Advertisment

டெல்லி பிரதிநிதியால் லோக்கல் வில்லங்கம்! - ஆளுங்கட்சி சர்ச்சை!

signal

தூத்துக்குடி அ.தி,மு.க.வினரின் கடுமையான கோபத்தைச் சம்பாதித்திருக்கிறார், அ.தி.மு.க.வின் டெல்லிப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம். என்ன விவகாரம்?

Advertisment

அங்குள்ள அ.தி.மு.க. புள்ளிகளிடம் நாம் விசாரித்தபோது “""எங்க மா.செ.வான சண்முகநாதன், இங்கே கட்சியைப் பலமாக்க வேண்டிய நேரத்தில் அதன் வேரை வெட்டி பலவீனப்படுத்தப் பார்க்கிறார். குறிப்பா சொல்லனும்னா, இங்க இருக்கும் 42க்கும் மேற்பட்ட கட்சி சீனியர்களி

தூத்துக்குடி அ.தி,மு.க.வினரின் கடுமையான கோபத்தைச் சம்பாதித்திருக்கிறார், அ.தி.மு.க.வின் டெல்லிப் பிரதிநிதியான தளவாய் சுந்தரம். என்ன விவகாரம்?

Advertisment

அங்குள்ள அ.தி.மு.க. புள்ளிகளிடம் நாம் விசாரித்தபோது “""எங்க மா.செ.வான சண்முகநாதன், இங்கே கட்சியைப் பலமாக்க வேண்டிய நேரத்தில் அதன் வேரை வெட்டி பலவீனப்படுத்தப் பார்க்கிறார். குறிப்பா சொல்லனும்னா, இங்க இருக்கும் 42க்கும் மேற்பட்ட கட்சி சீனியர்களின் வார்டு செயலாளர் பதவியைப் பறித்துவிட்டு, அந்தப் பதவிகளில் தனக்கு வேண்டப்பட்ட, குற்றப் பின்னணி உள்ளவர்களை உட்கார வச்சிருக்கார்.

Advertisment

admk

அவரோட இந்த சுயநல நடவடிக்கையால், கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கு. அதனால், தூத்துக்குடியை கட்சி ரீதியாகத் தனி மாவட்டமாகப் பிரித்து புதிய மா.செ.வை நியமிக்கனும்ன்னு முதல்வர் எடப்பாடியிடம் கோரிக்கை வச்சோம். காரியம் கனிஞ்சி வர்ற நேரத்தில், அதை தளவாய் கெடுத்துட்டார்''’என்றார்கள் காரமான குரலில்.

அண்மையில் கொரோனா பணிகளை ஆய்வுசெய்ய வந்த எடப்பாடி, அங்குள்ள நிலவரத்தை அறிந்து, விரைவில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரத்தைக் கொண்ட தனி மாவட் டம் அமைக்கப்பட்டு, புதிய கட்சி மா.செ.வும் நியமிக்கப்படுவார் என்று நம்பிக்கையூட்டிவிட்டு சென்றிருக்கிறார். எனினும், அவரிடமிருந்து அதற்கான அறிவிப்பு எதுவும் வரவில்லை. இந்த நிலையில்தான், எடப்பாடியின் அந்த முடிவுக்கு பிரேக் பிடித்தவர் தளவாய் சுந்தரம்தான் என்ற தகவல் தூத்துக்குடி அ.தி.மு.க. பிரமுகர்களுக்குக் கிடைத்ததாம்.

இது பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்த அ.தி.மு.க. மாவட்டக் கழக நிர்வாகி ""சரியான நேரத்தில் குறுக்கே வந்துட்டார் தளவாய். அமைச்சர் கடம்பூர் ராஜுவின் பொறுப்பில் இருக்கும் ஒட்டப்பிடாரத்தை அவரிடமிருந்து எடுக்கவேண்டாம். வேணும்ன்னா, தூத்துக்குடி மாநகரத்தைத் தனியா பிரிச்சி, அதுக்கு மட்டும் ஒரு பொறுப்பாளரை அறிவிச்சிடுங்கன்னு, எடப்பாடியின் மனதை அவர் மாற்றிவிட்டார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் எதுக்கு எங்க மாவட்ட விவகாரத்தில் தலையிடனும்? அதனால்தான் தளவாயைத் தொடர்பு கொண்ட நாங்க, "உங்க வேலையை மட்டும் நீங்க பாருங்க'ன்னு ஆளாளுக்கு அவரை எச்சரிச்சோம்''’என்கிறார் எரிச்சல் அடங்காமல்.

தூத்துக்குடி அ.தி.மு.க.வினரின் இந்தக் குமுறல் எடப்பாடியின் காதுவரை போயிருக்கிறதாம்.

-பரமசிவன்

படங்கள்: ப.ராம்குமார்

nkn161220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe