Advertisment

கள்ளச்சந்தை பட்டாசு வெடிவிபத்து உயிர்ப் பலிகள்! காவல்துறை மெத்தனம்!

ss

ட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகளும் உயிரிழப்பு களும் தொடரும் நிலையில், சிவகாசியில் திருச்செந்தூர் முருகன் லாரி ஷெட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு, லோடு மேன்கள் பால்சாமியும், தங்கப்பாண்டியும் இறந்தனர். அரசு அனுமதியின்றி பலதரப் பட்ட வெடிகள் உள்ள அட்டைப்பெட்டிகளை லாரி ஷெட்டில் கவனக்குறைவாக வைத்திருந்ததுதான் விபத்துக்கான காரணம் என சிவகாசி டவுண் காவல்நிலையம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisment

ss

வெடிவிபத்து நடந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. இருவரது உயிரிழப்புக்கும் காரணமான லாரி ஷெட் உரிமையாளர் முருகேசன் இது வரையிலும் கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில், பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட் களின் தன்மையை அறிந்த அந்த ஏரியாக்காரர் "லாரி ஷெட்ல வெடிச்சது நிச்சயம் பட்டாசா இருக்காது. பட்டாசு பண்டல் வெடிச்சா மூணு கி.மீ. தள்ளி பூமி அதிர்ந்திருக்காது. இந்த அளவுக்கு பயங்கரமான சத்தம் ரொம்ப தூரத்துக்குக் கேட்டிரு

ட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகளும் உயிரிழப்பு களும் தொடரும் நிலையில், சிவகாசியில் திருச்செந்தூர் முருகன் லாரி ஷெட்டில் வெடிவிபத்து ஏற்பட்டு, லோடு மேன்கள் பால்சாமியும், தங்கப்பாண்டியும் இறந்தனர். அரசு அனுமதியின்றி பலதரப் பட்ட வெடிகள் உள்ள அட்டைப்பெட்டிகளை லாரி ஷெட்டில் கவனக்குறைவாக வைத்திருந்ததுதான் விபத்துக்கான காரணம் என சிவகாசி டவுண் காவல்நிலையம் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Advertisment

ss

வெடிவிபத்து நடந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. இருவரது உயிரிழப்புக்கும் காரணமான லாரி ஷெட் உரிமையாளர் முருகேசன் இது வரையிலும் கைது செய்யப்பட வில்லை. இந்நிலையில், பட்டாசு உற்பத்திக்கான மூலப்பொருட் களின் தன்மையை அறிந்த அந்த ஏரியாக்காரர் "லாரி ஷெட்ல வெடிச்சது நிச்சயம் பட்டாசா இருக்காது. பட்டாசு பண்டல் வெடிச்சா மூணு கி.மீ. தள்ளி பூமி அதிர்ந்திருக்காது. இந்த அளவுக்கு பயங்கரமான சத்தம் ரொம்ப தூரத்துக்குக் கேட்டிருக்காது. யாருக்குன்னு தெரியல. எதுக்குன்னு தெரியல. சட்ட விரோதமா கள்ளத்தனமா தயாரிச்ச கெமிக்கல் கலவையை வெளியூர்களுக்கு அனுப்புறதுக்காக பதுக்கி வச்சிருந்தாங்க போல. கல்குவாரில ஆழமா ஓட்டை போட்டு பாறையை தகர்க்கிறதுக்காக டெட்டனேட்டர் வெடி வைப்பாங்க. இந்த வெடிவிபத்தும் அப்படித்தான் இருந்துச்சு.

இப்பல்லாம் தமிழ்நாடு முழுவதும் வெளியூர்கள்ல கள்ளச்சந்தைல அடியாள் வெடி தாராளமா கிடைக்குது. பேப்பர் வெடின்னு சொல்லுவாங்க. பல ஊர்கள்லயும் சவ ஊர்வலத்துல அடியாள் வெடியைத்தான் போடுறாங்க. சத்தமா வெடிக்கும். வெடிச்சதும் ரோடு பூராவும் பேப்பர் சிதறலா கிடக்கும். அடியாள் வெடி கள்ளச்சந்தை வியாபாரத்துக்கு இந்த லாரி ஷெட் துணைபோயிருக்கும் போல. சிவகாசில விதிமீறல் இல்லாத ஒரு லாரிஷெட்டைக் கூட பார்க்க முடியாது. இது ரெவின்யூ அதிகாரிகளுக்கு நல்லா தெரியும். போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு ரொம்ப நல்லா தெரியும். யாரும் கண்டுக்கமாட்டாங்க. வெடிச்சா.. உயிர் போனா.. வழக்கு பதிவு பண்ணுறதோட சரி. இப்பக்கூட லாரி ஷெட் ஓனரை ஏன் அரெஸ்ட் பண்ணல? ரெண்டு மாசத்துக்கு முன்னால சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்துல மேட்டூர் டிரான்ஸ்போர்ட்ல பெரிசா வெடிவிபத்து நடந்துச்சு. இப்ப சிவகாசி டவுண் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்ல நடந்திருக்கு. ஊருக்கு வெளியே பட்டாசு ஃபேக்டரில நடந்துக் கிட்டிருந்த விபத்து, இப்ப ஊருக்குள்ள டிரான்ஸ்போர்ட்ல நடக்க ஆரம்பிச்சிருச்சு. ஒவ்வொரு வெடிவிபத்துலயும், உயிரிழப்புலயும் டிபார்ட்மெண்ட் ஆளுங்க நல்லா கல்லா கட்டுறாங்க''’என சந்தேகம் கிளப்பினார்.

Advertisment

சிவகாசி வட்டாட்சியர் லட்சத்திடம் பேசினோம். "மாநகராட்சிக்கு உள்ளே லாரி டிரான்ஸ்போர்ட்ல பட்டாசு பார்சல்களை ஏற்றி இறக்குறதுக்கு அனுமதி இல்ல. இத எல்லாம் மாநகராட்சிக்கு வெளியேதான் பண்ணனும். இதுதான் ரூல். ஆனா.. யாரும் கடைப் பிடிக்கிறது இல்ல. வருவாய்த்துறை சொன்னாலும் கேட்கமாட்டாங்க. விபத்து எப்படி நடந்துச்சு? விபத்துக்கான காரணம் என்னன்னு போலீஸ்தான் புலன்விசாரணை பண்ணனும். லாரி டிரான்ஸ்போர்ட்ல சட்டவிரோத கெமிக்கல் கலவை வச்சிருந்தா.. குற்றவியல் நடவடிக்கையை போலீஸ் எடுக்கணும். சம்பந்தப்பட்டவரை அரெஸ்ட் பண்ணவேண்டிய கடமையும் போலீஸுக்கு இருக்கு. இங்கே நிறைய லாரி டிரான்ஸ் போர்ட்டுகள் இருக்கு. அங்கேயும் இதுமாதிரி நடந்துறக் கூடாதுல்ல. இத எல்லாம் தடுக்கவேண்டியது மிக மிக அவசியம்''’என்றார்.

இருவர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறை தீவிரம் காட்டாததால், முருகேசன் தலைமறைவாகாமல் உள்ளூரிலேயே இருப்பதாக நமக்குத் தகவல் கிடைத்தது. நாம் அவரைத் தொடர்புகொண்டபோதெல்லாம் நம்மைத் தவிர்த்தார்.

"கைது நடவடிக்கை ஏன் இல்லை?'’என சிவகாசி டவுண் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியிடம் கேட்டோம்.

"அந்த ஷெட்ல மத்தாப்பு தீக்குச்சி பண்டல் இருந்திருக்கு. அங்கயிருந்து பொருள் எடுத்திருக்கோம். அத கோர்ட்டுக்கு அனுப்பி ருக்கோம். எப்படி வெடிச்சதுன்னு கண்டு பிடிக்கணும்ல? அந்த லாரிசெட்ல இருந்து என்னென்ன அனுப்பிருக்காங்க. இத எல்லாம் விசாரிக்கிறோம். என்னென்ன ஏத்துறாங்க, என்னென்ன இறக்குறாங்கன்னு விசாரிக்கிறோம். அடியாள் வெடி ரொம்ப சவுண்டா வெடிக்கிற வெடி.. அடியாள் வெடி வெடிச்சதா? அணு குண்டு வெடி வெடிச்சதா? சயின்டிஃபிக்கா புரூப் பண்ணனும்ல. அங்க இருந்து கெமிக்கல், குளோரைடு எல்லாம் எடுத்து சென்னை ஃபாரன்சிக் லேபுக்கு அனுப்பிருக்கோம். முருகேசனுக்கு இன்னும் பெயில் கிடைக்கல. அவர் கோர்ட்டுக்குப் போனதுனால என்ன பண்ணுறதுன்னு பார்த்துட்டு இருக்கோம். வெடி வெடிச்சிருக்கு. மத்தபடி முருகேசன் இதுல நேரடியா சம்பந்தப்படல''’ என்றார்.

பட்டாசு உற்பத்திக்கான அபாயகரமான ரசாயனக் கலவையினை சட்டவிரோதமாக லாரி ஷெட்டில் வைத்திருத்தார் எனச் சொல்லப்படும் நிலையில்... குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்குச் சாதகமாக காவல்துறை நடந்துகொள்ளும் போது, வெடி விபத்துகளையும் உயிரிழப்பு களையும் எவ்வாறு தடுக்க முடியும்?

nkn211224
இதையும் படியுங்கள்
Subscribe