விருதுநகர் மாவட்டம்
கூட்டணிக் கட்சிகளை வெறுப்பேற்றிய கழகங்கள்!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இடங்கள் தொடர்பாக தி.மு.க. மா.செ.க்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவுடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தியும், 15 ஆம் தேதி இரவு வரை யிலும் உடன்பாடு ஏற்படாமல் வெறுத்துப்போய், "தனித்துப்போட்டி' என்று சிலிர்த்து நின்று கோபமுகம் காட்டினார்கள் சி.பி.எம். கட்சியினர்.
காங்கிரஸ் தரப்பிலோ, “""பெரிய கட்சி என்று எங்களைப் பார்க்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., வி.சி. கட்சிகளைப் போல எங்களுக்கும் யூனியனுக்கு ஒரு இடம்தானாம். சி.பி.எம். போல, தனித்துப் போட்டி என்றெல்லாம் பேச்சுக்குக்கூட எங்களால் எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. ஒவ்வொரு யூனியனிலும் காங்கிரசுக்கென்று ஓட்டு வங்கி இருப்பதை தி.மு.க. ஏனோ உணரவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது அ.தி.மு.க.வுக்குத்தானே சாதகமாகிவிடும்? அதனால்தான் அமைதி காக்க வேண்டியதாகி விட்டது'' என்று புலம்புகின்றனர்.
அ.தி.மு.க. மா.செ. கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போன்றோர் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்திய விதத்தைப் பார்ப்போம்!
எடுத்த எடுப்பிலேயே, “""நீங்க நிற்கணும்னு சொல்லுற இடத்துல நிற்கிறதுக்கு எங்காளுங்க ரெடியா இருக்காங்க. எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. உங்ககிட்ட அந்தளவு இருக்கா?'' என்று கேட்டு நிலைகுலைய வைத்துவிட்டு, ""சரி.. உங்களால எவ்வளவு செலவு பண்ண முடியும்? அந்த வார்டுல நின்னா ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்துச்சு? அ.தி.மு.க. கூட்டணிங்கிறது இருக்கட்டும். உங்க சொந்த செல்வாக்கு என்ன?'' என்று சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டு, புள்ளிவிபரத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் கூட்டணிக் கட்சியினரை வேட்புமனு தாக்கல் நாள் வரையிலும் இழுத்தடிப்பது ஆளும் கட்சியினரின் ராஜதந்திரமாம். பா.ஜ.க. தரப்பில் ""அட, போங்கப்பா.. நீங்களும் உங்க ஒதுக்கீடும்..'' என்று எரிச்சலாகிவிட்டார்கள்.
தே.மு.தி.க.வினரிடம், ""இதுக்கு முன்னால நீங்க நின்னு ஜெயிச்ச இடத்தை மட்டும் கேளுங்க'' என்று அ.தி.மு.க. தலைகள் சிடுசிடு முகங்களைக் காட்டியிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சியினரின் நிலையோ பரிதாபம். அக்கட்சியின் விருதுநகர் மா.செ.க்கள் தரப்பில், பேச்சு வார்த்தை அனுபவத்தை சரத்குமாருக்கு மெசேஜாக அனுப்பிவிட்டார்கள். இதோ அந்த மெசேஜ்:
""உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்தோம் அண்ணா. நேற்றுதான் அழைப்பு விடுத்தார்கள். சந்திக்கச் சென்றோம். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஏதோ பேசிவிட்டு, பகல் முழுக்கக் காத்திருக்க வைத்துவிட்டு, லேட் நைட்டில்தான் எங்களிடம் பேசினார். தே.மு.தி.க., பா.ஜ.க.வுக்கெல்லாம் சீட் ஒதுக்கிவிட்டார்கள். நம் கட்சிக்கு மட்டும் சரியான அணுகுமுறை இல்லை
விருதுநகர் மாவட்டம்
கூட்டணிக் கட்சிகளை வெறுப்பேற்றிய கழகங்கள்!
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இடங்கள் தொடர்பாக தி.மு.க. மா.செ.க்கள், கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் தங்கம் தென்னரசுவுடன் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தியும், 15 ஆம் தேதி இரவு வரை யிலும் உடன்பாடு ஏற்படாமல் வெறுத்துப்போய், "தனித்துப்போட்டி' என்று சிலிர்த்து நின்று கோபமுகம் காட்டினார்கள் சி.பி.எம். கட்சியினர்.
காங்கிரஸ் தரப்பிலோ, “""பெரிய கட்சி என்று எங்களைப் பார்க்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., வி.சி. கட்சிகளைப் போல எங்களுக்கும் யூனியனுக்கு ஒரு இடம்தானாம். சி.பி.எம். போல, தனித்துப் போட்டி என்றெல்லாம் பேச்சுக்குக்கூட எங்களால் எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. ஒவ்வொரு யூனியனிலும் காங்கிரசுக்கென்று ஓட்டு வங்கி இருப்பதை தி.மு.க. ஏனோ உணரவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறினால், அது அ.தி.மு.க.வுக்குத்தானே சாதகமாகிவிடும்? அதனால்தான் அமைதி காக்க வேண்டியதாகி விட்டது'' என்று புலம்புகின்றனர்.
அ.தி.மு.க. மா.செ. கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் போன்றோர் கூட்டணிக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்திய விதத்தைப் பார்ப்போம்!
எடுத்த எடுப்பிலேயே, “""நீங்க நிற்கணும்னு சொல்லுற இடத்துல நிற்கிறதுக்கு எங்காளுங்க ரெடியா இருக்காங்க. எங்ககிட்ட நெறய பணம் இருக்கு. உங்ககிட்ட அந்தளவு இருக்கா?'' என்று கேட்டு நிலைகுலைய வைத்துவிட்டு, ""சரி.. உங்களால எவ்வளவு செலவு பண்ண முடியும்? அந்த வார்டுல நின்னா ஜெயிக்க முடியும்கிற நம்பிக்கை உங்களுக்கு எப்படி வந்துச்சு? அ.தி.மு.க. கூட்டணிங்கிறது இருக்கட்டும். உங்க சொந்த செல்வாக்கு என்ன?'' என்று சம்பிரதாயமான கேள்விகளைக் கேட்டு, புள்ளிவிபரத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பேச்சுவார்த்தை என்ற பெயரில் கூட்டணிக் கட்சியினரை வேட்புமனு தாக்கல் நாள் வரையிலும் இழுத்தடிப்பது ஆளும் கட்சியினரின் ராஜதந்திரமாம். பா.ஜ.க. தரப்பில் ""அட, போங்கப்பா.. நீங்களும் உங்க ஒதுக்கீடும்..'' என்று எரிச்சலாகிவிட்டார்கள்.
தே.மு.தி.க.வினரிடம், ""இதுக்கு முன்னால நீங்க நின்னு ஜெயிச்ச இடத்தை மட்டும் கேளுங்க'' என்று அ.தி.மு.க. தலைகள் சிடுசிடு முகங்களைக் காட்டியிருக்கின்றன. சமத்துவ மக்கள் கட்சியினரின் நிலையோ பரிதாபம். அக்கட்சியின் விருதுநகர் மா.செ.க்கள் தரப்பில், பேச்சு வார்த்தை அனுபவத்தை சரத்குமாருக்கு மெசேஜாக அனுப்பிவிட்டார்கள். இதோ அந்த மெசேஜ்:
""உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்தோம் அண்ணா. நேற்றுதான் அழைப்பு விடுத்தார்கள். சந்திக்கச் சென்றோம். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் ஏதோ பேசிவிட்டு, பகல் முழுக்கக் காத்திருக்க வைத்துவிட்டு, லேட் நைட்டில்தான் எங்களிடம் பேசினார். தே.மு.தி.க., பா.ஜ.க.வுக்கெல்லாம் சீட் ஒதுக்கிவிட்டார்கள். நம் கட்சிக்கு மட்டும் சரியான அணுகுமுறை இல்லை அண்ணா. நாம் நின்றால் நிச்சயம் வெற்றி பெறக்கூடிய ராஜபாளையம் 16-வது வார்டையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தின் 9-வது வார்டையும் மட்டும்தான் கேட்டோம் அண்ணா!'' என்று உருக்கமாக விவரித்துள்ளனர்.
ஆனால் ச.ம.க. தலைவர் சரத்குமாரோ, ""நாங்கள் கேட்டதில் 90% இடங்களை அ.தி.மு.க. கொடுத்து விட்டதால் எங்களுக்கு திருப்தி'' என சொல்லியிருக்கிறார்.
அ.ம.மு.க.வை பொறுத்த மட்டிலும், விருதுநகர் மாவட்டத்தை, தங்களின் கோட்டை என்றே சொல்லி வருகின்றனர். அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட நிர்வாகியிடம் பேசினோம். “""ரெடி பொசிஷன்ல இருக்கோம். 100 பெர்சன்ட் போட்டியிடறோம். ஆமா. எல்லா மாவட்ட கவுன்சிலர்.. எல்லா ஒன்றிய கவுன்சிலர்.. நாலு தொகுதிலயும் 11 மாவட்ட கவுன்சிலர்.. 113 ஒன்றிய கவுன்சிலர்ன்னு, எல்லாருமே வேட்புமனு தாக்கல் பண்ணிட்டாங்க. அதேமாதிரி, கிழக்கு மாவட்டத்துலயும் எல்லாரும் கட்டிட்டாங்க'' என்றார்.
""பணபலம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகன், நேற்றுவரையிலும் அ.ம.மு.க.வில் இருந்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. பக்கம் வந்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் சீட் தராமல், இவரை வத்திராயிருப்பு ஒன்றியத்திலுள்ள நந்தம்பட்டியில் ஒன்றிய குழு உறுப்பினராகப் போட்டியிட வைக்கி றார்கள். இவர்தான் சேர்மன் வேட்பாளர் என்றும் சொல்லிவருகிறது அ.தி.மு.க. இப்படித்தான் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் பணத்தை மட்டும் நம்பியே ஊரக உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நிற்கின்றன'' என்கிறார்கள் லோக்கல் அரசியல் தெரிந்தவர்கள்.
-ராம்கி
ராமநாதபுரம் மாவட்டம்!
நடந்து முடிந்தது தேர்தல்!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்குட்பட்ட களரி ஊராட்சித் தலைவர் பதவி இட ஒதுக்கீடு அடிப்படையில் பட்டியலினத் தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சுமை தாங்கி, மேலசீத்தை, ஆனைகுடி, களரி ஆகிய நான்கு கிராமங்கள் உள்ளிட்ட இந்த ஊராட்சி பகுதியில் சுமார் 1,443 ஓட்டுகள் உள்ளன. இதில் சுமைதாங்கி கிராமத்தில் மட்டும் 453 வாக்குகள் உள்ளன.
இந்நிலையில்தான் வியாழனன்று மினி தேர்தலை நடத்திக்காட்டியுள்ளனர் சுமைதாங்கி கிராம மக்கள்.
காலை 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி 134 ஓட்டுகள் பதிவான நிலையில், "வாக்குச் சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்துவது சட்டம் மற்றும் தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது'’’ எனக் கூறி, ஓட்டுச் சீட்டுகள், ஓட்டுப் பெட்டி பானைகளை பறிமுதல் செய்த போலீஸார் அந்தப் பகுதி, வி.ஏ.ஓ.விடம் புகார்பெற்று வேட்பாளர்கள் நால்வர், ஓட்டுச் சீட்டு அச்சடித்துக் கொடுத்த அச்சக உரிமை யாளர், தேர்தலுக்கு ஏற்பாடு செய்தவர்கள் என மொத்தம் 8 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
""பல வருஷமாகவே எங்கள் கிராமத்தி லிருந்து யாரும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வரவில்லை. ஊராட்சித்தலைவராக வந்தவுக அத்தனை பேரும் களரி கிராமத்திலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டாங்க. இந்த முறை எப்படி யாவது எங்க கிராமத்திலிருந்து தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்னு பார்த்தால் நாலைந்து பேர் வந்துட்டாங்க. நாலைந்து பேர் போட்டியிட்டால் ஓட்டு சிதறும் என்பதால் எங்களுக் குள்ளாகவே கூடி ஒரு முடிவெடுத்தோம். அதன்படி ராமையா, ராஜா, வீரக்குமார், சேதுவீரபாண்டி ஆகியோர் மட்டும் போட்டியிட தனித்தனி சின்னங்கள் கொடுத்து, வேட் பாளர்கள் பெயருடன் வாக்குச் சீட்டுகளை அச்சடித்து, சமுதாயக் கூடத்தில் வைத்து தேர்தல் நடத்தினோம். போலீசிற்கு தகவல் தெரிந்து தேர்தலை நிறுத்திட்டாங்க'' என்கின்றனர் சுமைதாங்கி கிராம மக்கள்.
இதேபோல், தங்கச்சிமடம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு, ஜெனி, லோவியா தெரஸ், குயின்மேரி மற்றும் ரெஜி ஆகிய பெண்கள் போட்டியிடுவதாக அறி வித்து, சின்னம் இன்றி மினி தேர்தல் நடத்தி னர். 2000 வாக்குகள் பதிவான நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்து தேர்தல் நிறுத்தப்பட்டது.
மேலும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஆதனக்குறிச்சி ஊராட் சித்தலைவர் பதவியினை ரூ 21 லட்சத்திற்கு ஏலம் விட்டுள்ளனர் ஊராட் சிக்குட்பட்ட கிழவனேரி, ஆதனக்குறிச்சி, ஆதனக் குறிச்சி காலனி, கண்ணன் கொட்டகை ஆகிய 4 கிராமத்தார். எனினும், "ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த நட வடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தது தனிக்கதை.
-நாகேந்திரன்
தேனி!
காக்கிகள் முன்னிலையில் பம்பர் குலுக்கல்!
தேனி மாவட்டத்தில் உள்ள கொடுவிலார்பட்டி அருகே உள்ளது ஸ்ரீரங்கபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் மற்றும் ஒன்பது ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகள் உள்ளன. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரில் உள்ள கம்ப பவனம் திருமண மண்டபத்தில் கிராம கமிட்டித் தலைவர் பரசுராமன், செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் கிராமத்தினர் ஒன்றுகூடி, ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் பெயர்களை துண்டுச்சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர். அதேபோல்தான் வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்களின் பெயர்களையும் எழுதிப் போட்டு சிறுமி மூலம் வேட்பாளர்களை தேர்வு செய்ததில் 1-வது வார்டுக்கு சுப்புராம், 2-வது வார்டுக்கு சுந்த ரேசன், 4-வது வார்டுக்கு மகாலட்சுமி, 5-வது வார்டுக்கு ராமசாமி, 6-வது வார்டுக்கு சுதா, 7-வது வார்டுக்கு நடராஜன், 8-வது வார்டுக்கு ராமசாமி, 9-வது வார்டுக்கு லட்சுமி ஆகியோர் உறுப்பினர்களாகிவிட்டனர். இவர்களைத் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யக்கூடாது என கமிட்டி மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதற்கு ஊரில் உள்ள மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்தும் கூட போலீசார் முன்னிலையிலேயே குலுக்கல் நடந்ததுதான் பெரும் கூத்து.
இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது, ""தேனி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை ஸ்ரீரங்கபுரத்திற்கு அனுப்பி யிருக்கிறேன். குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
அப்போது ஏலம்! இப்போது கன்ஃபார்ம்!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டி ஊராட்சித் தலைவர் பதவியும் வார்டு உறுப்பினர்கள் பதவியும் ஏலத்தில் விடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. தலைவர் பதவியை 5 லட்சத்திற்கு தனலட்சுமி அண்ணாதுரையும், துணைத்தலைவர் பதவியை ஒன்றரை லட்சத் திற்கு மைக்செட் ரவியும், வார்டு உறுப்பினர் பதவியை 50 ஆயிரத்திற்கு ராஜ், பாண்டியன், செண்பகம், ஆட்டோ முருகன் ஆகியோரும் எடுத்திருந்தனர்.
அப்போது தேர்தல் ரத்தானதால், இப்போது அதே பதவிக்கு அதே ஆட்களை முடிவு செய்து கிராமக் கூட்டத்தில் தீர்மானம் போட்டுள்ளார்கள். "மேற்கண்ட ஐந்து பேரைத் தவிர, இப்போது யாரும் நாமினேஷன் போடக்கூடாது. மீறி போட்டால் ஊரைவிட்டு தள்ளி வைக்கப் படுவார்கள்' என தீர்மானமாக சொல்லிவிட்டார் களாம்.
-சக்தி
புதுக்கோட்டையில் புது டெக்னிக்!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகுணா என்கிற குண சேகரன். எழுத் தாளரும் சமூக ஆர்வலருமான இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கிராமத்தைப் பற்றி எழுதிய புத்தகம் ஒன்று, பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தால் வழக்கையும் சந்தித்தார் துரைகுணா. இன்னொரு வழக்கில் சிறைக்கும் சென்றார்.
அந்த துரைகுணா இப்போது, தனது மனைவி கோகிலா முன்மொழிய, குளந்திரான்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, கடந்த 12—ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அன்றைய தினம் இரவு, தேர்தல் ஆணையத்தின் வெப் சைட்டை ஓப்பன் பண்ணிப் பார்த்த போது, தீத்தான்விடுதி ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார் துரைகுணா. பழைய விவகாரங்களை மனதில் வைத்துக் கொண்டு, குணாவின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய, தேர்தல் அதிகாரிகள் புதுடெக்னிக்கை செயல்படுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்ட டெக்னிக்!
தஞ்சை மாவட்டம் திரு வோணம் ஒன்றியம் சிவவிடுதி கிராமத்தில் பட்டியலின மக்களின் எண்ணிக்கை 156 தான். ஆனால் தேர்தல் அதிகாரிகளோ மறுசீரமைப்பு எனச் சொல்லி 594 பேர் வசிப்பதாக அறிவித்து தனி ஊராட்சியாகவும் ஆக்கிவிட்டார்கள். "இதைக் கண்டித்து கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளோம், தேர்தலையும் புறக்கணிப்போம்' என்கிறார்கள் சிவவிடுதி கிராமத்தினர்.
இது வைத்தியின் டெக்னிக்!
ஒரத்தநாடு ஒன்றியத் தின் 31 வார்டுகளில் தே.மு.தி.க.வுக்கு ஒரு வார்டை மட்டும் ஒதுக்கினார் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரான எம்.பி.வைத்திலிங்கம். சரி, இதாவது கிடைச்சதே என ஆறுதல்பட்டுக் கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 4—ஆவது வார்டுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய தயாரானார் மாவட்ட மாணவரணி து.செ.அருள்தாஸ். "நீ ரெடியாயிட்டியா, நாங்களும் ரெடியாயிட்டோம்' என்ற கணக்குடன், அதே வார்டுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரையும் வேட்புமனு தாக்கலுக்கு அனுப்பிவிட்டார்கள்.
இத்தோடு விட்டாலும் பரவா யில்லை, தே.மு.க.வைச் சேர்ந்த சிலரை ‘கரெக்ட்’ பண்ணி, "தாஸு வேட்புமனு வேணாம் தாஸு' எனச் சொல்ல வைத்துவிட்டனர். வைத்தியின் இந்த ஷாக் வைத்தியத்தால் நொந்து போன அருள்தாஸ், "ஒரத்தநாடு ஒன்றிய தே.மு.தி.க.வினர் ஒட்டுமொத்தமாக கட்சியைவிட்டே விலகப் போறோம்' என்கிறார்.
-இரா.பகத்சிங்
திருவண்ணாமலை! குடும்பங்களின் ராஜ்யம்!
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.அரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் பதவியைக் குறிவைத்து 25—ஆவது வார்டை வாங்கிவிட்டார். அரங்கநாதனின் மகனும் துரிஞ்சாபுரம் ஒ.செ.வுமான ஜெயப்பிரகாசுக்கு ஒன்றிய கவுன்சிலருக்கான 7—ஆவது வார்டை ஒதுக்கியுள்ளனர்.
இதே போளூர் ஒன்றியக் குழு சேர்மன் பதவியைக் குறிவைத்து 16—ஆவது வார்டில் (முருகபாடி) போட்டி யிட சீட் வாங்கிவிட்டார் மாஜி எம்.எல்.ஏ.ஜெயசுதா. இது போதாதென்று, தனது மகன் விமல்ராஜுக்கு, அதே போளூர் ஒன்றியத்தில் 20—ஆவது வார்டு கவுன்சிலர் சீட்டையும் கைப்பற்றிவிட்டார் ஜெயசுதா.
"நான் மட்டும் விடுவேனா' என கணக்குப் போட்டு, வெம்பாக்கம் ஒன்றிய 8—ஆவது வார்டு சீட்டை தனது மருமகன் ராஜ்கணேஷுக்கும், 17—ஆவது சீட்டை தனது தம்பி குமரேசனுக்கும் ஒதுக்கிக் கொண்டார் மா.செ. தூசி மோகன்.
செய்யாறு ஒன்றியத்தின் மாஜி சேர்மன் விமலாவிற்கு 1—ஆவது வார்டும், அவரது கணவரும் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளருமான மகேந்திரனுக்கு 15—ஆவது வார்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனக்காவூர் ஒன்றிய சேர்மன் பதவியைக் குறிவைத்து மாஜி எம்.எல்.ஏ.வும் ஒ.செ.வுமான குணசீலன் 3—ஆவது வார்டிலும், மாஜி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அரவிந்தன் மாவட்ட கவுன்சிலர் பதவியைக் குறிவைத்து 16—ஆவது வார்டிலும் போட்டியிட சீட் வாங்கி யிருக்கிறார்கள்.
இப்படி, அப்பா, மகன், மருமகன், கணவன், மனைவி என குடும்பங் களின் ராஜ்யத்தைப் பார்த்து கொந்தளிப்பில் இருக்கிறார்கள் திருவண்ணா மலை ர.ர.க்கள்.
-து.ராஜா
பெரம்பலூர் அக்கப்போர்!
பெரம்பலூர்- இனாம் அகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திருச்சியில் உதவி ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற சங்கரலிங்கம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவருடைய உறவினர் ஜெகதீசன் தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் கிராமத்தில் உள்ள பொது மக்களில் பெரும்பகுதியினர் பொதுத்தொகுதியில் போலீஸ் அதிகாரியை எதிர்த்து தலித் சமூகத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் திருமூர்த்தியை நிற்க வைக்க தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள். இந்த நிலையில் திடீர் என வீட்டை விட்டு வெளியே வந்த திருமூர்த்தியை போலீஸ் அதிகாரிக்கு வேண்டப்பட்ட கும்பல் கடத்திச் சென்று, "அவரை எதிர்த்து போட்டியிடக் கூடாது' என்று கையில் வைத்திருந்த விண்ணப்ப படி வத்தை கிழித்து வெளியே விரட்டி யிருக்கிறது.
தப்பித்து வந்த திருமூர்த்தி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, ஊர்மக்கள் ஆதரவுடன் வேட்பு மனு தாக்கல் செய்திருக் கிறார்.
-ஜெ.டி.ஆர்.