"உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடந்த சில மாதங்களாகவே கடிதங்கள் அனுப்பியபடி இருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். இதனால் தமிழகத் தின் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவகாரங்களை சேகரித்து வைத் திருக்கிறார் அமித்ஷா. இந்த நிலையில், "உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என டெல்லியிலிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக தேர்தலை நடத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் எடப்பாடி என்கிறது தேர்தல் ஆணைய அதிகாரிகள் தரப்பு.

uuu

பா.ஜ.க. மேலிட தொடர்பாளர் களிடம் இதுபற்றி விசாரித்தபோது, ""தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத் தப்பட வேண்டும். மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகள் இருக்கின்றன. இவைகளில் சுமார் 35 சதவீத இடங் களில் பா.ஜ.க.வினர் பதவிகளில் இருந்தால்தான் தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க முடியும். அந்த வகையில், 5 மாநகராட்சி மேயர்கள், 25 நகராட்சி தலைவர்கள், 40-க்கும் மேற் பட்ட பேரூராட்சி தலைவர்கள் உட்பட உள்ளாட்சியில் 35 சதவீத இடங்களை அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்க்கிறது பா.ஜ.க. தலைமை.

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது இது குறித்து ஆலோசிக்கலாம் என டெல்லிக்கு அ.தி.மு.க. தந்த தகவலை நம்பி அமைதியாக இருந்தனர். ஆனால், எடப்பாடியின் நோக்கத்தை சமீபத்தில் உணர்ந்த பா.ஜ.க., உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என வலியுறுத்தத் துவங்கியுள் ளது. டெல்லியின் அழுத்தம் தாங்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு வந்துள்ளார் எடப்பாடி. இந்த நிலையில்தான், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவை தராமல் அமைதி காத்தது பா.ஜ.க. தலைமை.

Advertisment

பா.ஜ.க.வை தவிர்த்து இடைத்தேர்தலை எதிர்கொண்டால், வெவ்வேறு சிக்கல்களை அடுத்தடுத்து சந்திக்க நேரிடும் என யோசித்த uuuஎடப்பாடி, டெல்லியோடு தொடர்புடைய அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் இருவரை பா.ஜ.க. தலைமையிடம் விவாதிக்குமாறு அறி வுறுத்தியிருக்கிறார். அதன்படி, மத்திய அமைச்சர் பியூஷ்கோயலிடம் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து பா.ஜ.க.வின் நிபந்தனைகளுக்கு அ.தி.மு.க. ஒப்புக்கொண்டதால் இடைத்தேர்தலுக்கான தனது ஆதரவை தெரிவித்தது பா.ஜ.க. இந்த நிபந்தனை உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்'' என விவரிக்கிறார்கள்.

அ.தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, ‘""தேர்தலை நடத்தி முடித்தால்தான் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். அந்த நிதி இல்லாததால் உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் ஏக நெருக்கடியை எடப்பாடி அரசு சந்தித்து வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தலை விரைந்து நடத்த எடப்பாடி முடிவு செய்திருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. சில நிபந்தனைகளை வைத்திருப்பது உண்மை. சென்னை உட்பட 5 மேயர் பதவிகளும், உள்ளாட்சி அமைப்புகளில் 35 சதவீத இடங்களும் வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறது டெல்லி. சதவிகித கணக்குகளை தேர்தல் நேரத்தில் முடிவு செய்துகொள்ளலாம் எனச் சொல்லி தற்போதைக்கு 5 மேயர் பதவிகளுக்கு மட்டும் ஒப்புக்கொண்டி ருக்கிறது எங்கள் கட்சியின் அ.தி.மு.க. தலைமை. பா.ஜ.க. கூட்டணியை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்தால் அ.தி.மு.க.வுக்கு சில பல நெருக்கடிகள் டெல்லியிலிருந்து ஏற்படுத்தப்படும். அதனை அ.தி.மு.க. தலைமைகள் உணர்ந்ததினால் தான் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக் கின்றன''‘என்கிறார்கள் அ.தி. மு.க. தலைமைக்கு நெருக்க மானவர்கள்.

Advertisment

இந்த நிலையில், ""நாடாளுமன்றத் தேர்தலில் வட மாநிலங்களிலிருந்து தங்களுக்கு தேவையான இடங்கள் கிடைத்துவிடும் என கணக்கிட்டதால் தமி ழகத்தை மோடியும் அமித் ஷாவும் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் அப்படி இருந்து விட முடியாது. வடமாநிலங் களில் நடத்திய ’ வியூகங் களை ‘ தமிழக உள்ளாட்சித் தேர்தலில் நடத்திட திட்டமிடப்படுகிறது. சென்னை உட்பட 5 மாநகராட்சி மேயர் பதவியில் பா.ஜ.க.வினர் இருக்கவேண்டும் என தேசிய தலைவர்கள் விரும்புகின்றனர். எந்த சூழலிலும், சென்னை பெருநகர மாநகராட்சியை விட்டுவிடக் கூடாதுங்கிறதில் உறுதியாக இருக்கிறார்கள்.

சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 29 வயது இளைஞரான ப்ரித்வி என்கிற இளைஞரை களமிறக்க டெல்லி முடிவு செய்திருக்கிறது. அந்த இளைஞர், பிரதமர் மோடியின் சிஷ்யர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் உரையாடினார் மோடி. அந்த அசைன்மெண்ட்டில் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந் தவர் ப்ரித்வி. அவர் மோடியின் நேரடி தொடர் பில் இருக்கிறார். அந்த இளைஞரைத்தான் சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்த தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது. தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிறுத்தப்படுவார் என சொல்லப்படும் நிலையில்... அவரை எதிர்த்து களமிறக்கப்படுவார் மோடியின் சிஷ்யரான ப்ரித்வி''‘என டெல்லியில் நடக்கும் ரகசிய அரசியலை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் பா.ஜ.க.வின் செயற்பாட்டாளர் கள்.

-இரா.இளையசெல்வன்