தலைவரே... தி.மு.க. அதிகார மையத்துக்கு நெருக்கமான அந்த நிறுவனத்தை தொழில் போட்டி காரணமா இன்னொரு அ.தி. மு.க. ஆதரவு நிறு வனம்தான் போட்டுக் கொடுத்ததாம். இந்த நிறுவனம் ஓ.பி. எஸ்.ஸுக்கு நெருக்கமானதாம். கடந்த ஆட்சியில் அது அசுரப் பாய்ச்சலா நடந்துச்சு. இப்ப ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தால், செல்வாக்கை பெருக்கிக்கொண் டிருக்கும் நிறுவனத்தை நிம்மதியா இருக்கவிடக் கூடாதுன்னு பக்குவமா பள்ளம் வெட்ட முனைஞ்சிருக்கு.''
"முன்னாள் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் பாணியில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஈ.சி.ஆரில் பிரமாண்ட மான சொகுசு பங்களாவைக் கட்டிக்கிட்டு இருக்காரே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சிக் காலத்தில் கனிம வளத்துறையில் இருந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியான அதுல் ஆனந்த், அப்போதைய முதல்வரான எடப்பாடிக்கு மிக நெருக்கமான அதிகாரியாக இருந்தார். அவர் இப்போது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் அக்கரைங்கிற கிராமத்தில், விதிமுறைகளுக்குப் புறம்பாக கடலில் இருந்து 50 மீட்டர் தூரத்தி லேயே 56 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான சொகுசு பங்களாவைக் கட்டிக்கிட்டு இருக்காராம். இதை சுட்டிகாட்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பு, கடந்த ஆட்சிக்காலத்தில் முறை கேடாக சம்பாதித்த பணத்தில்தான் இப்படி ஒரு பங்களாவை அதுல் கட்டறார். விரைவில் இவர் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கப்போறார்னு சொல்லுது.''”
"லஞ்சஒழிப்புத் துறைன்னாலே அ.தி.மு.க. மாஜிக்கள் நடுங்க ஆரம்பிச்சிட்டாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, இதற்குமுன் இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், மாஜிக்களின் வீடுகளுக்கு ரெய்டுக்குப் போறாங்கன்னா, அவங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்டவங்களுக்கு செய்தி போகும்படி நடந்துக்குவாங்களாம். இப்ப லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.யாக இருக்கும் பவானீஸ்வரி, ரொம்பவும் கறாராக இருக்கிறாராம். அதனால்தான் மாஜி வேலுமணியைக் குறிவைத்து ரெய்டுகள் நடந்தப்ப, வேலுமணியால் உஷாராக முடியலை. 90 இடங்களுக்கு மேல் 3 நாட்கள் ரெய்டு செய்து சலிச்சி எடுத்துட்டாங்க. அதனால் அவர் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் சிக்கிக்கிச்சு. அடுத்து தன்னைத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை குறிவைக்கப் போகுதுன்னு நம்பும் மாஜி மந்திரி சி.வி.சண்முகம், கவர்னரை சந்திச்சி தி.மு.க. அரசு மீது புகார் கொடுத்தார். அதோட, தன் கோபத்தை எல்லாம் முதல்வர் ஸ்டாலினை தன் பாணியில் திட்டி, தணிச்சிக்கிறாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். சசிகலா சமீபநாட்களா கடும் அப்செட்டில் இருக்கிறாராம். எடப்பாடிக்கு எதிராக அவர் செய்யும் எந்த அரசியலும் செல்லுபடி ஆகலைங்கிறது அவர் வருத்தமாம். குறிப்பாக அ.தி.மு.க.வைக் கைப்பற்றும் தன் திட்டம் வெறும் கனவாகவே போய்டுமோனு அவர் கவலைப்படறாராம். அதனால், கேரளாவைச் சேர்ந்த தனது ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றி விவாதிச்சிருக்கார். அப்ப அவங்க, ஏப்ரல் வரை கஷ்டங்களைக் கடுமையா அனுபவிக்க நேரும். அதுக்குப் பிறகுதான் கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக வரும். அதன்பிறகுதான் நீங்கள் நினைத்ததை எல்லாம் சாதிக்க முடியும்னு ஆறுதலாச் சொல்லி இருக்காங்களாம்.''”