உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சியினரும் பல இடங்களில் 90 சதவிகித வெற்றியைப் பெற்றிருப்பது, ஒரு கட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வை ஆட்டம் காண வைத்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மாநகராட்சி -நகராட்சித் தேர்தலிலும் தி.மு.க. இதே வேகத்தைக் காட்டும். போதாக்குறைக்கு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலையும் நடத்தி விட்டால் அ.தி.மு.க.வினர் இனி அரசியல் அதிகாரத்தின் வாசனை யையே நுகர முடியாது என்பதுதான் அ.தி.மு.க. தலைவர்களின் கருத்தாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவு களை தனது வீட்டிலிருந்த தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் அதிர்ந்து போனார்கள். அ.தி.மு.க. சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கோவை பக
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துகளிலும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் எல்லா இடத்திலும் இரட்டை இலக்கைத் தொடுவோம், 10-ல் இருந்து 99 வரை பதவிகளின் எண்ணிக்கை இருக்கும் என அ.தி.மு.க. கணக்குப் போட்டது. ஆனால் தி.மு.க.வும் கூட்டணிக் கட்சியினரும் பல இடங்களில் 90 சதவிகித வெற்றியைப் பெற்றிருப்பது, ஒரு கட்சி என்ற அடிப்படையில் அ.தி.மு.க.வை ஆட்டம் காண வைத்துள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள மாநகராட்சி -நகராட்சித் தேர்தலிலும் தி.மு.க. இதே வேகத்தைக் காட்டும். போதாக்குறைக்கு கூட்டுறவு சங்கங்களின் தேர்தலையும் நடத்தி விட்டால் அ.தி.மு.க.வினர் இனி அரசியல் அதிகாரத்தின் வாசனை யையே நுகர முடியாது என்பதுதான் அ.தி.மு.க. தலைவர்களின் கருத்தாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் முடிவு களை தனது வீட்டிலிருந்த தொலைக்காட்சி மூலம் பார்த்துக் கொண்டிருந்த இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் அதிர்ந்து போனார்கள். அ.தி.மு.க. சட்ட மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற கோவை பகுதியில் தி.மு.க. உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஊரகப் பகுதிகளில் தி.மு.க.வைவிட அ.தி.மு.க.தான் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே வலுவான கட்சி. அதனால், தி.மு.க. ஆளும்கட்சி என்ற அதிகாரத்தில் துஷ்பிரயோ கம் செய்தாலும் அ.தி.மு.க. தனது இயல்பான செல்வாக்கால் நிச்சயம் ஜெயிக்கும் என்பதுதான் எடப்பாடியின் கணக்கு. முன் னாள் உளவுத்துறை அதிகாரி யான சத்தியமூர்த்தியும் இதே கணக்கை எடப்பாடியிடம் கொடுத்திருந்தார். அந்த கணக்குகள் டமாலாகிவிட்டன.
தேர்தல் முடிவுகள் வந்துகொண் டிருக்கும் போதே யாரை இந்த தோல்விக்குப் பொறுப்பாக்கலாம் என்கிற சிந்தனை அ.தி.மு.க.வினர் மத்தியில் ஓட ஆரம்பித்தது. ஓ.பி.எஸ். இந்த தேர்தலில் அதிகம் பிரச்சாரம் செய்யவில்லை. இ.பி.எஸ்.தான் ஒன்றாம் தேதியே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். ஆனால், தேவைக் கான பணத்தை தரவில்லை. ஓ.பி.எஸ். தன் மடியை அவிழ்க்கவே இல்லை. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூருக்கு பொறுப்பேற்ற வேலுமணி, கொஞ்சம் பணத்தை கொடுத்தார். அதனால்தான் திருப்பத்தூரில் அ.தி.மு.க. கொஞ்சம் வென்றது. தென் மாவட்டங்களில் அதைவிட மோசம், எந்த முன்னாள் அமைச்சரும் சரியாக வேலை செய்யவில்லை.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கும் அ.தி.மு.க. வின் நட்சத்திர பேச்சாளர் எடப்பாடிதான். அவர்தான் இந்த இமாலய தோல்விக்கு பொறுப்பு என்கிற குரல்கள் அ.தி.மு.க.வில் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு, அதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல். அதில் ஓ.பி.எஸ்.ஸை ஓரம்கட்ட வேண்டும், ஒற்றைத் தலைமையாக எடப்பாடி வரவேண்டும் என ஏகப்பட்ட திட்டங்களை எடப்பாடி போட்டிருந்தார். அந்தனைக்கும் எமனாக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது என எடப்பாடி அணியினர் கவலைப்படுகிறார்கள். ஓ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை இந்த தோல்வி எடப்பாடிக்கு விழுந்த அடி என்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் சசிகலா அணியுடன் இணையவேண்டும் என பா.ஜ.க. சொன்னது. அதை எடப்பாடி கேட்கவில்லை. இனியாவது சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ். வட்டாரங்கள் கோரஸ் பாடத் தொடங்கியுள்ளன.
சசிகலா வந்தால் கொடநாட்டில் கொள்ளையடித்தது பற்றி கணக்கு கேட்பார். அதை பேசித் தீர்த்துக்கொள்ளலாம். அதற்காக தி.மு.க. விசுவரூபம் எடுப்பதை அனுமதிக்க முடியுமா? என்கிற விவாதம் அ.தி.மு.க.விற்குள் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த விவாதத்தை எடப்பாடி எதிர்ப்பது கடினம். அ.தி.மு.க. என்கிற கட்சியை கட்டுக்குள் வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா அல்ல என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். கடந்த வாரம் அ.தி.மு.க.வின் பொன்விழாவை எப்படிக் கொண்டாடுவது என எடப்பாடி கூட்டிய கூட்டத்தில் எடுத்த முக்கிய விவாதமே, 16-ஆம் தேதி ஜெ.வின் சமாதிக்குச் செல்லும் சசிகலா எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வரக்கூடாது என்பது குறித்துதான். அதை தடுப்பதற்கான வேலையை சட்டபூர்வமாகச் செய்யவேண்டும் என எடப்பாடி பேசினார்.
பொன்விழா மலர், மாநாடு இதைப் பற்றிய விவாதத்தில் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர், இடத்தைக் கொடுத்த ஜானகியின் படம் எனப் பேச்சு வந்தபோது, ஜே.சி.டி.பிரபாகரனுக்கும் முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கும் வாக்குவாதமானது.
கட்சியின் அவைத்தலைவராக சசிகலா எதிர்ப்பாளரான ஜெயக்குமாரை கொண்டுவரலாம் என சிலர் பேச, தமிழ்மகன் உசேன், பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, தனபால் என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. கடைசியில் எடப்பாடி பொதுச்செயலாளர், ஓ.பி.எஸ்., அவைத்தலைவர் என பேச்சுவர, ஓ.பி.எஸ். முகம் சுருங்கிப்போனது என்கிறார்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
உள்ளாட்சித் தேர்தல் முடிவு களைப் பற்றி விவாதிக்க மறுபடியும் மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளார் எடப்பாடி. ஆனால் சசிகலா, அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் அ.தி.மு.க. மா.செ.க்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. நிர்வாகிகளை காசு கொடுத்து விலைக்கு வாங்கி பலத்தைக் காட்ட முடிவு செய்துள்ள சசி, தனது அசைவுகளை ரகசியமாக வைத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் தோல்வி நிச்சயம் சசிகலாவுக்கு ஒரு பூஸ்ட்டாக அமையும் என அடித்துச் சொல்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.